❤என் வானம்❤-12
"மாமா ஆக்சிடென்ட் ஆன கார், நம்ம அர்ஜுனும் தேவாவும் போன கார் தான் என்று பதறியபடி சொன்னான் சந்தோஷ்.
என்ன சொல்றீங்க மாப்பிள்ளை!! என்ற அமுதவாணனோ, சந்தோஷ் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
அதே நேரம் இருவருடைய மொபைலும் விடாமல் ரிங்காகிக் கொண்டு இருக்க, அதில் ஒளிர்ந்த நம்பரை பார்த்ததும், அமுதவாணனின் கைகள் நடுங்கியது.
சந்தோஷின் நிலைமையும், அதே போல தான் இருந்தது. அர்ஜுனின் அப்பா கைலாஷ் தான் அழைத்திருந்தார். மகனும் மருமகளும் இன்னும் வீடு வந்து சேராமல் இருப்பதை எண்ணி கலக்கமடைந்த மனைவியை சமாதானப்படுத்திவிட்டு சந்தோஷின் நம்பருக்கு அழைப்பை விடுத்தார்.
"என்னங்க!! எதுவுமே பேசாமல் ரொம்ப நேரமா, போனை காதிலேயே வச்சிட்டு இருக்கிங்க! அம்பிகையின் குரலில் இருந்த பயத்தையும், கலக்கத்தையும், கண்டுகொண்ட கைலாஷ், "உடனே ஒன்றுமில்லை அம்பிகை, சந்தோஷுக்கு லைன் கிடைக்கல, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு நான் ட்ரை பன்றேன் அதுக்குள்ள மகனும் மருமகளும் வந்தாலும் வரலாம் என மனைவியை கலவரப்படுத்த கூடாது என பொய்யை சொல்லி சமாளித்தார்.
தன்னவர் சொன்னதை உண்மை என்று நம்பிய அம்பிகையோ, "என்னமோ தெரியலைங்க, என் மனசு பக்கு பக்குனு அடிச்சிக்கிது, ஒரே படபடப்பா வேற இருக்கு, இரண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது தானே, என்ற மனைவியின் முகத்தில் இருந்த கலக்கத்தை பார்த்த கைலாஷ், "அம்பிகை, நம்ம பிள்ளைங்களுக்கு ஒன்றும் ஆகாது, நீ கவலைப்படாதே, அவங்க வீட்டுக்கு வர்றதுக்குள்ள ஸ்பெஷலா ஏதாவது செய்து வை, என்க.,
அட அமாங்க!! நீங்க சொல்றதும் சரிதான், ச்சே இதை நான் மறந்தே போய்ட்டேன் பார்த்திங்களா? என்று தலையில் அடித்து கொண்டவர், "நான், போய் என் மகனுக்கு பிடிச்சதை செய்கிறேன், என்று கலங்கிய கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டு கிச்சனிற்கு வேகமாக சென்றவர் சமையல்காரர்களிடம் சில கட்டளைகளை பிறப்பித்தார்.
அதே நேரம் அமுதவாணின் வீட்டில், கணவனும், மாப்பிள்ளையும் தேவா மற்றும் அர்ஜுனை தேடி சென்றதுமே, அகல்யா பூஜையறையில் தஞ்சமடைந்தார். கண்களை மூடி, இறைவனிடம் மனமுருக வேண்டியபடி இருந்தார்.
அப்போது, அம்மா!! அம்மா!! என்ற மகளின் பதற்றமான குரலில், கண்களை திறந்த அகல்யா, என்ன இளா? ஏன் என்னாச்சு? என்று மனதில் உண்டான பயத்தை மறைத்தபடி கேட்க!!
"அம்மா, நான் அப்பாவுக்கும் அவருக்கும் போன் பன்ன பன்ன, இரண்டு பேருமே எடுக்க மாட்டேங்கிறாங்க! ஏற்கனவே தேவா போனும் அர்ஜுன் அண்ணா போனும் சுவிட்ச் ஆஃப்னு வந்துட்டு இருக்கு, இப்ப இவங்களும் போனை எடுத்து பேசமாட்டேங்கிறாங்க!! கண்களில் இருக்கும் கண்ணீர் கீழே விழாமல் இருக்க தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள் இளா.
