"என் இனிய தனிமையே''
By ரூபாவதி..
"மாலை நேரத்தில், விளக்குகள் வெளிச்சத்தில் பகல்போல் ஜொலித்தது அந்த டிவி ஸ்டுடியோ அரங்கம்.. அனைவர் முகமும் ஒரு ஆவல்கலந்த எதிர்பார்ப்போடு வாசலையே பார்த்திருக்க, அவர்களின் ஏதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அந்த ஸ்டுடியோ வாசல் மிதமான வேகத்தில் வந்து நின்ற அந்த கருப்பு நிற ஜாக்வார் காரில் இருந்து இறங்கி கம்பீரமாக நடந்து வந்தாள் அனன்யா."
"அனன்யா இருபத்திஏழு வயது யுவதி, பிஸ்னஸை கையில் எடுத்த நான்கு வருடத்தில், பல பெரிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, இந்த ஆண்டின் இந்தியாவின் சிறந்த இளம்பெண் தொழிலதிபர் விருது பெற்றவள். அவள் அழகிலும், திறமையிலும், அறிவிலும் கவரப்பட்டு, பல பெரிய தொழிலதிபர்கள் இவளை தங்கள் வீட்டு மருமகளாக, மனைவியாக ஆக்கிக்கொள்ள முயல, யாருக்கும் சிக்காமல் சிறகடித்து பறக்கும் தன்னம்பிக்கை பறவை அவள்.''
''பல ஏமாற்றங்களுக்கு பிறகு, இறந்து சாம்பலானாலும் மீண்டும் உயிர்பெற்று சூரியனை நோக்கி பறக்கும் ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்து உயர்ந்து பறந்த அனன்யா அதான் பின் எடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றி தான்.. யாரெல்லாம் அவளை ஒதுக்கினார்களோ அவர்கள் முன்னே, அவர்களே நிமிர்ந்து பார்க்கும் அளவு விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்திருந்தாள்."
"அவளின் பால் வண்ண நிறத்திற்கு எடுப்பாக, அழகிய கருப்பு நிற சோலையில், இடைவரை இருந்த முடியை அழகாக விரிந்து விட்டு, கழுத்தில் மெல்லிய செயின், அதில் ஒற்றைக்கல் வைரம் பதித்த பெண்டன்ட், காதில் அதோ போல் ஒற்றைக்கல் வைரத்தோடு. இடது கையில் கருப்பு நிற பட்டையான ஃபாட்டிராக் வாட்ச், வலது கையில் மெல்லிய வைர பிரேஸ்லெட், காலில் கருப்பு நிற ஹீல்ஸ் செருப்பு அணிந்து தேவதை போல் மெதுவாக நடந்துவந்தவள். தன்னை இன்டர்வியூ செய்யும் பெண்ணிற்கு அழகான ஒரு புன்னகையை தந்தவிட்டு அரங்கின் நடுவில் இருந்த வெள்ளை நிற சோஃபாவில், கால்மேல் கால்போட்டு கம்பீரமாக உட்கார்ந்து, கைகளை சோஃபாவின் பக்கவாட்டில் வைத்தபடி அவள் அமர்ந்திருந்த தோரணையோ சொல்லியது அவள் இந்த விருதுக்கு தகுதியானவள் என்று.."
"வணக்கம் நேயர்களே, இன்று நம்முடன் இந்த நிகழ்ச்சியில் நம்மோடு இனைந்திருப்பது. இந்த ஆண்டின் இளம்பெண் தொழிலதிபர் விருதை பெற்ற அனன்யா வாசுதேவ் என்று நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா, அனன்யாவை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க.. அந்த அரங்கமே கைதட்டும் ஓசையில் கதிகலங்கியது.. 'ரம்யா அனன்யாவிடம் அவள் தொழில், அதன் வளர்ச்சி, அடுத்தகட்ட அவளின் செயல்பாடுகள் பற்றி அனைத்தையும் கேட்டவள். இறுதியாக மேடம் கடைசிய உங்க பெர்சனல் லைஃப் பத்தி ஒரு கேள்வி கேக்கலாமா என்று அப்பாவி போல் கேட்க?"
"பெர்சனல் னு நீங்களே சொல்றீங்க. அப்றம் அதை இத்தனை பேர் முன்னாடி கேட்ட எப்படி மிஸ்.ரம்யா என்று புருவம் உயர்த்தி அனன்யா கழுவும் மீனில் நழுவும் மீனாய் பதில் உறைக்க..!! ''
''நோ…நோ மேம்.. அப்படி ஒன்னும் இல்ல.. மோஸ்லி இந்த விஷயம் உங்களை தெரிஞ்ச எல்லார்கும் தெரிஞ்சது தான் என்று தொகுப்பாளினிக்கே உரிய அக்மார்க் ரெடிமேட் புன்னகையுடன் சொல்ல.."
