கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சமூக அவலங்களின் அதிகாரம். அத்தியாயம் -01

அத்தியாயம் 01


சமூக அவலங்களின் அதிகாரம்.



நாம் வாழ்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் சமூகம் மற்றும் சமுதாயத்தில் நடப்பது போன்றவற்றை கண்கூடாக பார்த்துள்ளோம்.

அதற்கு அனைத்தும் காரணம் நம் மக்கள்கள் மட்டுமே.

அரசாங்கம், இணையதளம், தனியார் நிறுவனம், பள்ளிகள், கல்லூரிகள் ஏன் நாம் நடமாடும் சாலையில் கூட நிறைய அவலங்கள் நடக்கின்றன.


அந்த அவலங்களை வரிசையாக கீழே எண்ணிக்கையில் பார்ப்போம்


1.அடுத்தவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது, அடுத்த வீட்டில் என்ன சண்டைகள் நடக்கிறது. சத்தம் வெளியே கேட்குமளவுக்கு கத்தி கூவி சண்டை போடும் இன்றைய தலைமுறையினர்.


அதை பக்கத்தில் வீட்டிலோ, அல்லது எதிர்வீட்டில் இருப்பவர்களோ ஆர்வமுடன் காதை நன்றாக கூர்மையாக தீட்டி கேட்பார்களே தவிர சண்டை நடந்தால் அங்கு சென்று சமாதானம் செய்து வைக்க யாரும் முன் வரமாட்டார்கள்.

அப்படி சமாதானம் செய்ய சென்றால் கூட, அந்த சண்டைக்காரர் கோபத்தில் ஏதாவது வாய்வார்த்தையால் திட்டிவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கும் ஒரு சில மக்கள்.

அடுத்து ரோட்டில் செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஆண்களை இன்றைய சமுதாயத்தில் நிறைய பேரை பார்க்கலாம்.

தனியாக பள்ளிசெல்லும் பெண்கள், கல்லூரிக்கு செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஏன் கோவிலுக்கும் சந்தைக்கும் சென்று வரும் பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

போது வெளியில் மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் கூட ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுப்படும் ஆண்களை கண்டு அமைதியாக செல்லும் நம் மக்கள்.

" நமக்கு எதுக்கு வம்பு , இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை , நாமும் போய் பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது, அடித்துவிடுவாங்களோ, இல்லை பழியை தன் மேல் சுமத்த போறாங்களோ " , என்றெல்லாம் யோசிக்கும் மக்கள் மத்தியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் போய்விட்டது.


என்னதான் ஒரு பெண் தன்னை காத்து கொள்ள தற்காப்பு, கராத்தே போன்றவற்றை கற்றுக்கொண்டாலும் , ஏதோ ஒரு சூழலில் வலுவான ஆண்களிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்க முடியாமல் மன்றாடி தான் போய்விடுகிறார்கள்.


இதோ கதையின் முதல் அத்தியாயம்.


***********



அத்தியாயம்-01




அடுத்தவரின் உழைப்பை பார்த்து பொறாமையில் கூட வயிற்றில் நெருப்பாய் எரியும் மக்களை இன்று நாம் பார்க்க முடிகிறது.


பொதுவாக, எதிரெதிர் வீட்டில் வாசிப்பவர்களை உதாரணமாக வைத்துக்கொள்வோம்.


புதுச்சேரி மாநிலம் வில்லியனுர் கொம்யூன், அருகில் உள்ள ஒரு சிறிய நகரம்.


அங்கு பார்வதி தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவரின் கணவர் ஒரு ஊனமுற்றோர். மின்துறை அதிகாரி.


இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.


இரண்டு மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மூத்தவள் ரஞ்சிதா மின் மற்றும் மின்னணு துறையில் முதுகலை பட்டம் பெற்றவள். கணவரோடு வெளியூரில் வசித்து வருகிறாள். அடுத்தவள் சாமூண்டீஸ்வரி டிப்ளமோவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறையில் பட்டயம் பெற்றவள். திருமணமாகி கணவரோடு சேலத்தில் வசித்து வருகிறாள். அடுத்தவள் கணேசமூர்த்தி படிப்பில் படுசுட்டியான வீட்டின் கடைச்சிங்கம்.


புதுச்சேரியில் உள்ள ஒரு பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு துறையில் இறுதியாண்டு பயின்று வருகிறான்.


இரண்டு மகள்களை கடன் வாங்கி தான் திருமணம் செய்து வைத்தார் பார்வதி.

கணவரின் வருமானம் குடும்பத்தை ஓட்டவே போதவில்லை போலும். அந்த கடனை அடைக்க ஒரு தாபா ஹோட்டல் தொழிலை சொந்தமாக ஆரம்பித்தார்.

தொழில் ஆரம்பித்ததில் இருந்து நன்றாக சென்று கொண்டு இருந்த சமயத்தில், எதிர் வீட்டில் வசிக்கும் செல்வராஜ் என்பவனுக்கு பார்வதியின் வளர்ச்சியை கண்டு பொறாமை குணம் தலைதூக்கியது.


தினமும் காலை கணவரை கிளம்பி அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு மகனையும் கல்லூரிக்கு அனுப்பிட்ட பிறகே அவர் தொழில் இருக்கும் இடத்திற்கு செல்வார்.


அதை தினமும் பின்தொடர்ந்த செல்வராஜ் , தொழில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டுக்கொண்டார்.


செல்வராஜ்ற்கு சரோஜா என்ற மனைவியும், பிரதீப் என்ற மகனும் திவ்யாவதனி என்ற மகளும் உள்ளார்கள்.


பொதுப்பணித்துறையில் வேலை பார்த்தவர், போன வருடம் ஜூலையில் தான் அவர் ஓய்வு பெற்றார்.


முதலில் பிள்ளையார்குப்பம் என்ற கிராமத்தில் சாராயம் விற்கும் தொழிலை நடத்தி வந்த சரோஜா, அங்கு குடிக்க வரும் வசதியான குடிமகன்களிடம் அவளின் அலங்காரத்தேகத்தையும் காட்டி , ஆண்களின் மீது கைவைத்து அவர்களிடம் ஆபாசமாக பேசி குறி வைத்து வேண்டுமென்றே அளவுக்கு அதிகமாக சாராயத்தை ஊற்றி கொடுப்பாள் சரோஜா.

அடுத்தவர்களின் வீட்டில் இருக்கும் கோழிகளை திருட்டு தனமாக புடித்துக்கொண்டு வந்து சில்லி சிக்கன் போட்டு அதை குடிக்கவரும் குடிமகன்களுக்கு தனியாக விற்று அதிகமாகவே காசு பார்ப்பாள்..


அப்படி காசு கொடுக்க முடியாத குடிகாரர்களிடம் வண்டி சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு, " காசு கொடுத்துட்டு வண்டி சாவியை வாங்கிட்டு போ " என்று திட்டி அனுப்புவாள்.


குடித்துவிட்டு காசு கொடுக்காமல் தப்பித்து செல்ல முயன்றாலும், அவர்களின் வீட்டு வாசலில் நின்று கத்தி கூவி ஊரை கூட்டுவாள் சரோஜா.


" இந்தாரு உன் வூட்டுக்காரன் கடன்னு சொல்லி என் கிட்ட வந்து சாராயத்தை குடிச்சிட்டு காசு கொடுக்காம போய்ட்டான் " என்று கூறி அந்த வீட்டின் உள்ளே புகுந்து பித்தளை தவலை, பித்தளை குவளை, பித்தளை தட்டு, எல்இடி டிவி, அலமாரி, பூஜையறையில் இருக்கும் காமாட்சி விளக்கை கூட விட்டுவைக்காமல் ஆட்கள் வைத்து அதை எடுத்துக்கொண்டு செல்வாள்.

அந்த வீட்டின் உரிமையாளர்களின் பேச்சை கேட்ககூடாது என்பதற்காக இரண்டு செவியிலும் வெள்ளை பஞ்சை வைத்து அடைத்துக்கொள்வாள்..

