கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-59 உருவம் அறியா உயிர் காதலே

காதல் ஜோடி அக்னி மற்றும் மகிழன்

சிறுவயதில் நாயகி இன்னலில் தவிக்கும் போது காப்பாற்றுகிறான் நாயகன். அப்போதே பூத்த காதல் இது.

விபத்தினால் நாயகிக்கு முக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு முகம் மாறி விட்டது. நாயகனிடமும் சிறுவயதில் விழுந்த கன்னக்குழி நாளடைவில் விழவில்லை. அவன் முகமும் மாறி உள்ளது. இருவருமே பல வருடங்களாக தங்கள் காதல் இணையே உயிர் என எண்ணி தேடுகின்றனர்.

இருவரும் நண்பர்களாக இருந்த போதும் காதலர்கள் ஒருவருக்கொருவர் அறியமுடியவில்லை. அருகில் இருந்தும் அறியாமல் இருக்கும் இருவரின் உயிர் காதலை பற்றிய கதை ஆதலால் இக்கதைக்கு 😍😍உருவம் அறியா உயிர் காதலே 😍😍என தலைப்பு வைத்துள்ளார் எழுத்தாளர். 🙏🙏🙏
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-6 காதல் அகராதி

கல்லூரி காலகாதலை எண்ணி ஆண் மீராவாக வாழும் நாயகன். சில பல காரணங்களால் காதலை சொல்லாமல் பிரிந்து வாழ்கிறாள் நாயகி.

காதல் என்பது உள்ளத்தால் இணைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அன்பு மட்டும் அல்ல, உண்மையான நேசம் கொண்ட இருவருக்கும் இடையில் உள்ள உன்னதமான உறவு என காதலுக்கு தனி வரையறைகள் வகுத்துள்ளார் எழுத்தாளர்.

காதலர்கள் சேர வேண்டும் என எண்ணிய அத்துணை பேரும் கொண்ட நேசமும், இவ்விருவர் மீது அவர்கள் கொண்ட காதலே என காதலுக்கு தனி அகராதியாக இக்கதையை எழுதியுள்ளார். எனவே கதைக்கு 😍😍காதல் அகராதி 😍😍என பெயரிட்டுள்ளார். 🙏🙏🙏
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-38 உயிர்க்கிறேனடா உனது காதலில்

காதல் ஜோடி ஸ்ரீமகி மற்றும் ராம் பிரகாஷ்

பொம்மை போன்று உணர்ச்சிகள் அற்று நடமாடும் பெண் ஸ்ரீ. வலி நிறைந்த வாழ்வை பழகி கொண்ட ஒற்றை தாய் . கடந்த கால காயங்களால் மறுமணத்தை தவிர்க்க நினைக்கிறாள், தன் பெற்றோருக்காகவும் மகனுக்காகவும் மட்டுமே வாழும் மங்கை .

தன் காதலால் அவள் வாழ்வை வசந்தம் ஆக்க நினைக்கிறான் ராம். காதல் நெஞ்சம் கொண்டு அவள் வாழ்வை மீண்டும் உயிர்த்தெழ போராடும் அன்பானவன். ராமின் காதலால் மகியின் வாழ்க்கை மீண்டும் உயிர்ப்புடன் தொடங்கும் என எண்ணியே 😍😍உயிர்க்கிறேனடா உனது காதலில் 😍😍என்று பெயர் வைத்து இருக்கலாம் எழுத்தாளர். 🙏
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-95 காதலும் வீரமும்

பண்டைய காலத்தில் வாழ்ந்த ருத்ரதாமன் என்ற மாமன்னனின் வரலாற்றுப்புதினம். ருத்ரதாமன் சங்கமித்தை அவர்களின் காதல் கற்பனை புனைவு கதை.

ருத்ரதாமன் எதிரி நாட்டு இளவரசன் என்று அறியாமலேயே காதல் கொள்கிறாள் சங்கமித்தை. இருவரும் அழகிலும் அறிவிலும் வீரத்திலும் சிறந்தவர்கள்.

காதலர்கள் இருவரும் வீரத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை போர்க்களத்தில் இருவரும் எதிர்கொள்ளும்போது நன்றாக தெரிகிறது.

வீரத்தில் சிறந்த இருவரின் காதல் கதை என்பதால் இக்கதைக்கு 🤴😍😍காதலும் வீரமும்😍😍 👸என்று பெயரிட்டு இருக்கலாம் எழுத்தாளர்.
 

Sspriya

Well-known member
யோசி யோசி :

Ks-109 மௌனமே காதலாய்

அன்பு மற்றும் மொழியின் அழகிய காதல் காவியம்.

இருவரும் காதல் சொல்லி கொள்ள வில்லை. காதல் மொழிகள் பேசவில்லை.
ஒரு விபத்தில் தன் குரலை இழந்து தவிக்கும் மொழியை திருமணம் புரிகிறான் அன்பு.

கை அசைவிலும் கண் அசைவிலும் மொழி பேசும்போது அழகாய் மொழி பெயர்ப்பு செய்கிறான். மீண்டும் அவள் பேசவேண்டும் என எண்ணி மருத்துவம் பார்க்கிறான். முடிவு தெரியும் முன்பே விமான விபத்தில் காணாமல் போகிறான் அன்பு.

அவன் இழப்பை தாங்க முடியாமல் அனைவரும் வருந்தும் போது, மொழி மட்டும் நம்பிக்கையுடன் வாழ்கிறாள் அவனின் உயிரை கருவில் சுமந்து கொண்டு. மருத்துவ பலனால் பேச முடிந்தும் யாருடனும் பேசாமல் மௌனம் ஒன்றே தனது காதல் என வாழ்கிறாள். அவன் வருவான் என்பதே அவள் உயிர்ப்புடன் இருக்க காரணம்.

அவளின் காதலின் ஆழத்தை உணர்ந்த கடவுளும் அவளின் அன்பை மீட்டு மீண்டும் கை சேர்கிறான் பிரசவத்தின் போது. கணவனை கண்ட பிறகே தன் மகளை ஈன்றெடுக்கிறாள்.

ஒன்பது மாத மௌனம் அனைத்தும் அவள் முழு காதலின் வெளிப்பாடே எனவே இக்கதைக்கு 😍😍""மௌனமே காதலாய் ""😍😍என்று பெயர் வைத்து இருக்கலாம் எழுத்தாளர்.
 
Top