கோடுகள் 5
நாம எப்படி அடுத்தவங்க செய்யற தப்பை கண்டு, இதெல்லாம் தப்பு, அப்படி செய்யக்கூடாதுன்னு சொல்றோமோ, அதே போலத்தான் நம்மளோட தவறுகளையும் கண்டுபிடிச்சு அதையும் ஒத்துக்கிட்டு நேர்மையா இருந்தா, இந்த உலகத்துல அதுக்கப்பறம் துன்பம்ன்னு எதுவுமே நம்மை நெருங்காது.
-பொதுமறையில் பொதிந்தவை
◆5◆
தன் இருக்கையில் இருந்து எழுந்து மெதுவாக ஜன்னல் வழியாகத் தெரியும் ஜனத்திரள் மிகுந்த சாலையை வெறித்தான் சுஷாந்த்.
பலவிதமான மனிதர்கள் பல வித வேகங்கள்.. அதென்ன வேகங்கள்?? ஒருவர் நிதானமாக உலகை மறந்து பானி பூரியை ருசித்துக்கொண்டிருந்தார். ஒருவர் தான் அடுத்தவரை இடித்து விட்டு நடப்பது கூட கருத்தில் படாத அளவுக்கு எதற்கோ சென்று கொண்டிருந்தார்.
ஒரு பெண் இனிமையாய் பள்ளி முடிந்து அழைத்து வரும் குழந்தையோடு கண்கள் மின்ன பேசிக்கொண்டு வந்தாள். இரு கல்லூரி இளங்காளைகள் தன் அடர்ந்து வளராத மீசையை நீவியபடி போகும் வரும் இளம்பெண்களை கண்களால் கணக்கிட்டுக்கொண்டிருந்தனர்.
இப்படி பலவாறான, அவசரமும் நிதானமும் கலந்த உலகத்தை தன் கண்ணெட்டும் தொலைவு வரை கண்டு அப்படியே நின்றிருந்தான் சுஷாந்த்.
சுக்லாவின் கம்பெனியை அவன் கைகளில் எடுத்து இதோ ஒரு மாதம் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் மனம் தான் மகிழ்ச்சியாக, நிம்மதியாக, ஏன் அமைதியாகக் கூட இல்லாமல் இருக்கிறது.
ஆரம்பத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் வந்து கொண்டிருந்தவன், நாள் பட, அந்த தொழிலில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் தவித்தான்.
கற்களின் தரம் பார்க்க சரியாக வரவில்லை, கற்களுக்கு தந்தை விலை பேசி வாங்கிய தொகையைக் கண்டு தன் கணக்கீட்டுக்கும் அதற்கும் உள்ள வித்தியாசம் வேறு அவனை மருட்டியது. சிறுவயதிலிருந்தே தந்தையோடு அங்கெல்லாம் வந்து, அதிலே ஊறி வளர்ந்திருந்தால் அவனுக்கு அதெல்லாம் எளிதாக இருந்திருக்கோமோ என்று தோன்றியது.
என்ன முயன்றும் அந்த தொழில் மனம் இலயிக்கவில்லை. அவன் வேண்டுவதெல்லாம் வேகம் வேகம் வேகம் மட்டுமே. இப்படி நாள் முழுக்க கடையில் அமர்ந்து, வருவோர் போவோர் கேஷியரிடம் பணம் கொடுத்ததும், இவன் சம்பிரதாயமாக வந்து அவர்களுக்கு பில்லுடன் நகையை வழங்குவது. ஏதாவது கஸ்டமர் கோபம் கொண்டால் அவருக்காக வேலையாளை அவர் முன்னே அதட்டி, அவருக்கு வேண்டியதை செய்ய சொல்வது, அது போக, மணிக்கற்கள் வியாபாரம் செய்வோருக்கான சங்கம் செல்லுதல், அவர்கள் சொல்லும் பழைய கதைகளைக் கேட்டல் போன்றவை அவனுக்கு சலிப்பைத் தவிர வேறு எந்த உணர்வையும் தரவில்லை.
அவன் நின்ற கோலத்தை கண்டபடி உள்ளே வந்த சுக்லா, "என்ன பேட்டா இன்னியோட ஒன் மன்ந்த் முடியுது. என்ன முடிவு பண்ணி இருக்க?" என்று கேட்டார்.
