கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாயவிசை .....அத்தியாயம் 05.

Arjun

Moderator
Staff member
காதலின் மாய விசை 05

மாய குன்றானது முழுவதுமாக தகர்க்கப்பட்டவுடன் முக்தா சிவியை கிழக்கு பக்கம் நோக்கி வேகமாக செலுத்த ஆரம்பித்தாள். பருவியில் பறந்து வந்த குழலியும் இவர்களை பின் தொடர்ந்தாள். அனைவரின் எண்ண ஓட்டமும் வெவ்வேறாக இருக்க இவர்களின் நீண்ட தூர பயணம் அமைதியாக கழிந்தது.

நீண்ட தூரம் பயணித்தவர்கள் கானகத்தின் நடுவே இருந்த மிக பெரிய நீர்வீழ்ச்சியின் அருகே முக்தா சிவியை நிறுத்தினாள். குழலியும் சிவியின் அருகே பருவியை தரையிறக்கினாள். நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீரானது பெரிய பெரிய பாறைகளில் மோதி நதியை போன்று பாய்ந்து சென்று கொண்டிருந்தது. குழலியின் புறம் திரும்பிய முக்தா "குழலி நம்மை யாரேனும் பின்தொடர்கின்றனரா"..

குழலி "இல்லை இளவரசி பறந்து வரும் போது சுற்றிலும் கவனித்து கொண்டுதான் வந்தேன் நம்மை யாரும் பின்தொடர்வதாக தெரியவில்லை".

முக்தா சுற்றுப்புறத்தை ஒரு முறை நோக்கிவிட்டு சித்தார்த், முகிலன் புறம் திரும்பி பெண்கள் நாங்கள் வலது புறம் உள்ள பாறைக்கு பின்னால் சென்று குளித்து விட்டு வருகிறோம். நீங்கள் இருவரும் இடது புறம் சென்று குளித்து விட்டு உங்கள் வாருங்கள் என்று கூறிவிட்டு சஞ்சனாவை கூட்டி கொண்டு சென்று விட்டனர். சிவியும் நதியில் இறங்கி தன் தும்பிக்கையால் நீரை எடுத்து தன் மீது பாய்ச்சி விளையாட ஆரம்பித்தது.

அனைவரும் தங்கள் வேலைகளை முடித்து கொண்டு வந்தவுடன் கிளம்ப தயாராகினர். முகிலன் "இளவரசி இப்ப நாம எங்க போறோம். நாங்க போக இருந்த அந்த ஒரு பாதையையும் அந்த அரக்கர்கள் உடைச்சுட்டாங்க எங்கள எப்படி எங்க உலகத்துக்கு அனுப்புவீங்க"..

முக்தா" நீங்கள் எதை பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். உங்களை வேகமாக உங்கள் உலகத்திற்கு அனுப்புவது என்னுடைய பொறுப்பு."..

முக்தா முகிலனிடம் பேசிவிட்டு சிவியின் மீது ஏற போக ஒரு கோடாரியானது வேகமாக வந்து சிவியின் மீதுபட்டு நொறுங்கி விழுந்தது. உடனே அனைவரும் சுற்றுப்புறத்தை நோக்க நான்கு புறங்களிலும் அரக்க வீரர்கள் எட்டு பேர் சுற்றி வளைத்தவாறு தாக்க ஓடி வந்தனர். அனைவரும் பார்க்க பத்தடி உயரத்தில் வலுவான தேகத்துடன் வவ்வாலின் முகம் போன்ற முக அமைப்புடனும் நீண்ட காதுகளோடும் இருந்தனர். அனைவரின் முகமும் பார்க்க ஒரே போல் இருந்தாலும் ஓவ்வொருவரும் மனிதனை போன்று வித்யாசமான வெவ்வேறு முக அமைப்பில் இருந்தனர். அவர்களின் உடலெங்கும் இளஞ்சிவப்பு நிறத்தில் வளர்ந்திருந்த ரோமங்களும் கூட வளர்ந்திருக்கும் விதம் ஒருவருக்கொருவர் மாறுபட்டிருந்தது. எட்டு பேரும் கால்சட்டை மட்டுமணிந்து கையில் கோடாரி கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி வெறி பிடித்த மிருகத்தை போன்று ஓடி வந்தனர்.

அரக்கர்களை கண்ட சித்தார்த், சஞ்சனா, முகிலன் மூவரும் மிரண்டு செய்வது அறியாது நின்றனர். குழலி பருவிக்கு சைகை செய்ய பருவி உடனே பறந்து சென்று நீர்வீழ்ச்சியின் மீது அமர்ந்து கொண்டது. முக்தா குழலியிடம் "குழலி இவர்கள் மூவரையும் சுற்றி அரணாக நின்று சண்டையிடு" என்று கூறிவிட்டு சிவியின் புறம் திரும்பி "சிவி ஒருவரையும் உயிரோடு விடாதே".. என்று உணர்ச்சி பொங்க கத்தினாள். பின் முக்தா வேகமாக தன் இடுப்பின் இரு புறமும் சொருகி வைத்திருந்த இரு சிறு கூர்வாளையும் இருக்கரங்களால் எடுத்தாள். இரு கூர்வாளையும் அரக்கர்கள் இருவரின் கழுத்தின் மீது குறி வைத்து தூக்கி ஏறிய அரக்கர்கள் இருவரும் கழுத்தில் கத்தி பாய்ந்து அதே இடத்தில் சுருண்டு விழுந்தனர்.

