என்னை தீண்டும் நிழலே ! - 6
முகிலன் கயல்விழியிடம், "ஆமா எங்க அத்தை, மாமா யாரையும் காணம், வீட்ல யாரும் இல்லையா என கேட்டான்".
"எல்லாரும், அக்கா கல்யாண வேலை விஷயமா வெளியில போயிருக்காங்க அக்கா குளிச்சிட்டு இருக்கா" என கூறினாள் கயல்விழி.
ஆமா கயல், என்ன பண்ணிக்கிட்டு இருக்க ! மார்னிங் எக்சர்சைசா?
"இது யோகா! படிச்ச படிப்புக்கு முதல்ல நாம அத கடைபிடிச்சு நம்மள கரெக்டா வெச்சுக்கணும், அப்போதான் நம்மகிட்ட வர நோயாளிகள் நம்மல நம்புவாங்க" என கூறினாள் கயல்.
"வாவ், கிரேட் கயல்" என கூறி சிரித்தான் முகிலன்.
"ஆமாம் உங்க குரல் ஏன் வித்யாசமா இருக்கு" என கேட்டாள் கயல்.
"அது என்னனு தெரியல மார்னிங் ல இருந்து தொண்டைல ஒரே கிச்சுக்கிச், குரலே மாறிடுச்சு" என தொண்டையை கனைத்தவாறே கூறினான் முகிலன்.
"நான் இதுக்கு டிரீட்மென்ட் சொல்லட்டுமா!" என கேட்டாள் கயல்விழி.
"தாராளமா சொல்லலாம், 'யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்'"என கூறினான் முகிலன்.
"சுக்கு, மிளகு, திப்பிலி இது மூணையும் சம அளவு எடுத்து தேன்ல கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு பாருங்க உடனே சரியா போய்டும்" என்றாள் கயல்விழி.
"சரிங்க டாக்டர், முயற்சி பண்ணி பார்க்கிறேன்" என கூறினான் முகிலன்.
அப்போது காயத்ரி அங்கே வந்து "வாங்க முகிலன் எப்போ வந்தீங்க? காபி, டீ எதும் குடிக்கறீங்களா" என கேட்டாள்.
"இல்லைங்க அண்ணி ! நேரம் ஆகிடுச்சு, மறுபடியும் வரப்ப குடிச்சுக்கறேன்" எனக் கூறி எழுந்தான் முகிலன்.
"ஒரு நிமிஷம்" என காயத்ரி மெதுவாக கூறினாள்.
"சொல்லுங்க அண்ணி" என கேட்டான் முகிலன்.
"அவர கேட்டதா சொல்லுங்க" என தயக்கத்துடன் கூறினாள் காயத்ரி.
அருணை பற்றி தான் சொல்கிறாள் என தெரிந்தும் முகிலன் வேண்டும் என்றே காயத்ரியிடம்...
"அவரா ! யாரை அண்ணி சொல்லறீங்க" என புரியாதவனாய் மனதில் சிரித்து கொண்டே கேட்டான்.
"அவரு தாங்க உங்க அண்ணா, அருண்" என மெல்லிய குரலில் கூறினாள் காயத்ரி.
"அவனா! அவனுக்கு என்ன நல்லா சாப்பிட்டு கொழுத்து தான் இருக்கான்" என கூறினான் முகிலன்.
பின் அவர்களிடம் இருந்து விடை பெற்று வீட்டிற்கு வந்தான் முகிலன்.
செல்வி முகிலனிடம் "என்னடா, புத்தகத்தை குடுத்துட்டு வந்துட்டியா" என கேட்டாள்.
"அதெல்லாம் கொடுத்தாச்சு முதல்ல சுக்கு, மிளகு, திப்பிலி இது மூணையும் அரைச்சு பொடி பன்னி வைங்க எனக்கு நாளைக்கு காலைல வேணும்" என்றான் முகிலன்.
எதுக்குடா என செல்வி கேட்க, "கேள்வி லாம் கேட்காதீங்க செல்லிமா சொன்னதை மட்டும் செய்ங்க" என கூறி தன் அறைக்கு சென்றான் முகிலன்.
