❤என் வானம்❤-8
அதே நேரம் தன் அம்மா பேசிய கடைசி வார்த்தைகளை கேட்டபடியே வீட்டின் உள்ளே வந்தான் அர்ஜுன். அவன் காதுகளில் அந்த வார்த்தைகள் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டு இருந்தது. என் மகனுக்காகவே யோசித்து இத்தனை வருடமா பிரிந்து இருந்தவள் அவளை விட நல்ல பெண்ணை உங்களால காட்ட முடியுமா? இது என்ன அம்மா இப்படி சொல்றாங்க! அர்ஜுனின்(கிருஷ்ணா) மனது குழப்பம் அடைந்தது.
டேய், டேய் அர்ஜுன் என்னடா நடக்குது இங்கே? அம்மா ஏன் சத்தமா பேசுறாங்க!! என்று அவனின் தோளை பற்றி உலுக்க, அதில் நிகழ்வுக்கு வந்த அர்ஜுன்,
நானும் உன்னோடு தானேடா உள்ளே வந்தேன், எனக்கு மட்டும் தெரியுமா என்ன? என அர்ஜுனும் சிடுசிடுக்க,
ம்ஹூம் பெருசா பேச வந்துட்டான் இந்த வீட்டை பார்த்தா மேரேஜ் நடந்த வீடு மாதிரியா இருக்கு என வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்டிருக்க...
அதே நேரம் மேலே அறையிலிருந்து, தேவா தேவா என்று இளாவின் குரல் பதற்றமாக ஒலிக்கவும்,
டேய் மச்சி, என்று சந்தோஷ் அதிர்ச்சியுடன் திரும்ப, அங்கே அர்ஜுன் இருந்த இடம் காலியாக இருந்ததை கண்டவன், ச்சே என்று வேகமாக மாடிக்கு சென்றான்.
இளாவின் சத்தத்தை கேட்டு ரங்கநாயகியின் அறையில் இருந்த கைலாஷும் அம்பிகையுமே அதிர்ச்சியுடன் மாடியை நோக்கி வேகமாக சென்றனர்.
வேகமாக அறைக்குள் ஓடிவந்த அர்ஜுனிடம், அண்ணா தேவா தேவா என்று பதற்றமும் அழுகையுமாக சொல்ல,
இளா என்ன ஆச்சி? என்ற அர்ஜுன் தேவாவை கண்களால் தேடியபடி தவிப்புடன் கேட்க,
அண்ணா!! தேவா ரூமுக்குள்ள போய் கதவை லாக் பன்னிக்கிட்டா!! நான் அவளை கூப்பிட்டும் திறக்க மாட்டேங்குறா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு, அவள் ஏதாவது தவறான முடிவை எடுத்துடுவாளோனு, என பதறியபடி சொல்ல, அறைக்கு முன்னால் நின்றவன்,
நிலா நிலா என தன்னை மறந்து பதற்றமாக கத்தியபடி, கதவை வேகமாக தட்டினான் அர்ஜுன். பல முறை அழைத்த பிறகும் மூடிய கதவு மூடியபடியே இருக்க, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவன் அதிர்ச்சியில், உறைந்து நின்றான்.
அவன் பின்னாலேயே வந்த மற்றவர்களும் அதிர்ந்தனர்.
தர்மாவின் வீடு :
பூ ஜாடிகள், அலங்காரப் பொருட்கள், சுவர் கண்ணாடி, கிழிந்த கிடந்த துணிகள், பீங்கான் பொருட்கள் என அனைத்துமே சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறி கிடந்தன. இதன் கூடவே இறைந்து கிடந்த சொறு நசுங்கி போன பழங்கள் என்று காலை தரையில் வைக்க முடியாத அளவிற்கு அறையே மோசமாக இருப்பதை கண்டவனின் பார்வை மட்டும் தன், அம்மாவை ஒவ்வொரு இடமாக தேடியபடியே இருந்தது. அம்மாவின் அறையில் இருந்த பெட்ரூம், கதவை திறந்தவனுக்கு ஒரே பஞ்சுகள் அறையெங்கும் பறந்து அலங்கோலமாக இருப்பதை பார்த்தவனின் முகத்தில் எந்த பிரதிபிலிப்பும் இல்லாமல் போக, இது தினமும் நடப்பது ஒன்று தானே என நினைத்தபடியே கண்களால் அறையை துலாவினான் தர்மா என்று அனைவராலும் அழைக்கப்படும் தர்மேந்தர்.