இப்படிதான் ஆரம்பமானது சரோஜாவின் சாராயதொழில்.

ஒருசில குடிகாரர்கள் தன் பொண்டாட்டியின் நகைகளையும், குழந்தையின் காலில் கிடந்த வெள்ளி கொலுசையும் திருட்டிக்கொண்டு அதை சரோஜாவிடம் விற்று அளவுக்கு அதிகமாகவே குடித்துவிட்டு செல்வார்கள்.


சாராயதொழில் மூலம் வரும் பொருட்களை விற்று அந்த பணத்தில் வெளியில் கத்துவட்டி கொடுக்கும் தொழிலையும் ஆரம்பித்தாள்.



எந்த அளவுக்கு அதிகமாக சாராயத்தை ஊற்றி எப்பேர்ப்பட்ட குடும்பத்தை கெடுத்தாளோ, அவர்களே தினமும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு சரோஜாவை திட்டித்தான் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.


கத்துவட்டி தொழில் ஆரம்பித்தாலும் சாராயம் விற்பதை நிறுத்தவில்லை அவள்.


இரண்டு தொழிலிலும் அவளுக்கு கொடிகட்டி பறந்தது.

இப்படி ஊரில் உள்ள அனைவரின் பாவத்தை சம்பாதித்து தான் ஒரு காணி நிலம், சிமெண்டால் ஆனா காரைவீடு, மகனுக்கு ஒரு அப்பாச்சி வண்டி என்றெல்லாம் வாங்கினாள் அவள்.


மீண்டும் அவளின் தொழில் அதிகமாக சூடு பிடிக்க தொடங்கியது. அதில் வந்த பணத்தை வைத்து தான் பார்வதி குடியிருக்கும் இடத்திற்கு எதிரே இருந்த காலியான நிலத்தை வாங்கினாள் சரோஜா.


இது பார்வதிக்கு தெரியாமல் போனது தான் விதியின் சதியோ என்னவோ??


அவள் நிலத்தை வாங்கிய உடனே வீட்டையையும் கட்ட ஆரம்பித்து விட்டாள். ஆனால் அந்த கட்டிட பணி பாதியில் நிறுத்திவைத்து கேட்ப்பாடற்று கிடந்தது.


அந்த சமயத்தில் தான் வீட்டில் பக்கத்தில் இருந்த காலிநிலத்தில் புதியதாக இரண்டு மாடிகொண்ட வீட்டை கட்டிமுடித்தார் பார்வதி.

அது எப்படியோ அந்த வழியா வந்த சரோஜாவின் மகன் பிரதீப்பின் விழிகளில் பட ஆத்திரத்தை ஏற்படுத்தியது.


" நாங்கள் தான் இந்த தெருவுக்கே பெரிய தலைக்கட்டு, எங்களுக்கு முன்னால் நீ எப்படி வீட்டை கட்டி முடிக்கலாம் " என்று பார்வதியிடம் அதிகாரமாக சண்டை போட்டு தகாத வார்த்தைகளால் திட்ட, சும்மா இருப்பாங்களா பார்வதி?



" என்ன டா சொன்ன இது என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? உன் இடத்து பக்கம் நான் வந்தா மட்டும் தான் நீ கேட்கணும். சொந்தமா உழைச்சி சாப்பிட துப்பில்லாத பொறம்போக்கு நீ, தெருவுக்கு தலைகட்டாம் தலைகட்டு. அதுவும் பெரிய தலைக்கட்டாம். ச்சே போடா எட்டரை" என்று திட்டினார்.

எட்டரை என்ற பெயர் பிரதீப்பின் பட்ட பெயர். அவனுக்கு இருப்பதே எட்டரை விரல்கள் மட்டுமே.


அவனின் பத்து வயதில் ஒரு ரிமோட் காரை வாங்கி கொடுத்தார் செல்வராஜ்.