அன்று சுஷாந்த் வருவதாகச் சொன்னதும் முழு தொழிலையும் அவனிடம் கொடுத்துவிடவில்லை சுக்லா. அவருக்கு மகனின் கேம் டிசைனிங் ஆர்வம் நன்றாகவே தெரியும். அப்படி இருக்க, அவனை ஒரு அலுவல் அறைக்குள், மணிக்கற்களுக்கு நடுவில் அமர்த்திவிட முடியாது என்று அவர் யூகித்திருந்தார்.
இத்தனை நாட்கள், மகனுக்கு தொழிலின் நுணுக்கங்களை விட, தொழில் செய்வது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கு நமக்கு துல்லியமான மதிப்பிடும் திறன் இருக்க வேண்டும் என்பதை அவனுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார்.
அடிக்கடி ஜூவல்லரியில் அமர்த்தினார், மக்களை வேடிக்கை பார்க்க விட்டார். அவனின் தடுமாற்றங்களை கவனித்தார். அவனுக்கு தொழில் ஆர்வம் உள்ளது ஆனால் எதில் ஆர்வம் இல்லை என்று கண்டறிய முயன்றார்.
பிடிக்காமல் செய்யும் எந்த காரியமும் சிறக்காது என்று அறிந்திருந்த அந்த மனிதர், மகன் எந்தெந்த பிரிவில் குறைகிறானோ அங்கெல்லாம் நம்பிக்கையும் நாணயமும் பொருந்திய வேலையாட்களை நியமித்தார்.
அவனின் பலங்கள் என்னவென்று கவனித்தபோது, அவன் பொருட்களை அடுக்கச் சொன்ன விதம், பழைய மாடல்களை பின்னால் தள்ளி புது மாடல்களுக்குக் கொடுத்த முன்னுரிமை, பணியாளர்களிடம் நடந்து கொள்ளும் பாங்கு, அதை விட பழைய மாடல்களை முன்னால் வைத்து அதையே சிறு சிறு மாற்றத்துக்கு எப்படி உட்பத்தி புதிய வடிவத்தைக் கொடுக்கலாம் என்று புத்தகத்தில் அவன் வரைந்து வைத்த டிசைன்கள். அது தான் அவரைக் கவர்ந்தது.
அவரின் தொழில் சார்ந்து மகனுக்கும் ஒரு தொழில் அமைத்துக் கொடுத்தால் கண்டிப்பாக அவன் மனநிறைவு பெற்ற பின் இதில் தவறவிட்டவைகளை கண்டுகொண்டு மிளிர்வான் என்று முழுமையாக நம்பினார். முழுவதும் நிறையப்பெற்ற மனிதன் யார்? எல்லாம் பழகிக்கொள்ளும் முறையில் இருப்பதாக அவர் திடமாக நம்பினார்.
அது பற்றி அவனிடம் பேசத்தான் இங்கு வந்திருந்தார்.
"பப்பா இஃப் யூ டோன்ட் மைண்ட் நான் கொஞ்ச நாள் வெளியூர் எங்காவது போயிட்டு வரவா? ஐ பீல் ஸ்ட்ரெஸ்ட்." என்று சொன்ன மகனை ஆதுரமாகப் பார்த்தவர்,
"எங்க போகலாம்ன்னு இருக்க?" என்று கேட்டபடி இருக்கையில் அமர்ந்தார்.
"இன்னும் முடிவு பண்ணல பப்பா. எனக்கு தனியா எங்கேயாவது போகணும் போல இருக்கு" என்றான்.
"நல்லது தான். ஆனா இப்போ சிங்கிளா போயிட்டு வரும்போது கமிட்டெட்டா வர மாட்டியே?" என்று அவனை வம்பு செய்தார்
"பப்பா" என்று சிணுங்கிய சுஷாந்த் பின் வாய் விட்டு நகைத்து, "இது வரைக்கும் எனக்கு அந்த ஐடியா இல்ல பப்பா. ஆனா இப்போ சொல்றேன் கண்டிப்பா அப்படித்தான் வருவேன் பாருங்க" என்று சொன்னதும்,
"அடடா, பரவால்ல பேட்டா. ஆனா கமிட் ஆனதும் பப்பாவை மறந்துடாத" என்று அவன் தோளில் தட்டினார்.
அவனோடு பேசியபடி சென்னை செல்ல விமான டிக்கெட் ஒன்றை பதிவு செய்தவர், "நீ வெளியூர் போறது தான் போற சென்னையில என் நண்பன் ஷ்யாமளன் இருக்கான், அவனை பார்த்துட்டு அப்படியே ரெண்டு நாள் அங்க சுத்தி பார்த்துட்டு அப்பறம் எங்க போகத்தோணுதோ போயிட்டு வா" என்று மகனின் முகபாவதை கவனிக்கலானார்.
