கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண்களால் கைது செய் - பகுதி- 12

வடிவேல் பாணியில் " வலிக்காமயா இரத்தம் வருது " என்று நினைத்து, பின் ஏதோ நினைவு வந்தவனாய் மீண்டும் நந்து ரூமிற்கு செல்ல, அப்போதும் அவள் அவன் விட்டுச்சென்ற இடத்திலேயே இருக்க, அவளை உலுக்கியவன்

" ஹேய் லூசு, கைல கட் ஆகி ரத்தம் வர்ரது கூட தெரியாம என்ன பண்ற”

" ஆங்.... " என்று அப்போது தான் கையை பார்த்தாள் .

" இங்க வா.. இப்படி உட்காரு.. நான் இப்போ வரேன் " என்று தன் ரூமிற்கு ஓடினான்..முதலுதவி பெட்டியுடன் வந்தவன், கையை சுத்தப்படுத்தி ,பான்டெஜ் போட்டு விட்டான்..அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டவள், ஏதோ நினைவு வர கண்ணீர் பொழிந்தாள்...

வலியில் அழுகிறாள் என நினைத்தவன், அதற்கு தான் காரணம் தான் தானே என நினைத்து "சாரி பொந்து " என கூறி மென்மையாக கையில் இதழ் ஒற்றி எடுத்தான்...அவள் கண்கள் விரிவதை பார்த்தவனது மனம் சிறகடிக்க எழுந்து சென்றுவிட்டான்.இங்கு நந்து

" இப்போ என்ன நடந்தது ... " என்று ஆச்சரியத்தில் பேச்சற்று இருந்தாள்

" எனக்கு தெரியும் ம.... நான் செய்ய வேண்டியத செய்யறேன்..." என்று சூளுறைத்துக்கொண்டாள்..படுத்துக்கொண்டாலும் அவனின் முதல் பரிசு அவளுக்கு தேனாய் இனித்தது. அப்படியே உறங்கியும் போனாள் .

ரூமிற்கு வந்த கௌசி " என்னடா இப்டி பண்ணிட்ட , காலைலேந்து அவள மொறச்சிட்டு இப்போ கிஸ் பண்ணிட "

"அவ கண் கலங்கினா என்னவோ மனசு வலிக்குது"

" ரைட்டு... நீ விழுந்துட்ட "

" விழவும் இல்ல , ஒன்னும் இல்ல.. ஒரு மனிதாபிமானத்துல ஹெல்ப் பண்ணினேன்.. அவ்ளோ தான் "

" காயத்துக்கு மருந்து போட்ட ..சரி... கிஸ் ஏன்டா பண்ண... அப்போ அடி பட்டா எல்லாருக்கும் கிஸ் குடுப்பியா "

" உன்னை... நீ கிளம்பு.. நான் தூங்கனும் " என்று தன் மனசாட்சியை விரட்டிவிட்டு கண்ணயர்ந்தான்...

காலை இருவருக்கும் அழகாக விடிந்தது...இருவரும் தத்தம் அறையில் தயாராகி வர, கீழே மேஜையில் காலை உணவு தயாராக இருந்தது..

அனைவரும் சாப்பிட அமர்ந்த பின்னும் நந்து அமராமல் இருக்க, ராம்

" என்ன நந்து , நின்னுடே இருக்க, டைம் ஆகுதுல்ல "

" ம்ம்ம்ம " என்று கௌசியை ஓரக்கண்ணில் பார்த்தபடி மெதுவாக அமர்ந்து சாப்பிட துவங்கினாள் .. இரண்டு வாய் சாப்பிட்டதும்

" ஸ்ஸ்ஸ்... ஆ.... " என்றாள்...

" என்ன ஆச்சு நந்து " மஹா

" ஒன்னும் இல்ல மா .. கைய கொஞ்சம் கிழிச்சிகிட்டேன்..அது வலிக்குது "

" எங்க காட்டு"

"என்ன டி இது... சின்னதா இருந்தாலும் ஆழமா இருக்கு "

" விடு மா "

" எப்டி ஆச்சு, எப்போ ஆச்சு "

" நைட் எல்லாத்தையும் எடுத்து வைக்கும் போது "

" கூப்பிட்டு இருக்கலாம் ல "

"...."

" ஆன்டி விடுங்க.. நான் நேத்தே மருந்து போட்டுட்டேன் "

ராம் மஹாவை பார்த்து ஒரு அர்த்த சிரிப்பை உதிர்த்தார்..

நந்து அதை பார்த்துவிட ராமை ஒரு பார்வை பார்த்தாள்..

" போலாமா " என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு

" ம்ம்ம்ம்ம் " என மீதியை மஹா கையால் சாப்பிட்டு விட்டு கிளம்பினாள்.

காரில் கிளம்பிய இருவரும் பேசாமல் இருந்தனர்.. அமைதியை கலைக்கும் விதமாக கௌசி " சாரி " என பொதுவாக சொன்னான்.

