"காபி எடுத்துக்கோங்க தம்பி" நடுத்தர வயது உடைய பெண்மணி காபி கப்புகள் நிறைந்த தட்டை நீட்ட....
முதலில் புரியாமல் போனாலும்... பின் எதோ தெளிந்தவனாய் அதை எடுத்து கொண்டான் அருள்....
காபியை மெதுவாக குடித்த படி தன் பார்வையை சுழற்றினான் அருள்....தன் முன் இருந்த சோபாவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் இருக்க... அவர் அருகில் அவருடன் பேசிய படி முகத்தில் வாயை மறைக்கும் அளவிற்கு மீசையுடன்.... தலையில் பாதி நரைத்த முடியுடன் ஒருவரும்.....
கீழே தரையில் வயதான மூதாட்டி அவனையே ஆராய்ச்சி பார்வையில் பார்த்து கொண்டு இருக்க....
அதே நேரம் அனைவரின் பார்வையும் மாடியின் புறம் திரும்ப.... அவ்வழி பார்த்தான் அருள்
பச்சை நிற புடவையில்... காலில் கொலுசுடன்.... தலை நிறைய மல்லியும் ரோஜாவும் சேர்த்து கட்டிய பூ கொத்துடன்....
அவளுக்கே உரிய அழகுடன்... கண்ணில் நானமும்... முகம் முழுதும் வெட்கமும்.... முகம் சிவக்கும் நானும் கொண்டு அவனை நோக்கி வந்தாள் அவள்....
அவளை பார்த்தவன் அவள் அழகில் திளைத்து போய்... சிலிர்த்து இருந்த தருணம்....
யாரோ தன்னை அழைப்பது போல் தோன்ற... தன் இடது புறம் திரும்பி யார் என்று பார்க்க... அங்கு யாரும் இல்லாமல் போக... மீண்டும் அவளின் அழகை ரசிக்க திரும்பியவனுக்கு தூக்கி வாறி போட்டது....
கலைந்த கேசத்துடன்... சோர்ந்த முக பாவனையுடன்... கருவளையம் பூண்ட கண்களுடன்.... கன்னத்தில் எதோ கீறல் இருந்து அதில் ரத்தம் வடிய.... அவள் இவனை நோக்கி உதவி கேட்க கை நீட்டும் நேரம்.... அவளின் கேசத்தை கருத்த ஆடை அணிந்த ஒருவரின் கை பற்றி கொண்டு மீண்டும் மாடிக்கு இழுத்து சென்றது... நடப்பவற்றை உணரும் நேரம்....
எதோ ஒரு பயங்கர ஒளி... அவனுக்கு மிகவும் பரிட்சயமான ஒளி.... அதுவும் அவனுக்கு மிகவும் அருகில் ஒளிக்க
கண் விழித்தால்... அலறி கொண்டு இருந்தது அவனின் கை பேசி....
"ரொம்ப சாலிசிக்காதடா... இன்னும் பத்து நிமிஷத்தில் உன் முன் நிற்பேன் பார்" என்று கூறி விட்டு கைபேசியை அனைத்தவனுக்கு... மனம் முழுதும் அந்த கனவின் நினைவு தான் இருந்தது
"யார் அவள்... நாம் கனவில் ஏன் வர வேண்டும்... நொடி பொழுதில் அவளின் தோற்றம் ஏன் மாறியது? " கேள்விகள் பல வாறு அவன் மனதில் எழ.... அதற்குள் பேருந்து நிலையத்தை அடைந்தது அவனின் பேருந்து....
"குன்னூர் பேருந்து நிலையம்" பெரிய பலகையுடன் காட்சி தந்தது அவ்விடம்....
இறங்கியவன் விக்ரமை கண்டு கொண்டு... நீண்ட நாள் கழித்து கண்ட நண்பனை பார்த்த உச்சாகத்தில் அவனை கட்டி அனைத்தவன்... அவன் வண்டியில் ஏறி கிளம்பினான்....
(அருள்:வயது முப்பத்து....குன்னூருக்கு மாற்றலாம் ஆகி வந்து இருக்கும் அவ்வூரின் இன்ஸ்பெக்டர்....
விக்ரம் :குன்னூரில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணி புரியும் டாக்டர்..... அவ்விடத்தின் சூழல் பிடித்து போக... அங்கேயே பணி புரிந்து வருகிறான்... )
"என்னடா எதுவும் பேசாம அமைதியா வர...'
"ஒன்னும் இல்லடா கனவுல ஒரு பொண்ண பார்த்தேன்... அவ நியாபகமாவே இருக்கு"
"இத்தனை நாள் கனவுல பேய் வருது பிசாசு வருதுனு சொல்லுவா... இப்போ பொன்னும் வர ஆரம்பிச்சிட்டாலா" சலித்து கொண்டு வண்டியின் வேகத்தை கூட்டினான் அவன்...
(ஆம் அருளிற்கு கனவுகள் வருவது புதிதல்ல.... அவன் சிறு வயது முதலே கொடூரமான கனவுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது... முதலில் அதற்கு பயந்தவன்.... பின் நாளில் அது அவனுக்கு பழகி போக... அவை அவனின் வாழ்வின் அங்கமாகி போயின....)