"சென்னையா?" கேட்டவன் கண்களில் ஒரு நொடி மின்னல் வந்து போனதோ?
"ஓகே பப்பா உங்க பிரெண்ட் வீட்ல ஸ்டே பண்ண மாட்டேன். ரெண்டு நாளுக்கு மேல உங்க பிரெண்ட்டை போய் பார்க்க மாட்டேன் இதான் டீல் ஓகே வா?" என்று அவன் கன்னத்தை இருபுறமும் இழுத்துக் கிள்ளினான்.
இது சுஷாந்த் சிறுவனாக இருக்கும்போது சுக்லா செய்யும் விளையாட்டு. பலநாள் அதற்காக சுஷாந்த் கோபித்துக்கொண்டு அவரோடு பேசாமல் போயிருக்கிறான். ஆனால் அதற்காகவெல்லாம் அவர் அவன் குண்டுக் கன்னத்தைக் கிள்ளாமல் விட்டதில்லை. ஆனால் பதின் பருவத்தில் அவன் கன்னத்து சதைகள் வற்றி, ஆண்மைக்கே உரிய ஒட்டிப்போன கன்னங்களைப் பெற்றவன், அதன் பின் தந்தையைக் கிள்ளுவதை வாடிக்கையாக்கிக் கொண்டான்.
அவர் "ஸ் ஆ" என்றால், "இதெல்லாம் அன்பு பப்பா." என்று அவர் சிறுவயதில் சொன்ன வார்த்தைகளை அவருக்கே திருப்புவன். அதெல்லாம் அவர்களின் தனிமையின் இனிமையான நேரங்கள்.
"பேட்டா முன்னாடி சும்மா தான் சொன்னேன். ஆனா இப்போ ஸ்ட்ராங்கா நம்புறேன். நீ கமிட்டாகி தான் திரும்பி வருவ போல" என்று சிரித்தார்.
தன் ஒரு நொடி மாற்றத்தைக் கூட தந்தை கண்டுகொண்டதில் வெட்கம் வரப்பெற்றவன், "போங்க பப்பா" என்று அவரை அணைத்துக்கொண்டான்.
சில நாட்களாக பல வித மனிதர்களைப் பார்த்ததில் சற்றே, பணக்கார வீட்டு செல்லப் பிள்ளை என்ற அவனின் சோம்பல் எண்ணங்கள் பின்னால் சென்றிருந்தது. அதிலும் நிற்காமல் அங்கும் இங்கும் சுற்றிச் சுழலும் அவனின் பணியாளர்கள். ஒரே இடத்தில் பொறுமையாக நின்று மக்கள் கேட்கும் பல விதமான ஆபரணங்களை புன்னகையோடு நீட்டும் விற்பனை பிரதிநிதிகள் என்று கீழ் தட்டு மக்களும், அவர்களின் அன்றாட பணிகளும் அவனை தான் என்ன மாதிரி ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று முழுமையாக உணர வைத்திருந்தது.
மகிழ்ச்சியாய் தந்தையின் நண்பரைக் காணக் கிளம்பும் சுஷாந்த்துக்குத் தெரியாது இனி அவன் வாழ்வில் வசந்தமும் புயலும் மாறி மாறி விசப்போவது!
****
ஹாஸ்டலிலிருந்து நடக்கும் தொலைவே உள்ள கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த ஹர்ஷிக்கு அன்று ஏதோ வித்தியாசமாகப் பட்டது.
ரிவர்ஸில் வந்து வாயில் காவலரிடம் என்னவென்று விசாரித்தாள்.
அவர், "ஒரு மெடிக்கல் காலேஜ் மேல கேஸ் போட்டதுல அந்த காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் எல்லாரையும் வேற வேற காலேஜுக்கு மாத்தி விட்டிருக்காங்க. அவங்களல சிலர் இன்னிக்கு இங்க ஜாயின் பண்றாங்க. அதான் பசங்க புது பசங்களை வம்பிழுக்க அங்கங்க உட்கார்ந்து இருக்காங்க" என்றதும், வேகமாக தன் பேன்ட்ஸ் பாக்கெட்டில் தன் சர்ஜிகல் நைஃப் இருக்கிறதா என்று தடவிப்பார்த்தாள்.