" எதுக்கு "

" எல்லத்துக்கும் தான் "

" எல்லாத்துக்கும்னா " என்றாள் நக்கலாக ..

" ம்ம்ம்ம...???? " என்று ஒரு பார்வை செல்லுத்தினான். அதற்குள் காலேஜ் வந்துவிட" கிளம்பு காத்து வரட்டும் " என்றான்.

இறங்கும் முன் " நான் கடன் வெச்சுக்க மாட்டேன். " என்று அவன் குடுத்ததை கன்னத்தில் திருப்பி கொடுத்துவிட்டு திரும்பி பார்க்காமல் ஓடி விட்டாள்...ஒரு நொடி அதிர்ச்சியானவன் உதட்டில் சிறு முறுவல் தோன்றி பெரிதானது...

" லூசு பொந்து " என்று கூறிக்கொண்டு காரை கிளப்பினான்...

மாலை காலேஜ் முடிந்து வெளியில் வரவும், அவள் கண்ணில் முதலில் பட்டது காருக்கு அருகில் நின்று கொண்டு ஏதோ ஒரு பெண்ணிடம் சண்டை போடும் கௌசியை தான் ...யார் இந்த பெண் என்று யோசித்துக்கொண்டே அருகில் வர, அவள் அணிந்திருந்த உடையே நந்துவிற்கு அருவருப்பை ஏற்படுத்த

" கௌசி யார் இவங்க "

கௌசி எதுவும் சொல்லாமல் இருக்கவும் நந்துவே அனுமானித்தாள் அவள் யாரென்று.

" ஐ வில் டெல் யூ பட்டிக்காடு .. ஐ அம் ப்ரியா.. கௌசி ஸ் எக்ஸ் "

" கௌசி , இவங்க யாரோ தொழிலதிபர கல்யாணம் பண்ண போறதா சொன்ன ... எல்லாம் பொய்யா... இவங்களுக்கு பாவம் நல்ல டிரஸ் வாங்க கூட காசு இருக்கற மாறி தெரிலயே " என்று கலாய்த்தாள்...

கௌசி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு ப்ரியாவை ஒரு கெத்து பார்வை பார்த்துவிட்டு, நந்து கையை பிடுத்துகொண்டு காரில் ஏற்றி பறந்தான்..

முகம் முறுவலுடனே வரும் மகனைப்பார்க்க ராமிற்கு மனம் சந்தோஷமடைந்தது..உணவு முடித்து அனைவரும் தத்தமது அறைக்குச் சென்றபின், கௌசி

" தட்டலாமா வேணாமா " என பட்டி மன்றம் நடத்திக்கொண்டிருந்தான்..

ஒரு முடிவுடன் நடு கதவை தட்டியவனுக்கு

" வா கௌசி " என்ற குரல் கேட்க உள்ளே நுழைந்தவன், பார்த்தது துப்பட்டா எடுத்து தன் மேலே போட்டுக்கொள்ளும் நந்துவை ...

" இங்க உக்காரலாமா " என படுக்கையை காண்பித்து கேட்க

" இது உன் வீடு கௌசி "

அமைதியாக அமர்ந்தான். நீண்ட நேரம் தன் கைகளயே பார்த்துக்கொண்டு இருந்தவன்

" பொந்து ... நான் உன் மடில படுத்துக்கவா "

அவனை ஆச்சரியமாக பார்த்தவள், பதில் எதுவும் கூறாமல் போகவே , அவளுக்கு விருப்பம் இல்லை போலும் என நினைத்து எழப்போனவனை, பிடித்தாள் ...

" வா... படுத்துக்கோ "

அவள் மடியில் தலை வைத்த அடுத்த நொடி , அவள் விரல்கள் அவன் கேசத்தை கோத, அந்த சுகத்தில் அவன் பேச ஆரம்பித்தான்.

" ரொம்ப நாளைக்கு அப்றம் அம்மா கூட இருக்கற மாறி இருக்கு... தேங்க்ஸ் "

சிறு முறுவல் மட்டும் செய்தாள்.

" உன்ன புடிச்சிருக்குன்னுலாம் என்னால சொல்ல முடில... ஆன இழந்த ஏதோ ஒன்னு திரும்ப கிடைச்சமாறி இருக்கு."

அதற்கும் புன்னகையே.. " எப்பொவும் நான் இருப்பேன் கௌசி.. போய் நிம்மதியா தூங்கு "

அவனும் எழுந்துகொள்ள, " குட் நைட் " என சொல்லி நகர்ந்தவனை, திரும்ப செய்து நெற்றியில் இதழ் பதித்து, " குட் நைட் " என கூறி அனுப்பினாள்.கதவறுகே சென்றவன் திரும்பி " அம்மாவும் இப்டி தான் செய்வாங்க" என்றான்.
 
Top