Malini Sundar
Member
அடுத்த நாளில் இருந்து மருத்துவமனை கட்டும் வேலையில் பிசியாக கௌசியும், படிப்பில் நந்துவும் மூழ்கி இருந்தாலும், இரவு தங்கள் சந்திப்பை மிஸ் பண்ணுவதில்லை...அந்த சந்திப்பு அவர்களிடையே ஒரு நல்ல நட்பை உருவாக்கி இருந்தது.. அந்த நேரத்திற்காக இருவரும் ஒவ்வொரு நாளும் காத்திருந்தனர்.
நந்து தான் தன் காதலை நன்கு உணர்ந்து இருந்தாள்.. இருப்பினும், கௌசி நட்புடன் பழகுவதை கெடுக்க மனமில்லாமல் , தன் காதலை மறைக்க மிகவும் கடினப்பட்டாள்..கௌசியும் தனக்கு நந்து மேல் ஒரு ஈர்ப்பு உருவானதை உணர்ந்திருக்க , இவரும் தங்கள் எண்ணத்தை பரிமாறிக்கொள்ளவில்லை..இப்படியே ஆறு மாதம் கடந்த நிலையில், நாளை மருத்துவமனை திறப்பு விழா ..
அதற்கு உண்டான வேலைகளை முடித்துவிட்டு தாமதமாக வீடு வந்தான் கௌசி.உள்ளே வந்தவன் கண்களில் முதலில் தென்பட்டது, அவனுக்காக காத்திருந்து டேபிள் மேலேயே தலை வைத்து தூங்கும் நந்துவை ...
அந்த அமைதியான இரவில் , தங்க நிற நைட் லாம்பில் , அவள் முகம் ஜொலிக்க, தன்னுள் எழுந்த அந்த உந்துதல்களை புறந்தள்ளிவிட்டு, விறுட்டென படிகளில் ஏறினான்.உடை மாற்றி வரவும், நந்து உணவை சூடாக்கி எடுத்து வரவும் சரியாக இருந்தது...
" ஹாய் கௌசி "
" ம்ம்ம்ம " என்று ஒரு தலையசைப்பு மட்டுமே..
சாப்பிடு முடித்து கௌசி சென்றுவிட, மற்றதை சரிசெய்துவிட்டு தன் அறைக்கு சென்று காத்திருந்தாள்.சிறிது நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்க
" வா கௌசி " என கூறி துப்பட்டாவை எடுத்து மேல போட்டுக்கொண்டாள். அப்போது தான் தான் கீழே இரவு உடையில் துப்பட்டா போடாமல் இருந்தது நினைவு வந்தது..
" ச.. எப்டி மறந்தேன் " என்று தன்னையே நொந்துகொண்டாள்,
கௌசி நடந்துகொண்டது அவனது கண்ணியத்தை உணர்த்த மனத்திற்குள் சிரித்தாள் .. உள்ளே வந்தவன் கட்டிலில் அமர்ந்து , கைகளை பின்னால் வைத்திருந்தான்..
" கௌசி .. என்ன வந்ததுலேந்து இன்னிக்கு அமைதியாவே இருக்க... எங்கிட்ட என்ன தயக்கம் .. கைல என்ன"
" அது..... "
" சொல்லு கௌசி ‘’என்று அவன் கண்களை பார்த்தாள்
மெதுவாக கையை அவளிடம் நீட்டினான், கிப்ட் ராப் செய்யப்பட்ட டப்பாவுடன் .அதை வாங்கியவள், கிப்ட் பேப்பர் கிழியாமல் அதை பிரிப்பவளை கண்கொட்டாமல் ரசித்துக்கொண்டிருந்தான்..
பிரித்துபார்த்தவளின் கண்கள் முட்டை போல் விரிய சந்தோஷமடைந்தாள் ..தனக்கு பிடித்த அடர் பச்சை நிறத்தில் இருந்த அந்த டிசைனர் புடவையை கைகளால் வருடி ரசித்தாள் ..
" பொந்து... நாளைக்கு இத கட்டிக்கறியா "
" பாக்கறேன் " என பிஹு பண்ண
" பாக்கறியா... இத தான் கட்டிக்கற " என ஆர்டர் செய்தான்..
" .... "
தன் ஆதிக்கம் அவளிடம் செல்லாது என உணர்ந்தவன்,
" உனக்காக வாங்கினேன். முடிஞ்சா கட்டு... நாளைக்கு 8 மணிக்கெல்லாம் கிளம்பனும் . ரெடியா இரு.. குட் நைட் "என கூறி தன் அறைக்கு சென்றான்.
அவன் சென்றதும் அந்த புடவையை மறுபடியும் ரசித்தவள் , பின் தன் வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு நிம்மதியாக உறங்கினாள் ...
அடுத்த நாள் காலை குளித்து கிளம்பிய கௌசி, நந்துவை அழைக்க, அந்த கதவை தட்ட அந்த பக்கம் பதில் வராமல் போனது..கீழே சென்றவன் ராமிடம் விசாரிக்க, நந்துவும் மஹாவும் இன்னொரு காரில் சற்று நேரம் பொறுத்து வருவதாக கூற, இவர்கள் இருவரும் கிளம்பினர்.