முகிலனின் அறையில் அருண் அமர்ந்திருந்தான்...
"முகிலா வந்துட்டியா வா, இங்க வந்து உட்காரு" என அழைத்தான் அருண்.
"இங்க என்னடா பண்ற! அதுவுமில்லாம இன்னைக்கு கொஞ்சம் பாசம் ஓவரா இருக்கர மாதிரி தெரியுதே" என்றான் முகிலன்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை, நீ காயத்ரி வீட்டுக்கு போனியாமே, காயத்ரியை பாத்தியா ! என்ன பத்தி எதாவது கேட்டாளா?" என கேட்டான் அருண்.
"அண்ணா என்னடா நீ இப்படி ஆகிட்ட ! அதான் தினமும் போன்ல பேசறல, அப்பறம் என்னடா" என கேட்டான் முகிலன்.
"எங்கடா பேசறா, பெரியம்மா இருகாங்க, அப்பா இருக்காங்கனு பேசவே மாட்டேங்கறா! நைட் பேசலாம்னு பார்த்தா பக்கத்தில கயல்விழி இருக்கானு பேசறது இல்லை! என்னை என்ன பண்ண சொல்ற? " என புலம்பினான் அருண்.
"புலம்பாதடா! இப்போ என்ன அண்ணி கிட்ட நீ பிரீயா தனியா பேசணும் அவ்ளோ தான நான் ஏற்பாடு பன்றேன் கவலைய விடு" என அருணிடம் கூறினான் முகிலன்.
முகிலன் கயல்விழி பயிற்சி பெரும் மருத்துவமணைக்கு சென்றான்.
அங்கே முகிலனை சற்றும் எதிர்பார்க்காத கயல்விழி, அவனை பார்த்து திகைத்து நின்றாள்.
அவன் தன்னை நோக்கி வருவதை அறிந்தவள். "என்னாச்சு முகிலன்" என கேட்டாள்.
முகிலன், "உங்களை பார்க்கத்தான் வந்தேன்" என கூறினான்.
"என்னை பார்க்கவா ! நான் இங்க இருக்கேனு உங்களுக்கு யாரு சொன்னா? " என கேட்டாள் கயல்விழி.
"உன்னோட கல்லூரிக்கு சென்று விசாரித்து விட்டு தான் வருகிறேன்" என கூறினான் முகிலன்.
"அப்படியா சரி ஆப்போஸிட்ல இருக்க ஐஸ்கிரீம் பார்லர்ல வெயிட் பண்ணுங்க ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துறேன்" என கூறி உள்ளே சென்றாள் கயல்விழி.
அவள் பின்னே வந்த அவளது தோழி ரம்யா கயல்விழியிடம், "யாருடி அவன் செம ஸ்மார்ட்டா இருக்கான் !"என கேட்டாள்.
"என் அக்காவை கட்டிக்க போறவரோட தம்பி பேரு, 'முகிலன்'" என கூறினாள் கயல்விழி.
"ஓ ! அப்போ உனக்கு மாமான்னு சொல்லு" என கயல்விழியை கிண்டலாக இடித்தாள் ரம்யா.
"ஏய் சும்மா இருடி, அவரு ரொம்ப நல்லவர் டி, வேணும்னே எங்க ரெண்டு பேரையும் வெச்சு ஓட்டாத" என கண்டிப்புடன் கூறினாள் கயல்விழி.
"சரி உனக்கு பிடிக்கலைன்னா அட்லீஸ்ட் எனக்காவது இன்ட்ரோ குடு டி"என்றாள் ரம்யா.
"இன்ட்ரோ தான பார்க்கலாம் பார்க்கலாம் எனக் கூறி ரம்யாவை முறைத்து கொண்டே வெளியே சென்றாள்" கயல்விழி.
இன்ட்ரோ வேணுமாம் இன்ட்ரோ இவனை யாரு இங்க வர சொன்னா! இவனால இம்சையா இருக்கு, எதுக்கு நம்மல பார்க்க வந்திருப்பான் என யோசித்து கொண்டே ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி நடந்தாள் கயல்விழி.
நிழல் நிஜமாகும் !
-நந்தினி மோகனமுருகன்