என்னை தீண்டும் நிழலே ! - 8
காலையில் எழுந்து கயல்விழியின் மெசேஜெய் பார்த்து புன்னகைத்தான் முகிலன்.
பின் அருணின் அறைக்கு சென்று "ஈவினிங் அஞ்சு மணிக்கு ரெடியா இருடா வெளில போகணும்" என கூறினான்.
அருண் கண்களை விழிக்காமலே மூழி முறித்து கொண்டே 'எங்கடா!' என கேட்டான்.
"உன் பொண்டாட்டிய பார்க்கத்தான்" என முகிலன் கூற, "நிஜமாவா சொல்ற!" என ஆச்சர்யமாக கேட்டான் அருண்.
"ஆமாடா.. அஞ்சு மணிக்கு ரெடியா இரு" என கூறி சமையல் அறைக்கு சென்றான் முகிலன்.
"செல்லிமா நான் கேட்ட பொருள் எல்லாம் ரெடியா? " என கேட்டுகொன்டே உள்ளே சென்றான் முகிலன்.
செல்வி அவன் கேட்டதை எல்லாம் அரைத்து குடுக்க கயல்விழி கூறியபடி அதை தேனில் கலந்து சாப்பிட்டான்.
"எதுக்குடா இது என செல்வி கேட்க, இது ஒரு மருந்து ட்ரை பண்ணி பாக்கலாம்" என கூறி செல்வி அடுத்த கேள்வி கேட்பதற்குள் வெளியே சென்று விட்டான்.
சில மணி நேரத்திலேயே தன் தொண்டை கரகரப்பு நீங்கியதை உணர்ந்தான் முகிலன் .
"பரவாலயே நம்ம டாட்டர் அம்மா டிரீட்மென்ட் சூப்பரா வேலை செய்யுது" என தனக்குள்ளயே சொல்லி கொண்டான் முகிலன்.
முகிலனிடம் இருந்து பதில் ஏதும் வராததால் அவனை திட்டி கொண்டிருந்தாள் கயல்விழி.
திடீரென செல்போன் ஒலிக்க... கயல்விழி போனை எடுத்து பார்த்தாள்.
முகிலன் என பெயர் வருவதை பார்த்ததும் அவள் அழகிய கண்கள் ஆனந்தத்தில் விரிந்தது.
"சொல்லாம கொள்ளாம இவன் பாட்டுக்கு கால் பன்றானே ! இப்போ என்ன பண்றது" என யோசித்தவள் "கயல்விழி, தைரியமா பேசுடி" என தனக்குத்தானே சொல்லி கொண்டு போனை அட்டென்ட் பண்ணினாள்.
ஹலோ என கயல்விழி கூறியதும், "ஹலோ கயல்! என்ன பண்றீங்க? சாரி நான் நைட் உங்க மெசேஜ் பார்க்கல தூங்கிட்டேன்" என முகிலன் கூறினான்.
"பரவாயில்லை சொல்லுங்க" என கயல்விழி பதில் கூற, "ஈவினிங் பிளான் கன்ஃபார்ம் தானே" என முகிலன் கேட்டான்.
"கன்ஃபார்ம்!கரெக்டா சார்பா அஞ்சு மணிக்கு காபி டேக்கு வந்துருங்க நாங்களும் வந்தர்றோம்" என கயல்விழி கூறினாள்.
"ஒகே கயல்! அப்பறம் உங்க மருந்து சூப்பரா வேலை செய்யுது டாக்டர் மேடம்.. என் தொண்டையில் இருந்த 'கிச்கிச்' இப்போ 'கப் சிப்' ஆகிடுச்சு" என முகிலன் கூறினான்.
அவன் பேச்சை ரசித்து கொண்டிருந்த கயல்விழி, இப்படி பேசி பேசியே என்னை கவுத்துட்டடா என மனதில் நினைத்து கொண்டாள்.
"சரி கயல், ஈவினிங் பார்க்கலாம்"என போனை கட் செய்தான் முகிலன்.
"கயல்விழி, காயத்ரியிடம் ஈவினிங் ரெடியா இரு அக்கா" என கூறி ட்ரைனிங்க்கு புறப்பட்டு சென்றாள்.
கயல்விழிக்கு முகிலனின் நினைவாகவே இருந்தது எங்கே பார்த்தாலும் யாரை பார்த்தாலும் அவனை போலவே தெரிந்தது.
"என்னாச்சு கயல் உனக்கு ! ஒருவன் இப்படி நம்ம மனசுல இவ்ளோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவானு நம்பவே முடில"என தன்னை நினைத்து புலம்பிக்கொண்டிருந்தாள்.
