சங்கமம் நாவல்ஸ்
கதை சங்கமம் 2021 – நாவல் போட்டி
முதல் சுற்று முடிவுகள்
கதை சங்கமம் 2021 – நாவல் போட்டி
முதல் சுற்று முடிவுகள்
முதலில் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து எழுத்தாள தோழமைகளுக்கும் எங்களின் நன்றிகள்.
அனைத்து கதைகளுமே அருமைதான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய், கொடுக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மீறாமல் நல்முத்துக்காய் படைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒரு சில விவரங்களைக் கருத்தில் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று 35 பேர் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்கள்.
என்னதான் 25 கதைகளை இறுதி கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தாலும், முதல் கட்ட நடுவர்களின் பரிந்துரையில், மேலும் சில கதைகளுடன் 35 கதைகள் கதை சங்கமம் போட்டிக்காக, அடுத்த நிலைக்குச் செல்கின்றன.
இத்துடன் கதையை குறித்த நாளுக்கு முன்னரே, முதன் முதலில் வேகமாக எழுதி முடித்த ‘KS-12-காதல் கண்ணனின் ராதையவள்’.. போட்டிக்கதைக்கு நடுவர்கள் பரிந்துரையின் பேரில் சிறப்புப்பரிசாக ‘எர்லி பேர்ட் சிறப்பு பரிசு’ ரூ.2000/- வழங்கப்பட இருக்கிறது.
இதில் அடுத்த நிலைக்கு செல்லாதவர்கள் தயவுசெய்து வருத்தம் கொள்ள வேண்டாம்.. அடுத்தடுத்து போட்டிகள் வந்து கொண்டுதான் இருக்கும். நீங்களும் எங்களுடன் இணைந்து எழுதத்தான் போகிறீர்கள். நிச்சயம் விரைவில் வெற்றி உங்கள் வசப்படும். பங்குபெற்று கதையை முழுமையாக பதிவு செய்த அனைவருக்குமே ஸ்ரீ பதிப்பகத்தின் புத்தகப்பரிசு ஒன்று நிச்சயம் உண்டு என்று இங்கே மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறோம்.
அதே சமயம் தவிர்க்க முடியாத காரணங்களால் துவக்கப்பட்ட கதையை முடிக்க இயலாதவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நிச்சயம் மீண்டும் அடுத்த முறை வெற்றிகரமாக எழுதி முடிக்க வாழ்த்துகிறோம்..
அடுத்த சுற்றுக்குச் செல்லும் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.
**
இன்னமும் போட்டி முடிவுறாத நிலையில் இதுவரை உங்கள் பெயர்களை வெளியிடாமல் இருந்த மாதிரியே இனியும் ஒருமாதம் ரகசியம் காக்க வேண்டுகிறோம்.
தேர்ந்தெடுக்கப்படாத கதைகள் மார்ச் 1 -2021 அன்று தளத்திலிருந்து நீக்கப்படும். முடிவுறாத கதைகள் இன்று நீக்கப்படும்.
கலந்துகொண்ட அனைத்து எழுத்தாளர்களின் பெயர் விவரங்கள் இறுதி சுற்றின் பரிசு விவரங்களுடன் மார்ச் 16 - 2021 அன்று அறிவிக்கப்படும்.
நீங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி சுற்றுக்கு செல்லும் கதைகளின் விவரங்கள் இதோ..
நன்றி.
தெரிவு செய்யப்பட்டக் கதைகள்.
| 1 | KS-1 | ஈங்கிசைக்கும் காதலே |
| 2 | KS-3 | கைத்தலம் பற்றிடும் காதலே |
| 3 | KS-13 | காதல் கைதி |
| 4 | KS-25 | காதல் கிளியே அழகிய ராணி |
| 5 | KS-27 | காதல் ரோஜவே |
| 6 | KS-38 | உயிர்க்கிறேனடா உந்தன் காதலில் |
| 7 | KS-39 | சகலகலா காதல் |
| 8 | KS-40 | காதலே காதலே தனிப்பெருந்துணையே |
| 9 | KS-42 | காதல் கண்டேனடி கண்மணி |
| 10 | KS-43 | காதல் மனசு |
| 11 | KS-48 | மனதோடு காதல் |
| 12 | KS-51 | காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி |
| 13 | KS-54 | காதலின் மாயவொளி |
| 14 | KS-62 | காதல் தாண்டவம் |
| 15 | KS-63 | காதலும் கசந்து போகும் |
| 16 | KS-66 | உயிர்நிலைக் காதல் |
| 17 | KS-68 | அம்மாடி இதுதான் காதலா |
| 18 | KS-73 | உன்னோடு காதலாம் |
| 19 | KS-80 | இரு துருவங்களின் காதல் |
| 20 | KS-82 | காதல் சொல்ல வந்தேன் |
| 21 | KS-90 | இ.எம். ஐ. காதல் |
| 22 | KS-95 | காதலும் வீரமும் |
| 23 | KS-99 | காதல் அளபெடை |
| 24 | KS-105 | காதல் தானடி உன் மேல் எனக்கு |
| 25 | KS-108 | மனதிலே காதலா |
| 26 | KS-109 | மௌனமே காதலாய் |
| 27 | KS-111 | முதன் முறை காதல் அழைத்ததோ |
| 28 | KS-112 | கானல் நீரோ காதல் பிழையோ |
| 29 | KS-116 | நின்றன் காதலை எண்ணி |
| 30 | KS-120 | என் ஜீவனே உன் காதல் தானே |
| 31 | KS-129 | என் காதல் பேசுமோ |
| 32 | KS-133 | மீண்டும் ஒரு காதல் |
| 33 | KS-135 | கண்ட நாள் முதலாய் |
| 34 | KS-137 | ஊமை காதல் நானடா |
| 35 | KS-139 | காதல் சில குறிப்புகள் |
அடுத்து..
எழுத்தாளர்களை, தங்கள் பொன்னான விமர்சனங்களை விதவிதமாய் அள்ளித் தந்து ஊக்குவித்த நம் வாசகர்களை நாம் மறக்கக்கூடாதல்லவா!! வாசகர்கள் இல்லையேல் இங்கே எழுத்தாளர்கள் இல்லையே!!.. தொடர்ந்து எங்களை ஆதரித்த அவர்களுக்கு எங்கள் நன்றிகள் பல. இதோ வாசகர்களுக்கானப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் கீழே..
வாசகர் போட்டிக்குத் தேர்வானவர்கள்
1. ஜெனிதா-(ஜெயா பூமதி)
2. அபிராமி(மகி அபிநந்தன்)
3. கௌசல்யா
4. ரேஷ்மா
5. தமிழச்சிகுட்டி(எஸ்.பிரியா)
6. அம்மு
7. ஆதிசக்தி
8. நான்சி
9. பிரியதர்ஷினி பழனியாண்டி
10. தாரா
இவர்களில் யார்யார் வாசகர் போட்டியில் என்ன பரிசை வெல்லப் போகிறார் என்பதும் மார்ச் 16 ம் தேதி வெளியிடப்படும்.
திடீர் காதலர்தினப் போட்டியின் முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்படும்.
நன்றி
சங்கமம் குழுமம்
கதை சங்கமம் 2021 - முதல் கட்ட முடிவுகள்
சங்கமம் நாவல்ஸ் கதை சங்கமம் 2021 – நாவல் போட்டி முதல் சுற்று முடிவுகள் முதலில் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து எழுத்தாள தோழமைகளுக்கும் எங்களின் நன்றிகள். அனைத்து கதைகளுமே அருமைதான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய், கொடுக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மீறாமல்...
sangamamnovels.com
Last edited: