கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண்களால் கைது செய் - பகுதி 10

"வந்த கொஞ்ச நாள்ல அப்பாவையே இம்ப்ரேஸ் பண்ணிட்டாளே.. நல்லா தான் இருக்கா ( என்னது நல்லா தான் ஆ.... ஓவரா போற டா).. ஆனா ரொம்ப நக்கல்,

குசும்பு புடிச்சவ போல இருக்கு.. " என்று நினைத்துக்கொண்டான்..



அவனது கண்கள் பொட்டோவில் அவள் தலையில் உள்ள வகிட்டில் இருந்து ஆரம்பித்து, பொலிவான முகம், சராசரியான தேகம் , அதற்கு பொறுத்தமான பச்சை நிற தாவணி, இடுப்பை தாண்டிய கூந்தல், அதில் வாசம் செய்யும் மல்லிகைச்சரம், காலில் அழகான வண்ணம் தீட்டிய நகங்கள் என அனைத்தும் கனகச்சிதமாக தேவதைப் போல் காட்சியளித்தாள் ...

தழும்பு குறுக்குறுக்க

" இவ கிட்ட என்னமோ இருக்கு. புடிக்குது ஆன புடிக்கல " என ஸ்.ஜே. சூர்யா போல் குழம்பினான். பிரியாவிடம் தோன்றாத ஒரு ஈர்ப்பு, ஒரு அமைதி நந்துவிடம் தோன்றுவது போல் இருந்தது...அனைத்திற்கும் மத்தியில்

" பச்சை தாவணியில்

பசக் என்று என் நெஞ்சை பறித்தாய் "

என்று மனதில் தோன்றியதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை... தானா இப்படி என்று வியந்து தந்தைக்கு கால் செய்தான்..

" அப்பா "

" சொல்லு கௌசி "

" ப்றொசீட் பண்ணுங்க பா "

" நிஜமாவா... " என்று அவர் கேட்ட தொனியில் அவரின் சந்தோஷத்தை உணர்ந்தான்.

" ரொம்ப சந்தோஷம் கௌசி.. அங்கேயே இரு... தோ வந்துடறோம் "

" சரி பா "

மொபைலை நொக்கிக் கொண்டிருந்தவன் தன் பக்கத்தில் கொலுசு சத்தம் கேட்க , நிமிர்ந்து பார்த்தவன் ராமிடம்

" அப்பா என்ன இதெல்லாம்... ரொம்ப அவசர படரமாறி இருக்கு எனக்கு " என்றான் பதட்டமாக..

"உன் நல்லதுக்கு தான் கௌசி.. அவளுக்கும் வயசாகுது ல.. இப்போ நிச்சயம் மட்டும் வச்சுக்கலாம் .. நந்து படிப்பு ஒரு வருஷம் முடிஞ்சதும் கல்யாணம் வச்சுக்கலாம் "

" நான் கொஞ்சம் அவ கிட்ட தனியா பேசணும் "

" போய் பேசிட்டு வா மா "

இருவரும் அப்படியே நடக்க , அவனுக்கு பக்கத்தில் நின்று தன் உயரத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்..

" உனக்கு எல்லாமே விளையாட்டு தானா "என்று பேச்சை ஆரம்பித்தான்

" விளையாடறதுல தப்பு இல்லயே.. அது ஒரு வகையான மன அமைதி தரும்."



" ம்ம்ம்ம ... என்ன பத்தி உனக்கு என்ன தெரியும். நல்ல வசதியான பையன்னு கல்யாணம் பண்ணிக்கறியாண்னு கேட்ட உடனே சரி சொல்லிட்டியா "என்றான் பதம் பார்க்கும் நோக்கோடு..வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு, அவளுக்கு மிகவும் பிடித்த அவனின் கூர்மையான கண்களை பார்த்து " ஆமா.... " என்றாள்..

"அப்பா கேக்கறாறேன்னு தான் ஒத்துக்கறேன் ... மத்தபடி என் வழியில வந்த அப்றம் உனக்கு தான் நஷ்டம்"

" ம்ம்ம்ம சரி "

" வா போகலாம்... அங்க போய் எதயும் சொல்ல கூடாது.. இது நமக்குள்ளயே இருக்கனும் "

" ம்ம்ம்ம்ம் ".. உன் வாயாலயே என்ன ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்ல வைக்கறேன் என்று மனதுக்குள் சூளுறைத்துக்கொன்டாள்.

இருவரும் ஜோடியாக வரும் அழகைப்பார்த்து மஹா, ராம் இருவரும் அகமகிழ்ந்தனர்...

இவர்கள் வருவதற்குள் தயாராய் இருக்க

ராம் மஹாவிடம் ,

" மஹா மா, உங்க பொண்ணு நந்தினிய , என் பையன் கௌசிக்கு கட்டித்தர உங்களுக்கு சம்மதமா "

" சம்மதங்க அய்யா " என்று தாம்பூல தட்டை வாங்கிக்கொண்டார். மஹா அடுத்த தட்டை ராமிடம் நீட்ட அவரும் " சம்மதம் " என்று சொல்லி வாங்கிக்கொன்டார்.

" கௌசி இந்த மோதிரத்தை நந்துக்கு போடு " என்று " K" என பொறித்த மோதிரத்தை கொடுத்தார்..

நந்துவிடம் " இந்தா மா " என்று "N " பொறிக்கப்பட்ட மோதிரம் கொடுக்கப்பட்டது..

கௌசி நந்துவின் கையை பிடித்ததும், மின்சாரம் தாக்கியது போல் இருக்க, தலை வலிப்பது போல் இருந்தது. அதை பொருட்படுத்தாது அவளின் மான் விழிகளை பார்த்தபடி மோதிரத்தை அணிவித்தான்.

நந்துவிற்கும் அவனது கையின் ஸ்பரிசத்தில் மின்சாரம் தாக்க, அது எதையெதயோ ஊர்ஜிதப்படுத்த, தன்னவனின் காந்தக் கண்களில் தன்னை தொலைத்து விரலில் மோதிரத்தை அணிவித்தாள்..

இருவரும் ,இருவர் விழிகளின் காந்த சக்தியினால் தங்களை தொலைத்திருக்க, அங்கே ஒரு தொடர்கதைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது...

ராமின் செருமலில் சுதாகறித்தவர்கள்,பின் தலையை திருப்பிக்கொண்டனர்.. கௌசி நந்துவிற்கு ஒரு முறைப்பை நிச்சயப்பரிசாக வழங்கிவிட்டு, காரை நோக்கி நடையை கட்டினான்.

" போ போ... எங்க போக்க போற... உன்ன கவனிச்சுக்கறேன் " என்று தானும் காரை நோக்கி நடந்தாள் மற்றவர்களுடன்..
 
Top