கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை தீண்டும் நிழலே! -16

என்னை தீண்டும் நிழலே ! - 16




முகிலனின் தடுமாற்றத்தை அறிந்த காயத்ரி,
"என்னாச்சு முகிலன் ஏன் இப்படி பதட்டமா இருக்கீங்க"என்று புரியாமல் கேட்டாள்.

முகிலன் காயத்ரியிடம் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக அழுது கொண்டிருந்தான்.

அந்த இடத்தை பார்த்த காயத்ரிக்கு அங்கே ஏதோ விபத்து நடந்திருக்கிறது என்பது புரிந்தது.

முகிலனின் நிலையை கண்டு "நம்ம உறவினருக்கு எதாவது ஆபத்தா!" என்று வினவினாள்.

முகிலன் அழுகையை அடக்கி கொண்டு "அண்ணி இது அருண் ஊருக்கு போன வண்டி" என்று கூறினான்.

"என்ன சொல்ற முகிலன்" என்று தழுதழுத்த குரலில் கேட்டாள் காயத்ரி.

ஆமாம் அண்ணி அண்ணா நேபால் சென்ற வண்டிதான் இது" என்று அழுது கொண்டே கூறினான் முகிலன்.

"இருக்கவே இருக்காது முகிலன் அரைமணி நேரம் முன்னாடி தான் அருண் என்கிட்ட பேசினார் பேச பேச கால் சுட் ஆகிடுச்சு, கண்டிப்பா இது அருண் போன வண்டியா இருக்காது" என கண்களில் நீர் வர கூறினாள் காயத்ரி.

காயத்ரி கூறியதை கேட்டு திடுக்கிட்ட முகிலன், "என்ன அண்ணி சொல்லறீங்க அண்ணா உங்ககிட்ட பேசுனாங்களா !"என்று ஆச்சர்யமாக கேட்டான் முகிலன்.

"ஆமாம் முகிலா " என காயத்ரி கூற, " அண்ணா நம்பர்க்கு கால் பண்ணி பாக்கணும்னு நமக்கு தோணவே இல்லையே" என மனதில் நினைத்து கொண்டான்.

பின் அவசர அவசரமாக அருணின் நம்பருக்கு கால் செய்தான் முகிலன்.

சிறிது நேரம் ஒலித்த பின் மறுமுனையில் இருந்து ஹலோ என்று அருண் பேச, " டேய் அருண் உனக்கு ஒன்னும் ஆகலையே" என பதட்டத்துடன் முகிலன் கேட்டான்.

"எனக்கு ஒன்னும் ஆகல டா நான் நம்ம வீட்ல தான் இருக்கேன், நீ இப்போ எங்க இருக்க!"என அருண் முகிலனிடம் கேட்டான்.

"டேய் நீ உங்க ஆபீஸ் பஸ்ல நேபால் போகலையா!" என முகிலன் கேட்டான்.

"அதெல்லாம் இருக்கட்டும் இப்போ நீ எங்க இருக்க" என அருண் கேட்க "உன் ஆபீஸ் வண்டி" என முகிலன் இழுக்க.

"எனக்கு தெரியும்டா அங்க எதுக்கு போன இரு நானும் வரேன்" எனக்கூறி போனை வைத்தான் அருண்.

சிறிது நேரத்தில் அருண் அங்கு வந்திட முகிலன் ஓடிச்சென்று அருணை கட்டிக்கொண்டான்.

"ஒரு போன் பன்னிருக்கலாம்ல எரும" என்று அவனை அடித்தான் முகிலன்.

"போன்ல சார்ஜ் இல்லடா சுவிட்ச் ஆப் ஆகிடுச்சு, வீட்டுக்கு வந்து பார்த்தப்ப தான் எனக்கு விஷயமே தெரிஞ்சுது" என்று கனத்த குரலுடன் கூறினான் அருண்.

பின் காயத்ரியையும் கடல்விழியையும் பார்த்து "இவங்கள ஏன்டா கூட்டிட்டு வந்த" என்று முகிலனை பார்த்து கடிந்தான் அருண்.

காயத்ரி அருணை அணைத்துக்கொண்டு உங்களுக்கு ஒன்னும் ஆகலையே என கேட்டாள்.

கயல்விழி அருணிடம், " மாமா நீங்க ஊருக்கு போகலையா" எனககேட்டாள்.

"சரியாக விபத்து நடக்க ஒருமணி நேரத்திற்கு முன்பு தான் நியாபகம் வந்தது நாளைக்கு காயத்ரிக்கு பிறந்த நாளென்று! நானும் காயத்ரியும் மீட் பண்ணி வர முதல் பர்த்டே. அவளுக்கு ஷாக் கொடுக்கணும்னு தோணுச்சு மேனேஜர் கை கால்ல விழுந்து பெர்மிஸ்ஸின் வாங்கி ட்ரிப் கேன்சல் பன்னிட்டு இறங்கிட்டேன்" என்றான் அருண்.

"காயத்ரிக்கு கால் பண்ணி பேசறதுக்குள்ள போன் கட் ஆகிடுச்சு.போன்ல சார்ஜ் இல்லாததால் யார்கிட்டயும் சொல்ல முடிலை" என்றான் அருண்.