பின் தன் உறையிலிருந்து வாளை எடுத்த முக்தா மற்றவர்களுடன் ஆக்ரோஷத்துடன் சண்டையிட தொடங்கினாள். குழலியும் தன் வாளை அரக்கர்களின் உடம்பில் ஓடும் பச்சை நிற குருதியால் சுத்தம் செய்ய தொடங்கினாள். சிவியோ தன் சிங்க பாதங்களில் உள்ள நகங்களால் அரக்கர்களின் உடலை துண்டு துண்டாக கிழித்தது. அரக்கர்கள் பலமானவர்களாக இருந்தாலும் போர் பயிற்சி இன்றி வெறும் உடல் பலத்தை மட்டுமே நம்பி சண்டையிட கூடியவர்கள். எனவே முக்தா, குழலியின் வாள் சுழற்றும் வேகத்திற்க்கு ஈடாக அரக்கர்களால் கொஞ்சமும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

தன் குழுவிலுள்ள அனைவரும் வீழ்ந்து கொண்டிருந்ததும் ஒரு அரக்கன் எதிர்பாரா நேரம் தூரத்திலிருந்து தன் கோடாரியை முக்தாவை நோக்கி வீசி எறிந்தான். இதை கண்ட சித்தார்த் செய்வதறியாது திகைத்தவன் வேகமாக ஓடி வந்து அந்த கோடாரியை தன் மார்பில் தாங்கினான். சித்தார்த் தன் மீது பட வேண்டிய கோடரியை தான் தங்கியதை கண்ட முக்தாவின் வெறி பன்மடங்காக அதிகரிக்க சூறாவளியை போன்று தன் வாளை சுழற்ற ஆரம்பித்தாள். காற்றில் எவர் கண்ணுக்கும் புலப்படாத வேகத்தில் சுழன்ற வாள் தன் அருகில் இருந்த அரக்கர்களின் தலையை உடலைவிட்டு பிரித்து எடுத்தது. முக்தா தன் அருகே இருந்த அரக்கர்களை கொன்று விட்டு சித்தார்த்தை தன் மடியில் தாங்கினாள்.

சித்தார்த்தின் மார்பில் பாய்ந்திருந்த கோடரியால் வலியில் துடித்துக் கொண்டிருக்க முக்தா மீது கோடரியை தூக்கி எறிந்த அரக்கன் மீண்டும் இவர்களை தாக்க ஓடி வந்தான். சித்தார்த்தின் தலையை மெதுவாக தரையில் சாய்த்த முக்தா அரக்கனை நோக்கி விரைந்து சென்றாள். அந்த அரக்கன் முக்தாவின் முகத்தில் குத்த போக குனிந்து தப்பிய முக்தா தனது வாளை அரக்கனின் முதுகு புறத்தின் வழியாக அரக்கனின் வயிற்றில் சொருகினாள். தன் உடலில் வாள் பாய்ந்தவுடன் அரக்கன் நிற்க்க முடியாமல் மண்டியிட தன் வாளை அவன் வயிற்றிலிருந்து உருகியவள் அடுத்த நொடியே அவனின் தலையை உடலிலிருந்து துண்டித்தாள்.

அரக்கர்கள் அனைவரும் இறந்தவுடன் வேகமாக சிவியின் அருகில் சென்ற முக்தா சிவியின் மீது கட்டி இருந்த துணிப்பையிலிருந்த நிலவு மலரை எடுத்து கொண்டு சித்தார்த் அருகில் சென்றாள். சித்தார்த்தின் தலையை தன் மடியில் வைத்த முக்தா அவனின் மார்பிலிருந்த கோடரியை மெதுவாக எடுக்க தொடங்க சித்தார்த் வலியில் கதற தொடங்கினான். சித்தார்த்தின் கதறல் ஏனோ முக்தாவிற்கு தன் உடலிலிருந்து உயிரை பறிப்பதை போன்ற வலியை கொடுத்தது.

கொடியிலிருந்து பறித்த பின்னும் வாடாமல் இப்பொழுதும் பிரகாசத்துடன் இருந்த நிலவு மலரை முக்தா சித்தார்த்தின் மார்பின் மீது வைத்து தடவினாள். நிலவு மலரின் ஒளி பட்டவுடன் சித்தார்த்தின் காயமானது தானாக குணமாக தொடங்கியது. சிறிது நேரத்தில் காயம் இருந்த தடமே தெரியாமல் காயம் முழுவதும் குணமானவுடன் சித்தார்த்தை மெதுவாக பாறையில் சாய்த்தவாறு அமர செய்தாள். காயம் ஆறுவதற்கு முன்பு அனுபவித்த வலியாலும் அதிக அளவிலான குருதி வெளியேறியதாலும் சித்தார்த் சோர்வுடன் இருந்தான்.

சித்தார்த் இரண்டாவது முறையாக தன் உயிரை காப்பாற்றியுள்ளான் என்பதால் முக்தா என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியுடன் நின்றாள்.. சித்தார்த் நிலவு மலரின் உதவியால் சற்று நிதானமடைய அவனது விழிகள் தன் நண்பர்களை தேடியது. ஆனால் அவர்கள் இருவரும் எங்குமில்லாமலிருக்க முக்தாவிடம் "எங்க என்னோட நண்பர்கள்" என்று கேட்ட பிறகே முக்தாவும் குழலியும் அவர்கள் இருவரும் இல்லாததை கவனித்தனர்.

முக்தா குழலியிடம் கூறி தேட சொல்லிவிட்டு அவளும் தேட எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. சித்தார்த் மனதில் பயம் தொற்றிக்கொள்ள கஷ்டப்பட்டு எழுந்து நின்றவன் தன் நண்பர்களின் பெயரை சத்தமாக சொல்லி கூப்பிட்டவரே சுற்றி திரிந்தான். ஆனால் எங்கு தேடியும் அவனுக்கு முகிலனின் பேக்கை தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.

