❤என் வானம்❤-11
"அர்ஜுனின், காரை இடித்ததும், அந்த இடத்தில் இருந்து, வேகமாக சென்ற லாரியை தொடர்ந்து, பின்னாலேயே ஒரு கார் வந்து நின்றது.
காரில் இருந்தவன், ஆக்சிடென்ட் ஆனா காரை பார்த்ததும், சட்டை பாக்கெட்டில் இருந்த, தன்னுடைய மொபைலை எடுத்து உடனே போன் செய்தான்.
"எதிர்பக்கம் எடுக்கப்பட்டதும், "ஐயா, வேலை முடிஞ்சிடுச்சி! இரண்டு பேரும் உயிரோட இருக்க சான்ஸே இல்லை என சொல்லவும்,
டேய், உண்மையை தானே சொல்ற? என்று தர்மாவின், கர்ஜனை குரல் கேட்க"
உண்மைங்க ஐயா, கார் தீ பற்றி எரியுறத என் கண்ணால தான் பார்த்துட்டு சொல்றேன் என்க.,
சரி சரி சீக்கிரம் அந்த இடத்தில் இருந்து உடனே கிளம்பு, கட்டளையாக ஒலித்தது தர்மாவின் குரல்,
இதோ கிளம்பிட்டேனுங்க ஐயா என்று பவ்யத்துடன் சொல்ல,
"டேய், உன்னை யாரும் பார்க்கில தானே! என தர்மா கர்ஜிக்க"
ஐயா, யாருமே பார்க்கல, இந்த பக்கம் ஒரு ஈ காக்கா கூட வரலைங்கயா என்றதும்,
சரி சரி உடனே கிளம்பிடு என்ற தர்மா, தன்னுடைய மொபைலை அணைத்து விட்டு, டேய் என்று குரல் கொடுக்க…
நாலைந்து பேர் தர்மாவின் முன்னால் வந்து நின்றனர்.
டேய் அந்த லாரி டிரைவரை முடிச்சிடுங்க... கூடவே அந்த லாரியை உருத்தெரியாமல் அழிச்சிடு… அந்த நம்பர்ல ஒரு லாரி இருந்ததாகவோ, எந்த ஆதாரமும் இருக்க கூடாது என்க,.
சரிங்க ஐயா என சொல்லிவிட்டு அவர்கள் நகரவும், வேகமாக வந்தான் சுரேஷ்.
சார் சார் போலீஷ் இன்ஸ்பெக்டர் வந்துருக்கார் உங்களை என்கொய்ரி பன்னனுமா?
வாட்?? என்னை என்கொய்ரி பன்னனுமா? எவனுக்குடா இவ்ளோ தைரியம், அதுவும் என்னையே கேள்விக் கேட்க! என்று உறுமிய தர்மாவை பார்த்து நடுங்கினான் சுரேஷ்.
சார், அது என தலையை சொரிந்தவன், நம்ம ஆளுங்க, அந்த ரகுராமனோட பெண்ணை தூக்கிட்டாங்க" என்று சொன்னதும்,
என்ன சொன்ன, ரகுராமனோட பெண்ணை தூக்கியாச்சா, சிலாகித்த தர்மா ஆமா, கிளி எப்படி இருக்கு? என கேட்க
பொண்ணு மயக்கத்துல தான் சார் இருக்கு, அதுவும், இந்த வீட்டோட பேஸ்மெண்ட்ல என்று சொல்லவும்" தர்மாவின் கண்களில் போதை ஏறியது.
சார், "ரகுராமன், தான் உங்க மேல கமிஷ்னர் ஆபிசில் கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கார், அதான் இன்ஸ்பெக்டர் உங்களை விசாரிக்க வந்துருக்கார் என்று சொன்னதும்,
சரி சரி அந்த இன்ஸ்பெக்டரை உள்ளே அனுப்பு என எரிச்சலுடன் சொன்னான் தர்மா.
சுரேஷ், இன்ஸ்பெக்டருடன் தர்மாவின் அறைக்குள் வந்தான்.
"ஐயா, வணக்கமுங்க என்று பவ்யமாக குனிந்து நின்ற இன்ஸ்பெக்டரை மேலிருந்து கீழாக பார்த்தவன்,.
யோவ் நீ தானா அந்த இன்சு, என்று நக்கலாக சிரித்த தர்மா, என்னய்யா என்ன விசாரிக்க வந்தவன் நீ தானா, என்க
ஐயா அது என தயங்கி நின்றான் இன்ஸ்பெக்டர்.