"அருண் என்னால நினச்சு கூட பார்க்க முடிலடா நீ மட்டும் இந்த வண்டியில ட்ராவல் பன்னிருந்தீன்னா என்ன ஆகியிருக்கும்" என கண்களில் நீர் வர அருணை அனைத்து கொண்டான் முகிலன்.

"எனக்கு தான் ஒன்னும் ஆகலல அழாதடா, ரொம்ப நேரம் இங்க நிக்க வேண்டாம் போகலாம் வாங்க" என அனைவரையும் அழைத்து சென்றான் அருண்.

இரவு காயத்ரி கயல்விழியிடம் "முகிலன் இன்னைக்கு ரொம்ப பதறிட்டார் இல்ல, என்னை விட முகிலனுக்கு தான் அருண் மேல பாசம் அதிகம்" என கூறினாள்.

"லூசு மாதிரி பேசாத அக்கா, அவன் சின்ன வயசுல இருந்து அருணை பாக்கறான் பாசம் இருக்காதா ! எனக்கு அந்த விபத்துல இருந்தவங்க குடும்பத்தை நினைச்சாதான் பாவமா இருக்கு" என்றாள் கயல்விழி.

"ஆமாடி அருணும் அதைத்தான் சொன்னாரு, அதுலயும் ஒருத்தருக்கு இரண்டு வயசுல குழந்தை இருக்காம் பாவம்ல!" என்றாள் காயத்ரி.

பின் சிறிது நேரத்தில் காயத்ரி உறங்கிட, கயல்விழிக்கு மட்டும் முகிலனின் நினைவாகவே இருந்தது.

முகிலன் ஓடிவந்து தன்னை அணைத்து கொண்டு அழுததே கண் முன் தோன்றிக்கொண்டிருந்தது.

"என்னை அணைத்து கொண்டு அழ வேண்டும் என்று ஏன் அவனுக்கு தோன்றியது. அவ்வளவு நெருக்கமானவளா நான் ! சரி பக்கத்தில் தன் அண்ணி இருந்தும் ஏன் என்னை அணைத்துக்கொண்டான்? அண்ணி என்றால் அம்மா மாதிரி தானே" என தனக்குள் யோசித்து கொண்டிருந்தாள் கயல்விழி.

"அப்போ அவனுக்குள் நான் இருக்கிறேனா !" என கூறி சிரித்தாள்.

"ஏய் லூசு அவன் தான் உன்னை பிடிக்கலைனு சொல்லிட்டான்ல இன்னமும் உனக்கு அவன் லவ் பண்ணுவான்னு ஆசை இருக்கா !" என மனசாட்சி கூற தலையில் அடித்து கொண்டு போர்வையை போர்த்தி உறங்கினாள்.

மறுநாள் அந்த விபத்தில் இறந்தவர்களின் விலாசத்தை சேகரித்தாள் கயல்விழி.

அந்த இரண்டு வயது குழந்தை உள்ளவரின் வீட்டிற்கு சென்றாள்.

அங்கே இறந்தவரின் மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு குழந்தையை பற்றி கேட்டாள். பின்புறம் தோட்டத்தில் விளையாடுவதாய் கூறி குழந்தையின் தாய் அழைத்து சென்றாள்.

அங்கே பார்த்த காட்சியை கயல்விழியால் நம்பவே முடியவில்லை, ஆமாங்க நம்ப முகிலன் தான் குழந்தையோடு விளையாடி கொண்டிருந்தான்.

நிகி குட்டி மாமாவை பிடிங்க என்று கூறி அவன் ஓட அந்த குட்டி அழகு தேவதை அவனை துரத்தி கொண்டு ஓடியது.

அந்த தம்பிகிட்ட நல்லா ஓட்டிகிட்டா. குழந்தையை பத்தி கவலைப்படாதீங்க அவளோட படிப்பு செலவுல இருந்து எல்லாமே நான் பத்துக்கறேன்னு சொல்லிடுச்சு அந்த தம்பி என கூறினாள் அந்த பெண்.

கயல்விழியின் கண்கள் முகிலனிடம் இருந்து நகரவே இல்லை. அவனை அங்கேயே அணைத்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. முகிலனின் மேல் உள்ள காதல் இன்னும் அதிகமானது. அவன் என்னை காதலிக்கலைனா என்ன நான் அவனை காதலித்து கொண்டுதான் இருப்பேன் என மனதில் நினைத்து கொண்டு அவனையே ரசித்து கொண்டிருந்தாள்.

"சொல்ல முடியா துயரில்
கரைந்தது பல இரவுகள் !!

என் சோகங்களும், வலிகளும்
நீ அறிய வாய்ப்பில்லையே !!

எல்லாம் உனக்காக என
நினைக்கையில் வலிகள்
கூட சுகமானதே !!

நீ எனக்கு இல்லை
என்பதை அறிவேனே !!

இருந்தும் உனக்காகவே
வாழ்கிறேனே !!

எப்பொழுதும் வாழ்வேன்
வாழ்வேனே!! "


நிழல் நிஜமாகுமா...

பாப்போம்....

-நந்தினி மோகனமுருகன்
 
Top