"ம்ம்ம், அதான் எல்லாருக்குமே தெரியும்னு நீங்களே சொல்லிட்டீங்களே. அப்ப மறுபடி அதை பத்தி பேசி எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும் ரம்யா என்று அனன்யாவும் நானும் உனக்கு சளைத்தவள் அல்ல என்ற ரீதியில் பதில் கூற ரம்யா தான் பாவம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.. அவளின் முகத்தை பார்த்து மென்மையாக சிரித்த அனன்யா.. ஒகே.. ஒகே மிஸ். ரம்யா. நா சும்மா ஒரு ஃபண்னுக்கு தா அப்படி சொன்னேன்.. யூ கேன் அஸ்க் வாட் யூ வாண்ட். உங்க கேள்விக்கு என்கிட்ட பதில் இருந்தா நான் சொல்றேன். ஆதர்வைஸ் நோ கமெண்ட்ஸ் சொல்லிட்டுப் போறேன் என்று அழகாய் சிரிக்க.. ரம்யா வந்தவரை லாபம் என்று நினைத்தவள்.. தேங்க் யூ மேம். நா உங்க பாஸ்ட் லைஃப் பத்தியும், உங்க லவ், அதுல நடந்த ப்ரேக்-ஆப், அதுக்கு அப்றமான உங்க லைஃப் பத்தி தா கேக்க வந்தேன் என்று இழுக்க..''
"ம்ம்ம். கேக்க வந்தததை முழுசா கேளுங்க ரம்யா, நீங்க முழுசா கேட்டதானே, நானும் தெளிவ பதில் சொல்லமுடியும்.. ம்ம்ம் கேரிஆன் என்று ரம்யாவிற்கு அனுமதி வழங்க.. ரம்யா படபடவென தன் கேள்வி மழையை பொழிந்தாள்.''
''உங்க இருபது வயசுல உங்களுக்கும், பிஸ்னஸ்மேன் மிஸ்டர். பிரதீப் க்கும் நிச்சயம் ஆச்சு.. அதுவும் நீங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புனீங்க. நீங்க ரெண்டு பேரும் தா கல்யாணம் செய்துக்க போறீங்கன்னு இந்த நாடு முழுக்க தெரியும்.. ஆன நாலு வருஷம் முந்தி உங்க பேம்லில பிரச்சனை வந்து உங்க பிசினஸ் லாஸ் ல போனதும், தீடிர்னு மிஸ்டர்.பிரதீப் உங்களை விட்டுட்டு அவங்க பிஸ்னஸ் பாட்னர் பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்டாரு.." கல்யாணம் நின்னு, பிஸ்னஸ்சும் லாஸ் ஆகி தனிய நின்ன நீங்க, அடுத்து எடுத்து வச்ச ஒவ்வொரு ஸ்டெப்பும் வெற்றி தான்.. ஜஸ்ட் நாலு வருஷத்தில் லாஸ்ல ஃபோன் உங்க பிஸ்னஸ்சை தனி ஒரு பெண்ண நின்னு வேறலெவல்க்கு கொண்டு போட்டீங்க.. காதல், கல்யாணம், குடும்பம்னு எல்லாமே உங்க கையவிட்டு போய்டுச்சு, இவ்வளவு பெரிய இழப்பு, ஏமாற்றத்துக்கு அப்றம். உங்களுக்கு இது எப்படி மேடம் சாத்தியம் ஆச்சு?? என்று ஒரே மூச்சில் அனைத்தையும் கேட்டு விட்டு மூச்சு வாங்க அனன்யாவை பார்த்த ரம்யாவிற்கு வாட்டர் பாட்டிலை எடுத்து கொடுத்த அனன்யா.. கொஞ்சம் மூச்சு விட்டு ரிலாஸ் பண்ணுங்க ரம்யா.. ப்பா!! என்ன பாஸ்ட்ட கொஸ்டின் கேக்குறீங்க.. பட் சாரி ரம்யா உங்க அளவுக்கு என்னால பாஸ்ட் ட பதில் சொல்லமுடியாது. முடிஞ்ச வரை எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் என்று அனன்யா கிண்டல் செய்ய, ரம்யா அவள் கேலியில் சற்று கன்னம் சிவந்தவள், அசடுவழிய சிரித்தாள்..''
