Malini Sundar
Member
Berlin- Tegel airport welcomes you " என்ற பலகையை பார்த்து விரிந்தன நான்கு கண்கள்...
" நந்து மா.. இங்க என்ன மா பண்றது... யாரயும் தெரியாது... மொழி தெரியாது... இடம் புதுசு ..."
" அம்மா கவலை படாத .. ஆண்டவன் நல்ல வழி காட்டுவான் "
" ஏதோ சொல்ற, இருந்தாலும் எனக்கு கலக்கமா இருக்கு "
" பாத்துக்கலாம்.. நான் ரெஸ்ட் ரூம் பொய்டு வரேன் மா .. அதுக்குள்ள அங்கிள் சொன்ன மாறி யாராது பிக் அப் பண்ண நேம் போர்டு வெச்சுருக்காங்களான்னு பாரு "
"சரி " என்று கூறி தங்களின் பெயர் எங்காவது உள்ளதா என பார்க்க, அவரது கண்கள் ஓர் இடத்தில் நிலைகுத்தி நின்றது..
"இவரா " என்று வாய் முனுமுனுக்க, " இவர் எப்டி இங்க " என்று நெஞ்சம் படபடக்க,அவரையே பார்த்திருந்தார் மஹா..
அவருக்கு என்னை அடையாளம் தெரியுதா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் தான் உணர்ந்தாள் அவர் தன்னை நோக்கி வந்துகொண்டு இருப்பதை. அருகில் வர இருவருக்கும் வார்த்தைகள் கண்ணீராய் மாறின.
" எப்டி இருக்க மா"
" ம்ம்ம்ம."
" என்னை கேக்கனும்னு உனக்கு தோணலயா மா "
" இல்ல... அப்டி இல்ல.. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாவும் சந்தோஷமாவும் இருக்கு . நீங்க உயிரோட வா இருக்கீங்க "
" ம்ம்ம்ம்ம் " என்று மேலும் முக்கியமான சிலவற்றை பேசிவிட்டு நந்துவிற்காக காத்திருந்தனர்..ஆடையை சரி செய்தபடி வரும் மகளை பார்த்து " என்னடி இவ்ளோ நேரமா "
" அத ஏன் கேக்கற.. ஒருத்தி என் மேல ஜுச கொட்டிட்டா .. அத க்லீன் பண்ண டைம் ஆகிடுச்சு .. சரி யார் இவர் "
" அதூ .... "
" நான் சதாசிவத்தோட ப்ரென்ட் மா... உங்கள கூட்டிட்டு போக தான் வந்துருக்கேன் "
"ஓ.. வணக்கம் அங்கிள் " என்று கை கூப்பினாள் ..
" என்னைக்கும் நல்லா இரு மா " என்று ஆசீர்வதித்தார்.
" சரி கிளம்பலாமா " என்று கேட்க மூவறும் கிளம்பினர்...
" அம்மா இவர எங்கயோ பாத்த மாறி இருக்கு " என்று மஹா காதில் முனுமுனுத்தாள்.
மஹாவிற்கு பக்கென்று ஆனது... சட்டென சுதாகரித்துக்கொண்டு
" சதா அங்கிள் ப்ரேன்ட் ல.. சின்ன வயசுல ஊர்ல பாத்துருப்ப " என்று சமாளித்தார்...
அந்த ஆடம்பர காரில் ஏறி வீட்டை நோக்கி பயணப்பட்டனர் மூவரும்...
***
கார் போய் நின்ற வீட்டை இல்லை இல்லை மாளிகையை பார்த்ததும் " ஆ......... " என்று வாயை பிளந்தனர்..
"இறங்குங்க மா " என்றார் இருவரிடமும்..
இறங்கிய இருவரும் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டே நின்றனர்...
" வாங்க அய்யா " என்ற குரலில் சுதாகரித்தனர்..
