Malini Sundar
Member
உழவூர் கிராமம் ( கற்பனை கிராமம் ). அதிகாலை வேளை, இலைகளின் மேல் உள்ள நீர்த்துளியில் தெரியும் வானம், கொக்கறக்கோ என கூவும் சேவல், வாசலில் சாணமிட்டு கோலம் போடும் பெண்கள், மாட்டை வயலுக்கு ஓட்டி செல்லும் ஆண்கள், தன் காதலியான கடலுக்கு பிரியா விடை கொடுத்து , பிரிவின் கோவத்தால் தன் செந்நிற கதிர்களை பூமிக்கு செலுத்தி தன் உக்கிரத்தை காட்ட தொடங்கிய கதிரவன்,.
"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்ததே " என ஒலிக்கும் ரேடியோ என அந்த ஊரே புதிய நாளை எதிர்க்கொள்ள ஆயத்தமானது.
பெயருக்கு ஏற்றபடி உழவு செய்து செழிக்கும் ஊர். எங்கு திரும்பினும் பச்சை பசேல் என இருக்கும் வயல்கள். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் பெண்கள் என செழிப்பை நிலைநாட்டும் ஊர்...
"லீலாதரன்" என்று லீலைகளின் மன்னனான சிவன் கோவில் நடுநாயகமாக அங்கே காட்சியளிக்க அழகாய் அமைந்தது உழவூர்.
எல்லாம் இருந்தும், அங்கே ஒரே ஒரு குறை. பிள்ளைகள் படிக்க நல்ல பள்ளிக்கூடம் ஒன்று இல்லை. படிப்பிற்காக பக்கத்து டவுன் ஆன விருத்தாசலத்திற்கு செல்வ வேண்டிய கட்டாயம் இருந்தது.அங்கு தான் நந்துவும் படித்தாள் .
அந்த காலை வேலையில் நந்தினி என்கிற நந்துவை எழுப்பிகொண்டு இருந்தார் மஹா என்கிற மகாலட்சுமி.
" அம்மா நந்து டைம் ஆகுது பாரு.. எழுத்துரு.. ட்யூஷன் பசங்க வந்துடுவாங்க "
" ம்ம்ம்ம.. தோ எழுந்துக்கறேன் மா " என்றாள் அந்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரியான நந்து..
5.5 அடி உயரம், சராசரியான தேகம், இடையை தாண்டி நீண்ட கூந்தல், கறுப்பானாலும் களையான முகம், வில்லான புருவம், மீன் விழிகள், நீளமான நாசி, எப்போதும் சிரிப்பை உதிர்க்கும் அளவான உதடுகள், செதுக்கிய காதுகள் என ப்ரம்மனின் " மாஸ்டர் பீஸ் " என்று சொல்லலாம்...
மஹா- மாணிக்கத்தின் ஒரே மகள் நந்து . நன்றாக வாழ்ந்த குடும்பம். திடீரென மாணிக்கம் மாரடைப்பால் இறைவனடி சேற எப்படியோ நந்துவை 12வது வரை படிக்க வைத்தாள் . இப்பொது ஊறுகாய் செய்து விற்கும் கம்பனி ஒரு நடத்தி வருகின்றனர். நந்து குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பாள். காலை டியூஷன் முடித்து , சாப்பிட்டு " அம்மா நான் கிளம்பறேன் " என்று அவர்கள் கம்பனி நோக்கி பயணமானாள்.
தொடரும்...