திடிரென தர்மாவின் முன்பு பே ஹாஹா ஹாஹா என்று கையை தட்டி சிரித்தபடியே குதித்து நின்றவரை அமைதியாக பார்த்தான். ஹே நீ பயந்துட்ட தானே என்று குழந்தை போல மழலையாய் சொல்லி, கையை தட்டிக் கொண்டு சிரித்தபடி தன் தலைமுடியின் அடியை சுருட்டிக் கொண்டு நின்றவரை, ம்மா!! என்று அவரை அழைத்தவன் மெதுவாக தன் கையணைப்பிலேயே, அறைக்கு வெளியே அழைத்து வந்து விட வேலைக்காரர்கள் அந்த அறைக்குள் நுழைந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.
அனைத்தையும் சுத்தம் செய்து முடித்தவர்கள் ஏற்கனவே உடைந்திருந்த பொருட்கள் அனைத்தையும், புதியதாக வாங்கி அவர் அறையை பழையபடி அலகாக மாற்றி இருந்தனர்.
நடந்து விட்ட சில கசப்பான சம்பவங்களால் மனதளவில் குழந்தையாய் இருக்கும் தன் அம்மாவையே மன இறுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் தர்மா.
அவர் உடலில் ஆங்காங்கே கண்ணாடியால் குத்தி கிழிக்கப்பட்டு இரத்தம் உறைந்து போய் இருப்பதை பார்த்தவனின் கண்கள் கோவைப்பழமென சிவந்தது. சுரேஷ் என்று சத்தமாக கத்தியவனின் முன்பு மூச்சிரைக்க வந்து நின்றான்.
ஐயா என்றவனிடம்,
டாக்டரை கூப்பிடு என்று கர்ஜிக்க..?
ஏற்கனவே இன்ஃபார்ம் பன்னிட்டேன், ஆனால் ஒரு முக்கியமான சர்ஜரி இருக்கு முடிச்சிட்டு வரேனு சொன்னார் என்றது தான் தாமதம்,
இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல, அந்த டாக்டர், என் கண் முன்னால இருக்கனும், இருந்தே ஆகனும் என்று பல்லை கடித்தவனின் முகத்தை பார்த்த சுரேஷின் உள்ளம் நடுங்கியது.
அடப்பாவி, நான் அப்போவே சொன்னேன், அந்த டாக்டர் கேட்டானா!! என்ன ஆக போகுதோ? என்று மனதுக்குள் புலம்பியபடியே, அங்கிருந்து சென்றான்.
உடலில் இரத்த காயங்களுடன் ஆபரேசன் உடையில் தன் முன்னால் நின்றிருந்தவனை கோபத்துடன் பார்த்தவன், என்னடா பயம் விட்டு போச்சா, வர சொன்னா வேலை இருக்குன்னு திமிரா சொல்றியாம் என்று கேட்ட அடுத்த நொடி,
ஐயா என்னை மன்னிச்சிடுங்க என்று தர்மாவின் காலில் விழுந்தான் டாக்டர்.
தன்னுடைய காலை பற்றியவனை ஓங்கி ஒரு உதை விட சுருண்டு போய் விழுந்தான்.
டாக்டர் வலியில் துடிப்பதை பார்த்த தர்மாவின் அம்மா முகம், பல வித கலவையான உணர்வுகள் எழ ஆரம்பித்தது. திடிரென மகேந்தர் மகேந்தர் என கத்திக் கொண்டே கீழே விழுந்து கிடந்த டாக்டரின் அருகே ஓடவும், அவரை பிடித்து நிறுத்திய தர்மா, ஏன்மா ஏன்? பெத்த புள்ளைய விட உனக்கு அந்த அனாதைப் பய மேல தான் பாசமா? என அவரின் தோளை பற்றிக் கொண்டு உறுமினான் தர்மா…
அதன் பிறகும் அவரின் வாயில் இருந்து மகேந்தர் என்று மறுபடியும் வரவும், மேலும் ரௌத்திரமானவன், தன்னுடைய கோபத்தை எல்லாம் அருகே இருந்த பொருட்களின் மீது காண்பித்தான்.
