என் வானம்-24
கவி..!! கவிம்மா அம்மாவை பாருடா..” அம்மா எத்தனை தடவை சொல்லிருப்பேன் இந்த வேலை உனக்கு வேண்டாம்னு, என் பேச்சை நீ ஒரு முறையாவது கேட்டிருந்தால், இன்னைக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காதே, கையிலும் காலிலும் போட்டிருந்த கட்டுக்களை பார்த்து கதறி அழும், தன் அம்மாவை பார்க்கவே வேதனையாக இருந்தது தேவாவுக்கு.
இளவேந்திரனோ, தன்னுடைய வேதனையை உள்ளுக்குள் கட்டுப்படுத்திக் கொண்டு கல்லென நின்றிருக்க… தேவாவோ அப்பாவின் இறுகிய முகத்தை கண்டு, அவருடைய கையை இறுக பற்றிக் கொண்டாள்.
தன் மகளை மருத்துவமனையில் சேர்த்தது அர்ஜுன் என்று தெரிந்ததுமே, அவன் கைகளை பற்றிய இளவேந்திரன், தேங்க்ஸ் மிஸ்டர் அர்ஜுன். தேங்க்ஸ்” நீங்க பண்ண உதவிக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என்று தன் நன்றியை தெரிவிக்க, “அர்ஜுனோ,
சார் இதுக்கு ஏன் தேங்க்ஸ்னு பெரிய வார்த்தை சொல்றீங்க! வருங்கால மாமனாராகிற்றே என்று மனதுக்குள் புன்னகைத்துக்கொண்டு வெளியே தன்னடக்கமாக பேசினான் அர்ஜுன்.
“நோ, மிஸ்டர் அர்ஜுன் நீங்க நினைச்சிருந்தா யாரோ எவரோன்னு கண்டுக்காமல் போய் இருக்கலாம், அடிப்பட்டது யார் என்று தெரியாமலே, அட்மிட் பண்ணது மட்டும் இல்லாமல், நாங்க வரும் வரைக்கும் கூடவே இருந்து பார்த்துக்கிட்டிங்க.." நீங்க செய்த இந்த உதவியை நான் உயிருள்ளவரை மறக்கவே மாட்டேன் என்று நெகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்க, குணமதியும், ரொம்ப நன்றி தம்பி என்று கையெடுத்து கும்பிட்டு தன் நன்றியை தெரிவித்தார். குணமதி அர்ஜுனுடன் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், இளவேந்திரன் தன் பர்சனல் கார்ட்ஸை மருத்துவமனைக்கு வரும்படி கட்டளையிட்டார்.
அடுத்த சில மணி நேரங்களில், கவியின் அறைக்கு வெளியே பாதுகாவலாய் நின்றவர்களிடம், டாக்டர்ஸ் நர்ஸ் ஃபேமிலி மெம்பெர்ஸ தவிர வேற யாருமே உள்ளே போகக் கூடாது என்று உத்தரவிடவும் எஸ் சார் என்றனர்.
இவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனின் அருகே வந்தார் இளவேந்திரன். மிஸ்டர் அர்ஜுன் நாங்க வர வரைக்கும் என் மகளுக்கு பாதுகாப்பா இருந்ததுக்கு நன்றி, இனிமேல் நான் பாத்துக் கொள்கிறேன், உங்களுக்கு எதுக்கு இந்த சிரமம், எத்தனையோ இம்ப்பார்டென்ட் வொர்க் இருக்கும், எங்களால அது தடைபட கூடாதுன்னு நினைக்கிறேன் என்று சொல்லவும், அதற்கு மேலும் அர்ஜூனால் அங்கே நிற்க தான் முடியுமா என்ன? உடனே அவரிடம் விடைபெற்று கிளம்பியவனின் மனதில் இளவேந்திரனின் பேச்சும் செய்கையும், கூடவே அவருடைய முகத்தில் தெரிந்த கலவரத்தை கண்டு மனதுக்குள் குழப்பங்கள் சூழ்ந்தது. தன்னை இங்கிருந்து நகர்த்துவதிலேயே குறியாக இருந்தது போல தோன்றியது.
ஏதேச்சையாக நடந்த விபத்துக்கு இப்படி ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் என்ன? என்ற யோசனையுடன் கார்பார்க்கிங் செய்திருந்த இடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தான்.
அர்ஜுன் மருத்துவமனையில் இருந்து போகவும் தேவா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. தன் அப்பாம்மாவின் முகத்தில் தெரிந்த களைப்பை கண்ட தேவா, உடனே காபியோடு சிற்றுண்டியை வீட்டில் இருந்து வரவழைத்திருந்தாள். மல்லி மருத்துவமனைக்கு வெளியே நிற்பதாக சொல்லவும், அப்பாவோடு பேசிக் கொண்டிருந்த அர்ஜுனை ஓரவிழியால் பார்த்துக் கொண்டே சென்றவள், மல்லியிடம் இருந்து கொண்டு வந்ததை வாங்கிய பிறகு, அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு கவி இருந்த வார்டுக்கு வந்தவள், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் காபியை கப்பில் ஊற்றிக் கொடுத்தாள்.
வேண்டாம் என்று மறுத்த தன் பெற்றோரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தவள், சிற்றுண்டியையும் எடுத்துக் கொடுக்க, மகளின் பிடிவாதத்தில் அதுவும் இறங்கியது.
அப்பாம்மாவை கவனித்த பின்னரே அர்ஜுவின் நினைவு வர, அவனை தன் கண்களால் தேடினாள். எங்கே போய்ட்டான் இவ்வளவு நேரம் இங்கே தானே இருந்தான் என்று நினைத்தவள், தன் அப்பாவிடமே கேட்டுவிடலாம் என நினைத்து, டேடி அர்ஜுன் எங்கே?
மகள் அர்ஜுனை ஒருமையில் அழைப்பதை மனதில் குறித்துக் கொண்டவர், இப்போ தான் போனார் என்று சொன்னவுடன், தேவாவின் முகம் வாடியது. மகளின் வாடிய முகத்தை கண்ட இளவேந்திரன், தேவா என்று மகளை அழைப்பதற்கு முன் போன் ரிங்காகவும், யார் என்று பார்த்தவரின் முகத்தில் சிந்தனை படர்ந்தது.
போனை ஆன் செய்து ஹலோ என்று அழைத்த நொடியே எதிர்முனையில் கேட்ட சிரிப்பு சத்தமே, யார் என்று அவருக்கு தெள்ளத்தெளிவாய் உணர்த்த, மகளிடம் இருந்து சற்று நகர்ந்து சென்று பேசலானார்.
அர்ஜுன் கிளம்பியதை அறிந்த தேவா வேகமாக மருத்துவமனையின் வெளியே வந்தவள், அவனை பார்வையாலேயே தேடினாள். ச்சே அவ்ளோ சீக்கிரம் போயிட்டானா, அதுவும் என்கிட்டே ஒரு வார்த்தைக் கூட சொல்லனும்னு தோன்றவில்லையா? என்று பெண்ணவளின் இதயம் வெதும்பியது. மனம் கனக்க அங்கிருந்து சென்றாள் தேவா.
தேவா அங்கிருந்து செல்லும் வரை அவளுடைய முகத்தில் கலவையான உணர்வுகளை கண்டவனின் இதழில் லேசான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. நாட் பேட் தேவ் என்னை தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கான்னா, அவளுக்கும் என் மேல காதல் வந்திருக்குமா? என்று நினைக்கும் போதே சிறகை விரித்து வானில் பறப்பது போல உணர்ந்தான் அர்ஜுன்.
யோசனையுடன் வார்டை நெருங்கிய தேவாவின் பார்வை, போனில் பேசிக்கொண்டு இருந்த தந்தையின் மீது படிந்தது. அவர் முகத்தில் இதுவரை கண்டிராத ஒரு கோபத்தை கண்டு புருவம் சுருக்கி யோசித்தபடியே அவரை நெருங்கினாள் தேவா.
அதற்குள் தேவா தன்னை நெருங்குவதை கண்ட இளவேந்திரன், தன்னுடையை முகத்தை சரி செய்துக் கொண்டவர்,பேச்சை கத்தரித்துவிட்டு தொடர்பை துண்டித்தார்.
வா தேவா அர்ஜுனை பார்த்தியா என்று கேட்டதும்,
நோ டேடி, அவர் போயிட்டார் என்று சொல்லும் போது மகளின் குரலில் சுருதி குறைந்து ஒலிப்பதை கண்டாலும், தற்போது இருக்கும் மனநிலையில் அதை பற்றி பேசமுடியாது என தவிர்த்துவிட்டார்.
டாக்டர் அடிக்கடி வந்து கவியின் உடல்நிலையை பரிசோதனை செய்துவிட்டு சென்றார். யார் என்று தெரிந்த பிறகு, கூடுதல் கவனம் வைத்தனர். ஒருபக்கம் கவிக்கு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தாலும், மயக்கம் தெளிந்து குடும்பத்தினரை பார்த்தவுடன், அவள் முகத்தில் வந்து போன நிம்மதியை கண்ட இளவேந்திரன் மகளிடம் தனியே பேச வேண்டும் என்று முடிவு செய்தார். அவருக்கு அவளிடம் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியாமாக பட்டது இத்தனை நாட்கள் மகள் செய்யும் வேலையை பற்றி தெரிந்துக் கொள்ளாமல் விட்டது பெருந்தவறு என புத்தியில் அறைந்து சொல்லிவிட்டாகிவிட்டது. இனியும் அவளிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளாமல் இருந்தால் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று உண்மை உணர்த்த, கவியிடம் பேசுவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
நாட்கள் வேகமாக சென்றது. அர்ஜுன் இரண்டு நாளைக்கு ஒரு முறையேனும் மருத்துவமனைக்கு வந்து கவியின் உடல்நிலையை பற்றி விசாரித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். இதற்கு இடையில் கம்பெனியை விற்ற விசயமும் வெளியே கசிய ஆரம்பிக்க, ஒவ்வொருத்தரும் என்ன காரணம் என்று தெரியாமல் புது புது கதைகளாக புனைந்தனர். அதை பற்றி எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு நிற்காமல் மற்ற கம்பெனி வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார் இளவேந்திரன். மேலும் தேவா மற்றும் அர்ஜுனின் சந்திப்பு மருத்துவமனை கடந்து வெளியிலும், ஆரம்பித்தது.
கிட்டதட்ட இரண்டு மாதங்கள் எப்படி சென்றது என்றே தெரியாத அளவிற்கு, நாட்கள் வேகமாக சென்றாலும், கவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. மூன்று மாதங்கள் கண்டிப்பாக ஓய்வு வேண்டும் என்று மருத்துவர் சொன்னாலும், அதை கேட்டு நடந்துக் கொள்ளும் அளவிற்கு பொறுமையில்லாமல் போனாள். செய்ய வேண்டிய வேலை ஒன்று பாதியில் நிற்பது தெரிய, காலம் கடந்துவிடுவதற்கு முன்பு ஒருவனின் முகமுடியை கழட்டி எறிய வேண்டிய வேலை வந்துவிட்டது என மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டாள். இந்த உலகிற்கு உண்மையை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தை மனதில் கொண்டு, நடப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டாள்.