அப்போது ரம்யா அங்கு வந்து, " என்னடி ! என்ன ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்க? "
என்று கயல்விழியிடம் கேட்டாள்.
"நான் முகிலனை லவ் பண்றேன் டி !" என கயல்விழி கூறினாள்.
"நீ இன்ட்ரோ குடுக்காதப்பவே நினச்சேன் டி ஏதோ இருக்குனு! சரி உன் லவ்வ முகிலன் கிட்ட சொல்லிட்டியா? என rரம்யா கேட்டாள்.
"இன்னும் இல்ல, முதல்ல அவன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கணும்" என கயல்விழி கூறினாள்.
"பார்த்து டி, பையன் வேற ஸ்மார்ட்டா இருக்கான் ! சாப்ட்வேர் என்ஜினீயர்னு வேற சொல்ற, வேற யாரையாவது லவ் பண்ண போறான். நல்லா தெரிஞ்சுக்கிட்டு உன் லவ்வ சொல்லு" என்றாள் ரம்யா.
"நீ வேற ஏன்டி பயப்படுத்தற" என கூறினாள் கயல்விழி.
முகிலன் ஆபீஸில் செய்து கொண்டிருந்தான்...
திடீரென தன் நிழலாகிய நிலாவின் நினைவு வர மெய்மறந்திருந்தான் முகிலன்.
அப்போது அங்கு வந்த முகிலனின் நண்பன் கிஷோர், இந்தா டா இந்த பைலை மேனேஜர் உங்கிட்ட குடுக்க சொன்னார்" என முகிலனிடம் நீட்டினான்.
அதை ஏதும் காதில் வாங்காமல் கனவு கண்டுகொண்டிருந்தான் முகிலன்...
டேய் முகிலா! என கிஷோர் முகிலனை உலுக்க அவன் நிதானத்துக்கு வந்தான்.
"என்னடா நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன், நீ எங்கயோ பார்த்துட்டு இருக்க" என முகிலனை கேட்டான் கிஷோர்.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல டா" என முகிலன் கூறினான்.
"என்னடா திரும்ப கனவா? நிழலை பார்த்தேன் லவ் பண்றேன் தேடி பிடிப்பேன்னு மறுபடியும் உளறாதட ப்ளீஸ். அவன் அவன் பொண்ண பாத்தம்மா பிடிச்சிருந்தா லவ் பண்ணமா கல்யாணம் பண்ணமானு இருக்கான். ஆனா நீ நிழல பாத்தேன் லவ் பன்றேன் தேடி பிடிப்பேன்னு சுத்திட்டு இருக்க" என கூறினேன் கிஷோர்.
"உனக்கு என்னடா தெரியும் ! என் காதல் தூய்மையானது நான் அழகையோ, பணத்தையோ பார்த்து காதலிக்கல. என் கனவில் வரும் நிழல் தான் என்னவள் என நான் உணர்கிறேன். உணர்வுகளுக்கு சக்தி அதிகம் டா. கண்டிப்பா 'என் நிழலை நிஜமாக்குவேன்'" என கூறினான் முகிலன்.
"சாரி டா! நீ இவ்ளோ சீரியசா இருப்பைன்னு நினைக்கல. கண்டிப்பா உன் லவ் சக்ஸஸ் ஆகும்" என முகிலனின் தோளை தட்டினான் கிஷோர்.
அக்கா ரெடியா என கேட்டு கொண்டே வீட்டின் உள்ளே வந்தாள் கயல்விழி. " நான் ரெடி, வீட்ல எப்படி சமாளிக்கிறது" என கயல்விழியய் கேட்டாள் காயத்ரி.
நான் பாத்துக்கறேன் என கூறிய கயல்விழி, தனத்திடம் "அம்மா! நானும் அக்காவும் கொஞ்சம் வெளியில போய்ட்டு வருகிறோம் என கூறினாள் கயல்விழி.
"ஏய்! நிச்சயம் ஆக போற பொண்ணு தனியா வெளில போக கூடாது" என கூறினாள் தனம்.
"அம்மா எவ்ளோ நாள் தான் அக்கா வீட்லயே இருப்பா ! பக்கத்துல இருக்க கடைக்கு தான் போறோம். உங்க பொண்ணை பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு வர வேண்டியது என் பொறுப்பு சரியா?" என கூறி காயத்ரியை அழைத்து கொண்டு வெளியே சென்றாள் கயல்விழி.
கயல்விழியும், காயத்ரியும் வர அருணும் முகிலனும் உள்ளே அமர்ந்திருந்தனர்.
நிழல் நிஜமாகும் !!
-நந்தினி மோகனமுருகன்