ஆனால் மகளின் முகத்தில் இருந்த பயத்தையும் கலவரத்தையும், கூடவே கண்களில் இருந்த கண்ணீரையும் பார்த்த அகல்யா, ஏய் இதுக்கா பயப்புடுற, வெளியே பாரு இளா, மழை எப்படி பேய்து, அந்த சத்தத்தில் அவங்களுக்கு போன் சத்தம் கேட்டுருக்காது, மொபைலை எடுத்து பார்த்தவுடனே போன் பன்னுவாங்க, சும்மா போன் போட்டு அவங்களை தொல்லை செய்யாமல் அமைதியாக இரு என்று சொன்னவர், தன்னுள் உண்டான பதற்றத்தை மறைக்க, அந்த இடத்தில் இருந்து வேகமாக நகர்ந்தார்.
கடவுளே தேவாவுக்கும் அர்ஜுனுக்கும் எந்த ஆபத்தும் வந்துருக்க கூடாது என இறைவனிடம் மனதுக்குள்ளேயே வேண்டியபடி, என்ன வேலையை செய்வது என புரியாமல் கிட்சனில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தார் அகல்யா.
"மாப்பிள்ளை அவங்க இரண்டு பேரையும் இப்போ எந்த ஹாஸ்பிடலில் அட்மிட் பன்னிருக்காங்க! என்று ஏதாவது சொன்னாங்களா? அய்யோ ரெண்டு பேருக்கும் என்னாச்சி எந்த நிலைமையில இருக்காங்கன்னு தெரியலையே மாப்பிள்ளை?
"அவரிடம் எந்த பதிலை சொல்வது, நடந்தது இப்போது நடப்பது எல்லாத்தையும் சேர்த்து பார்த்தாலே இது அர்ஜுனையும், தேவாவையும் கொலை செய்வதற்கு என்றே நடந்த ஒன்று என்று!! என தன் மனதுக்குள் நினைத்தவன், "வெளியே, மாமா அங்கே கூட்டத்தில், இருக்கிற யாருக்குமே காரில் இருந்தவங்களோட நிலைமையை பற்றி எதுவுமே தெரியலைனு, சொல்லிட்டாங்க! என்றவனின் குரலில் இருந்த வேதனையை கண்டுகொண்டார் அமுதவாணன்.
தற்போதைய நிலைமையில் கலங்கி தவித்து கொண்டு இருப்பதை விட அடுத்த கட்ட வேலையை செய்ய வேண்டும் என்று நினைத்தவர், "மாப்பிள்ளை! நாம இப்படியே பேசிட்டு நிற்கிறதால எந்த புரோயோஜனமும் இல்லை, வீட்டில் இருந்து மறுபடியும் நமக்கு போன் வருவதற்குள் வாங்க போலிஸ் ஸ்டேஷேன் போகலாம், அங்கே போனா நமக்கு அர்ஜுன் தேவாவை பற்றிய தகவல் தெரிஞ்சிடும் என்க.,
தன் மாமனாரின் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்ந்த சந்தோஷும் மனதில் உண்டான கலக்கத்தை விடுத்தவன், ஆமா மாமா நீங்க சொல்றது சரிதான்! வாங்க போகலாம் என்று சொல்லியவன், வேகமாக காரில் சென்று ஏற, அமுதவாணனும் உடனே ஏறினார்.
காரில், தன் மாமனார் ஏறியதும், ஸ்டார்ட் செய்து வேகமாக விரட்டிக் கொண்டு சென்றான் சந்தோஷ். அதே நேரம் அவனுடைய மொபைலுக்கு தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் இருக்க, எடுத்து பார்த்தவன் புது நம்பராக இருக்கவும், அதை ஏற்காமல், காவல் நிலையத்திற்கு காரை விரட்டிக்கொண்டிருந்தான்.
"மாப்பிள்ளை, தொடர்ந்து போன் வருது பாருங்க! எடுத்து பேசுங்க!! என்ற மாமனாரிடம், அன்னோன் நம்பரா, இருக்கு மாமா! அதான் எடுக்கல, என சொல்லிக் கொண்டே அருகே இருந்த போலீஸ் ஸ்டேஷனில் காரை நிறுத்திவிட்டு, வேகமாக இறங்கிய சந்தோஷின் போன் மறுபடியும் ரிங்காகவும், ச்சே எவன்டா அது நேரங்கெட்ட நேரத்தில என கோபத்துடன் முனுமுனுத்தவன், போனை ஆன் செய்து, காதில் வைத்த வேகத்தில், டேய் யார்டா நீ? விடாமல் போன் பன்னி தொல்லை பன்ற, என் கையில் மட்டும் நீ கிடைச்ச, கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சந்தோஷ் படபடவென கத்திக்கொண்டிருக்க!! எதிர்முனையில் அடுத்து சொன்ன செய்தியை கேட்டு மொபைலை நழுவவிட்டான்.
