கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண்களால் கைது செய் - பகுதி 4

பெர்லினில் அன்று கல்லூரி முடித்து வந்த கௌசி நேரே தன் தாயின் படத்திற்கு முன் சென்று மண்டியிட்டான்...

" என்ன ஆச்சு தம்பி "-சரசா

" ஒன்னும் இல்ல சரசா மா . இன்னிக்கு ஒரு டெலிவரி கேஸ் பாத்தேன்.. அதான் அம்மா நியாபகம் வந்துடுச்சு "

" கவலை படாத தம்பி.. எல்லாமே நல்லதுக்கு தான்... அம்மா இல்லன்னாலும் அம்மா மாறி உன்ன பாத்துகற பொண்ண அம்மா உனக்கு காமிப்பாங்க "

தன் நேஞ்சின் தழும்பை ஒரு முறை தொட்டு பார்த்தான்.. தான் காதலிக்கும் ( காதலிப்பதாக நினைக்கும்) பெண் "ப்ரியா " வின் முகம் வந்து போனது.ப்ரியா கௌசியுடன் படிப்பவள்.. கௌசி பின்னால் இரண்டு வருடமாக சுற்றி ஒத்துக்கொள்ள வைத்தவள். ப்ரியா தன்னை அம்மாவை போல் நடத்துவாள் என்று தோன்றவில்லை..

ப்ரியா - ஜெர்மனியில் செட்டில் ஆன ஓர் இந்திய குடும்பத்தின் ஒரே வாரிசு. இந்திய கலாச்சாரம் ஒன்றும் தெரியாத பெண். உடலை இருக்கி பிடிக்கும் ஆடை அதுவும் இருப்பதிலேயே மினி சைஸ், அளவிற்கு அதிகமான ஒப்பனை என்று இருக்கும் நவநாகரிக யுவதி.பல நேரங்களில் தான் அவளை காதலிக்கிறோமா என்று சந்தேகம் வரும்... அந்த தழும்பை தொடும்போது வரும் ஒரு படபடப்பு, ஒரு பரவசம், ஒரு நிம்மதி ப்ரியாவிடம் வரவில்லை என்பதை உணர்ந்தான்.. ஆனால் அது ஏன் என்று புரியாமல் குழம்பினான்..



இங்கு உழவூறில் திடீரென இப்படி ஒரு இக்கட்டு வர என்ன செய்வது என்று புரியாமல் தவித்தனர் இருவரும்.அடுத்தடுத்த நாட்களில் வீட்டிற்கு நோட்டீஸ் வந்தது காலி செய்யும் படி..என்ன நடக்கிறது என்று தலையும் புறியவில்லை வாலும் புரியவில்லை.



இதோ இப்பொது அனைத்து வேலையாட்களுக்கும் பணத்தை பட்டுவாடா செய்து விட்டு தன் சர்டிபிகேட் மற்றும் மார்க் சீட் , தன் குடும்ப ஆல்பம் , இருக்கிற கொஞ்ச ஆடைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்...

எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றிருக்க , மாணிக்கத்தின் பழைய நண்பரான சதாசிவம் வந்து

" மகா , நீ என் தங்கச்சி மாதிரி தான்.. அடுத்து என்ன பண்ணறதுன்னு முடிவு பண்ற வரைக்கும் எங்க வீட்டுக்கு வா மா "

" இல்லங்க அண்ணா.. அது நல்லா இருக்காது..வயசுக்கு வந்த பொண்ண எப்டி அண்ணா " என தயங்கினார்.

" அத தான் மா நானும் சொல்றேன். வயசு பொண்ண வெச்சுகிட்டு இப்டி ரோடு ல இருக்க முடியுமா... வா மா..."

சிறிது யோசித்துவிட்டு " சரி அண்ணா வரோம்... ஆனா நாளைக்கு முதல் வேலையா எங்களுக்கு ஒரு வீடு பாருங்க அண்ணா தயவு செஞ்சு "

" சரி மா.. இப்போ வாங்க " என்று ஒரு மர்மப்புன்னகை உதிர்த்தார் யாரும் ஆறியாமல்.



தொடரும்...
 
Top