கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை தீண்டும் நிழலே ! - 2

என்னை தீண்டும் நிழலே! -2

"பொண்ணு ரெடியா, கோயிலுக்கு கிளம்பலாமா" என்று கேட்டுக் கொண்டிருந்தாள் தனம்.

"ஓ நான் எப்போவே ரெடி ஆகிட்டேனே"
என தனத்தின் தோல் மேல் கை போட்டுகொன்டே கூறினாள் கயல்விழி.

தனத்துக்கும் மோகனுக்கும் பிறந்த ஒரே பொண்ணு தான் கயல்விழி. திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் தவமிருந்து பிறந்தவள் என்பதால் பயங்கர செல்லம்.

"ஏய் வாலு ! உன்ன யாரு கேட்டா? போய் காயத்ரி ரெடி ஆகிட்டாளானு பாரு " என்று கூறினாள் தனம்.

சரி போறேன் என்று திரும்பியவள் அம்மா ஒரு நிமிஷம் நில்லுங்க, எனக்கூறி தனத்தின் அருகில் வந்தாள்.

என்ன தனம்மா இன்னைக்கு கொஞ்சம் அழகு அதிகமா இருக்கு, என்ன சீக்ரெட்?

"மோகன் அப்பா ஏதாவது கொடுத்தாரா" என நக்கலாக கேட்டாள்.

" போடி கழுதை, உனக்கு வேற வேலையே இல்லை" எனச் செல்லமாக அவள் கன்னத்தில் அடித்துவிட்டு உள்ளே சென்றாள் தனம்.

காயத்ரி தன் அறையில் ரெடி ஆகி கொண்டிருந்தாள். !

அக்கா ரெடி ஆகிட்டியா என கேட்டு கொண்டே கயல்விழி உள்ளே வந்தாள்.

(காயத்ரி கயல்விழியோட சித்தப்பா பொண்ணு, கயல்விழிய விட இரண்டு வருஷம் பெரியவள். )

காயத்ரியை பார்த்த கயல்விழி, "அக்கா ரொம்ப அழகா இருக்க என் கண்ணே பற்றும்போல இருக்கு" என நெட்டி முறித்தாள்.

(காயத்ரி கோதுமை மாவு நிறம், லட்சணமானவள், மிகவும் அமைதியான குணம் படைத்தவள்.
கயல்விழி ரோஜா பூ நிறம் உடையவள், அவளும் காயத்ரியை போலே லட்சணமானவள். இரண்டு பேரிலும் கயல்விழியே அழகில் சற்று முன்னிலை என்று கூறலாம் . )

"இப்போ மட்டும் மாப்ள உன்னை பாத்தாரு கிளீன் போல்ட் "என கூறி சிரித்தாள் கயல்விழி.

"ஏய் சும்மா இருடி, அடிவாங்க போற" என பொய் கோபம் காட்டினாள் காயத்ரி.

முகிலன் குளித்து முடித்து ரெடி ஆகி கீழே வந்தான்.

"ஏன்டா இவ்ளோ லேட்" என செல்வி கேட்டாள்.

"பின்ன, பொண்ணு பாக்க போறோம் ஹாண்ட்சமா இருக்க வேண்டாமா" எனக் கூறி தன் தந்தையை பார்த்து கண்ணடித்தான் முகிலன்.

முகிலனின் தந்தை குமாரும், ஆமா அவன் சொல்றதும் சரிதான் பையன் அழகா இருந்தாதான் பொண்ணுங்க பார்க்கும் என கூறினார்.

"இதெல்லாம் உங்களுக்கு ஓவரா தெரில! பொண்ணு பார்க்க போறது எனக்கு, ஆனா உங்க இரண்டு பேரோட அலப்பறை தாங்கல " என்றான் அருண்.

"இல்லடா அண்ணா எப்படியும் பொண்ணு உன்ன வேணான்னு தான் சொல்ல போகுது, சோ எனக்கு சான்ஸ் கிடைக்குமான்னு தான் இந்த ட்ரயல்" என்று கூறினான் முகிலன்.

முகிலனும் குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

(அருண், முகிலனின் அண்ணன். இருவருக்கும் ஒரு வருடம் தான் வித்தியாசம், அதனால் இருவரும் நண்பர்களாகவே பழகினர். இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்து கொள்வார்கள். )

அருண் முகிலனை முறைத்து கொண்டே வெளியே சென்றான். அனைவரும் வண்டியில் ஏறி கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

கோவிலில் கயல்விழி காயத்திரியை சீண்டி கொண்டிருந்தாள்...

"அக்கா மாப்பிள்ளை வந்ததும் என்ன பேசப்போற? மாப்பிள்ளையை பாப்பியா இல்ல வெட்க பட்டுக்கிட்டே கீழே குனிஞ்சிபியா !" என சீண்டினாள் கயல்விழி.

"உன்னை என்ன பண்ண போறேன் பாரு" என காயத்ரி கயல்விழியை துரத்தினாள்.

கயல்விழி திடீரென நகர்ந்து கொள்ள, காயத்ரி அருணின் மீது மோதினாள்.

இதை சற்றும் எதிர்பாராத அருண் நிலை தடுமாறி கீழே விழ காயத்ரியும் அவன் மேலே விழுந்தாள்.

அவன் விழி அவள் விழியை நோக்கியது, இருவர் விழிகளும் தங்களை மறந்து காதலில் கரைந்தன.

"....
உன் விழியை கண்ட அந்த நொடி முதல் நீ தான் என் உலகம் என நெஞ்சம் துடிக்குதே !!


உன் காந்த கண்களில் கரைந்த என் கண்களோ இமை மூட மறுக்குதே !!

விழிகள் இரண்டும் கலந்ததே அதுவே விதியென மாறியதே !!

உன் விழியில் கலந்த என் நினைவோ உன் உயிரிலும் கலக்க உருகுதே !!

இதுதானா காதலென்று மனம் புரியாமல் தவிக்குதே !!!

..."

இருவரும் தங்களை மறந்து பார்த்து கொண்டிருக்க, கயல்விழி "அக்கா உங்களுக்கு ஒன்னும் ஆகலயே "என்று கேட்டாள்.

அதன் பின்னரே இருவரும் தங்கள் நினைவிற்கு வந்தனர்.

"ஒன்னும் ஆகல டி வா "என கூறி அவனை பார்த்தவாறே கயல்விழியை இழுத்து சென்றாள் காயத்ரி.

"டேய் அண்ணா பொண்ணு பார்க்க வந்த இடத்துல பண்ற வேலையா இது பொண்ணு வீட்டுக்கறாரங்க பார்த்தா என்ன பண்ணுவாங்க" என அருணை சீண்டினான் முகிலன்.

நிழல் நிஜமாகும்....


-நந்தினி மோகனமுருகன்

 
Top