''ஒகே ரம்யா. நீங்க கேட்ட முதல் கேள்வி பிரதீப் ஏன் என்னைவிட்டு இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்சாரு..?? ஐம் சாரி ரம்யா இதுக்கு பதில் என்கிட்ட இல்ல.. இந்த கேள்வியை நீங்க மிஸ்டர். பிரதீப் கிட்ட தான் கேக்கணும்.. ஒருவேளை அவர் பதில் சொன்னா, அது என்ன பதில்னு எனக்கும் சொல்லுங்க.. நானும் தெரிஞ்சுக்குறேன் என்று அலட்சியமாக சொன்னவள்.. அடுத்த கேள்வி இவ்வளவு ஏமாற்றத்துக்கு பிறகு தனியாக எப்டி இவ்வளவு தூரம் வந்தேன். அதுக்கு பதில் என்னோட இந்த வளர்ச்சிக்கு காரணமே எனக்கு கிடைத்த ஏமாற்றங்களும், இழப்பும் தான்.." வீடு, வாசல், சொந்தம், பந்தம்னு எல்லாத்தையும் இழந்து தனியாக நிக்கும்போது தான் என்னோட உண்மையா துணை யாருன்னு எனக்கு தெரிஞ்சுது.. சொந்த குடும்பமே பணம்போனதும் என்னை விட்டு போனபோது தான் என்னோட உண்மையான துணை யாருன்னு எனக்கு புரிஞ்சிது. அதோட உண்மையான, நம்பிக்கையான நட்பு எனக்கு கெடைச்துக்கு பிறகு தான், வெறும் பணக்கார பாவையாக இருந்த என்னை வாழ்க்கையில் போராடும் போராளி ஆக்கியது.. என்னக்குள்ள இருந்த என்னை எனக்கே தேடி கொடுத்தது அது தான்.. அதுகிட்ட நா நானாக இருக்கமுடிஞ்சுது. நா சரியான முடிவெடுக்கும் போது தட்டிக்கொடுத்து, தப்பான வழியில் போகும் போது அதை தடுத்து என்னை யோசிக்க வைத்து நல்வழி படுத்துச்சு, தவறிவிழும்போதும் தாங்கிப்பிடிச்சுது., என்னோட குறையை குத்திகாட்டினது இல்லை. முதுகுக்கு பின்னாடி புறம்பேசுனது இல்ல.. என்னை நானாவே ஏற்றுக்கொண்ட உண்மையான நட்பு அது."
"காதலும், கல்யாணமும் வெறும் வாழ்க்கையில் ஒரு பகுதி தான் அதுவே வாழ்க்கை இல்லைன்னும், வாழ்க்கை ரொம்ப பெருசுன்னு எனக்கு புரிவச்சுது. இன்னைக்கு நா இந்த நிலையில் இருக்க முக்கிய காரணம், சொல்லப்போன ஒரே காரணம் அதுதான் என்று மனதில் இருந்து அவள் உணர்ந்து சொன்ன வார்த்தையில் அந்த அரங்கமே உருகி நின்றது."
''படபடவென பேசிய அனன்யா தீடிரென தன் கை கடிகாரத்தை பார்த்தவள்.. " ஓகே ரம்யா எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, ஐ ஆம் ஜெட்டிங் லேட், ஐ ஹவ் டூ கோ., என்று இருக்கையில் இருந்து எழுந்தவள் ஐ ஹவ் ஏ கிரேட் டைம் வித் யூ ரம்யா என்று ரம்யா கையை பிடித்து குலுக்கியவள் அங்கிருந்து நான்கடி எடுத்துவைத்து எக்ஸ்க்யூ மீ மேடம், அந்த உங்க ப்ரெண்ட் பேரை சொல்லாமலே போறீங்களே என்று ஆர்வமாக கேட்க, அனன்யா நின்ற இடத்திலேயே நின்று திரும்பி ரம்யாவை பார்த்தவள், ஒரு இன்ச் அளவு இதழ் வளைத்தவள். ஒரே வார்த்தையில் தன் உற்ற நட்பின் பேயரை சொன்னாள்., "தனிமை" என் இனிய தனிமை என்னை எனக்கே தேடித்தந்த தனிமை என்று தேன் கலந்து குரலில் சொன்னவள் கம்பீரமாக தன் காரை நோக்கி சென்றாள்.."
என் தாயின் கருவறையில் இருந்து என்னுடன் வரும் என் துணையோ!!
வாடும்போது என்னை தாங்கும் தாயனாய்!
வீழும்போது தோள் கொடுக்கும் தோளானாய்!
என்றும் எனக்கு துணையாக என்னோட பயணிக்கும் என் 'தனிமை' 'என் இனிய தனிமையே' என்றும் உன்னோட நான்.!!
…………….. முற்றும்……………….