கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண்களால் கைது செய் - பகுதி 3

தன் கம்பனியில் வேலை செய்து கொண்டிருந்த நந்துவிற்கு அந்த கண்கள் மீண்டும் கண்முன் வர, தலையை சிலுப்பிக்கொண்டாள்.

என்ன இன்னிக்கு இந்த கண்ணே நியாபகத்துக்கு வருது என்று நினைத்துக்கொண்டாள்..

பாடல் ஒன்று மனதிற்கு வர அதை ரசித்து பாடினாள் மனதினுள்.

காந்தமாம் கதிர்காமம் தன்னில் ஓர் வேதாந்தமாம்

சாந்தமாகி மனம் குவிந்து

ஏகாந்தமான நிலை அளித்திடும்

காந்தமாம் கதிர்காமம் தன்னில் ஓர் வேதாந்தமாம்....

பாடிக்கொண்டு இருக்கையில் தன் போன் அடிக்க ,அதைப்பார்த்தவள்

" இவரு எதுக்கு இப்போ போன் பண்றாரு " என்று யோசித்துக்கொண்டே

" ஹலோ.. சொல்லுங்க அய்யா "

எதிர்முனையில் அவர் என்ன கூறினாரோ நந்துவின் முகம் கறுத்தது..

" சரிங்க அய்யா.. நான் முயற்சி பண்றேன் " என்று போனை வைத்தாள்.

அங்கு வந்த மகா " என்ன நந்து யாரு போன் ல "

"ஓனர் அய்யா தான் "

" என்னவாம் "

" நாலாயர ரூபாய் வாடகை ஏத்தி கேக்கறாரு " என்றாள் வறுத்தமாக.

" ஐய்யோ.. இப்டி திடுதிப்புன்னு கேட்டா என்ன பண்றது "

" சரி நீ கவலை படாத நான் பாத்துக்கறேன் "

"ம்ம்ம்ம "

அதே கண்கள் மீண்டும் மனத்தில் வர கண்கள் கலங்கின.. சட்டென தன் அன்னை பார்க்காத வண்ணம் தன்னை சமன் செய்து கொண்டவள் எழுந்து அடுத்த வேலையை கவனித்தாள். இப்படியே ஒரு மாதம் கடந்த நிலையில் வாடகை கொடுக்கும் நாளும் வந்தது.ஓனரிடம் எவ்வளவோ கெஞ்சியும் பலனில்லை..கம்பனியை காலி பண்ண சொல்லிவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்தனர்.


தொடரும்...
 
Top