கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண்களால் கைது செய் - பகுதி - 11

" வீட்டிற்கு வந்தும் கௌசி முறைத்துக்கொண்டே இருக்க , எரிச்சலடைந்தவள் " என்ன " என்று ஒற்றை புருவம் தூக்கி கேக்க, விறுவிறு என்று தன் அறை நோக்கி சென்றான்.

நந்து சிரித்துக்கொண்டு இரவு உணவு தயார் செய்ய போனாள்.

இரவு உணவிற்கு கீழே வர டேபிளில் அனைவரும் அமர்ந்திருக்க கௌசி ராமிடம்,

" அப்பா... "

" என்ன கௌசி "

" கல்யாணம் எப்போ முடிவு பண்ணிருக்கீங்க "

சாப்பிட்டுக் கொண்டிருந்த நந்துக்கு புரையேற மஹா தண்ணி எடுத்து நீட்டினார்..அவளை ஒரு லூக் விட்டுவிட்டு மேலும் தொடர்ந்தான்...

" நீங்க சொல்லுங்க பா "

" ஏன் கௌசி... அவ்ளோ அவசரமா.." என்று அவரும் காலை வாரினார்.

" அப்பா... எல்லாம் நீங்க அவசரமா செஞ்சிட்டு இப்போ என்னை சொல்றீங்களா " என்று அவன் பங்கிற்கு வாரினான்.

" ஒரு ஹாஸ்பிடல் கட்டலாமுன்னு இருக்கேன் பா.. அதுக்காக தான் கேட்டேன்... அவளுக்கும் படிப்பு முடியனும் இல்ல "

" நல்ல எண்ணம் தான் பா... கட்டலாம்... ஒன் இயர் அப்றம் கல்யாணம் வெச்சுக்கலாம் "

" சரி பா... அப்போ நாளைலேந்து வேலை ஆரம்பிச்சுடறேன் "

" சரி கௌசி. அப்றம் நாளைலேந்து நந்துவை காலேஜ் ல விட்டுடு பா "

" இந்த பொந்து தொல்லை தாங்கல " என வாய்க்குள் முனுமுனுத்துவிட்டு " சரி பா " என்றான்.

சாப்பிட்டு முடித்து பின் ரூமிற்கு செல்வதற்கு முன் நந்துவை நின்று கண்களில் நிறப்பிக்கொண்டான். அவள் பார்க்கவும் முறைத்து விட்டு சென்றான்.ரூமிற்கு சென்ற கௌசிக்கு வினோதமாக இருந்தது...சட்டென நடந்த அனைத்தும் மனத்தினுள் வந்து சென்றது... தழும்பு எப்போதும் போல் இல்லாமல் குறுகுறுப்பதாக இருக்கிறது சில நாட்களாக.

இரவு உடைக்கு மாறியவன் தன் அறையை ஒரு முறை சுற்றி பார்த்தான். ஒரு மூலையில் கதவு , நுழைந்ததும் இடப்பக்கம் ஆளுயர கண்ணாடி, அதை தாண்டி ஸ்டடி டேபிள், கதவிற்கு அந்தப்பக்கம் முழுவதும் கப்பொர்ட் , அதன் பக்கத்தில் ஒரு கதவு, கதவிற்கு அடுத்த மூலையில் விஸ்தாரமான குளியலறை, நடுவில் மூன்று பேர் படுக்குமளவு படுக்கை, படுக்கையில் இருந்து காலை எழுந்ததும் சூரியனை பார்க்கும் படி இருக்கும் பால்கனி.அதை மூடும் கண்ணாடி கதவுகள்.கூடவே இருக்கும் திரைச்சீலைகள்.

பெட்டில் அமர்ந்து கண்ணாடியை பார்த்தவனின் முகத்தில் தானாய் பூத்தது முறுவல்... கண்ணாடியில் தன் கையில் இருந்த "N" மிளிர, அதை தடவி பார்த்தான்.

கண்களை மூடியவன் கண்களில் அவளின் கண்கள் தோன்ற,

" ப்ப்ப் பா.... என்ன கண்ணு டா " என்று சிலாகித்துக் கொண்டான். கண்களை திறந்து விட்டு சிரித்துக்கொண்டே தூங்க ஆயத்தமானனான்.கீழே சாப்பிட்டு முடித்து டேபிளை துடைத்துக் கொண்டிருந்த நந்துவிடம்

" நந்து நீ இன்னைலேந்து மேல கௌசி ரூம்கு பக்கத்து ரூம் எடுத்துக்கோ...இங்க இருக்கற மாறியே அங்கயும் இருக்கும் மா "

‘’ சரிங்க மாமா "

" என்ன சரி சொல்ற நந்து "- மஹா

" இது சரியா வருங்களா ... எனக்கு என்னவோ பயமா இருக்கு”

" மஹா... நீ கவலை படாத... நம்ம நினைச்சது நடக்க நந்து அங்க இருக்கறது தான் சரி... வேணும்னா நீயும் அங்கயே இருந்துக்கோ.. "

" என்னால முடியாது படி ஏற... " அரை மனதோடு சம்மதித்தார்...

