❤என் வானம்❤-9
அர்ஜுனின் பற்றிய கையை விடாமல் பாட்டியின் அறைக்குள் சென்றாள் தேவா.
உள்ளுக்குள் உண்டான பயத்துடனேயே தன்னவனுடன் அறைக்குள் சென்றவள் கண்டது, கண்களை மூடியபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த ரங்கநாயகியை தான்.
கண்களை மூடியிருந்த பாட்டியை பார்த்த அர்ஜுன் பாட்டி என்று அவரை அழைக்கப் போகவும், கையை அழுத்தமாக பற்றி தடுத்தாள் தேவா.
ஏன் என்று அவளுடைய முகத்தை பார்க்க, தேவாவோ வேண்டாம் என கண்களால் பேசினாள்.
தன்னவளின் மை தீட்டிய கண்ணழகில் சொக்கித்தான் போனான் அர்ஜுன். தன்னை மறந்து நின்றவனை, சொடுக்கிட்டு அழைக்க, சுயநினைவை அடைந்தவன் தன் செய்கையை எண்ணி வெட்கினான். ச்சே இவள் முகத்தை பார்த்தா நான் நானாகவே இருக்க முடியலை, இவள் மேல இதுநாள் வரை இருந்த கோபம் கூட குறைந்தது போலவே இருக்கு என அதற்கும் அவன் மீதே வெறுப்பாக இருந்தது.
தேவா பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க கீழே குனிய அவளோடு இணைந்து அர்ஜுனும், கீழே குனிந்து அவர் பாதம் தொட்டான்.
தன் பாதத்தில் தொடுகையை உணர்ந்தவர், சாய்வு நாற்காலியில் இருந்து நிமிர்ந்து அமர்ந்து, கண்களை திறந்து பார்த்தவருக்கு, கைலாஷ், அம்பிகை மற்றும் சந்தோஷ், இளா நால்வரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவர், பாட்டி எங்களை ஆசீர்வாதம் பன்னுங்க என்ற அர்ஜுனின் குரலில் தன்னை மீட்டவர், கீழே குனிந்து பார்த்தார். தேவாவும் அர்ஜுனும் விழுந்தபடி இருப்பதை பார்த்ததும், நேற்றைய நினைவுகள் அனைத்தும் மனக்கண் முன்பு வர, முதிய பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் இளையவர்களின் மீது விழுந்தது.
கைகளில் ஈரத்தை உணர்ந்த அர்ஜுனும் தேவாவும், நிமிர்ந்து பாட்டியை பார்க்க, அவருடைய கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து, பாட்டி என்று அர்ஜுன் உணர்ச்சி வசப்பட, தேவாவோ அவருடைய கண்ணீரை துடைத்தவள், மறுப்பாக தலையை அசைத்தாள்.
தேவாவின் முகத்தை கையில் ஏந்தியவர் அவள் நெற்றி உச்சியில் முத்தமிட்டு நல்லாரும்மா, முடிந்தா இந்த பாட்டியை மன்னிச்சிடும்மா வயசாகிட்டுல்ல அதான் எதை எதையோ யோசித்து நானும் குழம்பி உம்மனசை ரொம்பவே நோகடிச்சிட்டேன் என்றதும், கைலாஷும் அம்பிகை மட்டுமில்லாது சந்தோஷ் மற்றும் இளாவுமே இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
நேற்றைய நினைவில் தேவாவின் கண்கள் கலங்கிட, அதை கண்ட பாட்டியோ, இல்லடா இனிமேல் நீ அழவே கூடாது இந்த பாட்டியோட ஆணை என கண்ணை உருட்ட பூவாய் மலர்ந்தாள் தேவா. (என்னடா இது பாட்டி இப்படி பாசத்தை காட்டுது பின்னாடி பெருசா ஏதாவது வருமோ

)
அர்ஜுனையும் தேவாவையும் இளா மற்றும் சந்தோஷுடன், மகிழ்ச்சியாக மறுவீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
சந்தோஷ் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொள்ள அவன் அருகே இளா அமரவும், அர்ஜுனுக்கு உள்ளுக்குள் புகைந்தது.