என்ன இன்சு இந்த மாசம் மாமுல் எல்லாம் கரெக்டா வந்து சேர்ந்துச்சா என்று விசாரித்த தர்மாவிடம்,
ஐயா, அதெல்லாம் கரெக்டா வந்துட்டுங்க!! என்றவன் தயங்கியபடியே, "ஐயா, ஒரு புகாரு வந்துருக்கு என்று மென்று முழுங்கினான் இன்ஸ்பெக்டர்.
என்ன புகார் இன்ஸு தெரியாதவன் போல கேட்டாலும் அவனுடைய குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தான் இன்ஸ்பெக்டர்.
ஐயா, பொண்ணை யாரோ கடத்திட்டாங்கன்னு, ஷிப்பிங் கம்பெனி ஓனர் ரகுராமன், நேரடியா கமிஷ்னர் ஆபிஸ் மூலமா கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கார் என்று அந்த பேப்பரை தர்மாவிடம் நீட்டினான். .
யோவ், இன்ஸ்" பெண்ணோட வயசை பார்த்தால் காதலிச்சவனோட ஓடி போயிருக்க கூட சான்ஸ் இருக்கு, அந்த கோணத்துல விசாரணையை ஆரம்பி என்று எப்படி விசாரணையை நடத்துவது என்று பாடம் படித்தான் தர்மா.
ஐயா சொன்னா எல்லாம் சரிதானுங்க, ஆனால் அந்த ரகுராமன், உங்க மேல தான் சந்தேகம்னு கமிஷ்னர்கிட்ட சொல்லிருக்கான், என திக்கி திணறி தயக்கத்துடன் ஒருவாராக சொல்லி முடித்தவன், கமிஷ்னர் கொஞ்சம் விரைப்பான ஆளு உங்களை விசாரணை செய்ய சொல்லி என்னை அனுப்பினார் என்க,.
சரி சரி நீ போ நான் பார்த்துக்கிறேன் என்று இன்ஸ்பெக்டரை அனுப்பி வைத்தான்.
டேய், அந்த ரகுராமனுக்கு போன் போடு என்று தர்மா கர்ஜிக்க… உடனே போன் போட்டான் சுரேஷ்.
ஐயா இந்தாங்க லைன்ல அந்த ரகுராமன் இருக்கார் என்று தர்மாவிடம் நீட்ட, அலட்சியமாக வாங்கியவன், என்ன ரகுராமா பொண்ணை காணும்னு போலீஸ்ல புகார் பன்னியிருக்க போல,
டேய், தர்மா" என் மகள் எங்கே? மரியாதையா அவளை என்கிட்ட ஒப்படைச்சிடு" இல்ல காலம் முழுக்க நீ கம்பி எண்ணனும் என்றதும், நகைச்சுவையை கேட்டது போல சிரித்தான் தர்மா.
யோவ், ரகுராமா" செம்ம காமெடி பன்றயா? நீ என்ன பன்ற, இன்னும் பத்து நிமிடத்தில், நான் சொல்ற இடத்துக்கு வந்தால், உன் பொண்ணோட மானம் காப்பாத்தப்படும், இல்லைனா, ஒட்டு துணிக் கூட இல்லாமல் நடுரோட்டுல கிடப்பா! "நாளைக்கு நியூஸ் பேப்பர்ல, இளம்பெண் மர்ம நபர்களால், கற்பழிக்கப்பட்டு மரணம் என்று, கொட்டை எழுத்துல வரும், கூடவே இறந்து போன பெண் பிரபல தொழிலதிபர் ரரகுராமனின் ஒரே மகள் என்றும் வரும், என எச்சரிக்கவும், ரகுராமனின் உடல் நடுங்கியது.
தர்மா, என் பொண்ணை ஒன்னும் செஞ்சிடாத, என்று கதறிய ரகுராமனின் குரலை கேட்டு ஏளனமாக சிரித்தவன், இப்போவே ஐந்து நிமிடம் முடிஞ்சி போச்சி ரகுராமா!! இன்னும் இருபத்தி ஐந்து நிமிடம் தான் இருக்கு" அதுக்குள்ள வந்துட்டா உன் பெண்ணோட மானமும் உயிரும் இருக்கும். என்ற தர்மாவின் குரல் கொடூரமாக ஒலித்தது.
