கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2021 - அறிவிப்பு

siteadmin

Administrator
Staff member
ஸ்ரீ விக்னேஸ்வரர் துணை
கதை சங்கமம் 2021

ஸ்ரீ பதிப்பகம் மற்றும் சங்கமம் நாவல்ஸ்


வணக்கம் தோழமைகளே!



சங்கமம் நாவல்ஸ் தளத்தின் அறிமுகப்படலமாக கதை சங்கமம் 2021 போட்டியை உங்கள் முன்வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.



கதை சங்கமம் 2021 மையக் கரு – காதல்.

இந்தப் போட்டியின் நோக்கம் மிகச் சிறந்த காதல் புனைவை எழுத்துலகுக்கு எடுத்தறிவிப்பதற்கே ஆகும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கும், சிறந்த விமர்சகர்களுக்கும். ரூ 50,000 வரையிலான பரிசுகள் காத்திருக்கின்றன.!! .



பரிசுகள்எழுத்தாளர்கள்விமர்சகர்கள்
முதல் பரிசு ரூ.20000 (இருபதாயிரம்)ரூ. 4000/-(நான்காயிரம்
இரண்டாம் பரிசுரூ.10000 (பத்தாயிரம்)ரூ. 2000/-(இரண்டாயிரம்)
மூன்றாம் பரிசுரூ.5000 (ஐந்தாயிரம்)ரூ. 1000/-(ஆயிரம்)
ஆறுதல் பரிசு5 சிறந்த புதினங்களை அச்சேற்றித் தருவோம்.மேலும் சிறந்த விமர்சகர்கள் ஐந்து பேருக்குத் தலா ரூ.500/-




போட்டி விவரங்கள்:



  • போட்டி நடைபெறும் காலகட்டம் – செப்டம்பர் 16 முதல் டிசம்பர் 31 வரை.
  • போட்டிக்கு பதிவு செய்ய கடைசி தினம் செப்டம்பர் 30 2020.
  • அதற்குப்பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
  • பதிவு செய்துவிட்டு குறிப்பிட்டக்காலகட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
  • ஒரே நாளில் முழுக்கதையையும் பதிவு செய்வது ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.
  • அத்தியாயங்கள் வரிசையாகப் வெவ்வேறு நாட்களில் பதிவிடல் வேண்டும்.
  • தளத்தின் அட்மின் பதிவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்.
  • Ms-Word டாகுமெண்ட்டில் 10 புள்ளிகளில் கதை இருத்தல் வேண்டும்.
  • குறைந்த பட்ச வார்த்தைகள் எண்ணிக்கை 30000 அதிக பட்சம் 40000. அதற்கு மேலோ கீழோ இருந்தால் நிராகரிக்கப்படும்.
  • ஏற்கனவே புத்தகமாகவோ, வேறு வடிவிலோ, ஆடியோ அல்லது மின் வடிவிலோ (e-book), தொடராக வேறு தளத்திலோ, இருக்கும் புத்தகங்கள் ஏற்கப்பட மாட்டாது.
  • உங்கள் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும்.
  • காதல்’ என்கிற சொல் உங்கள் தலைப்பில் பயன்படுத்தியிருத்தல் அவசியம்.. அது காதலின், காதலுக்காக, ..காதலே..காதலுக்கு என்றும் கூட இருக்கலாம்.
  • காதல் என்னும் தலைப்பைத் தெரிவு செய்திருப்பது அழகிய மெல் உணர்வுகள வெளிப்படுத்தும் பொருட்டே. காதல் என்கிற பெயரில், வன்புணர்வு, துன்புறுத்தல், சித்திரவதை, ஆபாசப்பேச்சுக்கள், படங்கள், காமக்கதைகள் , பொருந்தாக் காதல்(இன்செஸ்ட்) இருத்தல் கூடாது.
  • காதல் அழகாய் நளினமான முறையில் , பார்த்த காதல், பார்க்காகாதல், வயோதிகக்காதல், கல்யாணத்துக்குபின் காதல், பிரிந்த காதல், பிரிந்து சேர்ந்த காதல், திகில் கலந்த காதல், அமானுஷ்யம், அறிவியல், பூர்வ ஜென்மம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நம் குடும்பத்தினர் வாசிக்கும் வகையில் இருத்தல் வேண்டும்.
  • எந்த மதத்தையும் இழிவு படுத்தியோ, பிரிவினையைத் தூண்டும்படியோ அல்லது நிஜமான அரசியல் கட்சிகளின் பெயர் சொல்லியோ, கதை எழுதுதல் கூடாது.
  • ஒருவர் அதிகபட்சம் 2 கதைகளைப் பதிவேற்றலாம்.
  • அறிமுக எழுத்தாளர்களும், ஏற்கனவே எழுதிக்கொண்டிருப்பவர்களும் பங்கேற்கலாம்.
  • பிழையில்லாமல் இருத்தல் மிக முக்கியம். அதற்கென்று ஒரு சில மதிப்பெண் உண்டு.
  • கதையின் பல்வேறு விஷயங்களைக் கருத்தில்கொண்டு மதிப்பளித்தல் நடைபெறும். பிழையின்மை, கதைக்கரு, கையாளும் விதம் , மொழித்திறமை என்று பல கட்டங்களில் மதிப்பளித்தல் உண்டு. வாசகர்களின், கருத்துக்கள், விருப்பக்குறியீடுகளின் எண்ணிக்கை கருத்தில் கொள்ளப்படும்.
  • கதாசிரியரின் பெயர் எந்த ஒரு இடத்திலும் போட்டி நடைபெறும் காலகட்டங்களில் வெளியிடப்படமாட்டாது, அது போல் கதாசிரியர்களும் வெளியிடக்கூடாது..இதன் நோக்கம் புதுத் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்கே ஆகும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒரு எண் குறியீடு அளிக்கப்படும். அதை வெளிப்படுத்துதல் கூடாது.
  • முதல் கட்டத் தேர்வு பிப்ரவரி 14க்குள் நடைபெறும்.
  • அதன் முடிவில் தேர்வுசெய்யப்பட்ட 10 கதைகள் நடுவர் பார்வைக்கு அனுப்பப்படும்.
  • இரண்டாம் கட்டத் தேர்வு, பிப்ரவரி 14 துவங்கி் மார்ச் 14 வரை.
  • முடிவு மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்படும்.
  • காலதாமதம் இருந்தால் நிச்சயம் முன் கூட்டியே அறிவிப்பு அளிக்கப்படும்.
  • ஏற்கனவே சொல்லியிருந்தப்படி வாசகர்களுக்கும் பரிசுகள் நிச்சயம் உண்டு.
  • வாசகர்கள், ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கருத்துக்களை அடுத்த அத்தியாயம் பதிவு செய்வதற்கு முன்பே சொல்லியிருத்தல் அவசியம்,
  • அதிக பட்ச கதைகளை இடைவெளியில்லாமல் வாசித்து தங்கள் கருத்துக்களை ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பதிவிடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • சிறந்த ஒரு முழு கதையின் விமர்சனமும் ஒவ்வொரு கதைக்கும் முடிவில் இருத்தல் வேண்டும்.
  • மிகச்சிறந்த வாசகர்களுக்கும் பரிசு உண்டு., ஆறுதல் பரிசாக ஸ்ரீ பதிப்பகத்தின் புத்தகங்கள் 10 நபர்களுக்குப் பரிசளிக்கப்படும்.
  • கதாசிரியர்கள் தங்கள் கதைக்கு தாங்களே கருத்து தெரிவித்தல் கூடாது..ஆனால் பிற கதைகளுக்கு தாராளமாக விமர்சனங்களை தெரிவிக்கலாம். ஆனாலும் அவர்கள் வாசகர்களுக்கான போட்டியில் இடம் பெற முடியாது. இது சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டே
  • பரிசுப்பணம் எந்த காரணத்தைக் கொண்டும் பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. தவிர்க்க முடியாக் காரணங்களால் ஒருவருக்கு மேல் பரிசிற்குத் தகுதி பெற்றால் அவர்களுக்குமே அதே அளவு பரிசுப் பணம் தரப்படும் பகிர்ந்தளித்தல் கிடையாது. இதை நாங்கள் உறுதியளிக்கிறோம்.
  • தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று கதைகளையும் ஸ்ரீ பதிப்பகம் அச்சிட்டு வெளியிடும்.
  • முதல் மூன்று கதைகளைத் தவிர சிறந்த ஐந்து கதைகளையும் தேர்ந்தெடுத்து பதிவிடப்படும்..இதற்கு பரிசுத் தொகை கிடையாது. எழுத்தாளர்களுக்கான ஊக்கத் தொகை அளிக்கப்படும்
  • .இறுதி சுற்றிற்கு தேர்ச்சி பெறாத கதைகள், போட்டி முடிந்தவுடன் திரியிலிருந்து நீக்கப்பட்டுவிடும் உங்கள் விருப்பத்தின் பேரில்.
  • பரிசுபெற்றக் கதைகள் தளத்துக்கே உரியது. ஸ்ரீபதிப்பகம் புத்தகமாக பதிப்பித்துக் கொடுக்கும்.
  • நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.


விண்ணப்பத்தை பதிவு செய்து சங்கமம்நாவல்ஸில் எழுதும் வாய்ப்பைப் பெறுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

பதிவு செய்ய தளத்தில் முதலில் பதிவு செய்திருத்தல், கதாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் அவசியம்.

உங்கள் கருத்துக்களையும் விண்ணப்பங்களையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி sripathippakam@gmail.com



ஏதேனும் சந்தேகங்களோ தகவல்களோ அறியவேண்டி இருந்தால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

பங்கேற்க விருப்பப்படும் எழுத்தாளர்கள் மெயில் sripathippakam@gmail.com செய்தால் விண்ணப்பப் படிவம் அனுப்பி வைக்கப்படும் மின்னஞ்சலில்









 
Last edited:
Top