கைவைத்தியம் 15
பெண்களுக்காக இன்று..
பொதுவாக பெண்கள் மாதவிடாயின் போது அடிவயிறு வயிற்றுவலி, கோபம், எரிச்சல், தலைவலி இப்படி அவதிக்கு உள்ளாவார்கள். இதற்கான எளிய கைவைத்தியம் இதோ..
** முருங்கைப்பூவை கஷாயம் வைத்து அருந்தினால் இந்த உபாதைகள் நீங்கும்.
** திப்பிலி, இந்துப்பூ, பெருங்காயம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை காலையில் வெறும் வயிற்றில், மாதவிடாய் நாட்களில் உட்கொண்டால், பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலிப் பிரச்சனை குணமாகும்** அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தாலும், வயிற்று வலி குறையும். இதை தினமுமே உண்ணலாம்.
** இஞ்சி துண்டை எடுத்து தண்ணீரில் ஐந்து நிமிடம் சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து தினமும் மூன்று முறை, உணவுக்குப்பின் எடுத்துக்கொண்டால், மாதவிடாய் சம்மந்தமான அனைத்துப் பிரச்சனைகளும் சீராகும்.
** எதுவுமே முடியவில்லையென்றால், வெறும் சீரகத்தை வறுத்து பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் மாதவிடாய் சமயங்களில் அருந்துங்கள்.. சீரகத்தைக் கொத்திக்கவிட்டு அந்த நீரையை குடித்தாலும், நல்ல பலனைத் தரும்.