கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2022 - நாவல் போட்டி அறிவிப்பு 8

Latha S

Administrator
Staff member
கதை சங்கமம் 2022 நாவல் போட்டி

அறிவிப்பு 8

எழுத்தாளர்களுக்கு ஓர் இனிய நற்செய்தி!

கதை சங்கமம் 2022 போட்டியில் கலந்து கொண்டு கதைகளை முடிக்கக் காத்திருக்கும் பல்வேறு எழுத்தாளர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, போட்டியின் இறுதி தேதியை ஐந்து நாட்கள், அதாவது ஜனவரி 5 ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்திருக்கிறோம்.

எழுத்தாளர்களே, இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றில் இருந்து ஜனவரி 5 ஆம் தேதி வரை தினம் ஒரு அத்தியாயத்தைப் பதிவு செய்து உங்கள் கதைகளை முடிப்பதற்கு உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிட்டியுள்ளது. தவற விடாதீர்கள். இதுவரை கதைகளை எழுதி முடிக்காத எழுத்தாளர்கள், கதைகளை விரைவில் எழுதி முடியுங்கள்.

எக்காரணம் கொண்டும் ஜனவரி 5 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் முடிவு தேதி நீட்டிக்கப் பட மாட்டாது.

உங்கள் அனைவருடைய கதைகளும் நமது முகநூல் பக்கத்தில் எந்த விதமான பாரபட்சமுமின்றி நிச்சயமாக ப்ரோமோட் செய்யப்படும். நிறைய கமெண்ட்கள் கிடைக்கவில்லை, வாசிப்பு எண்ணிக்கை அதிகமாகவில்லை என்று யாரும் மனம் தளர வேண்டாம்.

கதைகள் முடிவுற்ற பின்னர் கண்டிப்பாக வாசகர்கள் படித்து ஊக்குவிப்பார்கள். நல்ல விமர்சனங்களும் உங்கள் மனங்களை மகிழ்விக்கும்.

வெற்றி இலக்கை நோக்கிக் கவலையின்றி நடை போடுவதற்கு எழுத்தாளர்களை அழைக்கிறோம்.

கதைகளை முடியுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

நன்றி,

ஸ்ரீ பதிப்பகக் குழுவினர்.

 
Top