" மா நான் சொன்னேன் ல... அவங்க இவங்க தான்... இவங்க மஹா...உங்களுக்கு உதவியா இருப்பாங்க... அது அவங்க பொண்ணு நந்தினி.. "
" வாங்க மா.. வா நந்து "
" வணக்கம் ஆன்டி .. என் பேர் உங்களுக்கு எப்பிடி.... "
சுதாகறித்த அப்பெண்மனி " இது என்ன மா, எல்லா நந்தினியையும் ஷார்ட்டா நந்துன்னு தானே கூப்பிடுவாங்க "
உள்ளே சென்று அவர் " மஹா மா, நீங்களும் நந்துவும் இந்த கீழ் ரூம் ல இருந்துக்கோங்க.. நந்து அந்த ரூமுக்கு உள்ள ஒரு ரூம் இருக்கு.. அது தான் நீங்க யூஸ் பண்ணிக்க வேண்டிய ரூம்... வெளிய இருக்கற ரூம் உனக்கானது... போய் பாரு மா "
" ஒகே அங்கிள் "
" அப்றம் மா, அவங்களுக்கு எல்லாம் விவரமா சொல்லிடுங்க " என்று அப்பெண்மணியிடம் கூறினார் அவர்.
" நந்து.. இப்போ களைப்பா இருப்பீங்க... சாப்டு ரெஸ்ட் எடுங்க.. நாளைக்கு அங்க போய் நம்ம வேலைய முடிச்சிடலாம் "
" ஒகே அங்கிள் " என கூறிவிட்டு தாயும் மகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர்.
அந்த அறை மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது.. உள்ளே நுழைந்ததும் பளிச்சென்று கண்ணை உறுத்தாத இள நீல வண்ணம் தீட்டி இருந்த அறை.ஒரு ஒரத்தில் அழகாய் சுவரோடு ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மேஜை... மேலே இருந்த புத்தகம் அடுக்கும் கப்போர்ட்..கணினி, ப்றின்டர் என படிப்பிற்கு தேவையான அனைத்தும் இருக்க ஸ்தம்பித்து போனாள் ...அலுப்பு தீர குளித்து , சாப்பிட்டு, மெத்தையில் விழ , மெத்தை அவர்களை விழுங்க ஆழ்ந்த உரக்கத்திற்கு சென்றனர்..
கருநீல மேகத்தை கிழித்துக்கொண்டு, செந்நிற கதிரவன் பூமியில் பிறந்து தலைக்காட்ட, மெதுவாய் எழுந்தவள் தன் சுற்றுப்புறத்தை முழுங்க சில நிமிடங்கள் பிடித்தன...நெடு நாள் கழித்து நன்றாக உறங்கியதால் எழுந்ததும் ப்றெஷாக இருந்தது.... எழுந்து தன் வேலைகளை முடித்து வெளியே வந்தவள் டமால் என்று எதன் மீதோ மோத, அது என்ன என்று பார்ப்பதற்குள் அவ்வுருவம் படி மீது ஏறி சென்றுவிட தலையை தேய்த்துக்கொண்டு கண்களை மூட அக்கண்கள் மீண்டும் தோன்ற தலையை சிலுப்பிக்கொண்டு அன்னையை தேடி சென்றாள் ...
மேலே தனது அறைக்கு சென்ற அவனோ , கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான். அழுதுவடிந்த கண்கள், முடியை பிடித்து இழுத்தது போல் பரட்டை தலை, கசங்கி இருந்த சட்டை என அலங்கோலமாக காட்சியளித்தான்..ஷவரின் கீழ நின்று மனது சாந்தமாகும் வரை அழுது கறைந்தவன், குளித்து முடித்து வெளியே வந்தான். டி சர்ட் டிராக் என அணிந்து கீழே வந்தவன் நேராக சாப்பிட அமர்ந்தான்....அவர் அவனிடம் " வா பா... எப்போ வந்த..."
" ஒன் ஆர் ஆகுது பா "
" ஏன் ஒரு மாரி இருக்க.."
" ஒன்னும் இல்ல பா... டிராவல் பண்ணது கொஞ்சம் தல வலி பா... வேற ஒன்னும் இல்லை "
அவன் கூறுவது உண்மையில்லை என்று தெரிந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம் என விட்டுவிட்டார்...