இதுவரை இருந்த மாயையில் இருந்து தான் தெளிந்து இருப்பதாக நினைத்தான். தேவா தன்னை வசியம் செய்வதாகவே நினைத்தான். அவள் அருகே இருந்தால் நான் நானாக இருக்க முடியவில்லை என் மனசு கூட அவளுக்காக யோசிக்கிறதே என மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தவன், பின்னிருக்கையில் சென்று அமர, தேவாவும் அவன் அருகே அமர்ந்தாள்.
மகனையும் மருமகளையும், மறுவீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்த கைலாஷ் மற்றும் அம்பிகையின் முன்பு வந்தார் ரங்கநாயகி.
தடியை ஊன்றியபடி வந்த மாமியாரை பார்த்ததும் பதறிய அம்பிகை, அத்தை என்னை கூப்பிட்டுருக்கலாமே ஏன் நீங்களே இங்கே வந்தீங்க என்று, அவருடைய உடல்நிலையை மனதில் வைத்து கேட்க..
ம்ம் பரவாயில்லையே அம்பிகை மருமகள் வந்தவுடனே, நீ மாமியார் ஆகிட்ட அதனால, உன் மாமியாரான என்னை இப்போவே மூலையில போய் அடங்கி இருடினு சொல்றியா? என நக்கலான குரலில் கேட்டவர், அம்பிகையின் அதிர்ந்த முகத்தை அலட்சியப்படுத்தி விட்டு, மகனை அழைத்தார்.
தன் அம்மா, அம்பிகையிடம் ஏதோ ரகசியம் பேசுவதாகவே தோன்றியது கைலாஷிற்கு அதனால் அவர் அழைத்ததும் வேகமாக அருகே வந்தவர்,
அம்மா!!
என்னை சோபா வரைக்கும் அழைச்சிட்டு போப்பா என்று சொல்ல, சரிம்மா என்றார்.
மகனின் உதவியோடு சோபாவில் அமர்ந்தவர் மருமகளை தீர்க்கமான பார்வையை பார்த்தவர், மகனிடம் திரும்பி, கைலாஷ் அந்த பட்டாபிராமனை வீட்டுக்கு இன்னைக்கே வர சொல் என்றதும் அம்பிகையின் முகத்தில் அதிர்ச்சியும், கைலாஷின் முகத்தில் ஏன் என்ற கேள்வியும் எழுந்தது.
அம்மா இப்போ எதுக்கு அந்த பட்டாபி அவன் பேச்சை கேட்டு நடந்ததால் என்ன ஆச்சின்னு தெரியும் தானே மறுபடியும் ஏன் என கேட்க!!
அதனால் தான் வரசொல்றேன் கைலாஷ் என்று பூடகமாகவே பதிலளித்தார் ரங்கநாயகி.
தன் மாமியாரின் செய்கையில் அம்பிகையின் மனசு குழம்பியது. அவர் தேவாவை ஏற்று கொண்டாரா இல்லையா என்ற சந்தேகம் இப்போது அதிகரித்தது.
பட்டாபிராமனை அழைத்து, அவன் அது இது என எதையாவது சொல்லி, மாமியாரின் மனசை மாற்றிவிட்டால் தேவாவின் நிலைமை என உள்ளுக்குள் தவிக்க ஆரம்பித்தார்.
அம்மா காளியம்மா இதுவரை நடந்தது எல்லாமே போதும்மா இனியும் இந்த குடும்பத்தை சோதிக்காதே, என தங்களின் குலதெய்வமான காளியிடமே மனதுக்குள் வேண்டுதலை வைத்தார் அம்பிகை.
அம்மா பட்டாபிராமன் மாலை நான்கு மணிக்கு வரதா சொல்லிட்டார் என்றதும், ரங்கநாயகியின் முகம் தெளிந்தது. அம்பிகையின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது.
யார் இந்த பட்டாபிராமன் இவர் வந்தால் என்ன ஆகும்?? அம்பிகையின் பயம் உண்மையாகிடுமா? இல்லையா?
