கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கொலை (காதலன்)-1

மே 13 2003 காலை 11.00am:

போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், மருத்துவ அறிக்கையின் படி இறந்த பெண்ணின் உடலில் கற்பழிக்கப்பட்டதற்கான எந்த தடயமும் இல்லாததாலும், மேலும் இந்த மரணம் இயற்கையானது என குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டி வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுள்ள நவீனை குற்றமற்றவர் என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்யுமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

நீதிபதி பிரபாகரன் வழக்கை முடித்துவிட்டு எதிரில் அமர்ந்திருந்த வக்கீல் ரமேஷை ஒரு அர்த்த பார்வை பார்த்தார்.

நிஷாவின் அப்பா அங்கேயே உடைந்து அழுதுவிட்டார், புள்ளிமானை போல் சந்தோசமாய் சுற்றித்திரிந்த தன் மகளை இப்படி சீரழித்து கொலையும் செய்து இப்போது குற்றமற்றவன் என நெஞ்சை நிமிர்த்தி செல்லும் அந்த கேடுகெட்ட கயவனை காணும்போது பெற்றவனாய் உள்ளுக்குள் வெதும்பிதான் போனார், தினமும் கூலிவேலை செய்யும் அவரால் பல கோடி சொத்துக்களின் அதிபதி அவனை என்ன செய்ய முடியும்?

இயலாமையோடு நடைபிணமாய் செல்லும் அவரை பார்க்க பார்க்க ரௌத்திரம் கண்ணில் தெறித்தது இன்ஸ்பெக்டர் ரவிக்கு,

மே 13 2003 மதியம் 1.00pm:

கமிஷ்னர் அலுவலகத்திற்கு முன்பு புயலென வந்து நின்றது ரவியின் ஜீப், அடக்கப்படாத கோபத்தில் விறுவிறுவென உள்ளே நுழைந்தான் ரவி,

செத்துப்போனது உங்க பொண்ணா இருந்தா இப்டிதா அந்த பொறுக்கி வெளிய வர உதவி பன்னிருப்பீங்களா கமிஷ்னர் சார்? வார்த்தைகள் உஷ்ணமாய் வந்தது ரவிக்கு,

இருக்காதா பின்னே? விசாரணை தொடங்கிய முதற்கட்டதிலேயே நவீன் தான் குற்றவாளி என்று தெரிந்தது, இதுபோல பல பெண்களின் கற்பையும் வாழ்க்கையையும் அழித்துள்ளான் என அறிந்ததுமே அவனை கொன்று புதைக்கும் ஆத்திரம் வந்தது ரவிக்கு, அனைத்து ஆதாரங்களையும் திரட்டி கமிஷ்னரிடம் ஒப்படைத்து விட்டு மனநிறைவுடன் ஒருவார விடுப்பில் தனது சொந்த ஊர் சென்றான், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய இன்று அந்த அயோக்யனுக்கு தீர்ப்பு நாள் என தெரிந்ததும் நேராக நீதிமன்றம் சென்று அவன் செய்த இத்தனை இழிவான செயலுக்கு மரண தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த போதுதான், தீர்ப்பு அந்த நவீனுக்கு சாதகமாக வந்ததில் கொதித்துப் போய் இருந்தான்.

கோபப்படாதீங்க ரவி, நவீன் ஒரு பணக்கார முதலை. மல்டி மில்லியனர்
நீங்க ரெடிபண்ண எவிடென்ஸ் எல்லாத்தையும் ஒரேநாள்ள தடயமே இல்லாம அழுச்சுட்டான். அந்த நாய்க்கு இந்த அரசியல்வாதி நாய்களும் புல்லா சப்போர்ட்டா இருக்கானுக.
இந்த கேஸ்ல இருந்து தப்பிக்க
ஜட்ஜ் பிரபாகரன்,லாயர் ரமேஷ், அந்த டாக்டர் ஜான் இவங்க மூனு பேருக்கும் அறுபது கோடி தந்திருக்கான்.

எல்லாத்தையும் நா கவனிச்சுட்டு தான் இருக்க. இன்னும் ரெண்டு மாசத்துல எலெக்சன் வருது அப்போ எதாவது ஸ்டிராங் கேஸ் பைல்பண்ணி அவன உள்ள
தூக்கிப்போட்டு நம்ம ஸ்டைல்ல கவனிச்சா அவன் வாயாலயே உண்மைய வாங்கிடலாம்.
பிறகென்ன அவனுக்கு நிரந்தரமா மாமியார் வீடுதான்.

அவனையெல்லாம் உயிரோட கொளுத்துனாத்தான் என் ஆத்திரம் அடங்கும் சார், வெறியில் உறுமினான் ரவி. போலிஸ்காரனுக்கு பொறுமை ரொம்ப முக்கியம் ரவி வெயிட் பண்ணுங்க நமக்குனு ஒரு டைம் வரும் அப்போ மொத்தமா காட்டிக்கலாம் இப்போ கிளம்புங்க என ரவியை அனுப்பி வைத்தார் கமிஷ்னர் ராஜவேல்.


மே 13 2003 இரவு 9.00pm:

உங்களுக்கு எந்த பொண்ண புடிக்குதோ அவங்கள எல்லாம் யோசிக்காம ருசி பாருங்க சார், கோர்ட் கேஸ்னு வந்தா நாங்க இருக்கோம், மது போதையில் உளரிக்கொண்டிருந்தனர் அந்த மூடர் கூட்டத்தினர்.

அதுக்குத்தான உங்கள வெச்சிருக்க என வாயெல்லாம் பல்லாக சிரித்தான் நவீன், பாவம் அவனுக்கு தெரியாது இன்னும் ஒரு வாரத்தில் பரலோகம் செல்லவிருப்பது. பார்ட்டி முடிந்து நால்வரும் மதுபோதையில் அவர்களது வீட்டிற்கு தள்ளாடியபடி சென்றனர்.


மே 14 2003 காலை 7.00am:

தூக்கத்தில் புரண்டு படுத்துக் கொண்டிருந்த ரவிக்கு கமிஷ்னரிடம் இருந்து வந்த போன்காலும் அவர் சொன்ன செய்தியும் கேட்டு தூக்கிவாரிபோட்டது,

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சடலம் ஒன்று சென்னை புறநகர் பகுதியில் கிடக்கிறது என்ற செய்திதான் அது .

இறந்த நபர் யார்???
 
Top