கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2021 - எழுத்தாளர்களுக்கான அறிவிப்பு

siteadmin

Administrator
Staff member
வணக்கம் எழுத்தாளர்களே!

சங்கமம் கதைப் போட்டியில் உங்களின் ஆதரவு நன்றாகவே உள்ளது.

நீங்கள் கதையின் அத்தியாயங்களை அனுப்பும் போது அந்தந்த அத்தியாயத்தில் எத்தனை வார்த்தைகள் உள்ளது என்பதை அத்தியாயத்தின் முடிவில் தெரிவியுங்கள்.

அதன் பிறகு அடுத்த அத்தியாயம் எப்போது பதிவிடப்படும் என்பதையும் அதன் கீழேயே தெரிவியுங்கள்.

இது வாசகர்கள் எழுத்தாளர்கள் இருவருக்குமே உபயோகமாக இருக்கும். போட்டிக்கதைக்கான அத்தியாயம் அனுப்பும் முன்பு, தயவு செய்து விதிமுறைகளை ஒருமுறை படித்து பார்த்துவிட்டு அனுப்புங்கள் எழுத்தாளர்களே.

உங்கள் பெயர் எக்காரணம் கொண்டும் டாக்குமெண்ட் உள்ளேயோ இல்லை வெளியேவோ இருக்கக்கூடாது. கதை எண், கதையின் தலைப்பு மற்றும் அத்தியாயத்திற்கான எண் மட்டுமே இருக்க வேண்டும். (உதாரணம்: டாக்குமெண்ட் வெளியே...KS-00, story title episode1.doc என்ற பெயர் இருக்க வேண்டும். டாக்குமெண்ட் உள்ளே ks-00, கதையின் பெயர், அத்தியாயம் 1 என்பதை இடது பக்கம் குறிப்பிட்டிருக்க வேண்டும்)

கதைக்கான படங்களையோ புகைப்படங்களையோ அனுப்பாதீர்கள்.

எழுத்தாளர்களுக்கு மற்றுமொரு வேண்டுகோள். உங்களின் சக எழுத்தாளர்களின் கதையைப் படித்து தளத்திலேயே கருத்தை பதிவிடுங்கள். கருத்து சொல்வது ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே தவிர அதை வைத்து பரிசுக்கானக் கதை நிர்ணயிக்கப்படமாட்டாது. அதனால் நீங்கள் தாராளமாக மற்ற எழுத்தாளர்களின் கதைக்கு, தளத்தில் விருப்பமோ கருத்தோ தெரிவிக்கலாம்.

மற்றபடி,இந்தப்பதிவை நீங்கள் அனைவருமே உங்களுக்கு வேண்டிய முகநூல் குழுக்களில் பகிரலாம்.உங்கள் பங்கேற்பு குறித்த விவரங்களை பொது வெளியில் எப்போதும் தெரிவிக்க வேண்டாம். போட்டியின் விதிகளை எக்காரணம் கொண்டும் மீற வேண்டாம்.

மேலும் ஏதாவது விவரம் தேவையெனில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்



எழுத்தாளத் தோழமைகளே, உங்களின் ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

 
அடுத்த போட்டி எப்போது நடக்கும். .என்னோட கதைகளை எப்படி பதிவிட என்பதை கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் mam....
 
Top