"ரகுராமன், தன் வீட்டிலிருந்து புயல் வேகத்தில் கிளம்பினார், பதின் பருவ பெண்ணின் தகப்பனான ரகுராமனுக்கு உடலெங்கும் நடுங்க, யார் மீதும் மோதாமல் தர்மா சொன்ன இடத்திற்கு வேகமாக வந்து சேர்ந்தார். பெண்ணின் மானமே பெரிது, என தாமதாக உணர்ந்தார், எத்தனையோ பேர் தர்மாவைப் பற்றி சொல்லும் போது அலட்சியப்படுத்திய தன் புத்தியை நினைத்து காலம் கடந்து புலம்பினார். அந்த அரக்கனிடம் சிக்கி சீரழியவா, ஆசை ஆசையாய் மகளை பாலூட்டி சீராட்டி வளர்த்தேன், என்று மனம் யோசிக்க செய்தது. எப்பாடுபட்டாவது என் மகளை அவனிடம் இருந்து காப்பாற்றியே தீரவேண்டும் என்று மனதுக்குள் முடிவெடுத்தவர்,
தர்மாவின், முன்னால் வியர்த்து விறுவிறுத்து நடுக்கத்துடன் வந்து நின்றார் ரகுராமன்.
சுரேஷ்,, டைம் செக் பன்னியா, ரகுராம் சார் கரெக்டான டையத்துக்கு வந்துட்டாரா? என்று நக்கலாக கேட்டான் தர்மா.
அதெல்லாம் சார், சரியான நேரத்துக்கு வந்துட்டார், என்று சொன்னான் சுரேஷ்.
நல்லா கேட்டுக்கோ சுரேஷ், இது ரகுராமனோட' பொண்ணு பிரச்சனை மட்டும் இல்ல, அவரோட கௌரவப் பிரச்சனையும் கூட, என இடக்காக சொன்ன தர்மாவின் காலில் சட்டென விழுந்தார் ரகுராமன்.
தன் காலடியில் கிடந்த ரகுராமனை' துச்சமாக பார்த்த தர்மா, சுரேஷிடம் திரும்பி, ச்சு ச்சு அட அட ரகுராமனுக்கு தன் பொண்ணு மேல தான் எம்புட்டு பாசம், என்று கவரைப்படுபவன் போல பேசியவன், சும்மா சொல்ல கூடாதுயா, அப்பான்னா உன்னை போல தான்யா இருக்கனும் என்று அந்த இடமே அதிரும்படி பேய் சிரிப்பு சிரித்தான் தர்மா.
தர்மா என் மகள் எங்கே? தவிப்புடன் கேட்ட ரகுராமனை ஏளனமாக பார்த்தவன், உன் பொண்ணா என்னிடமா! என தன் சட்டையில் உள்ள பாக்கெட்டை துலாவியவன் ஃப்பூ இல்லையே என்று உதடு பிதுக்க
தர்மா" நீ என்ன கேட்டாலும் தரேன், என் மகளை மட்டும் கொடுத்துடு என அவன் காலில் விழுந்தபடியே அழுது கெஞ்ச, அதை பார்த்த தர்மாவின் முகம் திருப்தியடைந்தது.
ஹா ஹா ஹா என்று பேய் சிரிப்பு சிரித்தவன், இது என்னன்னு கொஞ்சம் பார் என்று ரகுராமனின் முன்பு பேப்பரை நீட்ட அதை வாங்கி பார்த்தவர் அதிர்ந்தார்.
தான் தர்மாவின், மீது எழுதி கொடுத்த கம்ப்ளைன்ட் பேப்பர்! இவனிடம் எப்படி வந்தது என அதிர்ச்சி கலந்து பார்த்தவரின் கை நடுங்கியது.
என்னடா, நாம ஸ்டேஷன்ல கொடுத்த கம்ப்ளைன்ட், இவனிடம் வந்துருக்கேனு பார்க்கிறியா, என்று கர்ஜிக்க.. வெளிறி போய் நின்றிருந்தான் ரகுராமன்.