கோபத்துடன் பேசிக் கொண்டிருந்த மாப்பிள்ளையை பார்த்தபடி நின்றிருந்த அமுதவாணன், திடிரென்று மொபைலை தவற விட்டு சிலையாகி போனவனை பார்த்து அதிர்ந்தவர், மாப்பிள்ளை மாப்பிள்ளை என்ன ஆச்சு ஏன் இப்படி நிற்கிறீங்க என்றவர் அவனுடைய தோளை பற்றி உலுக்கவும், தன்னிலை அடைந்த சந்தோஷ்,
"மாமா, அ… அர்ஜுனும், தேவாவும் இருக்கிற இடம் தெரிந்துவிட்டது என்றவனின் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென கொட்டியது.
இவ்வளவு நேரமாக இருவருக்கும் என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று தெரியாமல் உள்ளுக்குள் துடித்துக் கொண்டும் வெளியே தன்னை தைரியமாக காட்டிக் கொண்டு இருந்தவனுக்கு, இருவரும் இருக்கும் இடம் தெரிந்ததுமே, மனதை இதுவரை அழுத்திக் கொண்டிருந்த வலியும் வேதனையும் மறைந்து போய் சந்தோஷத்தில் கண்ணீராய் வெளிவந்தது.
இருவரும் இருக்குமிடம் தெரிந்ததும், அமுதவாணன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். சின்ன குழந்தையாய் துள்ளி குதித்தார். மாப்பிள்ளை சீக்கிரம் வாங்க தேவாவையும், அர்ஜுனையும் பார்க்க போகலாம் என்றதும் தான், ஹாங் சரிங்க மாமா என்றவன், டிரைவர் சீட்டில் வேகமாக ஏறி அமர்ந்தவன், தன் மாமனார் அமர்ந்ததும், அடைமழையையும் பொருட்படுத்தாமல் காரை வேகமாக விரட்டிக் கொண்டு சென்றான் சந்தோஷ்.
போனில் அவர்கள் வர சொன்ன இடத்திற்கு காரை விரட்டியவன், அறைமணி நேரத்தில் அந்த இடத்தை அடைந்தான்.
காரில் இருந்து இறங்கிய இருவரும், பெரிய மருத்துவமனையை பார்த்தவன் உடனே ரிஷப்சனை அடைந்தான். இருவரின் உடல் மொழியில் ஒரு வித பதற்றமே வெளிப்பட்டது.
சந்தோஷ், ரிஷப்சனிஸ்டிடம், எஸ் க்யூஸ் மீ மேடம் என்க.,
கம்ப்யூட்டரில் புகுத்திருந்த தலையை மெதுவாக தூக்கி எஸ் சொல்லுங்க சார் என்க.,
இங்கே தேவநிலா அர்ஜுன் இரண்டு பேரையும், எந்த வார்டுல அட்மிட்டாகி இருக்காங்க! என்று கேட்டதும்,
ஒன் மினிட் சார்! என்றவள், கம்ப்யூட்டர் தொடுதிரையை தட்டி பார்த்துவிட்டு "சாரி சார், இந்த நேம்ல எந்த பேஷன்ட்டும் எங்க ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகலை என்று சொன்ன அடுத்த நொடி, வாட் என்று அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
"மாப்பிள்ளை, என்ன இப்டி சொல்றாங்க! நாம சரியான மருத்துவமனைக்கு தானே வந்து இருக்கோம்? பதற்றம் நிறைந்த குரலில் சந்தோஷிடம் கேட்டார் அமுதவாணன்.
தன் மாமனாரின் புறம் திரும்பிய சந்தோஷ், இந்த ஹாஸ்பிடலில் இருக்காங்கன்னு தான் போன்ல சொன்னாங்க மாமா, என்க.,
யார் சொன்னா மாப்பிள்ளை?
யார்னு தெரியலை மாமா? என்றவன் குரல் உள்ளே சென்றது.
மாப்பிள்ளை உங்களுக்கு, போன் பன்னானே அவனோட நம்பருக்கு உடனே போன் போடுங்க! எதுக்கும் இந்த ஹாஸ்பிடல் தானானு கேட்டுக்கல்லாம் என்றிட,
ஆமா மாமா, இதை எப்படி மறந்து போனேன் என்று தலையில் தட்டிக் கொண்ட சந்தோஷ், தன்னுடைய மொபைலில் இருந்த நம்பரை அழுத்தி காதில் வைத்ததும், நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளரின் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று கணினிக் குரல் வரவும், சோர்ந்து போனவன், மறுபடியும் வரவேற்பரை பெண்ணிடம்,
"மேடம், இன்னொரு டைம் செக் பன்னுங்களேன், அர்ஜுன் தேவா "ன்ற" பெயரில் யாராவது அட்மிட் ஆகிருக்காங்களானு என்று தனக்குள் இருக்கும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.