அந்த ரிமோட்டை ரெண்டாக பிரித்து, அதனோடு ஒரு கருப்பு கலர் ஒயரை ஒன்றாக செட் செய்து அதை சுவிட்ச்பாக்ஸில் சொருகி சுவிட்ச் அழுத்தி போட அது டாமல் என்று வெடியோடு பிரதீப்பின் வலது கையில் கட்டைவிரலையும் பெருவிரலில் பாதியாக பதம் பார்த்து ஒன்றை விரல் குருதியோடு சிதறி காணாமல் போய்விட்டது.


அன்றிலிருந்து பிள்ளையார்க்குப்பம் மக்களால் அவன் எட்டரை என்று அழைக்கப்பட்டான்.


அவனும் பார்வதி திட்டியத்தை அப்படியே அவனின் தாய் சரோஜாவிடம் கூற, அடுத்த நொடியே முடியை வாரி கொண்டை போட்டு, சேலையை இழுத்து முட்டி தெரியுமளவுக்கு இடுப்பில் சொருகி அடுத்த ஐந்து நிமிடத்தில் பார்வதியின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றாள் அவள்.


வந்தவளை நாலு அறை அறைத்து அனுப்பி இருப்பார் பார்வதி.

பெண்ணில் மேல் பெண்ணே கைவைத்து அடிப்பது தவறு என்று நினைப்பவர் பார்வதி. ஆனால் அதை செயலாக்கி காட்டினாள் சரோஜா.


" ஏய், என்ன என் மவனை திட்டி அனுப்பிருக்கியாமே, உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் மவனை திட்டுவ, நான் எந்த ஒசரத்துல இருக்கேன் நீ எந்த ஒசரத்துல இருக்கற, ஒழுங்கா என் மவன் கிட்ட மன்னிப்பை கேளு! " என்று பார்வதியை நோக்கி கைநீட்டி பேச,


பார்வதியோ, " அடியேய் நீ எந்த ஒசரத்துல வேணாலும் இருந்துட்டு போ. ஏன் பிரான்ஸ் ஈபிள் டவர் ஒசரத்துல கூட இரு டி, நான் வேணாம் ன்ணு சொல்லவே இல்லை. ஆனா சாவுனு ஒன்னு இருந்தா எல்லாருக்கும் ஒரே மாதிரி வராது. ஆனா நீ இதோ போட்டு இருக்கியே நகை அதை உன்னோட வச்சி புதைக்க மாட்டாங்க. ஒழுங்கா வந்த வழியே ஒடி போயிடு இல்லை போலீஸ்க்கு போயி நீ கஞ்சா விக்கிறத்தை போட்டு கொடுத்துவேன் " என்றதும், அடுத்த நிமிடமே அந்த இடத்தை விட்டு ஓடினாள் சரோஜா.



" வந்துட்டாளுங்க ஒசரத்தையாம் ஒசரத்தை, இந்த நாயிங்க எப்படி தான் என்ற வூட்டுக்கு எதிர்ல பிளாட் வாங்கி போட்டுச்சோ. வூட்டை கட்டி அப்படியே போட்டுட்டு, வந்துட்டான் ஏன் முன்னாடியே வூட்டை கட்டி முடிச்ச ன்ணு கேட்க. அந்த பரதேசி இடத்துலயா நான் வூட்டை கட்டி இருக்கேன். சாராயகாராணுவ அவ புள்ளைங்க பேதியிலே போவானுங்க , எப்பா சூரிய நாராயண, ஊர்ல இருக்கிற எத்தனை குடும்பத்தை அழிச்சளோ, அத்தனை குடும்ப சாபம் இந்த சாராயக்காரிய சும்மாவுடக்கூடாது நீ தான் சூரியநாராயணா அவளுக்கு தண்டனை கொடுக்கணும்." என்று வானத்தில் சுட்டெரிக்கும் கதிரவணை நோக்கி கையை எடுத்து கும்பிட்டு சென்றார் பார்வதி.



ஆனால் அவர் வேண்டுவதை உடனே நிறைவேற்றினால் கடவுள் எதற்கு.

விதி ஒன்று இருக்குமல்லவா!
 
Top