மகேந்தர்! மகேந்தர்!! எப்போ பாரு உனக்கு அவன் நியாபகம் தானா?… அவன் என்ன?? நீ பெத்த புள்ளையா? சொல்லும்மா சொல்லு என்று அந்த இடமே அதிரும்படி கத்த, தர்மாவின் கத்தலில் பயந்து போய் மயங்கினார்.
தன் அம்மா மயங்கியதும், ஒரு நொடி தன்னை நிதானித்து கோபத்தை குறைத்தவன், அவரை தூக்கி கொண்டு பெட்டில் கிடத்தி அவர் அருகேயே அமர்ந்து கொண்டவன், அவரின் கையை தன்னுடைய கைகளுக்குள் வைத்து கொண்டு அமர்ந்திருக்க, ஐயா என்று அழைத்தபடியே உள்ளே வந்த சுரேஷின் அருகே, வேறொரு புதிய டாக்டர் நின்றிருந்தார்.
டாக்டர் உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்தார். தர்மேந்தர் இறுக்கத்துடனேயே நின்றிருந்தான்.
தர்மேந்தரின் அம்மா பாக்யவதிக்கு காயமான பகுதிகளில் மருந்திட்டு கட்டு கட்டியவர், ஊசியையும் போட்டார்.
சார், அவங்க காயத்துக்கு கட்டு போட்டாச்சி, இன்ஃபெக்ஷன் ஆகாமல் பார்த்துக்கோங்க… என்றவர் பணத்தை கூட வாங்காமல், வேகமாக அந்த வீட்டில் இருந்து கிளம்பினார் என்று சொல்வதை விட ஓடினார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஐயா என்று சுரேஷ் அழைக்கவும், தர்மாவின் முறைப்பில் வாயை இறுக மூடியவன், அந்த அறையில் இருந்து வெளியேறினான்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த தர்மாவின், முன்னால் பவ்யமாக வந்து நின்ற சுரேஷிடம், டேய் இன்னைக்கே அம்மாவை பார்த்துக்க, நல்ல கேர் டேக்கரை அப்பாயின்ட்மெண்ட் பன்னிடு என்று கட்டளையிட,
சரிங்க சார் என்று வேகமாக தலையாட்டியபடி அந்த இடத்திலேயே பசைப் போட்டது போல் நின்றிருந்தவனை பார்த்ததும், என்ன என்பதாய் பார்க்க…
ஐயா, அது!! வந்து என்று தயங்கவும்,
என்னடா தயங்குற விசயத்தை சொல்லுடா என்று உறுமவும்,
ஐயா அது வந்து, உங்க மேல கம்ப்ளைன்ட் பதிவாகி இருக்காம் இப்போ தான் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, நியூஸ் வந்தது, என சொல்லி முடிக்கவில்லை… இடி இடியென சிரித்தான் தர்மா.
ஹா ஹா ஹா யார்டா அவன்? என் மேல கம்ப்ளைன்ட் பன்னவன் என்று கேட்டபடி தன்னுடைய நாற்காலியில் தோரணையாக அமர்ந்தான்.
இன்டஸ்ட்ரியலிஸ்ட் மிஸ்டர் ரகுராமன் தான், சார் என்று சொன்னதும்,
ஒஹ் அந்த ஷிப்பிங் கம்பெனி ஓனரா என்று தர்மா கேட்டதும்,
ம்ம் ஆமா சார்? என்று வேகமாக பயத்துடன் பதிலளித்தான் சுரேஷ்.
அவன் இன்னும் கம்பெனியை நம்மகிட்ட கொடுக்கல தானே? என்று இருக்கையில் இருந்து எழுந்தவன் அந்த ஹாலையே அளந்தபடி யோசனையுடன் கேட்க
இல்ல சார்.
ஓகே, அவன் பேமிலில பொண்ணுங்க இருந்தா, நம்ம ஆளுங்கள விட்டு தூக்கிடு, கம்பெனி நம்ம கைக்கு தானா வந்துடும், என்று அசால்டாக சொல்லியவன் அந்த இடத்தை விட்டு அகன்றான்.
அடப்பாவி ரகுராமா!! எங்க ஐயா கேட்கும் போதே கம்பெனியை கொடுத்திருந்தா, உனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை வரப் போகுது… என தனக்கு தானே புலம்பியபடி சென்றான் சுரேஷ்.