" சரி பா மொதல்ல சாப்பிடு... நான் உனக்கு ஒரு வேலை குடுக்கலாம்னு இருந்தேன்.. நான் தான் போறதா இருந்தேன்.. வேற ஒரு வேலை வந்துடுச்சு "
" பறவால்ல பா.. சொல்லுங்க "
அந்தப்பக்கம் திரும்பி " நந்து.. அம்மா நந்து " என்றார்.
" சொல்லுங்க அங்கிள்.. நான் ரெடி "
" நான் தான் வர்ரதா இருந்தேன்.. ஒரு வேலை வந்துடுச்சு "
" அப்டியா " என்றாள் இறங்கிய குரலில்..
" ஒண்ணும் ப்ரோப்லேம் இல்ல...என் பையன் கிட்ட சொல்லிருக்கேன்.. அவன் உன்ன கூட்டிட்டு போவான் "
" சரி அங்கிள் "
" கண்ணா கௌசி... "
" ம்ம்ம்ம சொல்லுங்க பா " என்றான் தட்டில் முகத்தை வைத்துக்கொண்டு...
" இந்த பொண்ணு தான் நந்து.. நமக்கு வேண்டப்பட்ட பொண்ணு "
கௌசி என்ன பேரை கேட்டதும் மனதில் மின்னல் வெட்ட அவன் முகம் பார்க்க நினைத்தவள் பார்த்தது அவன் தலையையே..
" ம்ம்ம்ம சரி பா.. என்ன பண்ணனும்.. "
" அம்ம நந்து சதா உங்கிட்ட குடுத்த கவர எடுத்துட்டு வா மா "
எடுத்து வந்தவுடன் , " கௌசி , அவள கூட்டிட்டு போய், உங்க யூனிவெர்சிட்டி ல இங்கிலிஷ் கோர்ஸ் ல சேக்கனும் பா... கூடவே இருந்து நீ தான் செய்யணும் பா "
வேண்டா வெறுப்பாக " சரி " என்றான்
சாப்பிட்டு முடித்து இருவரும் காரில் கிளம்பினர்.. அழுது வடிந்த அவன் கண்களை பார்க்க நந்துவிற்கு சங்கடமாக இருந்தது..
" ஹாய்.. " என்றாள்.
அவன் ஒரு தீப்பார்வை பார்த்துவிட்டு திரும்பினான் சாலை நோக்கி...
ஒரு நீண்ட மூச்சை விட கண்களை மூடியவள் திடுக்கிட்டு கண்கள் திறந்தாள்..மனதில் வந்த கண்ணும் அருகில் இருப்பவன் முறைத்து போல் இருக்க" கௌசி " என வாய் முனுமுனுத்தாலும் மனம் ஏற்க மறுத்தது...
இவனா அவன் என்ற எண்ணம் வர , இவன் தான் என்றால், ஏன் தன்னை தெரியாதது போல் இருக்கிறான் என யோசித்தாள்..
திரும்ப திரும்ப கண்கள் மனதில் தோன்ற ,நெஞ்சம் படபடக்க தன்னை திசை திருப்ப வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்...
இங்கு கௌசியின் நிலைமையும் அதுவே...
நான் என்ன இப்டி பண்ணிட்டேன்.. புதுசா அறிமுகம் ஆனவங்க....ஹாய் சொன்னதுக்கு பதில் சொல்லிருக்கனும் இல்ல சும்மா இருக்கனும்.. ரெண்டையும் விட்டுடு எதுக்கு மொரச்சேன் என தன்னுள் கேட்டுக்கொண்டிருந்தான். தன் தழும்பு வேறு இரு நாட்களாக சுடுவதாக தோன்றியது... இப்பொது கூட மனம் ஏன் இப்படி அடித்துக் கொள்கிறது என்று பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருவரும் பெர்லின் யூனிவற்சிட்டி நோக்கி சென்றனர்....