சார், இந்த பெயரில் எந்த பேஷண்ட்டும் இல்லைன்னு சொன்னா, போக வேண்டியது தானே! எதுக்கு சார், இப்படி தொல்லை பன்றீங்க? என நக்கலாகவும் அலட்சியத்துடனும் பேசினாள்.
ரிஷப்சனிஷ்ட்டின் அலட்சியத்தை பார்த்ததும் சந்தோஷின் கண்கள் கோபத்தில் சிவந்தது. தனக்குள் எழுந்த கோபத்தோடு, மழையின் பேரிரைச்சலையும் தான்டி, ஏய் என அவளை சத்தமாக கத்தியபடியே நெருங்கவும், பயத்தில் ரிஷப்சனிஷ்ட்டின் முகம் வெளிறிப்போனது.
அதே நேரம், இங்கே என்ன சத்தம்? என்று கடுமையான குரல் ஒலிக்க திரும்பிய வரவேற்பரை பெண்ணோ"
டாக்டர் இந்த ஆளு என்னை அடிக்க வரான், நல்ல வேளை நீங்க வந்தீங்க இல்லை என்றால் உடல் நடுங்க சொல்லிக் கொண்டிருக்க, ஏய் பொய்யா சொல்ற என்று சந்தோஷ் கோபத்தில் கத்த,
ஹலோ சார் ப்ளீஸ் கீப் கொய்ட்!! திஸ் ஈஸ் ஹாஸ்பிடல், எவ்ளோ பேஷண்ட்ஸ் இருக்காங்க
எங்கே தன்னை அடித்து விடுவானோ என்ற பயத்தில் உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவளின் முன்பு ஆபத்பாந்தவன் போல வந்து நின்றான் புதியவன்.
தன்னெதிரில் புதிதாக வந்து நின்றவனை பார்த்த சந்தோஷின் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதாக விரிந்தது. இவன் எப்படி இங்கே வந்தான். அதுவும் இப்போ என நினைத்தவன்,
நீ….! நீ….! என்று அடுத்து பேசமுடியாமல் சந்தோஷின் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொள்ள, புதிதாய் நின்றவனோ! என்னோடு வாங்க என்று அமுதவாணனையும் சந்தோஷையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
மருத்துவமனையின் முன்பகுதியில் இருந்து எதிர்புறமாக இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
நடப்பது ஏதும் புரியாமல் மனதில் உண்டான குழப்பத்துடன், புதியவனை பின்தொடர்ந்தான் சந்தோஷ். ஆனால் அமுதவாணனால் அமைதியாக செல்ல முடியவில்லை தன்னுடைய நீண்ட மௌனத்தை கலைத்தார்.
தம்பி நீங்க யார்? எங்களை எங்கே அழைச்சிட்டு போறீங்க!!
அமுதவாணனின் திடிர் கேள்வியால் முன்னால் நடந்தவனின் கால்கள் சட்டென நின்றது.
நீங்க யாரை தேடி வந்திங்களோ அவங்களைத்தான் பார்க்க போறீங்க என்று மட்டுமே சொல்லிவிட்டு மீண்டும் நடக்க துவங்கவும்,
என்ன, "அர்ஜுனும், தேவாவும்" இங்கே தான் இருக்காங்களா? அப்புறம் ஏன் அந்த வரவேற்பரை பெண், இரண்டு பேரும் இல்லைனு சொல்லனும், என்று மனதில் எழுந்த சந்தேகத்துடனும், குழப்பத்துடனும், அவன் பின்னாலேயே சென்றார் அமுதவாணன்.
மருத்துவமனையின் பின் பகுதியில் தனியாக உள்ள அறையின் முன்பு காவலுக்காய் இருவர் நின்றிருக்க அவர்களை கடந்து மூவரும் உள்ளே சென்றனர்.
வெளியெ இருந்து பார்ப்பதற்கு சாதாரண அறைப் போல தெரிந்தாலும், உள்ளே சிறு மருத்துவமனைப் போல இருப்பதை பார்த்த அமுதவாணனுக்கும் சந்தோஷுக்கும் சிறு அதிர்ச்சியே, அமுதவாணனின் மனமோ, அர்ஜுனையும் தேவாவையும் ரகசியமாக வைத்து சிகிச்சை அளிப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இருக்கவில்லை.
சத்யா அர்ஜுனும் தேவாவும் எங்கே? சந்தோஷின் குரலில் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் மட்டுமே இருந்தது.
ஓ, சாருக்கு என் பெயரெல்லாம் நியாபகத்துல இருக்கா என நக்கலாக கேட்டான் சத்யா.