தேவேந்தர், பாக்யவதியின் ஒரே மகன் தான் தர்மா (எ) தர்மேந்தர். மகேந்தர் இவர்களின் வளர்ப்பு மகன். படிப்பு விளையாட்டு மட்டுமில்லாது குணத்திலும் நேர்மையானவன், தாய் தந்தை பேச்சிற்கு கட்டுப்பட்டு நடப்பவன், தன் அண்ணன் தர்மாவின் மீது பாசமும் பக்தியும் வைத்திருப்பவன், ஆனால் தர்மாவோ, நேர்மையான அரசியல்வாதிக்கு மகனாக பிறந்தாலும் நேர்மை நியாயம் என்றால் என்னவென்று கேள்வி கேட்பவன், பள்ளி கல்லூரியில் படிக்கும் போதே அடிதடி ரவுடிஸம், மற்றும் போதை பொருள் பயன்படுத்துதல், எந்த பெண்ணின் மீதாவது அவனுடைய பார்வை பட்டுவிட்டால் அவள் அடுத்த நிமிடமே தர்மாவின் இடத்தில் இருக்க வேண்டும்.. பல பெண்களின் கண்ணீர் இவன் கண்களுக்கு பன்னீர் தெளிப்பது போல தான் தோன்றும். அவர்களை போகப் பொருளாக மட்டுமே பார்ப்பவன், வீட்டினரின் பார்வையில் ஒழுக்கத்தின் மறுவுறுவாக இருப்பவன், பல குற்ற செயல்களில் ஈடுபட்டாலும், அரசியல்வாதியின் மகனாக இருப்பதால் சட்டத்தின் பிடியில் சிக்காமல் சுதந்திரமாக தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தான். தன்னுடைய குற்ற செயல்கள் எதுவுமே தன் அப்பாவின் காதுகளுக்கு சென்று சேராமல், லோக்கல் ரவுடிகளை முன்னிலைப்படுத்தி அனைத்தையும் திரைமறைவாக நடத்திக் கொண்டிருந்தான் தர்மா.
அவன் செய்த எந்த குற்றத்திற்கும் சாட்சிகள் இருக்காது. அப்படியே இருந்தாலும் அவர்கள் உருத்தெரியாமல், காணாமல் போவார்கள். இல்லையென்றால் ஆக்சிடென்டில் மடிந்து போய் இருப்பார்கள். தனக்கு எதிரிகளே இல்லை, தான் செய்தவைக்கு சாட்சிகளே இல்லை என்று இறுமாந்திருந்த தர்மாவுக்கு பேரிடியாக இருந்தது. செத்து போனதாக தான் நினைத்து இருந்த இருவருமே இப்போது உயிருடன் இருக்கிறார்கள் என்று தான். அவர்களை கொலை செய்வதற்கு அவன் முயற்சித்த முதல் திட்டம் தோல்வியில் முடிந்ததை நினைத்து உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தான். தன்னுடைய அடுத்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நேரத்தை பார்த்து அவர்களை கொல்ல காத்துக் கொண்டிருந்தான் தர்மா.
அர்ஜுனின் வீடு:
கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த அர்ஜுன் நடப்பதை முற்றிலும் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் சிலையென நின்றான்.
தேவாவை தற்கொலைக்கு தூண்டி அவளை சாகடிக்க வேண்டும் என்பதே அர்ஜுனின் வெறித்தனமான ஆசை ஏன் எண்ணமாக இருக்க, ஆனால் தான் எந்த முயற்சியும் எடுக்காமலேயே தேவா தன் எண்ணத்தை செயலில் நடத்திக் கொண்டிருப்பதை எண்ணி சந்தோசப்பட முடியாமல், அவன் உள்ளம் பதறி துடித்தது. தேவாவின் செயலில் சிலையென நின்றவனுக்கு உயிர் வந்து, அவளின் கண்கள் மேலே சொருக ஆரம்பிப்பதையும், தலை தொய்ந்து கீழே சரிய, பிடிமானமின்றி துவண்டு கொண்டிருந்த கால்களைப் பார்த்ததும் நொடியும் தாமாதிக்காமல் தன் தோளில் வைத்து இருக்கமாக பிடித்து கொண்டு நின்றவன், இளா இளா என பதற்றத்துடன் அவளை அழைக்க,
அவளோ, நடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
அர்ஜுனின் பதற்றமான குரலை கேட்டபடியே அறைக்குள் ஓடிவந்த சந்தோஷ், தான் கண்ட காட்சியில் அதிர்ந்தவன், வேகமாக அறைக்குள் நுழைந்தவன், தேவாவின் கழுத்தை சுற்றியிருந்த புடவையை கழட்டி எரிந்தான்.
