கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2021 - நடுவர்களின் அறிவுரை

உண்மையில் நீண்ட கால அவகாசம் கொடுத்து கதை எழுத சொல்லி வாசகர்களையும் ஊக்குவித்து முன்னெடுத்து செல்வது என்பது மிகப்பெரிய விசயம். அதுவும் பெயர் கூட வெளியிடாமல் கொண்டசெல்வது என்பதும் சிரமம் தான். அதை சரியாக வழிநடத்தி சென்ற லதா மேம் உஷா மேம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 

vishwapoomi

New member
வணக்கம்,

கதை சங்கமம் போட்டியில் கலந்துக்கொண்டது மிக்க மகிழ்ச்சியை தந்தது. ஆரம்பத்தில் ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதை போலவே உணர்ந்தேன். பாதியில் நிறுத்திவிடவேண்டும் என்று கூட நினைத்தேன். ஆனாலும் தொடர்ந்து எழுதினேன். நான் எழுதிய இரண்டு கதைகளில் ஒன்றில் மிகவும் கனமான கருவை கொண்டே எழுதினேன். ஆனால் அதுதான் முதலில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. இரண்டாவது கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.

ஒரு ஆசிரியையாக இருக்கிற நான் போட்டிகளை பற்றி இதுவரை புரிந்துகொண்டது 'ஒவ்வொருவரின் பார்வையும், எண்ணங்களும் வித்தியாசமானவை.' நம் பார்வைக்கு நல்லதாக தெரிவது பிறரின் பார்வைக்கு கெட்டதாக தெரியலாம். பிறரை துன்புறுத்தாதவரைக்கு எதுவுமே இங்கே தவறில்லை, இதுதான் எனது எண்ணம். இதுவரை நான் எழுதிய கதைகளில் அநேகர் சொன்னது உங்கள் எழுத்து நடை யதார்த்தமாக உள்ளது என்றுதான். அதுதான் இங்கே பிழையாக கருதபட்டிருக்கிறது. அதற்காக எந்த வருத்தமும் எனக்கு தோன்றவில்லை. நடுவர்களி ல் கருத்துக்கு மிக்க நன்றி. ஒரே ஒரு வருத்தம் மட்டும். இந்த கருத்தை நீங்கள் ஆரம்பத்திலே சொல்லியிருந்தால் நாங்கள் எங்கள் எழுத்து நடையை உங்களில் கருத்துக்கு ஏற்பமாற்றியிருப்போம். இங்கே நாங்கள் நாங்களாகவே இருந்தோம்.

நன்றி வணக்கம்...
 
Top