பாதி தூரம் சென்றிருக்கும் சந்தோஷ் காரை நிறுத்து என்ற அர்ஜுனின் குரலில் ஸ்லோ செய்தவன், என்ன மச்சி ஏன் நிறுத்த சொல்ற, என கேட்க,
டேய் முதல்ல காரை ஸ்டாப் பன்னு என்று அழுத்தி சொல்ல, உடனே நிறுத்தினான் சந்தோஷ்.
தன்னவனின் செய்கையில் தேவா மனம் குழம்பியது. ஒரு நேரம் தன்னிடம் தென்றலாகவும், அதை அனுபவிக்கும் போதே தீயாய் தகிக்கிறான் ஏன் என கேள்வி எழுந்தது பெண்ணவளுக்கு… மனதில் எழுந்த கேள்வியுடன் தன்னவனின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கார் நின்றதும் இறங்கிய அர்ஜுன் சந்தோஷை டிரைவர் சீட்டில் இருந்து இறங்க சொல்லவும்,
ஏன்டா?
இறங்கு என பல்லை கடிக்க, வேறு வழியின்றி இறங்கவும், டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டவன் சந்தோஷை தன் அருகே அமர சொல்ல திரும்பிய அர்ஜுன் தேவா இருப்பதை பார்த்ததும் பின்னால் திரும்பியவன், சந்தோஷ் இளாவுடன் உட்கார்ந்து இருப்பதை பார்த்து பல்லை கடித்தான்.
அர்ஜுன் காரை ஓட்ட அவன் அருகே அமைதியாக தேவா அமர்ந்திருந்தாள்.
அவன் காரை ஓட்டும் வேகத்தை பார்த்து சந்தோஷ் உள்ளுக்குள் பதறினான். கோபம் வந்தால் அவன் என்ன செய்வான் என்று அறிந்தவனாதலால், பயத்துடனே அமர்ந்திருந்தான்.
இங்கு அர்ஜுனின் மனமோ குழப்பத்தில் இருந்தது. பழிவாங்க என்று மணந்து கொண்டவளுடன் சேர்ந்து விருந்துக்கு போகிறதை நினைத்து தன் மீதே கோபம் கொண்டான் அர்ஜுன்.
ஏன் தற்கொலைக்கு முயன்றாய் என்று அவனும் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை… ஆனால் சந்தோஷின் மூலமாக உண்மையை அறிந்தவனுக்கு மனம் பாரமானது என்னவோ உண்மை தான். பாட்டி இத்தகைய சுடு சொற்களால் வதைத்திருக்க வேண்டாமோ என எண்ண தோன்றவும், தான் என்ன விரும்புகிறோம் தேவாவின் இறப்பையா இல்லை மகிழ்ச்சியையா என தன்னையே கேட்டுக் கொண்டவனால் தெளிவான விடையை மட்டும் கண்டுணர முடியவில்லை. தேவா அப்பா அம்மாவின் இறப்புக்கும் அர்ஜுனை பிரிந்ததற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என போலீஸ் மூளை யோசிக்கத்தான் செய்தது. ஆனால் அதை உடனே அசட்டை செய்தவன் இரவெல்லாம் தூங்க முடியாமல், தவித்தான்.
ஒரு பக்கம் அர்ஜுனின் மனம் பலவித யோசனையில் உலன்றாலும், அறைமணி நேரத்திலேயே, தேவாவின் வீட்டிற்கு வந்துவிட்டான். வாசலிலேயே மணமக்களின் வரவை எதிர்பார்த்து கொண்டிருந்த அமுதவாணனுக்கு, அவர்கள் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்ட மகிழ்ச்சியில் தங்கை மகளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அர்ஜுன் தேவாவுடன் காரில் இருந்து இறங்கி வரும்போதே, அகல்யா சீக்கிரம் வா பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சி என்று சொல்லவும், கையில் ஆலத்துடன் வெளியே வந்தார்.