சந்தோஷின் பின்னாலேயே வந்த கைலாஷும் அம்பிகையும், தேவாவின் செய்கையில் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். வீட்டிற்கு வாழ வந்த மருமகள் முதன் முதலாக அடி எடுத்து வந்த அன்றே, இப்படி ஒரு முடிவை எடுத்ததை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, அதற்கு யார் காரணம் என தெரிந்தாலும் மௌனமாகவே, அர்ஜுன் தேவாவுக்காக தவிப்பதையும் துடிப்பதையும் பார்த்துக் கொண்டு நின்றனர். தேவாவை கைகளில் தூக்கியவன் தன்னுடைய அறையில் கொண்டு போய் படுக்க வைத்து, நிலா நிலா என அவளுடைய கண்ணம் தட்ட, தன் இமைகளை மெதுவாக பிரித்தவள் தன்னவனை கண்ட நொடியில் அவனை அணைத்துக் கொண்டு அழுது கரைந்தாள்.
தேவாவின் திடிர் அணைப்பும் அவளுடைய அழுகையும் அர்ஜுனின் மனதை ஏதோ செய்வதாய் இருக்க… சற்று முன்னர் நடந்தது நியாபகத்திற்கு வரவும், தன்னிடமிருந்து அவளை பிரித்தவன் தேவாவின் கண்ணத்ததில் ஓங்கி அறைந்தான்.
தன்னவனின் அறையில் விழி விரித்து, கண்ணத்தில் கையை வைத்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏய் அறிவு இருக்கா உனக்கு? கொஞ்ச நேரத்தில் என் உசுறே என்கிட்ட இல்லாமல் போய்ட்டுடி, ஏன்டி இப்டி பன்ன என தன்னை மறந்து தேவாவை திட்டிக் கொண்டிருந்தவனின் கண்களில், தேவாவின் வலது கையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருப்பதை பார்த்தவன், உடனே இருக்கையில் இருந்து எழுந்தவன் தன்னுடைய மேஜை டிராயரில் இருந்த ஃபர்ஸ்ட் எய்டு பாக்சை, கொண்டு வந்து காயத்தில் இருந்து வழியும் இரத்தத்தை சுத்தம் செய்து, மறுபடியும் மருந்திட்டு கட்டுக்கட்டினான்.
தன்னவனின் கோபத்தில் இருந்த அன்பையும் தனக்கான அவனுடைய தவிப்பையும், ஒரே நேரத்தில் கண்ட பெண்ணவளுக்கோ சந்தோசத்தில் வானத்தில் சிறகை விரித்து பறப்பது போல இருந்தது.
அவளின் வதனத்தில் புன்னகையை கண்டதும் மறைந்திருந்த கோபம் மீண்டும் துளிர்த்து எழ, ஏய் என்னடி சிரிப்பு என்னை தவிக்க வச்சிட்டு நீ!!!... என்றவனின் வார்த்தை பாதியில் நின்றது.
அப்போது தான், "தான் என்ன பேசுகிறோம் என்று புரிய வர பெட்டில் இருந்து எழுந்தவன் சுற்றி இருந்தவர்களின் பார்வையை சந்திக்க முடியாமல், அறையில் இருந்து வெளியேறினான்.
சந்தோஷிற்கு அர்ஜுனின் இச்செயலுக்கான காரணம் தெரிந்தமையால் உள்ளுக்குள் நகைத்தபடி நின்றவன். தேவாவின் அருகே வந்து, ஏன்மா இப்படி ஒரு முடிவை எடுத்த என இறுக்கமான குரலில் கேட்க, தன்னவனின் கோபத்தை எண்ணி கலங்கிப் போய் இருந்தவள் சந்தோஷின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலைக்கவிழ்ந்தாள்.
அவளுடைய தற்கொலை முயற்சிக்கான காரணத்தை அறிந்தவர்களோ ஊமையாக நின்றனர்.