டேய், முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு, என்று பல்லிடுக்கில் வார்த்தையை கடித்து துப்பினான் சந்தோஷ்.
டேய், வேண்டாம் நான் ஏற்கனவே கொலவெறில இருக்கேன், என்றவன், நேராக ஐசியூவின் முன்பு நின்றான்.
சத்யா ஐசியூவின் முன்பு நின்றதும் சந்தோஷின் உள்ளம் பதறியது. அவனுடைய தவிப்பு கோபமாக மாறி, சத்யாவின் புரம் திரும்பியவன், டேய் இங்கே ஏன்டா நிற்கிற? அர்ஜுனும் தேவாவும் எங்கே என்று சந்தோஷ் கேட்டது தான் தாமதம், தேவநிலா இங்கே தான் இருக்காங்க என்றான் சத்யா.
வாட்!! என்னடா சொல்ற என்று சத்யாவின் சட்டை காலரை பற்றி இழுத்தான் சந்தோஷ்.
சத்யா சொன்னதை கேட்டதும் அமுதவாணன் ஐசியூவில் இருக்கும் துவாரத்தின் வாயிலாக எட்டி பார்க்க தலையிலும், கை மற்றும் கால்களிலும், போடப்பட்டிருந்த கட்டுக்களைப் பார்த்ததும் மற்றவை மறைந்து போனது.
தேவா…! தேவா…! என வெளியே நின்றபடி கத்தினார் அமுதவாணன். அவரின் சத்தத்தில் வேகமாக வந்த நர்ஸ்,
சார் ஏன் இப்படி சத்தமா கத்துறீங்க? இது ஹாஸ்பிடல் இங்கே இருக்கிற பேஷன்ட்டுக்கலாம் தொந்தரவா இருக்காதா? என பதிலுக்கு சிடுசிடுக்க…
அம்மா, என் தேவா எப்படி இருக்கா ஒன்னும் ஆபத்து இல்லையே, என பதற்றத்துடன் கேட்டவரின், முகத்தை ஆழ்ந்து பார்த்தவர், சார் பேஷன்ட் இப்போ அவுட் ஆஃப் டேன்ஜர், அவங்க இப்போ மயக்கத்தில் இருக்காங்க!! டிஸ்டர்ப் பன்னாமல் பார்த்துட்டு உடனே வெளியே வந்துடுங்க, வார்டுக்கு மாத்தின பிறகு நீங்க அவங்க கூடவே இருக்கலாம் என்றாள் நர்ஸ்
தலையை ஆட்டிய இளாவின் அப்பா, கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவரின் இதயம் படபடவென துடித்தது. தன் தங்கையின் நினைவாக இருப்பவள் இவள் ஒருத்தி தானே, திருமணத்திற்கு பிறகு நடக்கும் ஒவ்வொன்றும் அவர் மனதை ஏதோ செய்ய, யாருமற்ற அனாதை போல, துவண்டு கிடந்தவளை பார்த்ததும், இதுவரை அர்ஜுனின் மீது மறைந்திருந்த கோபம், மீண்டும் தலைக்கேற, அறையில் இருந்து வெளியே வந்தவர், மாப்பிள்ளை என்று அழுத்தமான குரலில் அழைக்கவும், சத்யாவுடன் வாதிட்டு கொண்டிருந்தவன் தன் மாமனாரின் அழைப்பில் அவரை பார்த்தான்.
மாப்பிள்ளை அர்ஜுன், எங்கே? உசுருக்கு போராடிக்கிட்டு இருக்கிற பொண்டாட்டியை விட்டுட்டு போற அளவுக்கு அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை, என் வீட்டு பொண்ணை பாதுகாப்பானு தானே இந்த கல்யாணத்துக்கே சம்மதித்தேன், ஆனால் நடக்கிற ஒவ்வொரு விசயத்தையும் பார்க்கும் போது எனக்கு சரியாபடலை, என சொன்னதும் சந்தோஷின் உள்ளம் பதறியது.
அர்ஜுனோட நடவடிக்கைககளை பார்க்கும் போது அவன் தேவாவை காதலித்தவனா என்ற சந்தேகத்தை அதிகமாக்குது என சொன்னவர், தன்னுடைய மொபைலை எடுத்துக் கொண்டு நகர்ந்தார்.
மாமனாரின் சந்தேகத்தை நினைத்து பதறிய சந்தோஷ் அதை வெளியே காட்டாமல் இருக்க பெரும் முயற்சி செய்தவன், டேய் அர்ஜுன் எங்கேடா போய் தொலைஞ்ச என மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தான்.