உனக்கு என்ன வேணும் தர்மா, நீ எது கேட்டாலும் தரேன் சொல்லு, என் சொத்து எல்லாத்தையும், நான் கொடுத்துடுறேன்! ஆனால் என் மகளை மட்டும் ஒன்றும் செஞ்சிடாதே, என்று ரகுராமன் கெஞ்ச கெஞ்ச தர்மாவின் உடல் பூரித்தது உள்ளம் மகிழ்ந்தது,
யோவ் ரகுராமா, நீ கெஞ்சுறதை கேட்க கேட்க நான் வானத்துல பறக்குற மாதிரி ஒரு ஃபீல், நீ பிஸ்னெஸ் மேன் தானே, அதான் நேரடியா பாயின்ட்டுக்கு வந்துட்ட என்றவன், சுரேஷ் என்று அழைத்து அவனிடம் கண்ணை காட்ட,
சுரேஷ் ரகுராமனிடம் திரும்பி,, "சார் நீங்க என்ன பன்றீங்க உங்க ஷிப்பிங் கம்பெனியை எங்க ஐயா பேருக்கு டிரான்ஸ்ஃபர் பன்றீங்க, எங்க ஐயா ரொம்ப பேராசை படமாட்டார், அடுத்து நீங்க என்ன செய்யனும்னா, எங்க ஐயா மேல கமிஷ்னர் ஆபிசீல் கொடுத்த கம்ப்ளைன்ட்டை திரும்ப வாங்கிடுறீங்க என சொல்லவும்,
ரகுராமனின் தலை, சரி என்று தானாக ஆடியது.
அடுத்த அறைமணி நேரத்தில் அனைத்து வேலைகளும் தூரிதமாக நடந்தது. ரகுராமனின் கம்பெனி தர்மாவின் பெயருக்கு மாற்றப்பட்டது. அதே போல அவன் மீது இருந்த புகாரும் உடனடியாக திரும்ப பெறப்பட்டதும்,
ரகுராமனின் மகள் அறைகுறை ஆடையோடு போதை மருந்தின் வீரியத்தால் சுயநினைவின்றி, அழைத்துவரப்பட பதறிப்போனார் ரகுராமன். தன் மேல் சட்டையை கழட்டி, மகளின் மேல் போர்த்தியபடி அவளை அழைத்துக் கொண்டு நகர ஆரம்பிக்க… வல்லூறுகளை போல் பார்த்துக் கொண்டிருந்த அடியாட்களை பார்த்து தன் மகளை கையணைப்பில் வைத்துக் கொண்டார்.
யோவ் ரகுராம், நீ கொடுத்து வச்சவன்டா,, என் கூண்டுக்குள்ள சிக்கின எந்த பெண்ணும், திரும்பி போனதா சரித்திரமே இல்லை. ஆனால் உன் மகள் மட்டும் தான் எந்த சேதாரமும் இல்லாமல், இங்கேயிருந்து வெளியே போற முதல் பெண், என மறைமுகமாக எச்சரித்தான் தர்மா. எனக்கு எதிராக நீ செயல்பட்டால், உன் மகளின் மானம், உயிர் இரண்டும் பறிக்கப்படும் என்ற மிரட்டல் அவன் குரலில் இருந்தது.
டேய் தர்மா, உனக்கு அழிவு காலம் நெருங்கிட்டுடா?? என் வயிறு எரியுற மாதிரி, நீயும் நடுரோட்டுல எரிவடா!! என மனதுக்குள் சாபமிட்டவர், தன் மகளுடன் அந்த இடத்தை விட்டு வேகமாக சென்றார் ரகுராமன்.
அவர் விட்ட சாபத்தை உறுதி செய்வது போல இடி பலமான சத்தத்துடன் இடித்தது.
அர்ஜுனின் வீடு:
"அம்பிகையின், மனம் பழைய நினைவுகளை நினைத்து கலங்கியது. கடைசி வரை அர்ஜுனோடு இருக்க முடியாமல் போனதை எண்ணி தாயுள்ளம் துடித்தது.
"அழுதழுது சிவந்த கண்களுடன், வெறித்து பார்த்தபடியே அறையில் முடங்கியிருந்த அம்பிகையின் அருகே வந்தார் கைலாஷ்.
அம்பிகை என அழைத்தும், திரும்பாமலே வெளியே தோட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த மனைவியின் தோற்றம், அவரின் மனதை வருத்த, மனைவியின் தோளில் கையை வைத்து, அம்மு என்று அழைத்தவரின் குரல் கலங்கியிருந்தது.
