Malini Sundar
Member
வெளியே வந்த இருவரையும் சரியாக கண்டுகொண்டது கௌசியின் கழுகு கண்கள்..
" இவங்க அப்பா ரூம்ல என்ன பண்றாங்க " என யோசித்தான்...
" கௌசி .... " என ராம் அழைக்க அவர் ரூமிற்கு சென்றவன்
" என்ன பா ..."
" அடுத்து என்ன பண்ற ப்லான் பா .. பாமிலி மெடிசின்ல MD வாங்கியாச்சு "
" அப்பா அந்த டெலிவரி பாத்ததுலேந்து கைனகொலொஜி படிக்கனும்னு நினைக்கறேன் பா.. ஆனா ஆண்களுக்கு அது சரியான துறையான்னு தெரில "
" அப்டி இல்ல கௌசி...நிறய மேல் கைனகாலஜிஸ்ட் லாம் இருக்காங்க.. நீ படி பா... "
" தேங்க்ஸ் பா " என்றான் புன்னகையுடன்..
" அப்புறம் கௌசி.... " என இழுத்தார்..
" என்ன விஷயம் பா "
" அது... எப்டி சொல்றதுன்னு தெரில... ம்ம்ம்ம்ம்.... நான் ஒண்ணு செஞ்சா அதுல ஒரு நல்லது இருக்கும்ன்னு நீ நம்பறியா பா "
" கண்டிப்பா பா... "
" ரொம்ப சந்தோஷம் பா.. எனக்கும் வயசாகிட்டே இருக்கு... அதான் "
" அதுனால என்ன பா... நான் தான் இருக்கேனே "
" அதுனால உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கறேன் பா .. உன் விருப்பம் என்ன... "
" நான் இப்போ இருக்கற நிலைமைல இது தேவையான்னு தோணுது பா "
" இது தான் சரியான நேரம்முன்னு நான் நினைக்கறேன் "
" வேதனை ல இருக்கற உன் மனசுக்கு உன்ன புரிஞ்சிக்கற நல்ல பொண்ணு உனக்கு மனைவியா வந்தா உன் லைப் நல்ல இருக்கும் "
" என்னாலா முழு மனசா சரி சொல்ல முடில... "
" உன் பயம் எனக்கு புரியுது கௌசி "
"..."
‘ ஆனா அப்படி எதுவும் நடக்காது ... யாரோ ஒருத்தர் சொல்ற வார்த்தைகளுக்கு நம்ம மதிப்பு குடுத்துட்டே இருந்தா நம்மளால நிம்மதியா இருக்க முடியாது கௌசி "
" ம்ம்ம்ம்ம் .. உங்களுக்கு சரின்னு தோணிச்சுன்னா செய்ங்க பா "
"எனக்காக ஒத்துக்காத பா... உன்ன புண்படுத்தினவங்க முன்னாடி நீ நல்லா வாழ்ந்து காட்டணும் கௌசி .. யோசிச்சு சொல்லு பா... "
" சரிப்பா " என்று வெளியேறினான்.
மதியம் உணவு முடித்து ரூமிற்கு சென்ற கௌசி கண்ணாடி முன் நின்று தன் பனியனை கழட்டவும், நந்து வந்து கதவை தட்டவும் சரியாக இருந்தது...
" எஸ் கம் இன் " என்று கூற உள்ளே வந்த நந்து வித்திர்த்து போனால்.. மூச்சடைப்பது போல் இருந்தது... ஜான் நீளத்திற்கு இருந்த அந்த தழும்பு இப்பொது தெளிவாக தெரிய ,கலங்கிய கண்களை மறைக்க பேச்சை மாற்றினாள்..
அதற்குள் தன் தழும்பை பார்க்கிறாள் என உணர்ந்து துண்டால் தன் மேலுடலை போர்த்தினான்.
" என்ன சார் உங்களுக்கு கல்யாணம்னு பேசிக்கறாங்க "
" அதுக்குள்ள உனக்கு தெரிஞ்சிடுச்சா "
" அப்போ உங்களுக்கு கல்யாணம் பண்ண சம்மதமா " என போட்டு வாங்கினாள் "
" ஏ பொந்து... வந்த விஷயத்த சொல்லிட்டு கிளம்பு "
" உக்கும்... சாய்ந்தரம் கோவிலுக்கு போகணுமாம்... அய்யா 5 மணிக்கு கிளம்பி வர சொன்னாரு. "
" சரி... எடத்த காலி பண்ணு "
தழும்பை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு வெளியேறினாள்.
மீண்டும் கண்ணாடி முன்னாடி வந்தவன், துண்டை எடுத்துவிட்டு தழும்பை தொட்டுக்கொண்டே கண்களை மூட அங்கே அழகாய் சிரித்தார் சீதா... கூடவே இன்னொரு பெண் இருக்க திடுக்கிட்டு கண்களை திறந்தான் ஒரு முடிவோடு....
மாலை கோவிலுக்கு கிளம்பி கீழே வர அங்கே சரசா, நந்து, மஹா, ராம் என அனைவரும் கிளம்பி இருக்க கோவில் நோக்கி சென்றனர்..சாமி கும்பிட்டு விட்டு , ப்ரகாரத்தில் அமர கௌசி
" அப்பா... "
" சொல்லு கௌசி "
" நான் முடிவு பண்ணிட்டேன் பா.. உங்களுக்கு சரின்னு படறத செய்ங்க பா "
" ரொம்ப சந்தோஷம் பா " என்றார் மன நிறைவுடன்.. " பொண்ணு யாருன்னு கேக்க மாட்டியா "
" என்ன ..பொண்ணே பாத்துட்டீங்களா " என்றான் ஆச்சரியமாக.
" ம்ம்ம்ம்ம் "
" ஓ.... "
" உனக்கும் தெரிஞ்ச பெண் தான்.. இதுல போட்டோ இருக்கு.. பாத்துட்டு ஒகேவான்னு சொல்லு.. மேற்கொண்டு பேசலாம் .. பார்த்துட்டு கால் பண்ணு " என்று கௌசியிடம் ஒரு கவரை குடுத்து விட்டு, தனியாய் விட்டு சென்றார்.
தந்தை சென்றதும் கவரை திறந்து பார்த்து முறுவலித்தவன் முழு படத்தையும் வெளியே எடுத்து " இவளா" என அதிர்ச்சி ஆனான்.