என்னங்க இந்த தட்டுல வெற்றிலையை வைங்க… அதுக்கு மேல சூடத்தை வைங்க என்று சொல்லவும், அப்போது தான் அர்ஜுன் கவனித்தான். சிவப்பு நிற தண்ணீர் கரைசலின் மீது வெற்றிலையை வைத்து அதன் நடுவே சூடத்தை வைத்ததை, செந்நிற தண்ணீரில் சூடம் நனையாது என சந்தேகம் எழ, ஆலம் எடுப்பதை கவனித்தவன் வியந்தான்.
இருவரையும் அருகருகே நிற்க வைத்து ஆலம் எடுத்தவர் தேவாவின் முகத்தில் இதுநாள் வரை கண்டிராத சந்தோசத்தை பார்த்தவரின் உள்ளம் குளிர்ந்தது.
அர்ஜுன் மற்றும் தேவாவின் நெற்றியில் திலகமிட்டவர் வாங்க தம்பி, வாம்மா தேவா என அழைத்தவர், இளா இரண்டு பேரையும் உள்ளே அழைச்சிட்டு போ, என மகளிடம் சொல்லிவிட்டு ஆலத்தை வெளி வாசலில் கொட்ட சென்றார்.
ம்கூம் நானும் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை தான் என்னை ஒருத்தரும் அழைக்கவும் இல்ல ஆலம் எடுக்கவும் இல்ல என இளாவின் காதை கடிக்க… அவளோ கண்ணாலேயே எரித்துவிடுவது போல தன்னவனை பார்க்க, வாயை மூடிக் கொண்டு அர்ஜுனோடு சென்றான்.
ஏன் பக்கி உனக்கு மண்டையில் மசாலா இருக்கா? இல்லையா? அவளே தேவாவோட கல்யாணத்துக்கு பிறகு தான், கொஞ்சம் மனசு இறங்கி வந்துட்டு இருக்கா, அது பொறுக்காதே என தன்னையே திட்டிக் கொண்டே அர்ஜுனின் அருகே அமர்ந்தான்.
தேவா, இளாவுடன் தனக்கான அறைக்குள் சென்றாள்.
இளா என அகல்யா அழைக்கவும், ஹேய் இருடி அம்மா கூப்பிடுறாங்க என சொல்லி விட்டு செல்லப் போனவளை தடுத்தாள் தேவா.
ஹேய் என்னடி?
இளா, என அவளுடைய கையை பிடித்தவள், அம்மாட்ட எந்த விசயத்தையும் சொல்ல மாட்டேன்னு பிராமிஸ் பன்னு என சைகையில் பேசி கையை நீட்ட!!
நீ அர்ஜுன் அண்ணாவை மேரேஜ் பன்ன பிறகாவது சந்தோசமா இருப்பனு தான்டி அப்பாவும், அம்மாவும் நினைச்சிட்டு இருக்காங்க… அங்கே நடந்ததை சொன்னால் அவங்க மனசு ரொம்பவே கஷ்டப்படும் என்றவள் தேவா சேலை முந்தானையால் மறைத்து இருந்த கையை விலக்கினாள்.
இது மட்டும் அப்பா அம்மா கண்ணுல பட்டுச்சி அதற்கு பிறகு நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்லை என தேவாவின் கையில் இருந்த கட்டை காட்டி எச்சரித்து விட்டு சென்றாள்.
ஏய் மாப்பிள்ளை வந்து எவ்ளோ நேரமாச்சி நீ என்ன புது பொண்ணு மாதிரி உள்ளே இருக்க, இந்தா இந்த காபியை போய் இரண்டு மாப்பிள்ளைக்கும் கொடு என்க,.
சரிம்மா என காபி ட்ரேயை எடுத்துக் கொண்டு சென்றாள்.
அர்ஜுனிடம் வந்தவள், அண்ணா காபி எடுத்துக்கோங்க என்று சொல்லவும், அமுதவாணனுடன் பேசிக் கொண்டிருந்தவன், இளாவிடம் திரும்பி, சாரி இளா எனக்கு காபி பிடிக்காது. ஒன்லி டீ தான் என்க,. காபி ட்ரேயுடன் நின்ற இளாவும், அறையில் இருந்த தேவாவும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியடைந்தனர்.
