கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கருவூலக்காதல் - டீசர்

Poornima Karthic

Moderator
Staff member
உலகம் தூங்கும் வேளையில் தூங்கி, சூரியன் விழித்தெழும் வேலையில் எழுந்து கொள்ளும் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இருந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சிக் காலமது!


முகநூலின் மூச்சடைப்பின்றி
புலனத்தின் புதைகுழியின்றி
அலைபேசியின் அலட்டலின்றி
தொலைபேசியின் தொல்லையின்றி இருந்த
தொண்ணூறுகளின் காலமது!

வாஷிங் பவுடர் நிர்மாவா? வெள்ளையழுகு கொள்ளையழகு பொன்வண்டா? எந்த சோப்பைத் தேர்ந்தெடுப்பது என இனிய குழப்பமிருந்த காலமது!

ஆசை மிட்டாயை ஆசையோடு தின்று
ஆவலாய் அதன் சட்டையைப் பிடித்து ஆகும் மட்டும் இழுத்து நீளமாக்கி
அசத்தலான பரிசுக்காய் காத்திருந்த காலமது!

பெருஞ்சிக்கலாய் இருந்தது
பேராவலோடு கேட்கும்
பாடல் காசெட்டின் நாடா
பாதை மாறி சிக்கிக் கொள்வதே.

பெண்களுக்கென பிரத்தியேகமாக
பெருமையுடன் வெளிவந்த
பெண்பறவை மிதிவண்டி (லேடிபேர்ட்
சைக்கிள்) காலமது.

குட்டி நாயை மிதிவண்டியின்
கூடையில் வைத்து பறப்பது போன்ற
கனவு கன்னியர் நெஞ்சில் வாழ்ந்த காலமது!

பல அறிவியல், சமூக மற்றும் குடும்ப மாற்றம் அடைந்து பெரும் சிறப்பு வாய்ந்த காலமே நம் கதை நகரப் போகும் காலம்.

1990's கதாநாயகனும், நாயகியும் அவர்களுடனே ஒரு பெரிய 90's கிட்ஸ் பட்டாளம். அவர்கள் வாழ்வும் காதலும் குடும்பமும் எப்படி இருந்திருக்கும். கதையோடு பார்க்கலாம் வாங்க!


*******

"தங்கம், ஏன்மா எனக்கு இப்படி ஒரு கஷ்டமான காரியத்தை குடுத்துட்டுப் போயிட்டியே. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்யறதுக்கு பதில், ரெண்டு கழுதைங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிருந்தா இந்நேரம் ஜாம் ஜாம்னு கழுதைக் குட்டி பிறந்திருக்கும்" என தாத்தா முத்துராசு புலம்பிக் கொண்டிருந்தார்.

சே இந்த சிடுமூஞ்சி, உம்முணாமூஞ்சிக்கிட்ட எப்படி காதலை சொல்லி...கல்யாணம் செஞ்சு...ஹம்ம் - இது நாயகி மகிழினியின் புலம்பல்.

இப்படி இரண்டு பேரையும் புலம்ப வைத்துவிட்டு நம்ம கதாநாயகன் பார்த்திபன் ஆவலாக ஒவ்வொரு பலாச்சுளையாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.


கருவூலக் காதல்- காதலை செலவழியுங்கள் இது தாங்க தலைப்பு. காதலை எப்படி செலவழிக்கிறதுன்னு யோசிக்கிறீர்களா? கதை மாந்தர்கள் சொல்லித் தருவாங்க காத்திருங்கள்.‌ விரைவில் அத்தியாயம் ஒன்று பதிவிடப்படும்
 
அட... அசத்தலான தொடக்கம் சகோதரி... தொன்னூறுகளின் மறக்க முடியா இன்பத் தருணங்களை மனதில் ஓட விட்டு மகிழ்வித்ததற்கு முதலில் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அழகான தலைப்பு- கருவூலக் காதல்.
காதலை செலவழியுங்கள் - நல்ல கேப்சன். எழுதுங்கள் தொடர்ந்து...
வாழ்த்துகள்💐💐💐
 
Top