"கணவனின், கலங்கிய குரலில் தன்னிலைக்கு வந்தவர், அவர் கைகளில் இருந்த சாப்பாட்டின் மீது பார்வை பட, விரக்தியாக சிரித்த அம்பிகை, ஒரு வேளை, இரண்டு வேளை சாப்பிடலனா, நான் செத்துட மாட்டேன்ங்க" அப்படி சாகுறவளா இருந்தா, பிறந்து சில மாதங்களே ஆன என் குழந்தையை பிரிச்சி கொண்டு போனீங்களே, அன்னைக்கே நான் என் இதயம் வெடிச்சி செத்துருக்கனும், ஆனால் நான் சாகல, அப்போதும் சரி இப்போதும் சரி என் பிளைக்குனு இந்த கையால, ஒரு வாய், ஏன் ஒரு வேளையாவது நான் ஊட்டி விட்டுருப்பேனா?, இல்லையே கடைசி வரைக்கும், என் இரண்டு பிள்ளைகளுடன் சேர்ந்து வாழுற பாக்கியம் கிடைக்காலேயே போய்ட்டுங்களே, ஒரு புள்ள தாய்பாசத்தை உணராமலேயே போய் சேர்ந்துட்டானே, என்று அழுது கரைந்தார் அம்பிகை.
"அம்பிகை, அழாதம்மா என்று மனைவியை ஆறுதல்படுத்த முயன்று தோற்றுப் போனார் கைலாஷ்.
இரண்டு பிள்ளைகளில், ஒரு மகனை பிரிஞ்சி இருந்ததுக்கே நான் பாதி செத்துட்டேன். என் கிட்டையே வளர்ந்த புள்ள திடிர்னு தற்கொலை பன்னிட்டு செத்துப் போனப்போ கூட, நான் சாகாமல் கல்லு மாதிரி உயிரோட தானே இருந்தேன். அர்ஜுனோட உருவத்துல, செத்து போன கிருஷ்ணாவை பார்த்து நடமாடினேன். ஆனால் என் புள்ள ஒரு படி மேல போய் உயிரோட இருக்கிற தன்னை சமாதிக் கட்டிட்டு இறந்து போனவனுக்கு உயிர் கொடுத்துட்டு, தனக்கே திவசம் செய்துட்டு இருந்திருக்கானே, என தாயுள்ளம் புலம்பி ரத்த கண்ணீர் சிந்தியது.
அன்று இறந்தது கிருஷ்ணா என்றெண்ணி அழுது துடித்தவர், இன்று அர்ஜுனின் இறப்பை நினைத்து அழுகையில் கரைந்தார்.
நம்ம கிருஷ்ணா வீட்டுக்கு வந்தால் தான் ஏன் இப்படி செஞ்சான்னு நமக்கு தெரிய வரும் அம்பிகை என்று கைலாஷ் சொன்னதும்,
வேண்டாம்ங்க, வேண்டாம்" நீங்களும் உங்க அம்மாவும் இதுவரை செஞ்சது எல்லாமே போதும், இனி உங்க அவசர புத்தியால எதையாவது செய்து எல்லாரோட வாழ்க்கையையும் அழிச்சிடாதிங்க!!
அம்பிகை என்று அதிர்ச்சியுடன் ஒலித்தது கைலாஷின் குரல்.
"அர்ஜுனை, தான் கல்யாணம் செய்திருக்கிறதா நினைச்சிட்டு இருக்கிற அப்பாவி ஜீவனோட வாழ்கையில் விளையாடாதிங்க, ஒருவேளை தேவாவுக்கு தான் திருமணம் செய்தது அர்ஜுன் இல்ல, அவனோட அண்ணன் கிருஷ்ணாவை தான்னு தெரிய வந்தால், அதை நினைச்சி பார்க்கும் போதே, என் உடம்பு நடுங்குது என்று சொன்ன பிறகு தான் கைலாஷிற்கும், மருமகள் புத்திர சோகத்தால் அழுது புலம்புவதை கேட்டுக் கொண்டு சமாதானப்படுத்த முடியாத, தன்னுடைய கையாலாகத நிலையை எண்ணி உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்த ரங்கநாயகிக்கும், புரிந்தது.
அவங்க இரண்டு பேரும், மறுவீட்டு விருந்து முடிந்து வரட்டும், நாம கிருஷ்ணாகிட்ட இல்ல இல்ல அர்ஜுனிடம் கேட்டு தெரிந்து கொள்வோம், என அம்பிகை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க, கணவனும் மாமியாரும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்தனர்.