" சரசா மா, ரெண்டு வேலை ஆட்கள கூப்பீடுக்கோங்க... நந்துவோட பொருள் எல்லாம் கௌசி ரூம் பக்கத்து ரூம் ல வெச்சுடுங்க "

" சரிங்க அய்யா "

" நந்து ரொம்ப முக்கியமானத மட்டும் இப்போ அரேஞ் பண்ணிகோ மா. மீதிய நாளைக்கு பண்ணிகோ " என்று கூறி சென்று விட்டார்.

மேலே எல்லா பொருளையும் கொண்டு வைத்துவிட்டு வேலையாட்கள் சென்று விட , நாளை முதல் காலேஜ் இருப்பதால் அதற்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டு அறையை நோட்டம் விட்டாள் ..

பெரிய கதவு , உள்ளே நுழைந்ததும் இடப்பக்கம் முழவதும் மர வேலைபாடு செய்த ஸ்டடி டேபிள், இடப்பக்கம் சித்திரம் வரைந்த சுவர் நடுவே ஒரு கதவுடன், அதை தாண்டி, வலப்பக்கம் குளியலறை, அறையின் நடுவில் இரண்டு பேர் படுக்குமளவு படுக்கை. படுக்கைக்கு இடப்பக்கம் வார்ட்ரோப்...



எல்லாம் தயாராக்கி விட்டு, இரவு உடைக்கு மாறி படுக்க செல்கையில் , அந்த நடு கதவிற்கு பின்னால் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்க , எழுந்து போய் அதை ஆராய்ந்தாள்...

அது மேலே தாழ்ப்பால் போடப்பட்டு இருக்க அதை திறக்க முயற்சித்து திறக்க வரவில்லை.நாற்காலியின் மீது கையில் எண்ணெய் பாட்டிலோடு ஏறி தாழ்பாளில் சிறிது எண்ணெய் ஊற்றினாள்.பின்னும் திறக்க முடியவில்லை... முயன்று அலுத்த நேரத்தில் 'டப் " என்ற சத்தத்துடன் தாழ்ப்பால் திறந்துகொண்டது நந்துவின் கையை பதம் பார்த்து.. அதை கவனிக்காதவள், மேலும் கைபிடியை பிடித்து ஆட்ட திறக்காமல் போனது.. மீண்டும் ஒரு முறை மேலே பார்க்கலாம் என்று நார்காலியில் ஏறி தாழ்ப்பாளில் கை வைக்க கதவு டமால் என திறந்து கொண்டது...

" அம்மா" என்று நந்து கீழே படுக்கையில் விழ , நாற்காலி ஒரு பக்கம் விழுந்தது.. எழுந்தவளின் முன் ருத்ரமூர்த்தியாக நின்றிறுந்தான் கௌசி...நேரே வந்தவன் அவள் உள்ளங்கையை பிடித்து இழுத்து சுவரொடு தள்ளி, அவள் எதிரே நின்று கொண்டு

" என்னடி..பண்ணிட்டு இருக்க... லொட்டு லொட்டு னு .. மனுஷன தூங்க விடாம " என்று பொறிந்தான்.

அவனின் அருகாமை, அந்த வாசம், தெளிவாக தெரியும் தழும்பும், கண்களின் ஈர்ப்பும் அவளை ஏதோ செய்ய பதில் பேசாமல் நின்றிருந்தாள் .. தான் கேட்டதற்க்கு பதில் வராமல் இருக்க, அவள் கண்களை பார்த்தவன், அதன் ஆழத்தில் மூழ்கினான். இருவருக்கும் அந்த நொடி

முடிவிலியாய் இருக்க, முதலில் சுதாகரித்தது கௌசி தான்..

சட்டென விலகி தான் அறைக்கு சென்று, கண்ணாடி முன்னின்று முகத்தை துடைத்தவன் , அப்போது தான் கவனித்தான் கையில் இருந்த ரத்தத்தை...
 
Top