அர்ஜுன் சொன்னதை கேட்ட அமுதவாணன். அகல்யா மாப்பிள்ளைக்கு டீ தான் பிடிக்குமா உடனே எடுத்துட்டு வா என்றதும் டீயோடு வந்தார் அகல்யா.
மன்னிச்சுடுங்க தம்பி, உங்களுக்கு காபி தான் பிடிக்கும்னு சொன்னா அதுமட்டுமில்லாமல், தேவா கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு லிஸ்டே சொல்லிருக்கா உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு என்று சொல்லவும், இங்கே அர்ஜுனும் சந்தோஷும் அதிர்ந்தனர். இ இல்ல இப்போ கா காபி லாம் பிடிக்கிறதே இல்லை நிறுத்தி ஐந்து வருடம் ஆகிட்டு என்று திணறலாக ஆரம்பித்து தெளிவாக சொல்லி முடிக்கவும்,
அறையில் இருந்து அர்ஜுனின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த தேவாவின் காதில் ஐந்து வருடங்கள் என்றது மட்டும் அழுத்தமாக விழுந்தது. பயபுள்ள மாட்டிடுவானோனு நினைச்சேன் தப்பிச்சிட்டான் என்று நிம்மதியடைந்தான் சந்தோஷ்.
அர்ஜுனோ இங்கே இருக்கும் வரை அவர்கள் கொடுப்பது எதுவாக இருந்தாலும் மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டு விடனும் என மனதுக்குள் முடிவு செய்து கொண்டான்.
அகல்யா காலை டிபனே பெரிய விருந்தாக செய்திருந்தார். இட்லி, பூரி, பொங்கல், வடை, கேசரி, அசோகா, கிச்சடி, இவற்றில் சிறுதானிய உணவு வகைகளும் அடங்கி இருந்தது.
டைனிங் டேபிளில் இருந்தவற்றை பார்த்ததும், அர்ஜுனின் விழிகள் விரிந்தது. தேவாவோ அதிர்ச்சியுடன் தன் அத்தையை பார்த்தாள்.
தேவாவின் பார்வையினை புரிந்து கொண்ட இனிமேல் உங்களுக்கு என் கையால் சமைத்து போட முடியாதேடா, அதான் என்றவரின் குரல் அடைக்கவும், கலங்கிய கண்களை யாரும் அறியா வண்ணம் துடைத்து கொண்டவர் அனைவருக்கும் பரிமாறினார்.
போதும் போதும் என்று அவர்கள் அலறும், அளவுக்கு இரண்டு மாப்பிள்ளைகளையும் கவனித்த கவனிப்பில் திக்குமுக்காடி போகினர்.
காலை உணவு முடிந்ததும், இனிமேல் ஒரு நிமிடம் கூட, இருக்க முடியாதுடா என சந்தோஷிடம் கத்தினான் அர்ஜுன்.
டேய் நீ இப்போவே போனா உங்க இரண்டு பேருக்கும் எதுவோ பிரச்சனைனு, கவலைப்படுவாங்க மச்சி அவங்க இங்கேயேவா இருக்க போறாங்க இரண்டு மூன்று நாளில் சொந்த ஊருக்கு போய்டுவாங்கடா அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருடா என சந்தோஷ் கடுப்படிக்க… சரி என்பதாய் மௌனமாய் இருந்தான்.
தேவாவின் மனமோ, பெருங்குழப்பத்தில் இருந்தது. அவளுடைய நினைவுகள் பின்னோக்கி சென்றது.
மாலை மறைந்து இரவென்னும் போர்வையை பூவிமகள் சூடிக்கொண்டிருந்தாள். க்ரீன் கஃபே ரெஸ்டாரண்ட் பல வண்ண வீளக்குகளால் பகலைப் போல் ஜொளித்துக் கொண்டிருந்தது. வோ நோ ரொம்ப லேட்டாகிட்டே, என மனதுக்குள் புலம்பியபடியே ரெஸ்டாரண்ட் வாசலில் தன்னுடைய ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றாள்.