சித்தார்த் அந்த பேக்கை எடுத்து கட்டிபிடித்தவனின் விழிகளில் நீர் கசிய "முகி சஞ்சு ப்ளீஸ் இனிமே நா இப்படி ரிஸ்க் எடுக்க மாட்டேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கு விளையாடாம வெளியே வந்துருங்க" என பிதற்றிக் கொண்டிருந்தான். முக்தாவும் குழலியும் சித்தார்த்தின் அருகில் என்ன செய்வது என புரியாமல் நின்று கொண்டிருந்தனர்.

சித்தார்த் தன் நண்பர்கள் எங்கே என அறியாமல் தவித்துக் கொண்டிருக்க திடிரென அவர்களின் அருகே பாறைகள் நொறுங்கும் சத்தம் கேட்டது. மூவரும் உடனே திரும்பி பார்க்க இவர்களின் அருகே ஆறடி உயரதிலிருந்த ஒரு பாறையானது மெது மெதுவாக கை கால்கள் உருவாகி ஆறடி உயரமுள்ள மனிதனை போன்று உருமாறியது. பாறை மனிதனை போன்று உருமாறுவதை கண்ட குழலியும் முக்தாவும் பாறையை விட்டு தள்ளி நின்று தாக்க தயாராக மூவரையும் கண்டு பாறையானது பலமாக சிரித்தது. பாறையின் முகத்தில் கண் இருக்கும் இடத்தில் பெரிய துளையிருக்க அதில் சிவப்பு நிறத்தில் பிரகாசமான ஒளி வீசியது. மனிதனாக மாறிய பாறை சித்தார்த்தை பார்த்து "மனித ஜந்துவே நீ இங்கு எவ்வளவு கதறியும் பயனிலில்லை. ஏனென்றால் உன் நண்பர்கள் இருவரும் சுவான் ராஜ்ஜியத்தில் என் கைதிகளாக பத்திரமாக உள்ளனர்.

பாறை கூறியதை கேட்ட சித்தார்த் கோபத்துடன் பாறையின் அருகில் நெருங்கி "டேய் யாருடா நீ..? என்னோட நண்பர்கள ஏன்டா கடத்துன..?".. என்று கோபத்துடன் பாறையை தாக்க நினைத்து பாறையின் மீது கை வைக்க சித்தார்த் கரன்ட் அடித்ததை போன்று பத்தடி தள்ளி விழுந்தான்.

சித்தார்த் கீழே விழுந்தவுடன் முக்தா விரைந்து சென்று சித்தார்த்தை தூக்கினாள். இதை கண்டு சிரித்த பாறை உருவமானது "நீ என் எதிரியின் உயிரை இரு முறை காப்பாற்றி மாபெரும் தவறு செய்துவிட்டாய். அதற்க்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும். நீ முடிந்தால் வரும் பௌர்ணமிக்குள் என்னை தேடி சுவான் ராஜ்ஜியத்திற்கு வந்து நான் யாரென அறிந்து உன் நண்பர்களை காப்பாற்றி கொள். அதுவரை நான் அவர்களை எதுவும் செய்ய மாட்டேன்.".. என கூறிவிட்டு பாறையானது சிரிக்க அதன் கண் துளைகளிலிருந்த சிவப்பு நிற ஒளியானது மறைந்தது. சிவப்பு நிற ஒளி மறைந்தவுடன் பாறையானது சிரித்துக்கொண்டே சுக்குநூறாக உடைத்து விழுந்தது.

பாறை உருவம் கூறியதை கேட்ட சித்தார்த் பிரம்மை பிடித்தவன் போலிருக்க முக்தா சித்தார்த்தின் அருகில் வந்து ஆறுதலாக தோளில் கை வைத்தாள். சித்தார்த் கோபமாக முக்தாவின் கையை தட்டி விட்டவன் "எல்லாம் உன்னாலதா நீ அந்த பூவ திருடாம இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்காது. உண்மைய சொல்லு யாரு இந்த ஜந்துங்க..? அப்பொறம் அந்த பாறை மனுஷன் யாரு..? . உனக்கும் அவுங்களுக்கு என்னதா பிரச்சனை" என்று கோபமாக கத்தினான்.

சித்தார்த் முக்தாவிடம் கோபமாக பேசுவதை கண்ட குழலி "என்ன துணிச்சலிருந்தால் இளவரசியிடம் அவமரியாதையாக நடந்து கொள்வாய் இப்போது உடனே நீ இளவரசியிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் உன் உயிர் உனதல்ல".. என்று கூறிக்கொண்டே வாளோடு நெருங்க சித்தார்த் குழலியை முறைதவாறு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு குழலியின் வாளின் முன் வந்து நின்றான்.

விரைந்து வந்து குழலியின் கரத்தினை பிடித்த முக்தா கடுமையான முகத்துடன் "குழலி நிறுத்து இவர் என் உயிரை காப்பாற்றியவர் நீயே பார்த்தாய் அல்லவா என்னுயிரை காக்கா தன்னுயிரை பற்றி கவலைபடாமல் அரக்கர்களின் கோடரியை தன் மார்பில் வாங்கினார். இன்று மட்டுமல்ல நேற்று இரவும் இவர் இல்லையென்றால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். நேற்று இரவு நிலவு மலரை எடுக்க சென்ற நான் மந்திர மரத்தின் வேரில் மிதி பட்டு இருந்த இடம் தெரியாமல் போயிருப்பேன். அப்போதும் இவர் தான் என்னை காப்பாற்றியது" முக்தா கூறியதை கேட்ட குழலி வாளை தன் உறைக்குள் வைத்தாள்.

முக்தா சித்தார்த்த்தை நோக்கி "குழலியின் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அந்த பாறை மனிதனை பற்றி உண்மையாக எங்களுக்கு ஒன்றும் தெரியாது"..

சித்தார்த் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு சரி இங்க என்ன நடக்குது..? அந்த அரக்கர்கள் யாரு..? நீங்க எல்லாம் யாரு..? இங்க என்னதா நடக்குது உங்களுக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லுங்க.".. என கூறிவிட்டு தன் கூரிய விழிகளால் இருவரையும் பார்த்தான்.

முக்தா ஆழ்ந்து சுவாசித்தவள் "எங்களை பற்றி கூறுவது இருக்கட்டும் நீங்கள் மூவரும் யார்? மனிதர்கள் யாரும் உள்ளே நுழைவதற்கே அஞ்சும் கானகத்திற்குள் நீங்கள் ஏன் வந்தீர்கள் அதுவும் முக்கியமாக பௌர்ணமி இரவில் அங்கு வந்ததற்கு காரணம் என்ன?"..

முக்தா கேள்வி கேட்டவுடன் கடுப்பான சித்தார்த் வேறு வழியின்றி தன் நண்பர்களுக்காக அமைதியாக பல்லை கடித்து கொண்டு தாங்கள் மூவரும் எப்படி மதிகெட்டான் சோலைக்குள் வந்தோம் என்பதை பற்றிக் கூறியவன். "முக்தா எங்களுக்கு நேத்து பௌர்ணமின்னு தெரியாது. நாங்க எதார்த்தமாதா வந்தோம்"..

சித்தார்த் கூறுவதை நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்த குழலி "இளவரசி எனக்கு இவன் கூறுவதில் சிறிதும் நம்பிக்கையில்லை. அது எப்படி சரியாக பௌர்ணமி அன்று இவன் இந்த காட்டிற்குள் வந்துள்ளான்"..

குழலி கூறியதை கேட்ட சித்தார்த் விழிகள் அனல் கக்க கோபத்துடன் சினம் கொண்ட சிங்கமாய் "இங்க நான்தா பாதிக்க பட்ருக்கேன். நீங்க என்னடான்னா என்னை கேள்வி கேட்டது மட்டுமில்லாம நா சொல்லுறத பொய்ன்னு வேற சொல்லுறீங்க".. என்று கோபத்துடன் அந்த காடே அதிரும்படி கர்ஜனையை கத்தினான்.

முக்தா குழலியை முறைத்தவள் சித்தார்த் புறம் திரும்பி "சித்தார்த் நான் உங்களை நம்புகிறேன். எனக்கு உங்களின் மீது எந்தவொரு சந்தேகமுமில்லை. உங்கள் நண்பர்களை எப்படியாவது கண்டுபிடித்து உங்களிடம் ஒப்படைத்து விட்டு உங்கள் மூவரையும் நான் பாதுகாப்பாக உங்கள் உலகத்திற்கு அனுப்பி வைக்கிறேன்".. என கூற சித்தார்த்தின் மனது சற்று நிம்மதி அடைந்தது.

சித்தார்த் முக்தா பேசியதை கேட்டு சற்று அமைதியானவன் "சரி இப்ப நீங்க சொல்லுங்க இங்க என்னதா நடக்குதுன்னு. எனக்கு ஒன்னும் புரியாம மண்டையே வெடிச்சிரும் போல இருக்கு".. என்று கூற முக்தா தங்களை பற்றி கூற ஆரம்பித்தாள்.

சித்தார்த் முக்தாவின் பதிலிருக்காக காத்திருக்க முக்தா பேச தொடங்கினாள் "சித்தார்த் நீங்கள் வாழும் உங்கள் உலகத்தை போன்று இன்னும் பல உலகங்கள் உங்களை சுற்றி உள்ளன. அந்த உலகங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. இதில் பல உலகங்கள் உங்கள் அருகில் இருந்தும் நீங்கள் பார்க்க முடியாதவாறு வெவ்வேறு பரிமாணத்தில் உள்ளது. அதை போன்றே நீங்கள் இது வரை அறிந்திருக்காத பல உலகங்களில் ஒன்று தான் நாங்கள் ஆதிவனம் என்று அழைக்கும் இந்த மாய உலகமான சார்ஸ்ட்டின்.

நீங்கள் வாழும் அதே உலகத்தில் தான் எங்கள் முன்னோர்களும் வாழ்ந்தார்கள். சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தெற்க்கு திசையில் பரந்து விரிந்திருந்திருக்கும் சமுத்திர அன்னையின் மடியில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமானது தவழ்ந்து கொண்டிருந்தது. அந்த மிக பெரிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் வாழ்ந்த பல நகரங்களில் குமரி ஆற்றின் அருகே செல்வ செழிப்பிலும், கட்டிட கலையிலும், போர் கலைகளிலும் சிறந்து விளங்கிய நகரம் தான் எங்கள் தென் மதுரை.

நீங்கள் வாழும் உலகத்தில் முதன் முதலில் மனிதனின் கலாச்சாரம் ஆரம்பித்த இடம் நீங்கள் வந்த கானகத்திலிருந்து தெற்கே ஆயிரகணக்கான மையில்களை தாண்டி இருந்த மதுரையில்தான். அங்கு செல்வ செழிப்புள்ள பல நகரங்கள் மதுரையை தலை நகராக கொண்ட பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தன.

அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் பல கலைகள் கற்றவராகவும் செல்வ செழிப்பு மிக்கவராகவும் நோயற்ற வாழ்வு கொண்டவராகவும் இருந்தனர். உழைப்பும் மகிழ்ச்சியுமாய் சென்று கொண்டிருந்த அவர்களின் இயல்பு வாழ்வை திடீர்ரென உண்டான கடல் கொந்தளிப்பும் கடல் மட்ட உயர்வும் அச்சுறுத்தியது. அந்த நேரத்தில் தான் பார்ப்பதற்கு சாதாரண மனிதரை போன்று இருந்தாலும் உடலிலுள்ள தோலானது சிவப்பு நிறத்தில் இருக்க மூன்று அடி உயரத்தில் மாய சக்தி கொண்ட சுவான் இன மனிதர்கள் தென் மதுரை நகருக்கு வந்தனர். சுவான் இளவரசன் தென் மதுரையை ஆட்சி செய்த இளைய வேந்தனிடம் சென்று ஒரு உதவி வேண்டினார். சார்ஸ்டினில் உள்ள சுவான் இன மக்கள் பைஜர் என்னும் அரக்க இனத்தால் சொல்ல முடியாத அளவு துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்றும் பைஜர் அரக்கர்களை எங்களால் தனித்து எதிர்க்க முடியவில்லை அதனால் உங்களது உதவியை நாடி வந்தோம் என்றும் கூறினார்.

பிற உலகத்து மக்களுக்காக ஏன் நமது வீரர்களை இழக்க வேண்டும் என்று தென் மதுரை அரசர் இளைய வேந்தன் யோசித்தார். ஆனால் சுவான் இன இளவரசர் கூறிய செய்தி இளைய வேந்தனை அதிர்ச்சி அடைய செய்தது. சுவான் இன மக்கள் இளைய வேந்தனிடம் தென் மதுரை மட்டுமின்றி சுற்றி இருக்கும் பல நகரங்கள் மிக பெரிய ஆழி பேரலையால் குறுகிய நாட்களில் கடலுக்குள் மூழ்க போகிறதென்று தங்கள் மாயா சக்தியால் கணித்து கூறினார்கள். சுவான் இன மக்கள் கூறிவதை இளைய வேந்தன் நம்ப வேண்டாம் என்று எண்ணினாலும் முன்பெல்லாம் இல்லாமல் இப்போது மட்டும் அடிக்கடி உண்டாகும் கடல் மட்ட உயர்வும் கடல் கொந்தளிப்பும் இளைய வேந்தனை யோசிக்க செய்தது.

ஆனால் வேறு எந்த ராஜ்ஜியமும் சுவான் இன மக்கள் கூறியதை நம்பவில்லை. பின் இளைய வேந்தன் தன் திறமை மிகுந்த பல வீரர்கள் அடங்கிய ஒரு படையை சுவான் இன மக்களுக்கு உதவ அனுப்புவதாகவும் அதற்க்கு பதிலாக தங்களின் ராஜ்ஜியம் கடலன்னையால் ஆட்க்கொள்ளப்படும் நிலை வந்தால் எங்கள் மக்கள் வாழ தகுந்த இடத்தை உங்கள் உலகில் அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்.

சுவான் இனத்தின் இளவரசர் ஒப்பந்தத்தை ஏற்று கொண்டவுடன் இளையவேந்தன் பலம் வாய்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட யாளி மிருகங்களை கொண்ட மிக பெரிய படையை தயார் செய்தார். பின் சுவான் இன இளவரசர் தன் உள்ளங்கையை வாளால் கீறி வெள்ளை நிறத்தில் வைரமென ஜொலிக்கும் தன் உதிரத்தை காற்றில் வீசி மந்திர வார்த்தைகளை உச்சரித்தார். சுவான் இளவரசர் மந்திர வார்த்தைகளை கூற வெட்ட வெளியாக இருந்த இடத்தில் தீடிரென செந்நிற ஒளியோடு மிக பெரிய பாதை ஒன்று உருவானது.

இளைய வேந்தன் சுவான் இன இளவரசரை தன்னோடு பணயமாக வைத்து கொண்டு தன் படைகளை மட்டும் சார்ஸ்டினிற்க்கு அனுப்பினார். இளைய வேந்தரின் படையுடன் சுவான் இன வீரர்களும் இணைந்து போராடினர்கள். பைஜர் இன அரக்கர்கள் பலமானவர்களாக இருந்தாலும் அவர்கள் யாளியின் மூர்க்க தனத்தை கண்டு அஞ்சவே செய்தனர். யானையையே ஒரே அடியில் வீழ்த்த கூடிய யாளியின் முன்னாள் பைஜர் இனத்து வீரர்களால் மட்டும் என்ன செய்ய முடியும்.

தொடர்ந்து இருபத்தியொரு நாள் நடந்த மிக பெரிய போரானது முடிவுக்கு வந்தது. போரில் பைஜர் இனத்து வீரர்கள் தோற்கடிக்க பட்டனர். பின் பைஜர் இனத்து மக்கள் அனைவரையும் சுவான் இனத்து வீரர்கள் கொல்ல முயன்றனர். ஆனால் போரில் வீரரின் குருதியை தங்கள் வாளுக்கு இரையாக்குவதே வீரமே தவிர அப்பாவி மக்களை கொல்வது வீரமுமல்ல தமிழரின் மரபுமல்ல என்பதால் இளைய வேந்தரின் தளபதி செங்குன்றன் சுவான் இணைத்து மக்களை தடுத்து நிறுத்தினார். பைஜர் இனத்து வீரர்களை என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் ஆனால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக கூறினார். எனவே சுவான் மக்களின் அரசர் பைஜர் இனத்து மக்களை நீண்ட தூரத்திலுள்ள ஆபத்தான மாயவிலங்குகள் நிறைந்திருக்கும் கடலின் நடுவே உள்ள ஒரு தீவில் தங்களின் மந்திர சக்தியால் சிறை வைத்தார்.