ஒருவாராக, தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்த அம்பிகை மனைவியாக கணவனுக்கான பணிகளையும், மருமகளாக மாமியாருக்கு தேவையான அனைத்தையும் அமைதியுடனே செய்து கொண்டிருந்தார்.
மருமகளிடம், பேச முயற்சி செய்தும் "ரங்கநாயகியால், பேச முடியாமல் போனது. தான் மூடநம்பிகையால் எத்தகைய பெரிய பாவத்தை செய்து விட்டேன் என உள்ளுக்குள் கதறினார்.
"நேரம், போய்க் கொண்டே இருக்க மாலையும் மறைய ஆரம்பித்தும், அர்ஜுனும் தேவாவும் இன்னும் வீட்டுக்கு திரும்பவில்லையே, என நினைத்து அம்பிகையின் மனம் கலக்கமடைந்தது. அவருடைய மனது படப்படக்க பயத்தை உண்டு பன்னியது.
திடிரென, பூஜையறையில் இருந்த எதுவோ, கீழே விழுந்து உடையும் சத்தம் கேட்டு வேகமாக சென்ற அம்பிகை, பெருமாளின் போட்டோ கீழே விழுந்து, கண்ணாடி நொறுங்கி இருப்பதை பார்த்து அதிர்ந்து நின்றவருக்கு, மேலே அர்ஜுனின் அறையில் இருந்து சத்தம் கேட்டதும், வேகமாக அந்த அறையை சென்று பார்த்த அம்பிகையின் மனம் நிலைக்குழைந்து போனது.
திருமணக் கோலத்தில் இருந்த அர்ஜுன் மற்றும் தேவாவின் போட்டோ கீழே விழுந்து கண்ணாடி சுக்கலாக, உடைந்து போய் இருப்பதை பார்த்ததும், கடவுளே என் மகனுக்கும் மருமகளுக்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாது, நீ தான் காப்பாற்றனும் என்று மனதில் வேண்டியபடியே போட்டோவை கையில் எடுக்க, அதில் உள்ள கிளாஸ் பீஸ் அம்பிகையின் கையை கிழித்தது.
"என்னங்க!! என்று சத்தமாக கத்திய அம்பிகையின், குரல் கேட்டு வேகமாக வந்த கைலாஷ், உடைந்திருந்த போட்டோவையும், கையில் இரத்தம் வழிந்தபடி கண்களில் பயமும் உடம்பில் நடுக்கமுமாக நின்றிருந்த மனையாளை கண்டதும்,
அம்பிகை, என்ன ஆச்சி? கையெல்லாம் ப்ளட்டா இருக்கு என்று பதற,
என்னங்க!! அர்ஜுனும், தேவாவும் கிளம்பிட்டாங்களானு சம்பந்தி வீட்டுக்கு போன் போட்டு கேளுங்க, என்று அவசரப்படுத்த உடனே அமுதவாணனின் நம்பருக்கு தொடர்பு கொண்டார் கைலாஷ்.
அமுதவாணன் இல்லம்:
இளா தேவாகிட்டே இருந்து போன் வந்துச்சா மணி ஏழாக போகுது என்று சந்தேகமாக கேட்டார் அகல்யா.
இன்னும் இல்லமா, இங்கேயிருந்து கிளம்பின நேரத்துக்கு, ஆறு ஆறறைக்கே வீட்டுக்கு போய்டலாம், மேடமுக்கு பேச்சு வந்துருச்சில்ல ஆன்ட்டிக்கிட்ட கதை கதையா வாய் வலிக்கிற வரைக்கும் பேசிட்டு இருப்பா, நீங்க கவலையே படாமல் இருங்க என்று சமாதானமாக சொன்ன மகளை அமைதியாக பார்த்தார்.
என்னமோ தெரியலைடி மனசு பாரமா இருக்கிற மாதிரி இருக்கு, யாருக்கோ என்னமோ நடந்த மாதிரி தோனுது என புலம்பியபடி பூஜையறைக்குள் சென்ற அகல்யா, தன் மன கிலேசத்தை இறைவனின் பாதத்தில் சமர்பித்தார்.