டார்க் ப்ளு கலர் ஜீன்ஸ் பேன்ட்டும், வொயிட் கலர் டாப்சுடன் பார்க்கவே அழகாக தேவதையென இருந்தவளை பலரின் கண்கள் தீண்டினாலும், பெண்ணவளின் கண்களோ தன்னவனையே தேடியது. வில் போன்ற அழகான ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கியவள், தன் ரோஜா இதழை சுழித்தபடி வேகமாக உள்ளே நுழைந்தாள்.
ரெஸ்டாரண்டின் உள்ளே தன்னவனை தேடியவள் அவன் அங்கே இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு கார்டனை நோக்கி சென்றாள்.
இயற்கை சூழலுடன் அமையப் பெற்ற அந்த ரெஸ்டாரண்ட் வண்ண விளக்குகளால் ஜொளித்துக் கொண்டிருக்க… சந்தன மல்லிகையின் வாசம் வீசும் செடிகள் படர்ந்த குடையின் கீழ் அமர்ந்திருந்தவனை கண்டதும், பெண்ணவளின் கண்கள் மலர்ந்தது.
தன்னவனின் முன்பு வந்து நின்றவள் காதில் கையை வைத்துக் கொண்டு சாரி அர்ஜு என்ற தேன் குரலில் ஈர்க்கப்பட்டவன், உடனே நிமிர்ந்தான்.
தன்னவளை கண்டதும் மலர்ந்து காளையவனின் முகம் சட்டென சுருங்கியது. இத்தனை நேரம் தன்னை தனியே காக்க வைத்ததை நினைத்து கோபம் கொண்டது.
ஹேய் சாரி அர்ஜு என்று மறுபடியும் மன்னிப்பை வேண்டியவள், இருக்கையில் அமர்ந்து டேபிளை பார்த்ததும் அதிர்ந்தாள்.
ஹேய் என்ன மேன் இது இத்தனை காபி கப் என்று அதிர்ச்சியுடன் கேட்டவளை,
வேற என்ன பேபி!! ஒவ்வொரு ஆஃப்னெவருக்கும் ஒரு கப் காபி குடிச்சிருக்கேன், இதை கௌவுண்ட் பன்னாலே தெரிஞ்சிடும், நீ எவ்ளோ நேரம் லேட்டுனு பொய் கோபத்துடன் சொன்னவனிடம், கண்களை சுருக்கி சாரி பேபி டாடிக்கூட கொஞ்சம் வொர்க் இருந்துச்சி என்றவள், டேய் அதுக்காக இத்தனை கப் காபியையா குடிச்ச உன் ஹெல்த் என்ன ஆகுறது.
தேவ் இது ஸ்டோன் பாடி ஒன்னும் ஆகாது. ஐ லைக் காபி, என் உயிரே போக போற நிலைமை வந்தா கூட காபியை குடித்தால் தான் பிரியும் என்றதும்,
ஸ்டாப்பிட் அர்ஜு இன்னொரு முறை உயிர் பிரியும் அது இதுன்னு சொன்ன என்று மூக்கு நுனி விடைக்க அவன் காலரை கொத்தாக பற்றியிருந்தாள் தேவா.
ஓகே ஓகே கூல் பேபி இனி இப்படி சொல்ல மாட்டேன். ஆனா ஊனா ஜான்சி ராணியா மாறிடுறடி, என்றவனின் குரலில் வழிந்த காதலில் பெண்ணவளின் கோபம் கூட பனியை போல் கரைந்து போனது.
தேவா தேவா ஏய் தேவா என இளாவின் உலுக்களில் சுயநினைவுக்கு வந்த தேவா, பதறியடித்து கொண்டு எழுந்து நின்றவளின் கண்கள் இளாவை விடுத்து அர்ஜுனை தேடியது.
தேவாவின் கண்களில் தெரிந்த தவிப்பையும் துடிப்பையும் பார்த்தவள், ஹேய் அண்ணாவை தேடுறியா என்று இளா கேட்டதும், கண்களில் அலைப்புறுதலுடன் ஆமா என்று தலையை ஆட்ட,
அதுக்கு தான்டி வந்தேன், அண்ணன் ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்னாங்க, அதான் உன் அறைக்கு அனுப்பி வச்சேன் என்றதும், வேகமாக தன்னுடைய அறைக்கு சென்ற தேவா, தன்னவனின் முகத்தை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டாள்.