அது தான் இன்றுவரை எந்த மாணவனும் அவளை நெருங்காமல் இருக்கக் காரணம். அவளும் கல்லூரிக்கு வந்த முதல் நாளே தரையில் நீச்சல் அடி, பின் பக்கமாக ஓடு என்று விளையாட்டாய் வைத்த அனைத்து ராகிங்கிலும் மகிழ்ச்சியாகவே பங்கு கொண்டு அந்த சீனியர்களிடம் நல்ல பெயரும் வாங்கினாள். ஆனால் எல்லாரும் விளையாட்டுத்தனமாக இருப்பதில்லை அல்லவா? வினையம் பிடித்த சில ஜந்துக்கள் எங்கு சென்றாலும் தனக்கென்று ஜால்ரா போடும் கூட்டம் ஒன்றை சேர்த்துக்கொண்டு ஆடுவது புதிய விஷயம் அல்லவே?
அப்படி ஒரு கூட்டத்திடம் மாட்டினாள் ஹர்ஷி. ஆனால் இரண்டாம் நிமிடம் 'போயிட்டு வாங்க ஹர்ஷ்' என்று மரியாதையோடு வழியனுப்பும் விதமாக அவள் கைகளில் இருந்த சர்ஜிகல் நைஃப் வேலை பார்த்திருந்தது.
ஆளைக் கீறவில்லை. ஆனால் அவர்கள் கையிலிருந்த வாட்ச், குடிநீர் பாட்டில், அவர்களின் தோள் பை எல்லாம் கந்தலாகி இருந்தில் இருந்தே அவள் அந்த சர்ஜிகல் நைஃபை சுழற்றும் வேகம், தெளிவெல்லாம் புரிந்து வழி விட்டனர்.
அவர்களைப் பார்த்தவள், "நாம என்ன படிக்க வர்றோமோ அதைப் பத்தின பேசிக் நாலேஜ் நம்மகிட்ட இருக்கணும். எனக்கு சர்ஜன் ஆகணும். உங்களுக்கு எப்படி? ரோட்ல பொறுக்கித்தனம் பண்ணப்போறீங்களா?" என்று கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்டபின் அதிகம் அவள் பக்கமே அந்த முரட்டுக்கூட்டம் செல்வதில்லை. மனதில் வன்மம் மட்டும் வைத்துக்கொண்டனர்.
அதெல்லாம் அசைபோட்டபடி அவள் கல்லூரி வளாகத்திற்குள் நடந்து வந்தாள்.
"டேய் பையா.. இங்க வா.." என்று அழைத்த அவனை முழுக்கை சட்டையை மடித்து விட்டபடி திரும்பியது முடியை பாய் கட் செய்த ஹர்ஷி தான்.
"என்ன.. யாரை கூப்பிட்ட?" என்று ஹிந்தியில் தெளிவாய் அவள் கேட்க,
அழைத்தவர்கள் அவள் கேட்ட விதத்திலேயே வாயை மூடிக்கொண்டனர்.
"சாரி ஹர்ஷ் நீங்கன்னு தெரியாம யாரோ பர்ஸ்ட் இயர் பையன்னு நெனச்சு கூப்பிட்டுட்டேன்." என்று அதில் ஒருவன் பணிவாய் சொன்னான்.
"பர்ஸ்ட் இயர் பையன்னா நீ வம்புக்கு இழுப்பியா? வாயை கிழிச்சிடுவேன். கூடவே சூச்சரும் நானே போடுவேன். பத்திரம்" என்று விரல் நீட்டி எச்சரித்தவள் முன்னே திரும்ப, அவளின் நாலு இன்ச் மென்சிகை காற்றில் அசைந்து ஆடியது.
"டேய் யாருடா அது? என்னமோ காலேஜ்ல நானெல்லாம் டானுன்னு பீலா விட்ட வெளில, இப்போ இங்க பம்முற?" என்று ஒருவனை மற்றொருவன் கலாய்க்க,
"உன்கிட்ட ஹீரோயிஸம் காட்ட நினைச்சா அவ எனக்கு முகத்துல பிரீயா ஆபரேஷன் பண்ணிட்டு போயிடுவா. யாருன்னு நெனச்ச. ஹர்ஷி டா. பார்க்க மட்டும் இல்ல, செயலும் பையன் மாதிரி தான் இருக்கும். பயம்ன்னா என்னன்னே அவளுக்குத் தெரியாது." என்று சொன்ன அவனை,
"டேய் ரொம்ப பண்ணாத. ஆஃப்டரால் ஒரு பொண்ணு." என்று எகத்தாளமாகப் பேசினான்.
"என்னது ஆஃப்டராலா? ஒரு அடி வாங்கிப்பாரு. எப்பவும் அவ கையில சர்ஜிகல் நைஃப் இருக்கும். ஓவரா ஆடுனா கோடு போட்டு விட்டுடுவா.
எம் பி பி எஸ் தர்ட் இயர். போய் அவ பேர் சொல்லி விசாரி தெரியும்." என்று அவன் முன்னே போனான்.
அந்த மற்றொருவனுக்கு கண்டிப்பாக அன்று சனி உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். போகும் வரும் பெண்களை அவன் கேலி செய்துகொண்டிருக்க, அதை அந்த வழியே வந்த ஹர்ஷி கண்டும் காணாமலும் போனாள்.
ஆனால் அவன் ஒரு பெண்ணின் துப்பட்டா நுனியைப் பிடித்த நொடி, "அம்மா" என்று அலறலோடு கைகளை உதறினான்.
"என்ன என்ன?? ஏன் கத்துற? இவ்ளோ நேரம் எத்தனை பேரை வம்புழுத்த, இதோ இந்த பொண்ணு ஷாலை இழுக்கும் போது கூட நீ சந்தோசமா தானே இருந்த? இப்போ மட்டும் ஏன் கத்துற?" என்று கேட்டு அவன் சட்டைக் காலரைப் பற்றியவள்,
"அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி சிரிக்கிற நீ, உனக்கு கஷ்டம் வரும்போது மட்டும் அழலாமா? தப்பில்ல.. சிரி.. சிரி டா" என்று சொல்ல,
"ஏய் என் கையவா கிழிச்ச? பாரு நேரா டீன் கிட்ட போய் உன்னைப் பத்தி கம்பலைன்ட் பண்ணுவேன்."என்று வலியிலும் வேகமாகக் கத்தினான்.
"தோ பாரு டா.. ஐயோ.. பயமா இருக்கு டா. அப்படியெல்லாம் பண்ணிடாத.." என்று நடுங்கியது போல நடித்தவள்,
"எட்டி ஒன்னு விட்டா நீயே கஷ்டம் இல்லாம டீன் ரூம் வாசல்ல விழுவ, நாயே. பொம்பளப்புள்ள ஷாலை புடிச்சு இழுத்துட்டு வாயை பாரு. உன் கையை கீறி இருக்கக் கூடாது வாயை கீறி இருக்கணும்." என்று மீண்டும் சார்ஜிகல் நைஃப்பை எடுக்க, அவனோ உதிரம் வழியும் கரத்துடன் எழுந்து ஓடினான்.
அவள் செய்வதை கண்ணீரோடு பார்த்திருந்த அந்தப் பெண்ணிடம், "நீ இப்படி தாரை தாரையா கண்ணீர் விட்டா அவன் உன் துப்பட்டாவை விட்டுட்டு தங்கச்சின்னு சொல்லுவானா? உயிரை காப்பாத்துற படிப்பை தேர்ந்தெடுத்தா பத்தாது தைரியமா நம்மை நோக்கி வர்ற பிரச்சனைகளை சமாளிக்கணும். நீயெல்லாம் என்னத்த கார்ப்ஸ்ஸ வச்சு எக்ஸாமின் பண்ணப் போறியா போ" என்று அவளை முதுகைப் பிடித்துத் தள்ளி போகச் சொன்னாள்.
"எவனாச்சும் கேட்டா ஹர்ஷி தர்ட் எம்.பி.பி.எஸ் கிட்ட பேசிக்கோங்கன்னு சொல்லு" என்று சொன்னவள்,
"எருமையை கீறினதுல கத்தி மொன்னையா போச்சு" என்று நாப்கினால் அதில் படிந்திருந்த இரத்ததைத் துடைத்து வீசிவிட்டுச் சென்றாள் ஹர்ஷி.
ஆனால் அவனோ தனக்கு இருக்கும் செல்வாக்கைக் கொண்டு அவளை பழி வாங்க நினைத்து நேராக டீனிடன் சென்று விட்டான்.
அடுத்த அரை மணியில் விசாரணை துவங்கியது ஹர்ஷி மீது.
அவளோ யார் வீட்டுக்கோ விருந்துக்குக் வந்தவள் போல டீன் முன்னால் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தப்படி நின்றிருந்தாள்.
