கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாயவிசை... அத்தியாயம் 10... கதை திரி....

Arjun

Moderator
Staff member
Super.... குள்ளர்களின் கிராமம் நல்லா இருக்கு... ஏதோ ஹரப்பா சிவிலைசஷன் (harappa civilization) படிச்சமாதிரி ஒரு feel.... அவர்களின் வீடு அமைப்புகளும்,, உணவுகளும்,தெருக்களும்,
வீதி
அமைப்புகளும்...நாகரீகமும்....

சூப்பர்.... குள்ளர்களின் கிராமம் விவரிப்பு செம....
Harappa civilization படிச்சமாதிரி ஒரு feel.... குள்ளர்களின் வீட்டு அமைப்பு,,,, தெருக்களின் அமைப்புகள்,, கால்வாய்கள்,,, பயிர்கள்,,, ஏரி குளங்கள்,,, பக்காவா சொல்லிருக்கே

அக்கா ரொம்ப நன்றிக்கா தம்பி எங்க தப்பு பண்ணாலும் சும்மா மண்டையில நறுக்குன்னு கொட்டி தப்பு என்னன்னு சொல்லுங்க நா அடுத்த முறை அதை சரி பண்ணிக்குறேன்..
 

Arjun

Moderator
Staff member
Apa ellarum ore idathuku vanthutangala. Super sago

ஆமா சகோ இனிமே கொஞ்சம் விறுவிறுப்பா போகும் சகோ... ரொம்ப நன்றி சகோ..
 
காதலின் மாயவிசை 10...

(வாசகர்கள் ஒரு நொடியில் படிக்கும் வார்த்தைக்காக எழுத்தாளர்கள் பல நிமிடங்கள் உழைக்கின்றனர். எழுத்தாளர்கள் எழுதும் போது உண்டாகும் கஷ்டங்கள் வாசகர்களின் கருத்துக்களை கேட்ட நொடி மாயமாய் கரைந்து போகின்றன. வாசகர்களின் கருத்துக்களே எழுத்தாளர்களை மேலும் மேலும் உற்சாகத்துடன் எழுத வைக்கும் மந்திர பானம். அதனால் உங்களின் கருத்துக்களால் என்னை மட்டுமல்ல என்னை போல் உள்ள பிற எழுத்தாளர்களையும் உற்சாகமூட்டுங்கள் வாசகர்களே... 🙏🙏🙏 )

முக்தா தன் நண்பர்கள் இருவருடனும் குள்ளர்கள் இருக்கும் இடத்தை நோக்கி காட்டு பாதை வழியாக சென்றனர். வானத்தில் பறந்து கொண்டிருந்த பருவி தீடீரென எதையோ கண்டு சத்தமிட ஆரம்பித்து. பருவி சத்தமிட்டதில் ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து மூவரும் தங்கள் பார்வையை கூர்மையாக்கி நாலாபுறமும் சுழலவிட்டனர்.


மூன்று பேரும் முக்கோண வடிவில் சுற்றி நின்று தன் வாளை கையிலெடுத்து கொண்டு ஏதேனும் சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக கவனித்தனர். லியாடோ தன் ஒரு கையில் வாளை பலமாக பற்றி கொள்ள மறு கையில் தன் சாட்டையை எடுத்து கையின் மணிகட்டோடு இணைத்து கொண்டு தயாராக இருந்தான்.


லியாடோ காற்றின் உண்டான சிறு அசைவையும் உணர்ந்து திரும்பி பார்க்க குள்ளர் படைகள் வவ்வாலில் பறந்து வந்தன. குள்ளர் படையை கண்ட லியாடோ தாக்க முற்பட இதை கண்ட முக்தா "வேண்டாம்".. என கூறி லியாடாவின் கையை தடுப்ப பார்க்க அதற்குள் லியாடோ வேகமாக தன் சாட்டையை முன்னால் வந்த குள்ள மனிதனை நோக்கி சுண்டி விட்டான். சாட்டை சரியாக குள்ள மனிதனின் மீது மோத வர அந்த குள்ளமனிதனின் முகத்தில் சிறுதுளி கூட அச்சமில்லை.


சரியாக சாட்டையின் முனை குள்ளமனிதனின் மீது மோத போகும் நொடி அருகிலிருந்த மரத்தின் கிளையானது சாட்டையை பிடித்து வேகமாக இழுக்க லியாடோ பத்தடி தூரம் பறந்து சென்று விழுந்தான். கீழே விழுந்த லியாடோ மெதுவாக எழுந்து பார்க்க சுற்றி இருந்த மரங்களில் பதினைந்து அடி உயரத்திலிருந்த ஒரு சில மரங்கள் தன் வேர்களை மண்ணிலிருந்து வெளியே எடுத்து மனிதனை போல் லியாடோவை நோக்கி நடந்து வந்தன.


லியாடோவை சுற்றி மரங்கள் நெருங்க "நில்லுங்கள்".. என்று கட்டைளையுடன் வந்த கம்பீர குரலில் மரங்கள் அனைத்தும் அசையாமல் நின்றன. லியாடோ மெதுவாக எழுந்து நிற்க்க ஒரு குள்ள மனிதன் மட்டும் வவ்வாலில் அமர்ந்தவாறு மரங்களை கடந்து லியாடோவை நோக்கி பறந்து வந்தான். லியாடாவின் அருகில் வந்தவன் "கலப்பின ஜந்துவே உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் என்னையே தாக்குவாய்" என்று முறைத்து கொண்டு கேட்க லியாடோவும் குள்ள மனிதனை முறைத்து கொண்டே நின்றான்.


முக்தா "ஜிங்கு".. என்று அழைக்க தன் வவ்வாலின் கட்டியிருந்த கயிற்றை அசைத்து வவ்வாலை முக்தா புறம் திருப்பினான். முக்தாவை பார்த்தவனின் விழிகளில் துளியும் நட்பு பாராட்டும் எண்ணமில்லை. குழலி ஜிங்குவை ஆராய சராசரி மனித உருவ அமைப்பில் அரையடி உயரத்தில் வசீகரிக்கும் முகத்தோடு உடல் முழுதும் தங்கத்தாலான கவசமணிந்து வவ்வாலின் மீது கம்பீரமாக அமர்ந்திருந்தான்.


முக்தாவை பார்த்து ஏளனமாக சிரித்தவன் "மதிலை தேசத்து இளவரசி அவர்களே வருக வருக தங்களின் வருகை எனக்கு மிகுந்த ஆச்சிரியமளிக்கிறது. உங்களின் தேசம் அரக்கர்களின் பிடியில் சிக்கி சிதைந்து விட்டது என்று கேள்விபட்டேன். தங்களின் வீரர்கள் பலர் காயமடைந்திருப்பார்களே தங்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்படுகின்றதா. ஓ மன்னித்துவிடுங்கள் மறந்துவிட்டேன் ஆறாத காயத்தையும் ஆற்றும் வல்லமை கொண்ட நிலவு மலர் தான் இப்போது தங்களின் வசமுள்ளதே பிறகு என்னை தேடி வந்ததன் அவசியம் என்ன..? என் மக்களின் சொத்தில் வேறு எதையாவது அபகரிக்கவா".. என்று கோப்பத்தோடு நக்கலாக கேட்டான். அரையடி இருந்தாலும் ஜின்குவின் குரல் ஆறடி மனிதனுக்கு இணையாக கம்பீரமாக கேட்டது.


ஜிங்கு முக்தாவின் மீது கொண்ட கோபம் அவனது குரலிலேயே தெரிந்தது. மிக பெரிய படையே வந்தாலும் அதை கண்டு அஞ்சாத குழலிக்கும் ஜிங்குவின் குரலில் இருந்த கோபம் சிறு அச்சத்தை அளித்தது. முக்தா இவ்வாறு தான் நடக்கும் என்று முன்பே எதிர்பார்த்து வந்திருந்ததால் ஜிங்கு கேட்ட எந்த கேள்விக்கும் முகத்தில் எந்தவொரு சலனமும் இன்றி அமைதியாக இருந்தாள். ஜிங்கு கோபத்தோடு "உன்னை என் தோழி என்று எண்ணியே எங்கள் ரகசியம் பலவற்றை உன்னிடம் பகிர்ந்து கொண்டேன்.ஆனால் உன்னிடம் நல்ல நண்பனாக பழகிய எனக்கு உன்னால் எவ்வாறு துரோகம் செய்ய முடிந்தது."..


ஜிங்குவின் நிலை முக்தாவிற்கு புரிந்தாலும் அவளுக்கும் வேறு வழியில்லை என்ற நிலையில் தான் நிலவு மலரை திருடினாள். முக்தா "ஜிங்கு நான் சொல்வதை.." என்று ஆரம்பிக்கும் முன்பே தன் கையை உயர்த்தி அவளை பேச விடாமல் தடுத்து நிறுத்தியவன். "என் பெயரை கூறும் தகுதியை கூட நீ இழந்து விட்டாய். நீ செய்த தவறால் மதிகெட்டான் சோலையே இப்போது மாபெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது. அடுத்த பௌர்ணமி வரும் வரை காட்டிற்குள் யார் வந்தாலும் அங்குள்ள மரங்களால் அவர்களை தடுக்கவோ எதிர்த்து போராடவோ முடியாது. மதிகெட்டான் சோலையில் புதைந்துள்ள ரகசியங்கள் எண்ணிலடங்காதவை. அவை அனைத்திற்கும் காப்பரணாய் இருந்து அந்த சோலையை நிலவு மலர் தான் காப்பற்றியது. ஆனால் நிலவு மலரை நீ திருடியதால் இன்று மதிகெட்டான் சோலை பேராபத்தில் உள்ளது". என்று கோபத்துடன் விழிகள் சிவக்க கத்தினான்.


ஜிங்கு சைகை செய்ய மரங்கள் தன் அருகே இருந்த லியாடோவை சுற்றிவளைத்து லியாடாவின் கைகளை சிறையிட்டனர். ஜிங்கு "நிலவு மலர் எங்கே முக்தா".. "ஜிங்கு அது உண்மையாக என்னிடமில்லை".. என்று கூறி முடிக்கும் முன்பு ஒரு மரம் தன் கிளை கொண்டு லியாடோவின் வயிற்றிலடிக்க லியாடோ கத்த கூட முடியாமல் வலியில் துடித்தான்.

தன் நண்பன் அடிவாங்குவதைக் கண்டு கோபம் தலைக்கேறிய முக்தா "ஜிங்கு நிலவு மலரை திருடியது நான் என்னை என்ன வேண்டுமோ செய்து கொள் லியாடோவை விட்டுவிடு".. என்று கர்ஜனையாக கூறினாள்.

ஜிங்கு முக்தாவை பார்த்து குரோதத்துடன் சிரித்தவன் "அதுவும் சரியே தவறு உன்னுடையது தானே உன்னையே தண்டிக்கிறேன்.".. என கூறிவிட்டு அருகிலிருந்த மற்றொரு மரத்திற்கு சைகை செய்ய அதன் கிளை முக்தாவின் முகத்தை நோக்கி வேகமாக வந்தது. மரத்தின் கிளை தன்னை தாக்க முற்பட முக்தாவோ அந்த தண்டனையை ஏற்று அசைவற்று நின்றாள். ஜிங்கு மரத்திடம் சைகை செய்யும் போதே குழலி தன் உரையிலிருந்து வாளை உருவியவள் முக்தாவின் முன் பாய்ந்து முக்தாவின் முகத்தை நோக்கி வரும் கிளையை இரு துண்டாக்கினாள்.

அந்த கிளையை வெட்டியவள் அவர்களை நோக்கி பாய்ந்து வரும் அத்தனை கிளைகளையும் மின்னல் வேகத்தில் வெட்டி சாய்த்து கொண்டே "பருவி" என்று உரக்க குரல் கொடுத்தாள். குழலி கொடுத்த குரலில் வானத்தில் இவர்களை சுற்றி வட்டமிட்டு கொண்டிருந்த பருவியோ தன் சிறகை மடக்கி வானத்தில் பறக்கும் விமானம் கட்டுப்பாடின்றி தரையை நோக்கி வருவதை போன்று நேராக இவர்களை நோக்கி புயலென காற்றை கிழித்து கொண்டு வந்தது.


குழலி "இளவரசி நீங்கள் தப்பித்து விடுங்கள் நான் இவர்களை பார்த்து கொள்கிறேன்.".. என்று கூறிக்கொண்டே தன் வாளை சுழற்றி தங்களை தாக்க வரும் கிளைகளை வெட்டி வீசி கொண்டிருந்தாள். பருவி அருகில் வந்தும் கூட முக்தா அசைவற்று நிக்க குழலி சண்டையிட்டு கொண்டே முக்தாவை திரும்பி பார்த்து "இளவரசி ஏன் நிற்கிறீர்கள் தப்பி செல்லுங்கள்".. என்று கூறி கொண்டிருந்த நொடி ஒரு கிளை குழலியின் தலையை தாக்க குழலி அப்படியே மயங்கி சரிந்தாள்.


குழலி அடிபட்டதை கண்ட பருவியின் ரோமங்கள் அனைத்தும் சிலிர்த்தெழ தன் தலையிலுள்ள முடிகள் அனைத்தையும் விரித்து கொண்டு ஆக்ரோஷத்தோடு மரங்களை தாக்கியது. ஜிங்குவின் பின்னால் இருந்த வீரர்கள் தங்கள் ஊதுகுழல் மூலம் நூற்றுக்கணக்கான ஊசிகளை ஊதி பருவியை தாக்கினர். பருவியும் தன்னால் முடிந்த அளவு மரங்களை மோதி மரங்கள் எதுவும் குழலியின் அருகில் நெருங்காமல் காத்தவாறு சண்டையிட்டு கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மயக்க ஊசியிலுள்ள மருந்து வீரியமாக செய்யப்பட பருவியும் குழலியின் அருகிலேயே மயங்கி சரிந்தது.


தன் நண்பர்கள் அனைவரும் அடிபட்டு கிடக்க முக்தா கையறு நிலையில் அமைதியாக நின்றாள். அவளின் அருகில் வந்த ஜிங்கு "நீ விதைத்த விதையின் பயனை நீயே அறுப்பாய். அமைதியாக எங்களோடு வா".. என்று கோபமாக கூறியவன். தங்கள் இடம் நோக்கி நடக்க மரங்கள் அனைத்தும் பருவியோடு சேர்த்து மற்ற இருவரையும் தூக்கி கொண்டு நடந்தது.


குள்ள மனிதர்களின் இடத்திற்கு அருகே சென்றவுடன் முக்தா அந்த இடத்தையே ஆச்சிரியமாக பார்த்தாள். ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இடத்தில் மரங்கள் எதுவும் இன்றி சமதளமாக இருக்க அந்த இடத்தில் குள்ளர்களின் ஒரு சிறிய கிராமமே இயங்கிக்கொண்டிருந்தது. அந்த கிராமத்தின் நடுவே மதிகெட்டான் சோலையில் உள்ளதை போன்று ஐந்தடி உயரத்தில் பத்தடி நீளமும் பத்தடி அகலமும் கொண்ட சமதளமான ஒரு பெரிய பாறையானது இருந்தது. அந்த பாறையின் மேல் மதிகெட்டான் சோலையில் இருந்ததை போன்றே இலை தண்டுகள் என்று அனைத்தும் வெண்மை நிறம் கொண்ட நிலவு மலர் கொடியானது படர்ந்திருந்தது. அதில் ஆங்காங்கே சின்ன மொட்டுகள் வளர்ந்திருக்க அதன் நடுமையத்தில் மிக பெரிய நிலவு மலரானது பார்ப்பவரின் பார்வையை பறிக்குமளவு பிரகாசமாக ஒளியை பரப்பி கொண்டிருந்தது.


மதிகெட்டான் சோலையை போன்றே அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பினும் ஒன்றே ஒன்று மட்டும் வித்தியாசமாக இருந்தது. மதிகெட்டான் சோலையில் பௌர்ணமி அன்று மட்டுமே மரங்கள் அந்த பாறையை சுற்றி நின்றனர். ஆனால் இங்கோ இப்போதும் நான்கு புறத்திலும் மரங்கள் நின்று கொண்டு தங்கள் கிளைகளை ஒன்றோடு ஒன்று இணைத்தவாறு கம்பி வேலி போன்ற அமைப்புடன் நிலவு மலருக்கு அரணாக நின்றனர். அந்த மரங்களின் மீது குள்ள மனிதர்கள் சவாரி செய்ய பயன்படுத்தும் வவ்வால்கள் பல தலைகீழாக தொங்கி கொண்டிருந்தன. பல குள்ளர்கள் வவ்வால்களில் தங்களின் கிராமத்திற்குள் ஆங்காங்கே உள்ள இடங்களுக்கு சென்று கொண்டுமிருந்தனர்.


முக்தா அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க அந்த இடம் முழுவதும் வரிசையாக தெருக்கள் போன்ற அமைப்பில் சரியான அளவில் இடைவெளி விட்டு மரத்தாலும் பாறைகளாலும் குள்ள மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ப ஒரு அடி உயரத்தில் வீடுகள் நேர்த்தியாக உருவாக்கபட்டிருந்தது. அவர்கள் விவசாயம் செய்வதற்கான இடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டு ஒரு அடி உயரத்தில் வளரும் கனிகளை தரக்கூடிய மரங்களும் அரையடி உயரம் கொண்ட செடிகளில் வளரும் பல வகையான தானியங்களும் பயிரிடப்பட்டிருந்தன. விவசாய நிலத்தை ஒட்டி இரண்டடி அகலத்தில் சிறிய அளவிலான கால்வாய் ஒன்று அந்த சமவெளியை இரண்டாக பிரிப்பதை போன்று ஆரம்பம் முதல் முடிவு வரை அளவு மாறாமல் ஒரே அகலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.


அந்த கால்வாயின் நீளம் எவ்வளவு என்று கணக்கிட இயலாதவாறு அதன் எல்லைகள் சமவெளியையும் தாண்டி காட்டின் இருபுறமும் புகுந்து சென்றது. அந்த கால்வாயில் குள்ள இன மக்களின் குழந்தைகள் குளித்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். அந்த கால்வாயிலிருந்து கம்மாய்களில் பயன்படுத்தும் மடை முறையில் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சபட்டுக் கொண்டிருந்தது. குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மை போன்ற கைவண்டி முதலியவற்றை உருவாக்கி பொருட்களை தூக்கப் பயன்படுத்தி கொண்டிருந்தனர். கிராமத்தில் சிறிய அளவில் சந்தைகள் இயங்கி கொண்டிருக்க மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வது அந்த இடத்தை பார்த்தாலே தெரிந்தது.


இதை அனைத்தையும் காணும் போது ஒருவேளை தான் தான் அசுர வளர்ச்சி அடைந்து விட்டமோ என்று கூட முக்தாவிற்கு தோன்றியது. ஒரு கிராமத்தையே வானத்தில் பறந்து கொண்டு பார்ப்பதை போன்று எண்ணினாள் . திடீரென தன் வலது புறம் சத்தம் கேட்க திரும்பி பார்த்தவள் சிவியோடு சேர்த்து சித்தார்த்தையும் மரங்கள் இழுத்து கொண்டு வருவதை பார்த்தவள் அதிர்ச்சியடைந்தாள்.


🙏🙏🙏என்னுடைய போன பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏...
குள்ளர்களையும் அவங்க ஊரையும் நேரில் பார்க்க அவா எழுகிறது.👌👌
 

Arjun

Moderator
Staff member
குள்ளர்களையும் அவங்க ஊரையும் நேரில் பார்க்க அவா எழுகிறது.👌👌

விடுங்க மேஜிக் பண்ணி உங்களையும் கூட்டிட்டு போறேன்...
 
Top