கண்ணை மூடி படுத்திருந்தவனை பார்த்ததும், அவன் அருகே மெதுவாக வந்து அமர்ந்தவள், அவனையே பார்த்தபடி இருந்தாள்.
அவளுடைய மனதில் போர்க்களமே நடந்து கொண்டிருந்தது. தன்னவனை பிரிய காரணமாயிருந்த அந்த நாளின் நினைவில் பெண்ணவளின் தேகம் நடுங்கியது. அவளுடைய விழி நீர் அர்ஜுனின் மீது விழ, ஈரத்தில் கண்ணை திறந்தவன், தன்னருகே கண்ணீர் வழிய அமர்ந்திருந்தவளை பார்த்ததும், அவள் கண்ணீரை துடைக்க பரபரத்த கைகளை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு படுத்திருந்தான்.
என்னமோ ஏதோவென்று தேவாவின் பின்னால் வந்த இளா, தோழியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை பார்த்ததும் பதறியபடி அருகே வத்ததவள்,
ஏய் தேவா என்னடி ஆச்சி ஏன் கண்ணு கலங்கியிருக்கு என்று கேட்டதும், ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டவும்,
பொய் சொல்லாதடி நீ பழசை நினைச்சிருக்க அதனால் தான் அண்ணனை பார்க்க தவிச்சிட்டு ஓடி வந்த, என்றதும் கீழே குனிந்தாள்.
இன்னும் என்னடி பயம் அர்ஜுன் அண்ணாவுக்கு ஏதாவது ஆகிடும்னு பயந்து தானே அவரை பிரிஞ்ச, நீ பயந்த மாதிரி அண்ணனுக்கு ஒன்றும் ஆகலை, நல்லா பாரு நீ இப்போ மிஸஸ் அர்ஜுனா ஆகிட்ட டி உன்னோட இத்தனை வருட வலியும் வேதனையும் கானல் நீராய் போய்டுச்சி, அர்ஜு அண்ணாவோட சந்தோசமாக நீ வாழ தான் போற, வீணா பயப்படுறதை நிறுத்துடி என்றவள் கையோடு தேவாவை அழைத்துக் கொண்டு சென்றாள்.
இளா பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனின் முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து போகின. இருவரும் அறையை விட்டு சென்றதும் கண்ணை திறந்தவன், அவர்கள் பேசியதை நினைத்து பார்த்து தலையில் கையை வைத்து அமர்ந்து கொண்டான்.
அதே நேரம் பலமான காற்று வீச ஜன்னல் கதவுகள் படாரென திறக்கப்படவும், காற்று அறைக்குள் வேகமாக மோதியதில் டேபிளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தது.
பொருட்கள் விழுந்த சத்தத்தில் திரும்பிய அர்ஜுனின் விழிகளில் ஒரு டைரி தென்பட, அதன் அருகே நெருங்கினான்.
காற்றில் டைரியில் உள்ள பக்கங்கள் வேகமாக புறட்டபட அதில் தீட்டப்பட்டிருந்த வரைபடம் அவன் கண்களில் படவும் வேகமாக எடுத்தவன், அந்த வரைப்படத்தை பார்த்து அதிர்ந்தான்.
***ஐயா நீங்க சொன்ன கார் ……. இந்த அட்ரஸ்ல போய் தான் நின்னுச்சி என்று சொல்லவும்,
ஓகே அந்த ஏரியா எப்படி நமக்கு வசதியா இருக்குமா? என கேட்டதும்,
நமக்கு வசதியான இடம் நிறைய இருக்குங்க ஐயா என்று சொன்னதும்,
அப்போ நான் சொன்னதை சரியா முடிச்சிடு, கொஞ்சமாவது மிஸ் ஆச்சி உனக்கு ஒரு பள்ளம் தோன்ட வேண்டி இருக்கும் என கர்ஜிக்க…
ஐயா வேலையை கச்சிதமா முடிச்சிடுறேனுங்க என்று பயத்துடன் சொன்னான்.