இளா தேவாவிடம் பேசாமல் கோபத்தோடு இருக்க… அம்பிகையும் கைலாஷும் அவளிடம், இனி எந்த சூழ்நிலையிலும் இப்படி ஒரு முடிவை எடுக்கக் கூடாது என சத்தியம் வாங்கிய பின்னரே, மன நிம்மதியுடன் கீழே சென்றனர்.
தேவா, அர்ஜுனின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க... அவளின் நாயகனோ, அவள் முன்பு வராமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான்.
சூரியன் மறைந்து இரவு ஆரம்பித்த பிறகும் கூட தன்னவனை பார்க்க முடியாமல் பெண்ணவளின் மனம் தவித்தது.
அவள் அருகேயே இருந்தாலும், அமைதியுடனேயே, நேரத்திற்கு உணவு ஜூஸ் என கொடுத்துக் கொண்டிருந்தாள் இளா.
அம்பிகையும் கைலாஷும் கூட ஒரு விதமான இறுக்கத்துடனேயே இருந்தனர்.
அன்றைய நாள் சந்தோசமும் துக்கமும் மாறிமாறி வந்து முடிய அடுத்த நாள் அழகாகவே விடிந்தது.
தன் மீது கோபப்பட்டு சென்றவனை எப்போது காண்போம் என தவித்துக் கொண்டு இருந்தவளிடம், வந்தார் அம்பிகை.
காலையிலேயே குளித்து முடித்து மங்களகரமாக இருந்த மருமகளை பார்த்ததும், உள்ளம் மகிழ்ந்திட, அவளுக்கு குடிப்பதற்கு பாலை கொடுத்தவர், தேவா, கை வலி எப்படி டா இருக்கு என கேட்டவரிடம்,
நல்லா இருக்கு என்று சைகை செய்தவள், நேற்றைய தன்னுடைய செயலுக்காக மன்னிப்பை கேட்டாள்.
ம்கூம் வேண்டாம் டா, நான் நேற்று நடந்ததையே மறக்கனும்னு நினைக்கிறேன் என்றவர். தேவாவிடம், நீயும் அர்ஜுனும் உங்க மாமா வீட்டுக்கு மறுவீட்டுக்கு போய்ட்டு வாங்கடா, உங்களை இரண்டு நாள் தங்க வைக்கலாம்னு இருந்தேன் ஆனால் இப்போ, என் முடிவை மாத்திட்டேன்.
ஏன் அத்தை? என்று சைகையால் கேட்டவளிடம்,
இல்லடா மனசுல ஏதோ கெட்டது நடக்க போறது மாதிரியே இருக்கு, நிம்மதியே இல்லை, அதனால் நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டு அபிசேகம் பன்னிட்டு பொங்கல் வச்சிட்டு வந்தா நல்லா இருக்கும்னு தோனுது என்க.,
சரி அத்தை, என்று கண்களால் சம்மதம் சொன்னவள், அம்பிகை கொடுத்த டிரெஸை சந்தோசமாக வாங்கிக் கொண்டாள்.
சரிடா சீக்கிரமா கிளம்புங்க அங்கே உன் அத்தையும் மாமாவும் உங்களுக்காக காத்துட்டு இருப்பாங்க காலை டிபனே அங்கே தான்னு சொல்லிட்டாங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
இந்த இளா, எரும எங்கே போய்ட்டா? அவள் இல்லாமல் எப்படி இந்த புடவையை கட்டுவேன், என புலம்பியவள், இளா இப்போ எங்கே போய் தொலைஞ்சாளோ தெரியலையே, நேற்றிலிருந்து மூஞ்சை திருப்பிக்கிட்டே திரியிறா வாயை திறந்து பேசவே மாட்டேங்கிறா? வரட்டும் அவளுக்கு இருக்கு என மனதுக்குள் கருவிக் கொண்டே மாமியார் கொடுத்த பட்டுப்புடவையை ஒரு கையால் கட்டுவதற்கு போராடிக் கொண்டிருந்தாள் தேவா.
வலது கையில் வலி இப்போது சற்று அதிகமாக இருக்கவும், புடவையை கட்ட முடியாமல் தவித்து கொண்டிருந்தவள், திடுமென கதவைத் திறந்து அறைக்குள் நுழைந்த அர்ஜுனை கண்டதும், புடவையை ஒரு கையால் அள்ளிக் கொண்டு தன் மேல் போர்த்தியபடி திரும்பிய தேவாவின் இதயமோ படபடவென அடித்துக் கொண்டது.
