என்னை தீண்டும் நிழலே !!- 15
முகிலன் தன் அறையில் படுத்து கொண்டு கயல்விழியை நினைத்து கொண்டிருந்தான்.
"இந்தநேரம் நீயும் நானும் டூயட் பாடிட்டு இருக்க வேண்டியது இப்போ இப்படி தனியா புலம்பிட்டு இருக்கேன் ! என்ன பண்றது எல்லாம் என்னோட நேரம் " என தனியா புலம்பிக்கொண்டிருந்தான் முகிலன்.
சரி நம்ம ஆள கொஞ்சம் சீண்டி பாக்கலாமா என யோசித்தவன், கயல்விழிக்கு மெசேஜ் அனுப்பினான்.
"ஹாய் கயல் " என மெசேஜ் அனுப்பினான் முகிலன்.
அவனிடம் இருந்து மெசேஜ் வருமென சற்றும் எதிர்பாராத கயல்விழி இவன் எதுக்கு நமக்கு மெசேஜ் அனுப்புனான் என யோசித்து விட்டு போனை அணைத்தாள்.
"அவன் மெசேஜ் பண்ணா, உடனே நான் ரிப்ளை பண்ணனுமா என்ன ! கயல்விழி என்ன ஆனாலும் சரி ரிப்ளை மட்டும் பன்னீராதடி" என தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
பின் தன்னை அறியாமலே திரும்ப திரும்ப போனை ஆன் செய்தாள். கடைசியில் ஹாய் என்று ரிப்ளையும் செய்து விட்டாள். "நீ திருந்தவே மாட்ட டி " என தன்னை தானே கடிந்து கொண்டாள்.
காயலிடம் இருந்து ரிப்ளை வந்ததும் முகிலன் குஷி ஆகிட்டான் "அப்படி வா டி வழிக்கு ! உன்னால என்கிட்ட பேசாம இருக்க முடியாதுனு எனக்கு தெரியும் டி " என முணுமுணுத்தான்.
பின், " நான் எதுக்கு ஹாஸ்பிடல் வந்தேன்னு தெரியுமா ! எதுக்கு பிளட் குடுக்க வந்தேன்னு உனக்கு தெரியுமா " என கேள்வியோடு கயல்விழிக்கு மெசேஜ் அனுப்பினான்.
முகிலனின் மெசேஜை பார்த்த கயல்விழி, "இவன் எதுக்கு நம்மகிட்ட இப்படி கேட்கிறான், ஒரு வேளை நிஜமாவே நம்மளைத்தான் பார்க்க வந்திருப்பானோ!" என நினைத்து வெட்கப்பட்டு சிரித்தாள்.
பின் எதுக்கு வந்த எனக்கு தெரிலயே என பதில் அனுப்பினாள்.
உன்னை பார்க்கத்தான் வந்தேன் கயல் என மனம் கூற நினைத்தாலும் வேண்டும் என்றே " என் காதலி நிலாக்கு நேத்து பர்த்டே அவள் நியாபகமா நல்லது செய்யணும்னு சொன்னா அதுக்கு தான் " எனக்கூறி வேண்டும் என்றே அவளை சீண்டினான்.
அவன் அனுப்பிய மெசேஜை பார்த்த கயல்விழிக்கு கோவமாக வந்தது, தனது கோவத்தை அடக்கமுடியாமல் கண்ணீராய் வெடித்து சிதறினாள். காயத்ரியிடம் கூறி அவளை கட்டிப்பிடித்து அழ எண்ணினாள்.
காயத்ரி அருணுடன் போனில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அமைதியாக சென்று அழுதுகொண்டே உறங்கிவிட்டாள் கயல்விழி.
கயல்விழியிடம் இருந்து எந்த பதிலும் வராததை உணர்ந்த முகிலன் கூடிய சீக்கிரம் நான் உன்னைத்தான் லவ் பண்றேன் அப்டிங்கறத நீ உணரத்தான் போற என மனதில் நினைத்து கொண்டு அவனும் உறங்கினான்.
மறுநாள் காலை முகிலனிற்கு ஒரு நம்பர்ல இருந்து போன் வந்தது.
"யாரென்று தெரியவில்லையே" என நினைத்துக்கொண்டு போனை அட்டென்ட் செய்தான்
முகிலன்.
தன் அண்ணன் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து அழைப்பதாகவும் டீமுடன் நேபால் சென்ற வண்டி விபத்துக்குளானதாகவும் கூறினார்.
அதில் சென்ற ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்றும் சம்பவ இடத்துக்கு வருமாறியும் கூறினார்.
அவர் கூறியதை கேட்டு முகிலன் அதிர்ந்து போனான். இது நிஜமாக இருக்க கூடாது கனவாக இருக்க வேண்டும் என எண்ணினான்.
என்ன செய்வதென்றே தெரியாமல் ஜடம் போல் நின்று கொண்டிருந்தான்.
பின் வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் தாங்க மாட்டார்கள் என முடிவு செய்தான். முதலில் தாம் அங்கு சென்று பார்த்து விட்டு பிறகு கூறலாம் என எண்ணி கிளம்பினான்.
தன் அறையில் இருந்து வெளியே வந்தவன், செல்வி சமையல் அறையில் சமைத்து கொண்டிருப்பதை பார்த்தான்.
"அம்மா, நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்" என அவள் முகம் பாராமல் சோகத்தை அடைக்கி கொண்டு கூறி வெளியே சென்றான்.
பின் கயல்விழிக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி வீட்டில் யாரிடமும் கூறாமல் காயத்ரியை அழைத்துக்கொண்டு ஸ்பாட்டிற்கு வர சொல்லிவிட்டு கிளம்பினான்.
முகிலன் வண்டியில் செல்லும் போது அருணின் முகமும் அவனது நினைவுகளுமே அவன் கண் முன் தோன்றியது.
"அருண் உனக்கு ஒன்னும் ஆகியிருக்க கூடாதுடா ! அண்ணா என்னை விட்டு எங்கயும் போகாதடா" என சொல்லிக்கொண்டே வண்டியை செலுத்தி கொண்டிருந்தான்.
" பல கனவுகள், ஆயிரம் ஆசைகள் என
அனைத்தும் இல்லாமல் போகுமோ !
ஒரு வயிற்றில் பிறந்து ஒரே தட்டில் உண்ட
உறவே பிரிந்து போகுமோ !
ஆசானாய், தோழனாய், அண்ணனாய் மட்டுமில்லாமல் எனது அனைத்துமாயும் இருந்தாயே ஒரு நொடியில் இவை அனைத்தும் மறைந்து போகுமோ !"
முகிலன் அந்த நபர் கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்தான். இடம் முழுவதும் ரத்தமுமாய், கரியுமாய் இருந்தது.
ஒரு நபர் முகிலனிடம் வந்து, "நீங்கள் தானே முகிலன்? " என கேட்க முகிலனும் தலை ஆட்டினான்.
நான் நரேன் நான் தான் உங்களுக்கு போன் செய்தேன். உன் அண்ணனுடன் தான் பணி புரிகிறேன். என் மனைவிக்கு குழந்தை பிறந்ததால் நான் இவர்களுடன் செல்ல வில்லை இல்லையேல் நானும் காரியாகிருப்பேன்" என அழுதுகொண்டே கூறினார்.
பெட்ரோல் கசிந்து பெட்ரோல் டேங்க் வெடித்து விபத்துக்குள்ளாகி இருந்தது. உடல்கள் அனைத்தும் சிதறியதால் அடையாளம் தெரியாமல் இருந்தது.
சிறிது நேரத்தில் கயல்விழியும் காயத்ரியும் அங்கே வந்து சேர்ந்தனர். காயத்ரியிடம் எதுவும் கூறாமல் வெளியே போகலாம் என மட்டும் கூறி அவளை அழைத்து வந்தாள் கயல்விழி.
அவர்களை பார்த்த முகிலன், கயல்விழியை நோக்கி ஓடி வந்து அவளை கட்டி பிடித்து கதறி அழுதான்.
"கயல், அண்ணா! கயல், அண்ணா!" என சொல்லி சொல்லி அவளை கட்டி பிடித்து அழுதான் முகிலன்.
காயத்ரிக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
முகிலனிடம் "என்ன ஆச்சு முகிலா ஏன் இப்படி அழற என கேட்டாள் காயத்ரி.
முகிலன் காயத்ரியின் கையை பிடித்து, "அண்ணி அண்ணா ! என்று சொல்லமுடியாமல் தடுமாறினான்.
காயத்ரி இதை எப்படி எடுத்து கொள்வாள்...
பார்ப்போம்...
நிழல் நிஜமாகும்...
-நந்தினி மோகனமுருகன்