ஒப்பந்தம் செய்து கொண்டதன்படி சார்ஸ்டினில் பைஜர் இனத்து மக்கள் வாழ்ந்த பகுதி முழுவதையும் சுவான் இன இளவரசர் இளைய வேந்தருக்கு கொடுத்தார். அது மட்டுமின்று இளைய வேந்தரின் கோட்டையின் நுழைவு வாயிலை சுற்றி சுவான் இனத்து இளவரசர் தன் குருதியை கொண்டு மந்திர எழுத்துகளை செதுக்கினார். பின் இளைய வேந்தர்க்கு மட்டும் ஒரு சில மந்திர வார்த்தைகளை கற்றுகொடுத்தார். இளைய வேந்தர் சுவான் ராஜ்ஜியத்தின் இளவரசனிடம் மற்றொரு ஒப்பந்தம் செய்து கொண்டார். தங்களின் மக்கள் சார்ஸ்டின் உலகிற்குள் வந்தாள் சுவான் ராஜ்ஜியம் எப்போதும் எங்களின் மீது போர் தொடுக்க கூடாது என்று கேட்டுக் கொண்டார். சுவான் இளவரசரும் இளைய வேந்தரிடம் "அரசே நான் மட்டுமல்ல என்னுடைய சந்ததிகள் யாரும் உங்கள் மக்களை தாக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக எங்களின் அரச குடும்பத்தால் உங்களின் வாரிசுகள் யாருக்கும் எந்தவொரு தீங்கும் உண்டாகாது. அப்படி எங்களின் சந்ததியை சேர்ந்த யாரவது உங்களின் வம்சத்தினரை கொலை செய்தால். அவர்களின் சக்தி முழுமையாய் பறி போய்விடும் என்று வாக்களிக்கிறேன்".. சுவான் இளவரர் கூறியதை கேட்ட இளைய வேந்தரின் மனம் நிம்மதி அடைந்தது.

இளைய வேந்தர் சுவான் இளவரசர் கூறிய மந்திர வார்த்தையை கூறியவுடன் கோட்டையின் வாசலில் சார்ஸ்டின் உலகத்திற்கு செல்வதற்கான நுழைவு வாயிலானது திறந்தது. பின் உங்கள் கோட்டைக்கு ஆபத்து வந்து சிதைக்கப்பட்டால் சார்ஸ்டின் உலகத்திற்கு செல்ல இருந்த வேறு ஒரு பாதையான கானகத்திலுள்ள நீங்கள் மூவரும் வந்த பாதைக்கு செல்வதற்கான வரைபடத்தையும் கொடுத்தார். ஆனால் அந்த பாதையின் வழியாக பௌர்ணமி நாளில் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் கூறினார். அது மட்டுமின்றி பௌர்ணமி இரவில் மட்டுமே அந்த கானகத்திற்குள் நுழைய வேண்டும் என்றும் மற்ற நாட்களில் அந்த கானகம் மிகவும் ஆபத்தானது என்றும் அறிவுரையை கூறிவிட்டு சார்ஸ்டினில் உள்ள தங்கள் தீவிற்கு சென்று விட்டார்.

இளைய வேந்தர் சார்ஸ்டின் ராஜ்ஜியத்தில் தங்களுக்கான ஒரு சிறிய நகரத்தை உருவாக்க ஆரம்பித்தார். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் கடலன்னையால் எந்த ஒரு ஆபத்தும் வரவில்லை என்ற உடன் சுவான் இனத்தின் இளவரசரை நம்பி தேவையின்றி நமது படைகளை நாமே பலிகொடுத்து விட்டோமோ என்று இளையவேந்தர் வருந்தினார். மக்களும் அரசர் அவசரப்பட்டு நம் வீரர்களை பலிகொடுத்து விட்டார் என்று பேச தொடங்கி விட்டனர். இளைய வேந்தரிடம் தனியாக மந்திர உலகில் ஒரு ராஜ்ஜியம் இருக்கிறது என்றும் அங்கு பல பொக்கிஷங்கள் உள்ளன என்றும் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. அந்த பொக்கிஷங்களை அடைய சிற்றரசுகள் பல போர் கொடி தூக்கின அதையும் சமாளிக்க முடியாமல் இளைய வேந்தர் திண்டாடினார்.

அந்த சமயத்தில் தென் திசையில் பல நகரங்கள் கடலுக்குள் மூழ்கி விட்டன என்றும் மக்கள் பலர் மடிந்து விட்டனர் என்றும் செய்தி காட்டு தீயை போல் பரவி இளைய வேந்தரின் முடிவு சரியானது என்று மக்கள் அனைவரையும் எண்ண வைத்தது. அதே நேரத்தில் தங்களின் எதிரி நாட்டு சிற்றரசர் மந்திர வாயிலிக்காக தங்களை தாக்க வருவதாக ஒற்றன் மூலமாக தகவலும் வந்தது. தகவல் வந்தவுடன் மறுநாளே இரவோடு இரவாக இளைய வேந்தர் தங்கள் மக்கள் அனைவரையும் சார்ஸ்டினில் உருவாக்கிய நகரத்திற்கு அழைத்து சென்றார். பின் இரண்டு பௌர்ணமி சென்ற பின் நம்பிக்கையான தன் தளபதி செங்குன்றனிடம் வாயிலை திறப்பதற்கான மந்திரத்தை கூறி அவருக்கு துணையாக பத்து வீரர்களை உடன் அனுப்பி நீங்கள் வந்த காட்டு பாதையின் வழியாக தென் மதுரையை பற்றிய தகவலை அறிந்து அடுத்த பௌர்ணமிக்குள் திரும்பி வருமாறு அனுப்பி வைத்தார்.

இளைய வேந்தன் கூறியதை
போன்று செங்குன்றன் வீரர்களுடன் தென் மதுரையை நோக்கி சென்றார். ஆனால் தென் மதுரைக்கு முன்னாலிருக்கும் நகரமான கடார புரமே கடலிற்குள் மூழ்கி இருந்தது. அதை ஒட்டி இருந்த மக்களும் இதற்க்கு மேலும் தென் பகுதியில் வாழ அஞ்சி தங்கள் குடும்பத்துடன் வேறு பகுதிக்கு குடியேறி சென்று விட்டனர். பின் மீண்டும் வீரர்களுடன் சார்ஸ்டின் உலகிற்கு திரும்பிய தளபதி செங்குன்றன் நடந்த அனைத்தையும் அரசரிடம் கூறினார்.