மருத்துவமனை திறப்பிற்கு அனைவரும் வந்திருக்க, கௌசியின் கண்கள் வாசலையே நோக்கியிருந்தது... அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் வந்திறங்கினாள் நந்து மஹாவுடன்.
தான் வாங்கித்தந்த அந்த அடர் பச்சை புடவை, தான் எதிர்பார்த்ததை விட அவளுக்கு கச்சிதமாய் பொருந்தியிருக்க, அதற்கேற்ற பிலவுஸ், ஆபரணங்கள் , எப்போதும் நீண்டு பின்னியிருக்கும் இடை தாண்டிய கூந்தலை இன்று பின்னாமல், கிளிப்பை கொண்டு அடக்கியிருக்க, என்ன தான் அடக்கினாலும் நான் சொல் பேச்சு கேக்க மாட்டேன் என இருக்கும் ஒரு சில முடிகள், அவள் கண்களையும், கன்னத்தையும் முத்தமிட, அந்த முடி கற்றாக தான் இருக்ககூடாதா என கௌசி ஏங்கி அவளை அளந்து கொண்டு இருந்தான்...
" வா மா நந்து "- ராம்
" ம்ம்ம்ம்ம " என சிரித்தாள்
" இங்க வா மா... ரீட்டா.. பிறிங் தட் " என கூறினான் கௌசி..
" அப்பா வாங்க என்று ராமையும் அழைத்தான்.
ரீட்டா கொண்டு வந்த தட்டிலிருந்து கத்திரியை எடுத்து நந்துவிடம் நீட்டி
" கட் பண்ணு " என்றான்.
" நானா..... "
" ஆமா நீ தான் மா "- ராம்.
" இல்ல மாமா.. நீங்க பெரியவங்க.. நீங்க பண்ணுங்க "
" எனக்கு தெரியாது மா... இது உன் உட் பி ஓட முடிவு " என கையை விரித்தார்..
கௌசியிடன் திரும்பியவள் " ஏன் " என்று கண்களால் கேட்க அவனும்
" பண்ணு " என்று கண்கலாலேயே பதிலுறைத்தான்.மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அவள் ரிப்பனை நறுக்க அங்க எழுந்தது கரகோஷம்..மஹா மனம் நிறைவாக இருந்தது.. தன் பெண்ணை இவர்கள் இனி நன்றாக பார்த்துக்கொள்வர் என்ற நம்பிக்கை வந்தது..
அனைத்தும் முடிந்து வீடு வர மாலை ஆகிவிட, அனைவரையும் அனுப்பிவிட்டு, கௌசி வீடு வர இன்னும் தாமதமானது.. அனைவரும் உண்டு படுக்க சென்றிருக்க கௌசியும் வெளியே சாப்பிட்டுவிட்டான்.
ரூமிற்கு வந்தவன் ரெப்றெஷ் ஆகி விட்டு, கதவை தட்ட, எப்போதும் போல் பதில் வர, உள்ளே வந்தவன் பேச்சற்று போனான்.
அந்த பச்சை புடவையை மாற்றாமல் அவள் காத்திருக்க, உள்ளே வந்தவன் உறைந்து போனான். காலையிலேயே தன்னை அவளை பார்க்காமல் திசை திருப்ப பெரும்பாடுபட்டான். இப்பொது ... என நினைக்கும் போதே மூச்சு திணறியது..
இவள் அவனை பார்க்காமல், காலேஜ்க்கு அன்று விடுப்பு எடுத்திருந்ததால் , நண்பியிடம் கேட்டு பாடங்களை எழுதிக்கொண்டு இருந்தாள் ஸ்டடி டேபிளில் அவனுக்கு முதுகு காட்டி...
" உட்காரு கௌசி.. பை மினிட்ஸ் .. தோ முடிஞ்சிடும்.."
பதில் வராமல் போகவே எழுந்து திரும்பியவள் கௌசி தன் பின்னால் நிற்கக்கண்டு விதிர்த்து போனாள்.
"என்ன" என்று கண்களால் நந்து கேட்க
" ஒன்றுமில்லை " என தலையாட்டினான்.
இரவின் நிசப்தம், தங்கள் இருவரின் இதய துடிப்பின் சத்தம், ஏ சி யின் குளுமை, தங்கள் உடலின் உஷ்ணம், எல்லாவற்றிற்கும் மேலாக, தான் வாங்கிய புடவையில் தன்னவள், என்றே இருக்க சற்று தடுமாறித்தான் போனான்.அருகில் வந்து, இருவர் மூச்சுக்காற்றும் கலக்கும் இடைவெளியில் நின்றவன், நந்துவின் கண்களுக்கும், இதழ்களுக்கும் நடுவே தன் கண்களால் நடை பயில, யாசிக்கும் அவன் பார்வையின் அர்த்தம் பெண்ணவள் உணர, விடையாக கண்களை மூடினாள் சம்மதத்தோடு அவளின் பளிங்கு முகத்தை கையில் ஏந்தி, "உன் இணையை போய் சேர் " என்று தன் இதழுக்கு சொல்லிவிட்டு, தன் கண்களையும் மூடி அவளிடம் நெருங்க.....
" ஐயோ அம்மா.... அய்யா , கௌசி தம்பி, நந்து மா , எல்லாரும் இங்க சீக்கிரம் வாங்க" என கத்தினார் சரசா......