கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை தீண்டும் நிழலே! - 4

என்னை தீண்டும் நிழலே ! - 4




முகிலனும் அருளும் அம்மன் சன்னதிக்கு சென்று பார்த்தனர்.

அங்கே காயத்ரியும் கயல்விழியும் நின்றுகொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த அருண் காயத்ரி தான் பொண்ணு என நினைத்து குதித்தான், மகிழ்ச்சி அடைந்தான்.

முகிலன் அருணின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்து, " டேய் அண்ணா அவசரப்படாத அங்க ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க அதுல யாரு நாம பார்க்க வந்த பொண்ணுன்னு தெரியல கொஞ்சம் பொறுமையா இரு" என்று கூறினான்.

பொண்ணு யாருன்னு எப்படி கண்டு பிடிக்கிறது என்று யோசித்த முகிலன், அங்கிருந்த ஒரு சின்ன குழந்தையைக் கூப்பிட்டு, "அங்க நிக்கிறாங்கல்ல இரண்டு அக்கா அந்த அக்காங்க கிட்ட போய் யாருக்கு இன்னைக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க என்று கேட்டு வா பாப்பா" என கூறி அனுப்பினான்.

காயத்ரி கயல்விழியிடம்" இப்போ என்ன பண்றது டி ? என்னை பார்க்க வந்த மாப்பிள்ளையோட தம்பியை தானே காதலிக்கிறேன். இது சரியா வருமா!" என புலம்பி கொண்டிருந்தாள்.

அப்போ அங்க வந்த குட்டி பாப்பா அவர்கள் இருவரிடமும் போய், "அக்கா அக்கா ! உங்க இரண்டு பேருல யார இன்னைக்கு பொண்ணு பார்க்க வர்ராங்க" என்று கேட்டது.

இதை கேட்ட இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.

கயல்விழி அந்தக் குழந்தையிடம் "எங்களை பெண் பார்க்க வருகிறார்கள் என்று யார் உன்னிடம் சொன்னார்கள்" என்று கேட்டாள்.

அந்தக் குழந்தையும்,அதோ அங்க நிற்கிறார்களே ஒரு அண்ணா அந்த அண்ணா தான் கேட்க சொன்னாங்க என்று முகிலனை கை காட்டினாள்.

முகிலன் தான் கேட்க சொன்னான் என்பதை புரிந்துகொண்ட கயல்விழி அக்கா இந்த பிரச்சினைக்கு என்ன செய்யறதுன்னு ஒரு வழி கிடைச்சிருச்சு நான் பாத்துக்குறேன் என்று கூறினாள்.

பின் அந்தக் குழந்தையை அழைத்து அவள் காதில் ஏதோ கூறி அவளை அனுப்பினாள்.

"ஏய் அந்த பாப்பா கிட்ட என்னடி சொன்ன?" என்று ஏதும் புரியாமல் கயல்விழியிடம் கேட்டாள் காயத்ரி.

கொஞ்சம் பொறுமையா இரு அக்கா, எல்லாம் நான் பாத்துக்குறேன் என்றாள் கயல்விழி.

குழந்தை முகிலனிடம் சென்று, அண்ணா அண்ணா! அதோ அந்த ஓரத்துல பச்சை கலர் புடவை கட்டிட்டு நிக்கிறாங்கல்ல ஒரு அக்கா, அந்த அக்காவ தான் பொண்ணு பாக்க வராங்கலாம் என்று கயல்விழியை காட்டியது.

இதைக்கேட்ட அருண், போச்சுடா இப்ப என்ன பண்றது என்று தலையில் கை வைத்துக் கொண்டு கீழே உட்கார்ந்தான். "நாம பார்க்க வந்த பொண்ணோட தங்கச்சியையா நான் காதலிக்கிறேன்" என்று புலம்பினான்.

"டேய் அண்ணா புலம்பாத டா! ஏதாவது பண்ணி சரி பண்ணி விடலாம்" என ஆறுதல் கூறினான் முகிலன்.

இருவீட்டினரும் கலந்து பேசி, முதலில் பொண்ணும் மாப்பிள்ளையும் பார்த்து பேசிக் கொள்ளட்டும் அவர்களுக்குப் பிடித்திருந்தால் மேற்கொண்ட பேசலாம் என முடிவு செய்தனர்.