இளைய வேந்தன் இனிமேல் இந்த சார்ஸ்டின் தான் தங்களின் உலகம் என்று முடிவானவுடன் இந்த உலகிற்கு ஆதிவனம் என்று பெயரிட்டனர். அதோடு தங்களின் நகருக்கு மதிலை என்றும் பெயர் சூட்டினார். அதன் பின் கால போக்கில் எங்களுக்கு இதுவே தாய் நிலமாக மாறி போனது. இங்கு இருந்த வினோதமான விலங்குகளும், பறவைகளும், செடிகளும் எங்களுக்கு பழக்கமாகி போனது நாங்களும் அதனை பற்றி முழுதாக அறிய ஆரம்பித்தோம். மக்களும் தென் மதுரையை மறந்து மதிலையே தங்களின் தாய் நிலம் என்று ஏற்று கொண்டனர். சுவான் இன மக்களுக்கு மிதிலைக்கு வர அனுமதியில்லை அதே போன்று எங்கள் மக்களும் அவர்களின் தேசத்திற்கு செல்ல அனுமதியில்லை. ஆனால் இரு தேசத்தின் அரச குடும்பங்கள் மட்டும் இரு பகுதிக்கும் சென்று வந்தனர்.

கால போக்கில் சுவான் இன மக்களுக்கும் எங்கள் இனத்து மக்களுக்கும் பைஜர் என்ற இனமே கட்டு கதையாக மாறி போனது. இரண்டு இனத்து மக்களுமே அதை கட்டு கதையாக நினைக்க இரு அரச குடும்பங்களும் மக்கள் இவ்வாறு நினைப்பதே நலம் என்று எண்ணி அதை அப்படியே விட்டுவிட்டனர். எங்கள் மதிலை தேசம் மிகவும் அழகானது. என்னுடைய தந்தை வீரவர்மரின் ஆட்சியின் கீழ் எங்கள் தேசத்து மக்கள் அனைவரும் பசி பட்டினியின்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். என்னுடைய தந்தை மக்களின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்.

சந்தோசமாக சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் திடீரென புயல் வீச தொடங்கியது. ஆயிரம் கணக்கான வருடங்கள் கழித்து பைஜர் இனத்து மக்கள் அந்த சிறை தீவிலிருந்து தப்பித்து தீடிரென எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தினங்களுக்கு முன்னால் யாரும் எதிர்பாரா நேரம் தாக்குதல் நடந்தது. எதிர்பாரா நேரம் நடந்த அந்த தாக்குதலை நாங்கள் சமாளிப்பதற்குள் எங்களின் பல வீரர்களின் உயிர்கள் பலியாகின. அந்த உயிர்களோடு சேர்த்து என் தந்தையின் உயிரும் அந்த அரக்கர்களின் ஆயுதங்களுக்கு பலியாகியது.

ஒரு எல்லைக்கு மேல் எங்களால் அந்த அரக்கர்களை சமாளிக்க முடியவில்லை. எனவே எங்களின் மீதி வீரர்களுடன் எங்களது மக்கள் அனைவரையும் யாருக்கும் தெரியாத எங்களின் ரகசிய இடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டேன். ஆனால் எங்கள் வீரர்கள் பலருக்கு அதிக அளவில் காயம் பட்டிருப்பதால் எங்கள் வீரர்களை குணமாக்க நிலவு மலரை பறிக்க நான் கானகத்திற்கு வந்தேன். அதன் பின்பு நடந்த அனைத்தும் தாங்களே அறிவீர்கள். இப்போது நாம் சுவான் இன மக்களின் தேசத்திற்கு தான் செல்கிறோம். சுவான் இன மக்களின் அரசர் என் தந்தைக்கு நெருங்கிய நண்பர் அவரை சந்தித்து உதவி பெறவே இப்போது சென்று கொண்டிருக்கிறோம். நாம் அங்கு சென்றதும் எளிதாக உங்கள் நண்பர்களையும் கண்டறிந்து விடலாம்."

முக்தா கூறிய அனைத்தையும் சித்தார்த் ஆச்சிரியத்துடன் கேட்டு கொண்டிருந்தான். "அப்படினா நீங்க குமரி கண்டம்ல வாழ்ந்த மக்களா. குமரி கண்டம் கடல்ல மூழ்கி போக போகுதுன்னு தெரிஞ்சு நீங்க மட்டும் இங்க வந்துட்டீங்க. அப்படினா குமரி கண்டம்ன்னு ஒன்னு உண்மையாவே இருந்திருக்கு. அதுமட்டுமில்லாம நீங்க வச்சிருக்க மிருகம்தா யாளியா நானும் இதை எங்கயோ பாத்துருக்கேன்னு யோசிச்சுகிட்டே இருந்தே இதெல்லாம் நாங்க நிறைய கோவில் சிற்பம்ல பாத்திருக்கோம். அப்படினா இது எதுவும் கட்டுக்கதை இல்லையா"..

முக்தா "நீங்கள் கூறுவதில் பல எனக்கு புரியவில்லை ஆனால் நீங்களும் உங்கள் உலகத்தை சேர்ந்தவர்களும் நாங்கள் வாழ்ந்த பகுதியையும், யாளியையும் கட்டு கதை என்று நினைத்திருந்தால் அதிலும் தவறில்லை எங்கள் மக்களுக்கும் அரக்கர்களை பார்க்கும் வரை எப்படி கட்டுகதையோ அது போலத்தான் நாங்களும் உங்களுக்கு கட்டு கதையாக தெரிந்துள்ளோம்".