அம்மா நாங்களும் கிளம்புறோம் உன் மாப்பிள்ளை சொன்ன மாதிரி எல்லாத்தையுமே பேக் பன்னிட்டேன் என்று வந்து நின்ற மகளை பார்த்த அகல்யா,
இளா, உனக்கு அறிவு கொஞ்சமாவது இருக்கா?, ஆறறை மணிக்கு ஆரம்பித்த மழை, இப்போ வரைக்கும் கொட்டோ கொட்டோனு கொட்டிக்கிட்டு இருக்கு, காத்தும் புயல் மாதிரி வீசுது இப்போ போய் கிளம்புறேன்னு சொல்ற, இன்னைக்கு இங்கேயே இருந்துட்டு நாளைக்கு போங்க என சொல்லிக் கொண்டிருக்க..
அகல்யா அகல்யா என்று கத்தியபடியே அமுதவாணனும், இளா என்று அழைத்தபடி சந்தோஷும, மாடியில் இருந்து வேகமாக வந்தனர்.
கணவனின் பதற்றமான குரலை கேட்டதும், வேகமாக ஹாலிற்கு சென்ற அகல்யா மற்றும் இளாவின் முன்பு பதற்றத்துடன் நின்றிருந்தனர்.
அகல்யா, சம்பந்தி வீட்டில் இருந்து தான் போன், அர்ஜுனும் தேவாவும் இங்கேயே தங்கிட்டாங்களானு கேட்டாங்க என்று சொன்னதும், அதிர்ந்த அகல்யா
என்னங்க சொல்றீங்க?
ஆமாம் அகல்யா இன்னும் அவங்க வீடு போய் சேரலை என்று பதற்றமும் தவிப்புமாக சொன்ன கணவனை பார்த்தவர்,
மாப்பிள்ளை, நீங்க அர்ஜுன் தம்பிக்கு போன் போட்டிங்களா! என்று தவிப்புடன் கேட்க,
அத்தை, கைலாஷ் அப்பா போன் பன்ன உடனே, அர்ஜுனுக்கு தான் போட்டேன், ஆனால் அவனோட போன் சுவிட்ச் ஆஃப்னு வருது என்று கண்களில் பதற்றமும் முகத்தில் கவலையுயாக சொன்ன மருமகனை பார்த்து மேற்கொண்டு எதையும் கேட்கவில்லை அகல்யா.
அம்மா, இவ்வளவு நேரமாகியும் வீட்டுக்கு போகலனா, இரண்டு பேரும் எங்கே போயிருப்பாங்க! என்று நடுக்கத்துடன் ஒலித்தது இளாவின் குரல், தன்னவளின் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்த சந்தோஷ், இளாவின் அருகே வந்து அவளை ஒரு கையால் அணைத்தவன், நீ பயப்படாத, நான் போய் பார்த்துட்டு வரேன் என்று ஆறுதலாக சொல்லிவிட்டு, அத்தை மாமா நான் போய்ட்டு வரேன் என்க.,
எப்படி போவீங்க மாப்பிள்ளை, வெளியே ஒரே மழையும் காத்துமா இருக்கே, என்றார் அகல்யா. அவர் குரலில் பயமும் கலக்கமும் சேர்ந்தே இருந்தது.
அதெல்லாம் பிராப்ளம் இல்லை அத்தை! நான், போய் பார்த்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான் சந்தோஷ்.
"அகல்யா, நானும் மாப்பிள்ளை கூட போய் பார்த்துட்டு வரேன், இல்லனா என் மனசுக்கு நிம்மதியே இருக்காது என சொல்லியவர், மனைவியின் பதிலை கூட எதிர்பார்க்காமல் வேகமாக சந்தோஷ் பின்னாலேயே சென்றார்.
காரில் ஏறி அமர்ந்த சந்தோஷுக்கு, "விடாது பெய்துக் கொண்டிருக்கும் மழையின் மீது, கோபமாக வந்தது. தன் மாமனார் வருவதை பார்த்துவிட்டு, டோரை திறந்து விட, அவர் ஏறி அமர்ந்ததும் வேகமாக காரை ஓட்டினான்.
"அமுதவாணனுக்கு, அர்ஜுனின் மீதே சந்தேகமாக இருந்தது. தேவாவுடன் போகும் வழியில் பிரச்சனை ஏதேனும் நடந்து இருக்குமோ" என்று வேறு குதர்க்கமாக யோசித்தார். தன் மாப்பிள்ளை வந்து சொல்லும் வரையிலும் தனக்கு பொறுமை இருக்காது என்று உணர்ந்தே அவரும் கிளம்பிவிட்டார்.