காயத்ரியுடன் கயல்விழியும், அருணுடன் முகிலனும் சென்றனர்.

நால்வரும் ஓரிடத்தில் தனித்திருக்க முகிலனும் கயல்விழியும் பேச ஆரம்பித்தனர்.

எப்படி பேச ஆரம்பிக்கிறது என்பது தெரியாமல், முகிலன் கயல்விழியிடம் ஹாய்! என்று கூறினான்.

கயல்விழியும் பதிலுக்கு ஹாய் என்று கூறினாள்.

அடுத்து என்ன பேசறதுனு மனசுக்குள்ள யோசிச்சுக்கிட்டே, ஏங்க நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! என்று கயல்விழியை பார்த்துக் கூறினான் முகிலன்.

பிரச்சினையை சரி பண்றேன்னு சொல்லிட்டு அந்த பொண்ணு கிட்ட போய் இப்படி வழிந்து கொண்டு இருக்கானே என்று தலையில் அடித்துக் கொண்டான் அருண்.

நாம தான் பொண்ணுன்னு நினச்சு முகிலன் பேசுவதைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்தாள் கயல்விழி இருந்தும் அவனைப் பார்ப்பதற்கு பாவமாக இருந்தது.

"டேய் முகிலா ! அண்ணன் பார்க்க வந்த பொண்ணு கிட்ட என்ன பேசறதுனு தெரியாம, இப்படி சொதப்பிக்கிட்டு இருக்கியே" என தன்னையே நொந்து கொண்டான்.

இதுக்கு மேல கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைத்துக்கொண்டு கயல்விழி முகிலனிடம், ஏங்க என் அக்கா உங்க தம்பியை காதலிக்கிறாள் என்று கூறினாள்.

என்னது தம்பியா! என்னங்க சொல்றீங்க? நான் தான் தம்பி அவன் என்னோட அண்ணன் என்று கூறினான் முகிலன்.

முகிலன் கூறியதைக் கேட்ட கயல்விழியும் காயத்ரியும் அண்ணனா! எனக்கூறி திகைத்து நின்றனர்.

ஒரு நிமிஷம் நில்லுங்க! இப்ப யாருக்குத்தான் பொண்ணு பார்க்க வந்திருக்கீங்க என முகிலனிடம் புரியாமல் கேட்டாள் கயல்விழி.

என் அண்ணன் அருணிற்கு தாங்க என கூறிய முகிலன், இப்போ நீங்க அவுங்கள அக்கானு தான சொன்னீங்க. அப்போ அவுங்க அக்கானா ! அவுங்களைத்தான் பொண்ணு பார்க்க வந்திருக்கோமா என காயத்ரியை பார்த்து கேட்டான் முகிலன்.

ஆமா என்று கூறினாள் கயல்விழி..

இதை கேட்ட அருணும் காயத்ரி நிம்மதி பெரு மூச்சு விட்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்து கொண்டிருந்தனர்.

கயல்விழி முகிலனிடம், சாரிங்க ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகியிருக்கு சரியா இருந்ததை தப்பா புரிஞ்சுக்கிட்டோம் என்று கூறினாள்.

"ஆமாங்க, முதல் தடவ பார்த்தப்ப கூட அக்கா வாங்க போலானு தான சொன்னீங்க! நாங்க அத மறந்தே போய்ட்டோமே" என்று அதை யோசித்தவரே கூறினான் முகிலன்.

அருண் முகிலனின் காதில், அப்படியா சொன்னாங்க என்று கேட்டான்.

ஆமா நீ தான் அப்போ சுயநினைவுலயே இல்லையே ! அப்பறம் எப்படி தெரியும் என்று நக்கலாக கேட்டான் முகிலன்.

பின் நால்வரும் நடந்தவற்றையெல்லாம் பேசி சிரித்து மகிழ்ந்தனர்.

அருணும் காயத்ரியும் கண்களாலேயே தங்கள் காதலை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

நிழல் நிஜமாகும்....


-நந்தினி மோகனமுருகன்

 
Top