சித்தார்த் "சரி நாங்க வந்த பாதைதா உடைஞ்சு போச்சே எங்கள எப்படி எங்க உலகத்துக்கு அனுப்புவீங்க"..

முக்தா "சுவான் இனத்து அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் நினைத்தால் தன் குருதியின் மூலம் மந்திரத்தை உபயோக படுத்தி உங்கள் உலகத்திற்கு செல்வதற்கான வாயிலை திறக்க முடியும். நான் சுவான் இனத்து அரசரிடம் கூறி உங்களை உங்கள் உலகிற்கு பாதுகாப்பாக அனுப்பி விடுகிறேன்.

சித்தார்த் "என்ன இருந்தாலும் நீங்க வாழுற இந்த இடம் அந்த அரக்கர்களுக்கு சொந்தமானது. அவுங்க இடத்தை தான் நீங்க ஆக்ரமிச்சிருக்கீங்க பேசாம நீங்க நம்மை உலகத்துக்கு வந்திரலாம்ல நீங்க உங்க மக்களோட நம்மை உலகத்துக்கு வந்துட்டா நா உங்களுக்கு எல்லா உதவியும் பன்றேன். உங்க மக்களுக்கு பாதுகாப்பான இடத்தை நம்ம அரசாங்கம் கொடுக்கும்" என்று கூறி கொண்டு சென்றவன் முன் முக்தா தனது கையை உயர்த்தி மேலும் பேச விடாமல் நிறுத்தினாள்.

முக்தா "உங்கள் உலகில் வாழும் உயிர்களில் மனிதனை தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, கடல் கொந்தளிப்பு ஆகிய அனைத்து இயற்க்கை மாற்றத்தையும் முன்கூட்டியே அறிந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றன. ஐந்தறிவு ஜீவன்கள் என்று நீங்கள் கூறும் அந்த மிருகங்களால் உணர முடிந்ததை ஏன் மனிதர்களால் உணர முடியவில்லை என்று யோசித்து உள்ளீர்களா" என்று கேட்டவுடன் சித்தார்த் அவள் கூற வருவதன் அர்த்தம் புரியாமல் முழித்தான்.

முக்தா "அந்த மிருகங்களால் உணர முடிந்ததை ஏன் உங்களால் உணர முடியவில்லை. ஏன் என்றால் நீங்கள் வாழும் உலகம் உங்களுக்கு சொந்தமானதல்ல நீங்க அந்த உலகில் உருவானவர்கள் அல்ல. நீங்கள் ஐந்தறிவு ஜீவன் என்று அழைக்கும் அந்த உயிர்களுக்கு மட்டுமே உங்கள் உலகம் உரிமையானது. நீங்கள் அனைவரும் வேற உலகில் பிறந்து இங்கு தஞ்சம் அடைந்தவர்களே அதனால்தான் உங்களால் உங்கள் உலகில் நிகழும் கால மாற்றங்களை முன்பே அறிய முடியவில்லை.

அதோடு நாங்கள் யாரிடமும் கையேந்த அவசியமில்லை. இது எங்கள் உலகம் அரக்கர்கள் சமாதானமாக கேட்டிருந்தால் அவர்கள் வாழ ஒரு பகுதியை கண்டிப்பாக அளித்திருப்போம். ஆனால் அவர்கள் வன்முறையையே விரும்புகின்றனர். அவர்களின் விருப்பம் அனைத்து உயிர்களையும் அடிமையாக்குவதே எனவே அந்த அரக்கர்களோடு போரிட்டு அவர்களை வென்று எங்கள் மதிலையை நாங்கள் மீண்டும் கைப்பற்றுவோம். இதற்க்கு மேல் உங்களுக்கு விளக்கமளிக்க எனக்கு நேரமில்லை வாருங்கள் கிளம்பலாம் என்று சிவியின் மீது ஏறினாள். குழலியும் பருவியை அழைக்க ஒலி எழுப்பியவுடன் பருவி கீழே வந்தது குழலி அதன் மீது ஏறி கொண்டாள். பின் இருவரும் சிவியின் மீது ஏறியவுடன் சுவான் இனத்து மக்களின் ராஜ்ஜியத்தை நோக்கிய இவர்களின் பயணம் தொடங்கியது.

சித்தார்த் மற்றும் சஞ்சனா ஆகிய இருவரும் இருக்கும் இடம் முழுவதுமாக இருளாக இருக்க ஆங்காங்கே தீப்பந்தங்கள் வைக்கப்பட்டிருந்தது. இருவரும் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் தவித்தனர். திடீரென ஏதோ கதவு திறக்கும் சத்தம் கேட்டு இருவரும் பார்க்க ஆறடியில் உடல் முழுவதும் சிவப்பு நிறத்தோடு ஒரு உருவம் இவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தது. அந்த உருவம் இருவரும் இருக்கும் இடத்திற்குள் நெருங்க நெருங்க அந்த இடம் முழுவதும் சிவப்பு நிறத்தில் பிரகாசமாக காட்சியளித்தது.

இருவரும் சிவப்பு நிற உருவம் தங்களின் அருகில் நெருங்கியவுடன் "நீ யாரு..? எங்கள ஏன் கடத்திட்டு வந்திருக்க" என்று கேட்க இருவரையும் பார்த்து சிரித்த சிவப்பு நிற ஒளி ஒரு சில வித்தியாசமான பழங்களை சாப்பிடுவதற்க்காக இருவரிடமும் தூக்கி எறிந்து விட்டு சென்றது.

போன பதிவிற்கு கருத்து பதிவிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏 என்னுடைய இந்த பதிவிற்கான உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.. 🙏🙏🙏
 
Last edited:

Madhumita

Member

Super..... Romba different ah irukku
 
Nagubalu

Active member

Super bro
 
Top