மழையின் வேகம் சற்று தனிந்தது போல தோன்றியது அமுதவாணனுக்கு. ஒர் இடத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டமாக மக்கள் நின்று இருப்பதை பார்த்தவர், "மாப்பிள்ளை" கொஞ்சம் அங்கே பாருங்க! என்று பக்கவாட்டு புறமாக காண்பித்தார்.
உடனே காரின் வேகத்தை குறைத்தவன், மாமனார் காட்டிய பக்கம், தலையை திருப்பி பார்த்தவன், தன் உள்ளுணர்வின் காரணமாக வண்டியை நிறுத்தி கார் கண்ணாடியை இறக்கி விட்டு கூட்டத்தில் இருந்து கலைந்து செல்பவரை அழைத்தான்.
ஐயா, என்னங்க ஒரே கூட்டமா இருக்கு!! என்ன ஏது என்று தெரிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தால் கேட்டான் சந்தோஷ்.
அது வந்து தம்பி, ஒரு ஆறு ஆறறை மணிவாக்குல, இந்த இடத்தில் ஒரு கார் ஆக்சிடென்ட் ஆகி எரிஞ்சதா சொல்றாங்க! அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன், என்றதும் சந்தோஷிற்கு சுருக்கென்றது.
"ஏற்கனவே நடந்த துப்பாக்கி சூடு, நியாபகத்தில் வர, காரை நிறுத்திவிட்டு இறங்கியவன், வேகமாக அந்த இடத்திற்கு சென்றான்.
பாதி எரிந்தும், எரியாமலும் இருந்த காரை பார்த்ததும், அதிர்ந்தவன் ஏங்க இந்த காரில் இருந்தவங்க எங்கே? என்று கேட்டான் சந்தோஷ்.!!
அருகே நின்று வேடிக்கை பார்த்தவரோ, இந்த காரில் இருந்தவங்களாம் எங்கேனு தெரியாதுங்க, இந்த வண்டியோட நிலைமையை பார்க்கும் போது ஆள் அவுட்டுன்னு தான் நினைக்கிறேன், என்று சொன்ன அடுத்த நொடி சந்தோஷின் பிடியில் சிக்கியிருந்தான்.
ஏய் என்னடா சொன்ன? என்று கோபத்தில் அந்த ஆளை அடிக்கவும், சிலர் வேகமாக வந்து தடுத்தனர்.
தம்பி, தம்பி விடுங்க! இந்த வண்டில இருந்தவங்களை பற்றி எங்களுக்கு தெரியாதுங்க! நாங்க வந்து பார்த்தபோது மழை லேசா பெய்தது காரும் எரிஞ்சிட்டு இருந்தது. அப்புறம் கொஞ்ச நேரத்தில், அதிகமா மழை பெய்ததால தான் நெருப்பும் அணைந்து போச்சி, நாங்க போலீசுக்கும் சொல்லிட்டோம் என்று நடந்ததை சொல்லவும், அப்போதும் அர்ஜுன் தேவாவின் நிலை என்ன ஆனது என்று தெரியாமல், அந்த இடத்தில் ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டு இருந்தவன் சேறில் வழுக்கி விழுந்து எழுந்து தேடிக் கொண்டு அலைந்தவனை தடுத்தார்.
தம்பி, இந்த இருட்டுல எதுவுமே தெரியாது, நீங்க தேடுறவங்களை நிச்சயமா யாராவது மருத்துவமனையில் சேர்த்துருப்பாங்க என்றார்.
ஆமா, அப்படி தான் இருக்கனும், அர்ஜுனுக்கும் தேவாவுக்கும் ஒன்றும் ஆகிருக்காது, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் காரை நோக்கி ஓடினான்.
சந்தோஷின் உடலில் ஒட்டியிருந்த சேரும் சகதியும், பதற்றமான முகத்தையும் பார்த்த இளாவின் அப்பா, வேகமாக காரில் இருந்து இறங்கி மாப்பிள்ளை என்னாச்சி அங்கே? ஏன் உங்க முகமெல்லாம் இப்படி இருக்கு என படபடப்புடன் கேட்க, மாமா
"ஆக்சிடென்ட் ஆன கார், நம்ம அர்ஜுனும் தேவாவும் போன கார் தான் என்று சொல்ல, அமுதவாணனோ அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
அதே நேரம் இருவருடைய மொபைலும் விடாமல் ரிங்காகிக் கொண்டு இருந்தது.