தேவாவோடு மறுவீட்டுக்கு கண்டிப்பாக போயே ஆகவேண்டும் என அம்பிகை அர்ஜுனிடம் அன்பு கட்டளையிட, மறுக்க முடியாமல் மனதுக்குள் உலன்ற கோபத்தோடு வேகமாக அறைக்கு வந்தவன் தேவாவை பார்த்ததும், பதறியபடி சட்டென திரும்பி நின்றான்.
ச்சே அறிவு கெட்டவனே கதவை தட்டிட்டு உள்ளே வரனும்னு உனக்கு தோனலையா? நீ பாட்டுக்கு உள்ளே வந்துட்ட, என தன்னையே திட்டிக் கொண்டவன், சாரி அம்மா மறுவீட்டுக்கு போகனும்னு சொன்னாங்க அதான் என திக்கி திணறி சொல்லிவிட்டு, அறையில் இருந்து வெளியேற போனவனை தேவாவின் கால் கொலுசின் சத்தம் அவனை போகவிடாமல் தடுத்து நிறுத்தியது.
என்னவென்று அவளின் புறம் திரும்பி எதிர்கேள்வி கேட்டவன், சட்டென திரும்பி நின்று சாரி என்று சொல்ல, பெண்ணவளோ எப்படி சொல்வது என தயங்கி நிற்கவும், அர்ஜுனுக்கும் உடனே புரிந்தது.
தான் உள்ளே வந்தபோது தேவாவின் நிலைமையை நினைத்து பார்த்தவன், தேவாவின் பதிலை எதிர்பாராது, நான் இளாவை அனுப்புறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக அறையில் இருந்து வெளியேறவும் தான் பெண்ணவள் அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சையே வெளியே விட்டவள் நிற்க முடியாமல், பெட்டில் அமர்ந்தாள்
லப்டப் என தன் இதயம் துடிக்கும் சத்தம் வெளியே கேட்பது போல இருக்க, தன் கையை நெஞ்சின் மீது வைத்து, ஹே என்னப்பா இப்படி துடிக்கிற என இதயத்தோடு மௌனமொழியில் பேசிக் கொண்டிருந்தாள் தேவா.
தேவாவின் மௌனமொழியை கலைக்கும் வண்ணம் அறைக்குள் வந்த இளா, அவளிடம் எதுவுமே பேசாமல், அறைகுறையாக உடுத்தியிருந்த புடவையை முழுமையாக கட்டி விட்டவள், தேவாவுக்கு அவள் மாமியார் கொடுத்த நகைகளை எடுத்து போட்டுவிடப் போகவும் மறுத்தவளை நிமிர்ந்து ஒரு முறை முறைத்து விட்டு, அனைத்தையும் போட்டுவிட்டாள்.
வேலைக்காரி கொண்டு வந்து கொடுத்த மல்லிகையை தேவாவின் தலையில் சூடி விட்டு அவளுடைய முகத்தை பார்த்த இளாவின் மனம் சந்தோசத்தில் திளைத்தது. வெளியே தன் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டாலும் மனதுக்குள் தேவாவை நினைத்து சந்தோசமடைந்தாள்.
தேவாவை அழைத்துக் கொண்டு இளா கீழே செல்லும் வரை, வேறொரு அறையில் இருந்த அர்ஜுன், தன் அறைக்கு சென்று புது உடை அணிந்து கீழே வந்ததும், தேவாவை பார்ப்பதை தவிர்த்தபடியே இருந்தான்.
அம்பிகையிடமும் கைலாஷிடமும் ஆசிர்வாதம் வாங்கிய இருவரும், சந்தோஷ் இளாவுடன் புறப்படப் போக, தேவாவோ அர்ஜுனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவள், தன்னவனை பற்றியிருந்த கையை விடாமல் பாட்டியின் அறையை நோக்கி சென்றாள்.
தேவாவின் செயலை நினைத்து, மற்றவர்கள் மனதுக்குள் கலக்கமுடன் நின்றவர்கள், என்ன நடக்கப் போகிறதோ என பதறியபடியே தேவா அர்ஜுனின் பின்னாலேயே சென்றனர்.
Thread 'என் வானிலே நீ வெண்ணிலா...கருத்துத் திரி' https://sangamamnovels.com/threads/என்-வானிலே-நீ-வெண்ணிலா-கருத்துத்-திரி.71

Last edited: