கதை சங்கமம் நாவல் போட்டி 2022
முடிவுகள்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
அனைத்துத் தோழமைகளுக்கும் சங்கமம் குழுவினரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
வாழ்க தமிழ்! வளர்க எழுத்துப் பணி!
நாங்கள் அறிவித்திருந்தபடி, கதை சங்கமம் நாவல் போட்டி 2022 இன் இறுதிக்கட்ட முடிவுகளை அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது.
போட்டியில் கலந்து கொண்டு கொடுத்திருந்த கால அவகாசத்தில் தங்களுடைய கதைகளைச் சிறப்பாக முடித்த அனைத்து எழுத்தாளர்களுமே, பாராட்டுக்குரியவர்கள். பரிசு பெறத் தகுதியானவர்கள் என்றாலும், போட்டி என்ற ஒன்று வந்துவிட்டால் முடிவு என்பது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் அல்லவா!
எழுத்து நடை, பிழையின்மை, கதைக்கரு, கருவைக் கையாண்ட விதம், மொழி ஆளுமை போன்ற முக்கியமான அளவுகோல்களைக் கருத்தில் கொண்டு முதல் கட்டத்தில் தேர்வான கதைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பரிசுக்குரிய கதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. மிகவும் குறைவான மதிப்பெண்களின் வித்தியாசத்தில் தான் பரிசுக் கதைகளும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன என்பதால் எந்தக் கதையுமே எந்த விதத்திலும் குறைவானதில்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.
இதோ, நீங்கள் காத்துக் கொண்டிருந்த அறிவிப்பு உங்களுக்காக!
கதை சங்கமம் நாவல் போட்டி 2022
முதல் பிரிவு
முதல் பிரிவு
காதல், சமூகம், குடும்பம்
முதல் பரிசான ரூ.10000/- வெல்லும் கதை
KSK - 2 – வசுதேவ குடும்பகம் = திருமதி. புவனா சந்திரசேகரன்.
இரண்டாம் பரிசான ரூ.5000/- வெல்லும் கதை
KSK – 15 – ஆடுமடி தொட்டில் இனி – திருமதி. அனன்யா
மூன்றாம் பரிசான ரூ.2000/- வெல்லும் மூன்று கதைகள்.
1.KSK – 11 – ஆனந்த ராகம் – திருமதி. அன்னபூரணி தண்டபாணி
2.KSK – 31 – என் இனிய உறவே – திருமதி/செல்வி. ப்ரியா லக்ஷ்மண்.
3.KSK – 40 – ஈன்றபொழுதினும் பெரிதுவக்கும் – திருமதி. இசை சுரேஷ்.
இரண்டாவது பிரிவு
ஆன்மீகம், அமானுஷ்யம், சரித்திரம்
ஆன்மீகம், அமானுஷ்யம், சரித்திரம்
முதல் பரிசான ரூ .10000/- வெல்லும் கதை
AAS -16 – நந்திவனக்கோட்டை – திரு. யாழ்க்கோ லெனின்
இரண்டாம் பரிசான ரூ . 5000/- வெல்லும் கதை
AAS – 20 – நான்மணிக்கடிகை – திருமதி/செல்வி. ரிஷா
மூன்றாம் பரிசாகத் தலா ரூ. 2000 /- வெல்லும் மூன்று கதைகள்
1. AAS - 2- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – திரு. ஜெயகுமார் சுந்தரம்
2. AAS – 9 - வாய்ப்பிருந்தால் வந்து போ – திருமதி அகிலா வைகுண்டம்
3. AAS -15 - இருள் சூழ் உலகு – திரு. அப்புசிவா
மூன்றாவது பிரிவு
அறிவியல், திகில், ஃபேண்டஸி
முதல் பரிசான ரூ.10000/- வெல்லும் கதைஅறிவியல், திகில், ஃபேண்டஸி
STF 18 – அவலையின் ரகசியங்கள் – திருமதி./செல்வி. சசிதீரா
இரண்டாம் பரிசான ரூ.5000/- வெல்லும் கதை
STF – 9 – அடாது வழியும் குருதி – திருமதி. மிருதுளா அஷ்வின்
மூன்றாம் பரிசாகத் தலா ரூ.2000/- வெல்லும் மூன்று கதைகள்
1.STF - 1 – சதிராடும் நயனங்கள் – திருமதி. பூர்ணிமா கார்த்திக்
2.STF – 8 – காவடி சிந்து – திருமதி வேதா விஷால்
3.STF – 21- ஓவியமோ அற்புதமோ – திருமதி. ராஜலட்சுமி நாராயணசாமி
ஸ்பெஷல் ஜூரி அவார்ட் – ரூ. 2500/- பெரும் கதை
STF – 1 - சதிராடும் நயனங்கள் - திருமதி. பூர்ணிமா கார்த்திக்
ஸ்பெஷல் ஜூரி அவார்ட் -வாசகர் – விமர்சகர் – ரூ. 2500/- பரிசு பெற்றவர்
திருமதி. ஷைலபுத்ரி
STF – 1 - சதிராடும் நயனங்கள் - திருமதி. பூர்ணிமா கார்த்திக்
ஸ்பெஷல் ஜூரி அவார்ட் -வாசகர் – விமர்சகர் – ரூ. 2500/- பரிசு பெற்றவர்
திருமதி. ஷைலபுத்ரி
ஸ்பெஷல் ஜூரி விருதுக்காக வசூலான தொகை 2500/-. அதே அளவு தொகையை சங்கமம் தளமும் வழங்கியதில் கிடைத்த மொத்தத் தொகை ரூ5000/- வென்றவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
பரிசுகளை வென்ற எழுத்தாளர்களுக்கு சங்கமம் குழுவின் பாராட்டுகள்!
இந்தப் பரிசுகளுடன் முன்னரே அறிவித்திருந்தபடி, எக்ஸ்பிரஸ் வேகத்தில் எழுதி முடித்து, "ஏர்லி பேர்ட்" பரிசான ரூ 2500/- ஐப் பெறும் கதை,
KSK 45 - சுடரொளியாய் வெளிச்சமூட்டு! – திருமதி. சுபஸ்ரீ
இந்தக் கதையின் எழுத்தாளருக்கும் எங்களது வாழ்த்துகள்!
எழுத்தாளர்களை ஊக்குவித்து ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாகப் பணியாற்றி, தலா ரூ.2000/- வெல்லும் ஐந்து வாசகர்கள்.
1. ஷைலபுத்ரி
2. தமிழச்சி குட்டி ( S.S.Priya)
3. சித்ரா பாலாஜி
4. ப்ரியா மோகன்
5. ஆதி சக்தி
இவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இல்லையேல் எழுத்தாளர்கள் இல்லை. மகத்தான பணியாற்றிய உங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்.
இந்த நாவல் போட்டியின் ஆரம்பத்தில் இருந்து முகநூல் குழுவை உருவாக்கியது, கதைகளுக்கான அட்டைப் படங்களைத் தேர்ந்தெடுத்தது, கதைகளின் லிங்கை ஷேர் செய்தது, கதைகளைப் படித்து விமர்சனம், மீம்ஸ் என்று சக எழுத்தாளர்களை ஊக்குவித்தது போன்ற பல்வேறு உதவிகளைச் செய்த எழுத்தாளர்கள் திருமதி. புவனா சந்திரசேகரன், திருமதி. ஜெயலக்ஷ்மி கார்த்திக், திருமதி. நித்யா மாரியப்பன் மூவருக்கும் சங்கமம் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவர்களுக்காகப் புத்தகப் பரிசுகளை எங்களது அன்பின் சிறு அடையாளமாக அனுப்பியிருக்கிறோம்.
தவிர்க்க முடியாத சில காரணங்களால் நடுவர்களின் வேண்டுகோளுக்கிணங்க , நடுவர்களைப் பற்றிய விவரங்கள் அளிக்க இயலவில்லை. வென்றவர்களுக்கு வாழ்த்துக்களை நடுவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
எக்காரணம் கொண்டும் போட்டி முடிவுகள் மாற்ற இயலாது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
பரிசுகளை வென்ற கதைகளின் லிங்க் மே மாதம் முதல் தேதி அகற்றப்படும். மற்ற கதைகளின் லிங்க் இன்னும் மூன்று நாட்களில், அதாவது 17/04/2022 க்குள் தளத்தில் இருந்து அகற்றப்படும். கதைகளைப் படிக்க விழையும் வாசகர்கள் இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து எழுத்தாளத் தோழமைகளுக்கும் சங்கமம் குழு, நன்றி கலந்த வாழ்த்துகளை அன்புடன் வழங்குகிறது. மீண்டும் மீண்டும் நல்ல கதைகளை எழுதி எழுத்துலகில் பிரகாசிக்க உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.
நன்றி!
சங்கமம் குழு.