அவளிடம் இருந்த தீவிரத்தை பார்த்து குணமதிக்கு சந்தோசமாக இருந்தாலும், இளவேந்திரனுக்கு சந்தேகமாக இருந்தது. மாலை நேரம், நடக்க பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மகளின் அருகே வந்து நின்ற இளவேந்திரன் அவளுடைய தலையை ஆதுரமாக தடவி விட்டு, உன் மனசை எதும்மா அரிக்குது. ஏன் இந்த வேகம் என்று கேட்க?
கவியோ, அதிர்ச்சியுடன் தன் அப்பாவை பார்த்தாள்.
சொல்லும்மா கவி உனக்கு நடந்தது விபத்தா இல்லை கொலை முயற்சியா? அடுத்த கேள்வியை கேட்டதும், கண்களில் உண்டான தீவிரத்துடன், அப்பா!!! என்றாள்.
நீ நீங்க என்ன சொல்றீங்க? அது மாதிரிலாம் ஒன்றும் இல்லப்பா என்று தடுமாறியவளை பார்த்து சிரித்தவரிடம், நீங்க ஏன்பா உங்களுக்கு பிடிச்ச கம்பெனியை சேல் பண்ணீங்க? அந்த கம்பெனியை விக்கிற அளவுக்கு நமக்கு எந்த ஃபினான்சியல் ப்ராப்ளமும் இல்லன்னு எனக்கு தெரியும்பா… இருந்தும் இதை செய்திருக்கீங்க என்றால் அதுக்கு ஒரே ஒருத்தன் தான் காரணமா இருப்பான் என்று சொல்லும் மகளின் கண்களில் தெரிந்த கோபத்தை கண்டதும்,
கவி என்றார் அதிர்ச்சியுடன்…
அதுமட்டும் இல்லப்பா, இன்னும் இரண்டு மாதத்தில் நடக்கப்போற இடைத்தேர்தலில் அவன் நின்றால் நிச்சயம் வெற்றி அவனுக்கு தான். அவன் கட்டி வச்சிருக்கிற கோட்டையையே தகர்க்கிறதுக்கான பாம் என்கிட்டே இருக்கு அதற்கு நான் சீக்கிரம் சரியாகனும், என்றவளின் குரலில் இருந்த நெஞ்சுறுதியை கண்டு,
சபாஷ் கவி, நீ பயந்துட்டியோனு நினைச்சேன் ஆனால் என் மகள், சாதிச்சிட்டா, அவனை சும்மா விடக்கூடாதுடா இந்த அப்பா உனக்கு எல்லா விதத்திலேயும் சப்போர்ட்டா இருப்பேன் என்று சொல்லவும்… தேங்க்ஸ் டேடி… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நான் பயந்தே போயிட்டேன் என்று இத்தனை நாளும் மனதை அழுத்திய பாரம் விலகியதும் பூவாய் மலர்ந்தாள்.
அப்பா நாம சீக்கிரமே சென்னை போகனும், என்ற மகளிடம், என்னைக்கு போகனும்னு டேட் பிக்ஸ் பண்ணுடா என் பிரண்ட் சென்னைல தான் இருக்கான் அவனை போய் பார்த்தாலே போதும் மத்ததை அவனே பார்த்துப்பான் என்று சொல்ல,
யார் டேடி?
அது சர்ப்பிரைஸ்டா அங்கே போனதும் தெரிந்துக்கொள்ளலாம்.
இவ்வளவு நேரமாக அவர்களின் சம்பாஷனையை கேட்ட ஒரு உருவம் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.
அதே போல நிலாவைப்பற்றி ஒன்றும் தெரியாமல், தன்னை ஒருவன் வீதி வீதியாக நாய் மாதிரி தேடிக்கொண்டிருக்கின்றான் என்று அறியாமல் போனாள் கவி. தன்னை பற்றிய உண்மையை இந்தரிடம் சொல்லாமல் மறைத்திருந்தாள் கவிநிலா. தான் தொழிலதிபரின் மகள் என்று தெரிந்தால் தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ள மாட்டானோ என்ற பயமே அவளை உண்மையை மறைக்க வேண்டியதாகி போனது. எப்போதும் சுயகௌரவம் பற்றி முழு நீளத்திற்கு பேசுபவனிடம் தான் யார் என்று தெரியாமலேயே இருப்பது தான் நல்லது என நினைத்தாள்.
அவனும் தான் யார் என்ற உண்மையை வெளிப்படுத்தாமலேயே கவியோடு பழகினான். அவனை பொறுத்தவரை கவிநிலா நேர்மையான ரிப்போர்ட்டர். உண்மையை கண்டுபிடிக்க எந்த எல்லைக்கும் போவாள், அதே மாதிரி ரிஸ்கும் எடுப்பாள் என்று பழகிய சில நாட்களிலேயே தெரிந்து கொண்டவன், அவளிடம் வேலையில்லா பட்டதாரி என்று பொய்யுரைத்தான். இருவருமே தங்களுடைய மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், இருவர் மனதிலும் இருப்பதை மற்றவர்கள் தெரிந்தே இருந்தனர்.
முக்கியமான விசயம் பேச வேண்டும் என்று சொல்லியவள் தான், அதன் பிறகு அவளை பார்க்கவே இல்லை… அன்று நாள் முழுவதும் காத்திருந்தும் கவியிடம் இருந்து எந்த போனும் வரவில்லை என்றானதும், வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு சென்று பார்த்தவன், அங்கும் அவள் இல்லை என்றானதுமே பதறினான். இப்படியே இரண்டு மாதங்களாக அவளை தேடி அலைந்துக் கொண்டிருக்கின்றான்.
அன்றும் அப்படித்தான் எங்கேயெல்லாமோ தேடி களைத்து போய் நள்ளிரவு நேரத்தை கடந்து வீட்டிற்கு வந்தவன் தன்னுடைய கையில் இருக்கும் சாவியை கொண்டு கதவை திறந்து உள்ளே நுழையவும், வீட்டில் இருந்த மின் விளக்குள் ஒளிர்ந்தது.
"இந்தர், என்னடா இது கோலம்? ஏன் இப்படி இருக்க? என்று தவிப்புடன் கேட்ட அம்மாவை பார்த்து விரக்தியாக புன்னகைத்தவன், எதுவும் பேசாமல் மாடியேற போகவும், அம்மாவின் அழுகையை கண்டு அதிர்ந்து நின்றான்.
ம்மா என்று அவரை அணைத்தவன் அழுகையில் கரைந்தான். ஏன் அழுகின்றான் என்று தெரியாமலேயே தாய்மனம் தவித்தது. இந்தர் என்னப்பா ஆச்சு ஏன் இப்படி தாடியும் பரட்டை தலையுடனும் சுத்திட்டு இருக்க, நேரத்திற்கு நீ சாப்பிடுறியா இல்லையானு கூட தெரியலை நீ வீட்டுக்கு வந்து எத்தனை நாள் ஆச்சின்னு தெரியுமா உனக்கு என்று அடுக்கடுக்காய் கேள்வியை கேட்க, அவனோ வாழ்க்கையையே வெறுத்த நிலையில் இருந்தான்.
டேய் உன் அப்பா திடீர்னு இறந்து போனதை கூட தாங்கிக்கிட்டு உன் மனசை பிஸ்னெஸ்ஸில் திருப்பி ஜடமா இருந்த என்னை கொஞ்சம் கொஞ்சமா இயல்புக்கு கொண்டு வந்த நீயா இப்படி இருக்க? எதையோ பறிக் கொடுத்தவன் மாதிரியே இருக்கியேடா என்ன ஆச்சின்னு இந்த அம்மாகிட்ட சொல்லுப்பா நிறைவேற்றி வைக்கிறேன் என்று சொல்லவும், உடைந்துவிட்டான் இந்தர். தான் கவியை பார்த்தது பேசி பழகியது அவளுடைய பெயரை தவிர வேறு எதுவும் தனக்கு தெரியாது என்ற மகனை பார்த்தவருக்கு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. சிறு பாலகன் போல நடந்துக் கொள்பவனை பார்த்து அவருடைய வதனத்தில் புன்னகை படர்ந்தது.
மருமகளோட போட்டோ வச்சிருக்கியா? என்று கேட்ட தன் அம்மாவை அதிர்ச்சியுடன் பார்த்தான் இந்தர். என்னடா முழிக்கிற கோழி திருடனாட்டம், நீ எப்படி தான் பிஸ்னெஸ்மேனா இருக்கியோ தெரியலை, என்று தலையிலேயே அடிக்க மாம் என்று கட்டிக் கொண்டான்.
ம்மா உங்களுக்கு நிலாவை பிடிச்சிருக்கா" என்று சந்தேகமாக கேட்டவனிடம்,
ஏன்டா மூக்கும் முழியுமா லட்சனமா இருக்கா இவளை பிடிக்காமல் போகுமா? உன் அண்ணன் தான் வயசு ஏறுனாலும் அப்படியே விரைப்பா திரிஞ்சிட்டு சுத்திட்டு இருக்கான். அரசியல் அது இதுன்னு சொல்லிட்டு வெளியேவே தங்கிடுறான். மாசத்துக்கு ஒரு நாள் தான் பெத்தவளையே பார்க்க வரான், அவனிடம் போய் கல்யாணம் செய்துக்க வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு வரனும்னு சொன்னா… இந்த இடைத்தேர்தலில் ஜெயித்த பிறகு தான் அதைப்பற்றியே யோசிப்பேன்னு சொல்றான். சரி அவன் தான் அப்படி இருக்கான் சின்னவனாவது நம்ம ஆசையை நிறைவேற்றுவான்னு கனவுக்கண்டுக்கிட்டு இருந்தால் தேவதாஸ் மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருக்க என்று சொன்னதும், ம்மா என்று சினுங்கியவனிடம், முதல் வேலையா மருமகளை கண்டுபிடிக்க டிடெக்டிவ்வை ஏற்பாடு செய் என்று உத்தரவிட, ச்சே இந்த யோசனை எனக்கு வராமல் போயிடுச்சே என்று தலையில் அடித்துக் கொண்டவனை பார்த்து, அதுக்கு மூளைன்னு ஒன்னு இருக்கனும், நாளைக்காவது நம்ம கம்பெனியை போய் எட்டி பார், உன்னை கேட்டு எத்தனை போன்கால் வருது என்று அழுத்துக் கொண்டவர், முதல்ல கைகால் கழுவிட்டு வந்து டைனிங்கில் வந்து உட்கார் என்று ஆணையிட, சரிம்மா என்று சந்தோசமாக சென்றான்.
அடுத்த நாளே பிரைவேட் டிடெக்டிவ்வை சந்தித்து கவியைப் பற்றிய தகவலை கொடுத்து கண்டுபிடிக்க சொல்லி கேட்டதும், அவர்களும் சம்மதம் தெரிவிக்க, முன்பணம் செலுத்திவிட்டு தன்னுடைய கம்பெனிக்கு சென்றான் இந்தர்.
அவனுடைய மனமெங்கும் தன் நிலாவை அழைத்துக் கொண்டு போய் அம்மாவின் முன்பு நிறுத்த வேண்டும். தான் யார் என்ற உண்மை தெரியவரும் போது அவளின் அருகே தான் கட்டாயம் இருக்க வேண்டும் என்று மணற்கோட்டை கட்டிக்கொண்டிருந்தான் இந்தர். நினைப்பது எல்லாமே தாம் நினைத்தது போல நடந்துவிட்டால், விதிக்கு இங்கு வேலை ஏது? அவனுக்கு எங்கே தெரியப்போகிறது அப்படி ஒரு நாள் வரப்போவதே இல்லை என்று விதியோ அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.