
வணக்கம் நட்புக்களே! எங்க வீட்டு சமையல் சிக்கன் பிரியாணி. எங்க வீட்டு மருமகள்கள் சேர்ந்து செய்தது. நாங்கள் செய்த பிரியாணியின் செய்முறையை இங்கே பகிர்கிறேன்.
சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
1 கிலோவிற்கு
சிக்கன் - 1கிலோ
தக்காளி- 4
பெரிய வெங்காயம்-4
சின்ன வெங்காயம்- சிறிதளவு
பச்சை மிளகாய்-4 (உங்கள் காரத்திற்கு ஏற்ப)
முந்திரி பருப்பு - 4
இஞ்சி, பூண்டு- தேவையான அளவு
எலுமிச்சை - ஒரு பழம்
பிரியாணி மசாலா- 100கி
தனிமிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
புதினா, மல்லி - விருப்ப அளவு
தயிர் - சிறிதளவு (4 தேக்கரண்டி)
நெய்- 50கி
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஏலக்காய் -2
சோம்பு - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
பட்டை,கிராம்பு, இலை, இளவங்கம்- உங்களது விருப்ப அளவு.
இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு மூன்றையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், புதினா, மல்லி மூன்றையும் மிக்ஸியில் ஒரு அடி அடித்துக் கொள்ளவும்.(கொரகொரப்பாக )
செய்முறை
பெரிய பாத்திரம் ஒன்றில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை,கிராம்பு, சோம்பு, இலவங்கம் போன்றவற்றுடன் ஏலக்காயும் சேர்த்து நன்கு பொரிந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி, பச்சை மிளகாய்,புதினா, மல்லி விழுது என ஒவ்வொன்றாக சேர்த்து சிக்கனையும் சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கவும். கொஞ்சம் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் பிரியாணி மசாலா, உப்பு மற்றும் மிளகாய்த்
தூள் சேர்க்கவும்.
ஒரு தம்ளர்அரிசிக்கு இரண்டு தம்ளர் வீதம் தண்ணீர் சேர்க்கவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும்,அடுப்பின் தீயை குறைத்து, பாத்திரத்தை இறக்கி வைக்கவும்.
பிறகு, குறைவான தீயில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து தம் கட்ட வேண்டும். அடிக்கடி கிளறக் கூடாது. சாதம் உடைந்து விடும். பத்து நிமிடங்கள் கழித்து நெய் ஊற்றிக் கிளறி இறக்கினால் சுவையான சிக்கன் பிரியாணி தயார்.
செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் நட்புக்களே!
பி.கு - குக்கரில் செய்வதானால் அரிசியின் தரத்தைப் பொறுத்து ஒரு விசில் அல்லது இரண்டு விசில் விட்டுக் கொள்ளவும்.
Last edited by a moderator: