கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2022 - நாவல் போட்டி -அறிவிப்பு 1

Jeyakumar S

Member
கதை சங்கமம் 2022 - நாவல் போட்டி

அனைவருக்கும் சங்கமம் தளத்தின் இனிய வணக்கங்கள்,

கதைகளை உருவாக்கும் எழுத்தாளர்களுக்கும், கதைகளோடு உறவாடும் வாசகர்களுக்கும் ஒரு நற்செய்தி நல்கிடவே வந்துள்ளோம்.

சென்ற வருடம் நடந்தது போல் மற்றுமொரு நாவல் போட்டியான
கதை சங்கமம் 2022 புத்தம்புது பொலிவுடன் இவ்வருடமும் நடைபெறயிருக்கிறது.

போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 31ஆம் தேதி முடிவு பெறும்.

இம்முறை கீழ் வரும் மூன்று பிரிவுகளில் மட்டுமே கதைக்களம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

1. குடும்பம், காதல் மற்றும் சமூகம்
2. ஆன்மிகம், சரித்திரம் மற்றும் அமானுஷ்யம்.
3. அறிவியல் மற்றும் திரில்லர்.

இதில் ஏதேனும் ஒரு பிரிவில் உங்கள் கதை இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளர் எத்தனை கதை வேண்டுமானாலும் எழுதலாம்.

கதையின் வார்த்தைகள் 40000 முதல் to 50000 வரை மட்டுமே இருக்க வேண்டும்.

போட்டி என்று சொல்லும் பொழுது பரிசு இல்லாமலா! ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக மூன்று பிரிவிலுள்ள முதல் கதைக்கு தலா பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக மூன்று பிரிவிலும் இரண்டாம் இடம் வந்த கதைக்கு தலா ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்படும். இதைத் தவிர ஒவ்வொரு பிரிவிலும் மூன்று கதைகள் என மொத்தம் ஒன்பது கதைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும்.

கதையைப் படித்து ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும் பரிசு உண்டு. தொடர்ந்து கதைகள் படித்து சிறப்பாக ஊக்குவிக்கும் ஐந்து வாசகர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.


ஸ்பெஷல் கேட்டகரி( விருப்பமுள்ளவர்கள் பங்கு பெறலாம்)

இம்முறை சிறப்பு பரிசாக ஒரு கதைக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்ட் வழங்கப்பட இருக்கிறது. இது எழுத்தாளர்களே அவர்களின் சக எழுத்தாளரை வோட்டிங் முறையில் தேர்ந்தெடுத்து ஊக்குவிக்கும் பரிசாகும்.

கதை சங்கமம் போட்டியில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தலா நூறு ரூபாய் கொடுத்து தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்(ஆப்ஷனல்). உதாரணத்திற்கு நூறு எழுத்தாளர்கள் தலா 100/- நூறு ரூபாய் கொடுத்து பதிவு செய்தால் பத்தாயிரம் வரும், அதே அளவிலான பணத்தை சங்கமம் தளமும் கொடுக்கும். அதனால் மொத்தம் இருபதாயிரம் கணக்கில் வரும். இப்பணம் ஸ்பெஷல் ஜூரி அவார்ட் வாங்கும் கதையின் எழுத்தாளருக்கும் மற்றும் சிறப்பு பரிசாக வாசகர்களுக்கும் கொடுக்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் பணம் செலுத்தினால் போதுமானது கட்டாயமில்லை. எனினும் நூறு ரூபாய் கொடுத்து பதிவு செய்தவர்களின் கதைகள் மட்டுமே ஸ்பெஷல் ஜுரி அவார்டிற்கு பரிசீலக்கப்படும். அவர்கள் மட்டுமே வோட்டிங்கும் செய்யலாம்.

இப்போட்டியில் பங்கு கொள்ள அனைத்து எழுத்தாளர்களையும் வருக வருகவென வரவேற்கின்றோம். போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் எழுத்தாளர்கள் தங்களின் பெயரை ஜுலை 13 முதல் ஆகஸ்டு 11 வரை sripathipakkam@gmail.com என்கிற மின்னஞ்சலில் பெயரினை பதிவு செய்து விண்ணப்பம் பெற்று கொள்ளலாம்.

இம்முறையும் போட்டியில் பங்கு பெறும் எழுத்தாளர்களின் பெயர் வெளியே கூறப்படமாட்டாது. பங்கு கொள்ளும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் பொதுவான அடையாளம் உருவாக்கித் தரப்படும். அதன் மூலம் எழுத்தாளர்கள் அவரவர் கதைகளை தாங்களே தளத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம்.

மேலும் கூடுதலான விவரங்கள் விரைவில் தரப்படும்.


மனமார்ந்த நன்றிகள்.
மீண்டும் ஒரு புதினப்போட்டி. மகிழ்ச்சியளிக்கிறது. நிறைய எழுத்தாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
 
Top