அவருக்கும் ஹர்ஷியைப் பற்றித் தெரியும். ஆனால் இன்று புகார் அளிக்க வந்திருப்பவன் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மகன். அவனுக்கு எதிராக இவள் மீது நடவடிக்கை எடுக்காது போனால் கண்டிப்பாக பிரச்சனை வரும் என்று உணர்ந்து ஹர்ஷியிடம் கோபமாக கத்திக்கொண்டிருத்தார்.
"இன்னும் நீ எம்.பி.பி.எஸ் முடிக்கல புரியுதா? எதுக்கு கையில் சர்ஜிகல் நைஃப் வச்சிருக்க? அதை நீ எக்யுப்மெண்ட் மாதிரி பயன்படுத்தல, அதை நீ வெப்பன் மாதிரி யூஸ் பண்ற. ஐ ஹேலி கண்டம்ப் திஸ்" என்று அவர் தன் போக்கில் திட்ட,
மேஜையில் கையூன்றி நின்றவள், "அப்போ அவன் போற வர்ற பொண்ணுங்களை வம்பிழுத்தது தப்பில்ல, ஒரு பொண்ணு ஷாலைப் பிடிச்சு இழுத்தது தப்புன்னு லிஸ்ட்ல சேராது. ஆனா அவன் அந்த பொண்ணை இழுத்து அவ பக்கத்துல உள்ள ஸ்டோன் பெஞ்சுல முட்டி தலை உடையக்கூடாதேன்னு இவன் கையை கீறிவிட்டு அவளை காப்பதுன நான் தப்பு.. சார் உங்களை பொறுத்த வரை இது வெறும் எக்யுப்மெண்ட். ஆனா எனக்கு அப்படி இல்லை சார். இது என் உயிர். நான் சர்ஜன் ஆகணும்ன்னா இதை கையில் வச்சு ஆபரேஷன் பண்ணனும்ன்னு எங்க ஜூவாலஜி மிஸ் சொன்ன நாள்ல இருந்து இது என் கையில தான் இருக்கு. இது என் லட்சியம் சார். இப்போ என்ன நான் இதை யூஸ் பண்ணி அவனைக் கீறினது தப்பு அதான? அதுக்கான தண்டனையை கொடுங்க நான் ஏத்துக்கறேன். மீன்ஒயில், அவனுக்கும் அவன் பண்ணுன தப்புக்கு தண்டனை தரணும். முடியுமா? இல்லனா நீங்க என்ன பனிஷ்மெண்ட் கொடுத்தாலும் ஐ வோன்ட் அக்ஸப்ட்." என்று கைகளைக் கட்டிக்கொண்டு பதிலுக்காக டீனை வெறித்தாள்.
அவர் முகத்தில் ஒரு மெச்சுதல் இருந்தது. "ரெண்டு பேரையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணுறேன். நாளைக்கு உங்க பேரெண்ட்ஸ் ஆர் லோக்கல் கார்டியன் வந்து என்னை மீட் பண்ணனும். இது என் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்"என்றார்.
அவனுக்கோ அவளை மாட்டிவிட்டு தப்ப நினைத்தால் தனக்கும் தண்டனை வாங்கித் தந்து விட்டாளே என்று கடுப்பில் டீனின் அறையை விட்டு எரிச்சலோடு வெளியேறினான்.
அவளும் கிளம்புவாள் என்று டீன் பார்த்திருக்க அவளோ, "ஏன் சார் சஸ்பெண்ட் பண்ணினா காலேஜ் கேம்பஸ்குள்ள வரலாம் தானே? இல்ல வரக்கூடாதா?" என்று மிக முக்கிய சந்தேகத்தை முன் வைத்தாள்.
அவளின் பேச்சுக்களை இரண்டு வருடத்திற்கும் மேலாக கேட்கும் அவருக்கு ஏனென்று காரணம் நன்றாக விளங்க, "கிளாஸ் போகக்கூடாது. அவ்ளோ தான்" என்று சொல்லிவிட்டு வாயிலை நோக்கி கைகாட்டினார்.
முகத்தில் வெளிச்சம் பரவ, வெளியேற இருந்தவள், திரும்பி வந்து, "சாரி சார். இனிமே அந்த மாதிரி பண்ண மாட்டேன். அது தப்புன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு" என்று சொல்லிவிட்டு, "இனிமே பெருசா நெயி
ல் வளர்த்துக்கறேன் சார்" என்று கண் சிமிட்டினாள்.
இணையுமா??
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
- குறள் 190