***மாலை வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்ன பட்டாபிராமன் திடுதிப்பென்று அர்ஜுனின் வீட்டிற்கு வந்து நிற்கவும்,
அம்பிகையின் மனம் தடதடக்க ஆரம்பித்தது. அவருடைய கண்களில் பட்டாபியை பார்த்ததும், கோபம் வர முகத்தை திருப்பி கொண்டு உள்ளே சென்றார்.
அதை கவனித்தபடியே உள்ளே வந்த பட்டாபி ரங்கநாயகி முன்னால் வந்து பவ்யமாக கும்பிடு போட்டார்.
வெற்றிலை போட்டதால் கறைபடிந்த பற்களை இழித்துக் கொண்டு அம்மாவுக்கு நமஸ்காரம், இத்தனை வருடம் கழித்து இந்த சிறியவனோட நியாபகம் வந்துருக்கிறதை நினைச்சா மகிழ்ச்சியா இருக்கு என்று சொல்ல,
என்ன பட்டாபி சாயந்தரம் வரேனு சொன்ன இப்போவே வந்து நிற்கிற, என்று சந்தேகமாக பார்த்தவரிடம்,
அம்மா சொல்றது வாஸ்தவம் தான் இன்னைக்கு ஒரு பெரியவா வீட்டில வர சொல்லி இருந்தாங்க அதனால் தானே சாயந்திரமா வரேனு சொன்னேன், அவாளுக்கு அர்ஜென்ட் வொர்க் வந்ததுனால, இன்னைக்கு வேண்டாம்னு சொல்லிட்டாங்க அதான் பெரியவாளா காக்க வைக்க வேண்டாமே என்று உடனே புறப்பட்டு வந்தேன் என்றதும்,
சரி சரி பட்டாபி இப்படி உட்கார் என்று பணித்தவர் அம்பிகை என்று குரல் கொடுக்க, கிட்சனில் இருந்து பட்டாபி குடிப்பதற்காக காபியை வேலைக்காரரிடம் எடுத்து வர சொல்லிவிட்டு ஹாலிற்கு வந்தார்.
அத்தை என்றழைத்த அம்பிகையை பார்த்த பட்டாபி எப்டி இருக்கிங்க சேமமா இருக்கேளா? என கேட்க.,
நீ வந்துட்டில நான் நல்லா இருந்த மாதிரி தான் என வாய்க்குள் முனுமுனுத்தார்.
அம்பிகையின் முகத்தை பார்த்தே மனதை படித்த ரங்கநாயகி, மருமகளிடம், கைலாஷை அழைச்சிட்டு அப்படியே இரண்டு பேரோட ஜாதகத்தை எடுத்துட்டு வா என சொல்லவும்,
வேறு வழியின்றி தன்னறைக்கு சென்றவர், அர்ஜுன் மற்றும் தேவாவின் ஜாதகத்தோடு வந்தார் அம்பிகை.
என்ன மருமகளே! கைலாஷ் எங்கே நீ மட்டும் வந்துருக்க…
இப்ப வந்துடுறேனு சொல்லிருக்காங்க அத்தை என்றதும்,
சரி சரி நீயும் உட்கார் என்று மருமகளை அமர வைத்தவர், ஜாதகத்தை பட்டாபியிடம் கொடுத்தார்.
பட்டாபி ஜாதகத்தை கணித்துவிட்டு சொல்ல போகும் செய்தி என்ன? எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்.
அர்ஜுன் டைரியில் பார்த்தது என்ன?? அவனின் மனம் மாறுமா? தேவாவின் மீது இருக்கும் தவறான அபிப்ராயம் மாறுமா?
அர்ஜுனுக்கும் தேவாவுக்கும் காத்திருக்கும் ஆபத்து என்ன?
Thread 'என் வானிலே நீ வெண்ணிலா...கருத்துத் திரி' https://sangamamnovels.com/threads/என்-வானிலே-நீ-வெண்ணிலா-கருத்துத்-திரி.71

Last edited: