கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சிறுகதைகள் - திரி

Poornima Karthic

Moderator
Staff member
நின்னுயிரும் என்னுயிராய்!!!

ஆசிரியர் : 'பூகா' பூர்ணிமா கார்த்திக்.

"ஏய் சூர்யா! காலங்காத்தாலயே எங்கடா கிளம்புறா உன் பொண்டாட்டி" என கடுவன் பூனையாய் கத்தினாள் சூர்யாவின் தாய் சுந்தரி.

"அவ வேற எங்கம்மா போகப்போறா, ஹாஸ்பிடலுக்கு தான் போறா!"

"ஏன்டா இப்ப போகணும். ஒழுங்கா லீவ் போட சொல்லு. ஊர் முழுதும் 'ஆஹான்' காய்ச்சல் சுத்திக்கிட்டு இருக்கு, இவ ஆஸ்பத்திரி போனா, நம்ம வீட்டுல உள்ளவங்களுக்கும் வந்துடும்டா".

"அம்மா என்ன பேசறீங்க, சுகப்ரியா ஒரு நர்ஸ், அதுவும் சென்னையில இருக்கிற பெரிய அரசாங்க ஆஸ்பத்திரியில வேலை, அங்க இருக்கிற பேஷண்ட்டை எல்லாம் சரியாக்க வேண்டாமா! அவளோட கடமைமா இது!".

"என்னடா பெரிய கடமை. நீயும் தான் பெரிய வேலை பாக்குற, இப்ப இந்த வைரஸ் பரவுதுன்னு சொன்னவுடனே வீட்டுலயே உங்காந்து லேப்டாப்பை தட்டல?"

"நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர், அதனால வீட்டுல இருந்தே 'வொர்க் ஃப்ரம் ஹோம்' பண்றேன். அவ அப்படியா, ஏன் புரிஞ்சுக்கமாட்டேங்கறீங்க" என சூர்யாவும், சுந்தரியும் வார்த்தைகளால் போர் தொடுத்து கொண்டிருக்க, அதை எதையும் கண்டுகொள்ளாது, தன்னுடைய அணிகலன்களான வெள்ளை தொப்பி மற்றும் வெள்ளை அங்கியை எடுத்து கொண்டு, "போயிட்டு வரேன் அத்தை, போயிட்டு வரேங்க" என தன் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

"ஏய் இரு சுகா, நானே உன்ன ட்ராப் பண்றேன்" என்று கூறிவிட்டு அவசரமாக உடை மாற்றி கொண்டு, முன்னே சென்று வண்டியை கிளப்பினான் சூர்யா.

அவர்களை போவதையே வாசலில் கோபத்துடன் பார்த்து கொண்டிருந்த சுந்தரியின் சிந்தனையை, அடுத்த வீட்டு உஷாவின் குரல் கலைத்தது.

"என்ன சுந்தரி அக்கா, சுகா ஆஸ்பத்திரிக்கு போவுதா? ஏன்க்கா அனுப்பறீங்க? ஊரு முழுக்க 'ஆஹான்' காய்ச்சல் பரவிகிட்டு இருக்கு, அது முகத்துல உள்ள நரம்பை பாதிக்குதாம், அதனால அந்த வைரஸ் காய்ச்சல் வரவங்க சிலர் முகம் கோணிக்கிட்டு, சிரிச்சு சிரிச்சே செத்துடறாங்களாம்" என தேவைக்கு அதிகமாய் கிலி ஊட்டினாள் உஷா‌.

"என்ன சொல்ற?"

"ஆமாங்கா அதுவும் அந்த வைரஸ் வயசானவங்களையும், குழந்தைங்களையும் தான் பாதிக்குதாம். சரிக்கா நேரம் ஆச்சு, அடுத்த தெரு பாக்யலக்ஷமி பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு போணும். நீங்களும் வரீங்கள்ள?"

"ஆமாம் உஷா, அந்த நிச்சியத்தில் நான் இல்லாமலா? பாக்யா எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட். நானும் ரெடியாகிட்டு வரேன், ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம்" என்று கிளம்பினாள் சுந்தரி.

சுந்தரி குளித்து முடித்து பட்டு புடவை கட்டி கிளம்புகையில், வீட்டிற்குள் நுழைந்தான் சூர்யா.

"என்னடா உன்னோட ஆசை பொண்டாட்டிய வழியனுப்பிட்டு வந்துட்டியா! அவளுக்கு மட்டும் அந்த வைரஸ் வரட்டும், அடுத்த நிமிஷமே டைவர்ஸ் தான்" என தன் புடவை தலைப்பை உதறி, இடுப்பில் சொருகி கொண்டார் சுந்தரி.

"அம்மா அதான் அரசாங்கமே பயப்பட வேண்டாம்னு சொல்லியிருக்குல்ல, எல்லாத்துக்கும் முறையான ட்ரீட்மெண்ட் இருக்கும்மா, அதுவும் இல்லாம சுகாவுக்கு இரண்டு நாள் தள்ளி போயிருக்கு, அதான் அவ தனியா வண்டி ஓட்ட வேண்டாம்னு நான் கொண்டு போய்விட்டேன்".

"அடக்கடவுளே! இருந்து இருந்து மூணு வருஷம் கழிச்சு, நாள் தள்ளி போயிருக்கு இந்த நேரத்துல இவ வேலைக்கு போகலைன்னு யாரு அழுதா? போன தடவை அபார்ஷன் ஆன மாதிரி இந்த தடவையும் ஆச்சு, நிச்சயம் டைவர்ஸ் தான்"

இந்த அம்மாவை திருத்த முடியாது என நினைத்து கொண்டே, "ஆமாம் பட்டுப்புடவையெல்லாம் கட்டிகிட்டு இப்ப எங்க போறீங்க? அதான் வெளில எங்கேயும் தேவையில்லாம போகக்கூடாதுன்னு அரசாங்கம் சொல்லியிருக்கே!"

"ம்ம் நான் என்ன உன் பொண்டாட்டி மாதிரி நோயாளிங்களையா பாக்க போறேன். நல்ல காரியத்துக்கு, என் ஃப்ரெண்டோட பொண்ணு நிச்சயத்துக்கு போறேன். நான் வரேன், எனக்கு மதியம் சாப்பாடு அங்க தான், உனக்கு நேத்து செஞ்ச சாம்பாரை சூடு பண்ணி வெச்சிருக்கேன், நீயே பசிக்கும் போது தோசை ஊத்தி சாப்பிடு" என்று கூறிவிட்டு கிளம்பினார் சுந்தரி.

"இந்த மாதிரி ஆளுங்களை எப்போதும் திருத்த முடியாது. என் சுகா எதுக்கு ஹாஸ்பிடல் போயிருக்கான்னு எனக்கு தெரியாதா?" என்று மனதுக்குள் சுகப்ரியாவை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டான்.

ஆம், சுகா வேலைக்கு சென்ற காரணம் குட்டி ஷிவானி தான். மூன்று வயது ஷிவானியும் வைரஸ் நோயால் தாக்கப்பட்டு, சுகப்ரியா வேலை பார்க்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். ஷிவானிக்கு ஆரம்பத்தில் இருந்து, இவள் தான் சிகிச்சை அளித்து கொண்டிருந்தாள்.பெற்றோர்களும் அதிக நேரம் குழந்தையுடன் இருக்க முடியாது. இவளை தவிர வேறு எந்த செவிலியரையும் ,ஷிவானி கிட்டே நெருங்க விடவில்லை. ஆஹான் நோய்க்கு, மருந்துகளோடு சேர்த்து நல்ல உறக்கமும், மனதை ஒருமுகப்படுத்தும் வேலைகளையும் பார்க்க வேண்டும். குட்டி ஷிவானிக்கு, சுகப்ரியாவின் மடியில் தான் உறக்கம், அவளுடன் தான் விளையாட்டு எல்லாம். இப்போது தான் அவள் ஓரளவிற்கு தேறி வருகிறாள்.

காலையில் வந்தவுடன் கை கவசம், முகக்கவசம் மற்றும் உடையின் மேல் மற்றொரு கவசம் அணிந்து கொண்டு ஷிவானியை பார்க்க சென்றாள்.

"ஷிவானி குட்டி எப்படி இருக்கீங்க? உங்க உடம்பு இப்ப சரியாயிடுச்சு, நீங்க இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இங்க இருந்துட்டு, நாளைக்கு வீட்டுக்கு போகலாம்".

"ஹையா செம்ம ஜாலி, நான் அப்பா அம்மா கூட வீட்டுல போய் விளையாடுவேனே" என்று மகிழ்ச்சியில் குதித்த ஷிவானி, சட்டென்று ஓடி வந்து சுகப்ரியாவை கட்டிக் கொண்டாள்‌. "ஆன்ட்டி நாளைலேர்ந்து உங்களை பாக்க முடியாதா! நீங்க என்கூட விளையாட மாட்டீங்களா? பேசாம நீங்களும் நாளைக்கு என்னோட வீட்டுக்கு வந்துடறீங்களா?" என முகத்தை சோகமாக வைத்து கொண்டு கேட்டாள்.

"இல்லடா செல்லம், ஆன்ட்டி இன்னொரு நாள் வரேன். பக்கத்து ரூம்ல உன்ன மாதிரியே இன்னொரு குட்டி பையன் நவீன் இருக்கான். அவனை பாத்துக்கணும்ல, யூ பி எ குட் கேர்ள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் சுகப்ரியா.

ஷிவானியின் அறையின் வாயிலிலேயே, அவள் பெற்றோர் காத்து கொண்டிருக்க, "ஷிவானி குணமாயிட்டா! நாளைக்கு வீட்டுக்கு போகலாம். அரசாங்கம் சொல்ற வரைக்கும், எங்கேயும் வெளில போகாம பத்திரமா வீட்டுலயே இருங்க" என்றாள் சுகப்ரியா.

"ரொம்ப தாங்க்ஸ்மா! நீங்க இல்லன்னா நிச்சயமா ஷிவானியால குணமடஞ்சுருக்க முடியாது. இனிமே எங்க குல தெய்வமே நீங்க தான்" என ஆட்டோ ஓட்டுனரான அவள் தந்தை சுகாவின் காலில் விழ, "சார் முதல்ல எழுந்திருங்க, நான்னு இல்ல, வேற யாரு பாத்திருந்தாலும் உங்க ஷிவானி குணமாயிருப்பா! என் கடமையை தான் நான் செஞ்சேன்‌"

"அதுக்கில்லம்மா! எங்க வீட்டுக்காரர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஆஸ்பத்திரி வந்தாரு, இங்க வரதுக்கு முன்னாடி, அவரோட வண்டில ஒரு அம்மா இன்னொரு அம்மா கூட சவாரியா ஏறுனாங்களாம், ஏறுனதுல இருந்து யாரோ ஒரு பொண்ண வாய்க்கு வந்த படி பக்கத்துல இருந்தவங்க கிட்ட, திட்டுகிட்டே வந்தாங்களாம். என் வீட்டுக்காரரும், அவங்க இறங்கும் போது யாரை திட்றீங்கன்னு கேட்டதுக்கு, என் மருமகளை தான் திட்டுறேன்னு உங்க பேரை சொல்லி, நீங்க இந்த ஆஸ்பத்திரிக்கு சொல்ல சொல்ல கேக்காம, வேலைக்கு வந்ததையும் சொல்லி இருக்காங்கம்மா. எங்க பத்து வருஷ தவத்துக்கு கிடைச்ச வரம்மா ஷிவானி, அவளை காப்பாத்தி குடுத்திருக்கீங்க. கவலைப்படாதீங்க சீக்கிரமே ஒரு நல்முத்து உங்க வயித்துல உருவாகும்" என்று கண்ணீர் மல்க கூறினார் ஷிவானியின் தாய்.

மாமியார் கூறிய வசை மொழிகளை காதோரமே விட்டுவிட்டு, ஷிவானியின் தாய் கூறிய நல் மொழிகளை மட்டும் மனதுக்குள் எடுத்து சென்றாள் சுகப்ரியா. "உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றிம்மா நான் அடுத்த பேஷண்டை பார்க்கணும்" என்று கூறி கண்ணுக்குள் திரண்டிருந்த கண்ணீரை, வெளியே விடாமல் தடுத்து நிறுத்தினாள்.

அன்று மாலை வீடு திரும்பிய சுகப்ரியாவை கண்டதும், அவள் மாமியார் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டார். அதற்கு பிறகு இவள் எதிரே வராமல் இருப்பதும், இவள் புழங்கிய இடத்தில் புழங்காமலும் தவிர்த்து வந்தாள்.

"ஏதோ இந்த மட்டும் சுகாவை தொல்லை செய்யாம, அமைதியா இருக்காங்களே" என்று நினைத்து சூர்யாவும் அமைதியாகவே இருந்து விட்டான்.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, ஒரு மாலை வேளையில் சுகா மயங்கி விழ, அதை கண்ட சுந்தரி, "டேய் சூர்யா! சீக்கிரம் வாடா உன் பொண்டாட்டி மயங்கிட்டா, சீக்கிரம் வந்து அவளுக்கு ஜுரம் அடிக்குதான்னு பாரு" என மயங்கி விழுகிறவளை பிடிக்காமல் தூரத்தில் இருந்தே அலறினாள்.

சூர்யா பதறிக் கொண்டு போய், அவளை பிடித்து, முகத்தில் தண்ணீர் தெளித்தான். "என்னாச்சு சுகா! வரியா ஆஸ்பத்திரி போகலாம்".

"என்னங்க பயப்பட தேவையில்லை, இது நல்ல மயக்கம் தான்!" என்று வெட்கத்தோடு சுகா கூற, இரண்டு நொடி மகிழ்ச்சியை கூட சூர்யாவிற்கு கொடுக்காமல், "டேய் நீங்களா ஏதாவது முடிவு பண்ணாதீங்க? ஒருவேளை ஆஹான் வைரஸா இருக்கலாம். முதல்ல அவள டாக்டர்ட கூட்டீட்டு போ" என கத்தினாள் சுந்தரி.

வீண் வாக்குவாதத்தை தவிர்க்க, சுகாவும், சூர்யாவும் மருத்துவமனை சென்று, மகிழ்ச்சியான செய்தியுடன் திரும்பி வர, வீட்டின் ஒரு மூலையில் ஜுரத்தில் நடுங்கி கொண்டு, முகம் கோணிக் கொண்டதால் சிரிப்பது போல் அமர்ந்திருந்தார் சுந்தரி.

"அய்யோ சூர்யா! சீக்கிரம் வாங்க, அத்தையை ஹாஸ்பிடல் கூட்டீட்டு போகணும்" என சுகா பதற, "நீ இந்த நேரத்துல வேண்டாம், வீட்டுலயே இரு! உன்னை குறை சொல்லிட்டு, இவங்க ஊர் சுத்தி, இந்த வைரஸை பிடிச்சுட்டு வந்திருக்காங்க. பெத்த கடமைக்காக நான் மட்டும் அம்மாவோட போறேன்".

"இல்லங்க நான் தான் இந்த நோய்க்கு ஸ்பெஷல் இன்சார்ஜ், நான் வரலைன்னா எப்படி. வாங்க சீக்கிரம் போகலாம்!" என முதல் ஆளாக கிளம்பி நின்றாள் சுகப்ரியா.

அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த சுந்திரியின் உள்ளம், தன் தவறை நினைத்து ஓவென்று அழுது கொண்டிருந்தது.

------ முற்றும் -------

மற்றவர் உயிரை தங்கள் உயிராய் எண்ணி,வாழும் தெய்வங்களாய் விளங்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவத்துறையை சார்ந்தவர்களுக்கும் இக்கதை சமர்ப்பணம்.

 
Last edited by a moderator:

அர்பிதா

Moderator
Staff member
என்றும் நியே அன்பே


-அர்பிதா💖


சுட்டெறிக்கும் சூரியன், அந்தியில் மறையும் அந்த அழகிய மாலை நேரம் அது.. சற்று முன்பு வரை மேக கூட்டத்திற்குள் ஒளிந்து கொண்டு பூமிக்கு மழை துளிகளை பரிசளித்து விளையாடி கொண்டு இருந்த சூரியன்... கலைத்து போய் உறங்க செல்ல தயாரான அந்தி மாலை பொழுது அது.


மழையால் குதூகளித்த வானத்து வண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வனவில்லாய் வானில் வளைந்து தோன்றி சூரியனை வழி அனுப்பி கொண்டு இருக்க,


மறுபுறம் சூரியனை பிரிய மனம் இல்லாத மேக கூட்டங்கள் அனைத்தும், மஞ்சளும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் உருமாறி தன் கோவத்தை காட்டி கொண்டு இருந்த நேரம்.


இவைகளின் பாச போராட்டங்களை ரசித்த படி, கையில் ஒரு கப் காபியுடன் அமர்ந்து இருந்தாள் அஞ்சலி.


அவளுக்கு அருகில் முகத்தை கண்ணாடியில் பார்த்த படி, இதழுக்கு சாயம் பூசிய படி... சுற்றம் முற்றம் என எந்த ஒரு கவலையும் இல்லாமல் அமர்ந்து இருந்தாள், ஜின்சி.


அஞ்சலி, இலங்கையின் அடக்கு முறையில் புலம் பெயர்ந்த ஆயிரம் கணக்கான தமிழரில் அவளும் ஒருத்தி. அன்றைய நாளில் நடந்த ராணுவ அத்துமீறலில், கிடைத்த சிறு அவகாசத்தில் இவளை மட்டும் படகில் ஏற்றி அனுப்பி விட்டு... நாங்கள் அடுத்த படகில் வருகிறோம் என்று கூறிய பெற்றோரை எதிர் பார்த்து இன்றும் காத்திருக்கும் பேதை அவள்.


மலேஷியா வந்து இறங்கும் போது பத்து வயது அவளுக்கு. அனைத்தையும் உணரும் தெளிவும் இல்லை, எதையும் மறக்கும் தன்மையும் இல்லை..


நடுவில் தத்தளித்த அவளை தத்தெடுத்து பாதுகாப்பது அந்த தேவாலயத்தின் குழுமம் தான்.. அவளை மட்டும் இல்லை அவளுடன் வந்த சுமார் இருபது குழந்தைகள் இன்று தேவாலயத்தின் பொறுப்பு தான்.


பிறப்பில் ஹிந்துவாக இருந்து, இன்று வளர்ப்பில் கிறிஸ்துவனாக இருக்கும் அவளுக்கு மதம் வெறும் வார்த்தை தான்.. கடவுள் வெறும் கல் தான்.


ஜின்சிகோ, எல்லாமே ஏசு கிறிஸ்து தான்... இந்த உலகில் அவள் பயப்படும் ஒரே நபர் அவர் தான்.. கேரளத்தில் பிறந்து.. இன்று மலேஷியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருபவள் அவள்.


சிறு வயதில், யாரை பார்த்தாலும் பயம், எதை கேட்டாலும் பயம் என்றும் இருந்த அஞ்சலிக்கு கிடைத்த முதல் நம்பிக்கையான தோழி அவளே.. எது நடந்தாலும் தோள் கொடுத்து அவளை தேற்றுபவளின் நட்பினால், ஜின்சி குடும்பத்தினரும் கூட அஞ்சலியை அரவணைக்க... எதோ பெயர் சொல்லும் உறவு அஞ்சலிக்கு, ஜின்சி வடிவில்.


ஜின்சி, நிறத்தில் அதிகம் வெள்ளை இல்லை என்றாலும், கோதுமையை, பாலில் கலந்து குழைத்த ஒரு நிறத்தில்.... அழகிய மை தீட்ட பட்ட மான் விழிகளுடன், முகத்தில் கச்சிதமான ஒப்பனையோடு, எந்த உடை அணிந்தாலும், அவளை கடப்பவரின் கண்கள் அவளை ஒரு நொடி பார்த்து ரசித்து விட்டே செல்லும் அளவிற்கு ஒரு அழகு சிற்பம் அவள்.


அஞ்சலிக்கு அழகு ஒப்பனை இதில் எதிலும் விருப்பமும் இல்லை, ஈடுபாடும் இல்லை.. ராணுவ தாக்குதலின் போது, சிறு காயம் அவளின் புருவத்தின் மேல ஏற்பட்டு இருந்தது....


அதை ஒவ்வொரு முறை கண்ணாடியில் காணும் போதும், அந்த நாட்களின் நினைவு அவளை வாட்ட... காலம் செல்ல.. காயத்தை காண தவிர்க்க அவள் முயற்சிக்க.. அதுவே, அவளின் அழகை மெருகேற்ற அவள் அதிகம் முயற்சிக்காமல் போகவும் காரணமாகி போனது.


சிவப்பு சாயத்தை பூசிய மேகத்தையும், மனம் இல்லாமல் விடை பெரும் சூரியனையும், வரவா வேண்டாமா என்றும் தயங்கிய படி நின்ற நிலவையுமே ரசித்து கொண்டு இருந்தவள், இரண்டு நிமிடமாக அவள் முன் நிற்கும் அவனை கவனிக்கவே இல்லை.


அவள் இதற்கு மேலும் கவனிக்க மாட்டாள் என்பதை புரிந்து கொண்டவன்...


"இந்த காபி ஆறிடுச்சி...வேற ஒன்னு ஆர்டர் பண்ணவா? என்றான் சாதரணமாக.


அவனின் பேச்சில் இருவருமே அவனை பார்க்க....ஸதம்பித்து போகும் ஆண் அழகன் ஒருவன் நிற்பதை கண்டதும், பேசா மடந்தைகள் ஆகி போயினர் இருவருமே.


அவன் அங்கு வந்து பேசும் காரணத்தை நொடி பொழுதில் புரிந்து கொண்டாள் அஞ்சலி.. இது இன்றும் புதிது அல்ல... ஜின்சியிடன் பழக விரும்புபவர்கள், அஞ்சலியிடம் தான் முதலில் பழகி, ஜின்சியை பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு.. பின் இவளை கண்டுகொள்ளவும் கூட மாட்டார்கள்.


அதில் அஞ்சலிக்கு கூட சிறு மன வருத்தம் தான்...ஜின்சியை நெருங்க பாலமாக மட்டுமே இருக்கிறோமோ என்று பல நாள் யோசித்து, வருந்தவும் செய்து இருக்கிறாள் அஞ்சலி... ஆனாலும் இதில் ஜின்சி மேல வைத்து இருக்கும் அன்பு மட்டும் என்றுமே குறைந்தது இல்லை.


இன்றும் அழகிய ஆண் ஒருவன் தானாகவே முன் வந்து அவர்களிடம் பேச. அவனின் நோக்கம் புரிந்தே இருந்தது அஞ்சலிக்கு... கடந்த இரண்டு மாதத்தில் குறைத்து பதினைந்து பேராவது அஞ்சலியுடன், ஜின்சியை பற்றி தெரிந்து கொண்டு, பின் இவளுக்கு சாக்லேட், பரிசு என்று வாங்கி கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.


இவனும் இப்டி தான் இருக்க போகிறார் என்றே தோன்றுவது அஞ்சலிக்கு... நல்ல உயரமும், சற்று கருத்த தேகம் தான், ஆனாலும் காண்போரை வசீகரிக்கும் கலையான முக அமைப்பு..இந்த காலத்து நாகரீகத்திற்கு ஏற்றார் போல், உடைகளும், அணுகுமுறையும் இருந்தாலும், முகத்தில் மட்டும் என்றும் தேயாத முழு நிலா , வளைந்து புன்னகைத்த படியே இருக்கும் செவ்விதழ்கள்.


ப்ரியமானவளே படத்தில் விஜய் கூறுவதை போல் " ஒரு சின்ன புன்னகை இவன் பூத்தால் போதும், அழகு மங்கைகள் வரிசையில் நின்று போட்டியிடும் வசீகர புன்னகை பெற்றவன் அவன்", சித்தார்த்.


அவனின் புன்னைகையில் தன்னை துளைத்து, முதல் முறை ஒரு ஆணை பார்த்து தடுமாறும் தனது மனதை புரிந்து கொள்ள முடியாமல் அவள் முழித்து கொண்டு இருக்க.


"உங்களை தான் கேக்குறேன்.. இன்னொரு காபி சொல்லவா?" என்ற படி அவர்களுக்கு எதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்தான் அவன்.


இதில் திடுக்கித்தாலும், இவனும் மற்ற ஆண்களை போல தான்.. ஜின்சிகாக தன்னிடம் பேச வந்துள்ளான்... நமக்காக இல்லை என்றும் உணரும் போதே மனதில் ஒரு படபடப்பும், அர்த்தம் புரியா வலியும் தோன்ற.. "இவன் நமக்காக வந்து இருக்க கூடாதா"என்றும் ஒரு புறம் தோன்றவே செய்தது அவளுக்கு.


தன் யோசனைகளை விடுத்து அவனை பார்த்தவள்,


"எனக்கு காபி குடுக்குற விருப்பம் போயிடுச்சி... இதோ இவளுக்கு வாங்கி குடுங்க" நேரடியாக ஜின்சியை கை காட்டியவள், சித்திற்கு எதோ தானே வழி செய்து விட்டதாக நினைத்து அவ்விடம் எழுந்தும் சென்று விட்டாள்.


சிறிது நேரம் கடற்கரையில் அமர்ந்து இருந்தவள்... பின் ஜின்சியை தேடி வர.. அவள் அங்கு இல்லாமல் போக...சித்துடன் சென்று இருப்பாள் என்றும் எண்ணியவன்... வீடு நோக்கி புறப்பட்டாள்... ஆனால் அவளுள் சித் ஏற்படுத்திய தாக்கம் தான், அவளை அடுத்த இரண்டு நாட்கள் போட்டு வாட்டி எடுத்து கொண்டு இருந்தது.


அந்த இரண்டு நாட்களுமே ஜின்சியை சந்திக்க அஞ்சலிக்கு மனமே இல்லை... ஜின்சியும் கூட இவளை அழைத்து பேசவும் இல்லை.


இரண்டு நாட்கள் கழித்து, மதிய உணவை முடித்தவன், சர்ச் அருகில் அமைக்க பட்டு இருக்கும் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டு, அவைகளுடன் பேசி கொண்டும் இருந்தாள் அஞ்சலி.


இலங்கையில் அவள் வீட்டிளும் இதே போல் தோட்டமும், அதை அவளும், அவளின் தாயும் பராமரித்து வந்தது அவளால் மறக்க முடியாத ஒன்று...


அதுவும், வளர்க்கும் ஒவ்வொரு செடியில் பூக்கும் முதல் பூ அனைத்துமே நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களோ, இறந்தவர்களோ நமக்கு அழைக்கும் பரிசு என்றும் பல முறை அவளின் தாய் கூறி கேட்ட வார்த்தைகள் கூட பசுமை மாற நினைவுகளாய் அவளின் மனதில் இன்றும் குடி கொண்டு இருக்கிறது


தாய் தந்தை இன்று இருக்கிறார்களா, இல்லை இறந்தார்களா என்றும் கூட தெரியாத அவளுக்கு... இந்த மலர்களும், தோட்டமும் தான் பெரிய ஆறுதலாகவே இருந்து வருகிறது


அவளின் இந்த இனிய நேரத்தில் குறுக்கிட்டது, ஜின்சியின் அலைபேசி மணி...மறுபுறம் படு உற்சாகமாய் ஒளித்து கொண்டு இருந்தது ஜின்சியின் குரல்.


"அஞ்சு...அம்மா அப்பா அந்த பையனுக்கு சம்மதம் சொல்லிட்டாங்கடி" என்றாள் எடுத்த எடுப்பில்,


"எந்த பையன்டி" என்றாள் அஞ்சலி புரியாமல்.


"அதான் அந்த காபி ஷாப்ல பார்த்தோம்ல..அவுங்க தான்" என்றான் வெட்கம் தேய்ந்த குரலில்.


சித்தை தான் கூறுகிறாள் என்பது புரிந்தே விட்டது அஞ்சலிக்கு... அவனை நிராகரித்து இருந்தால் தான் ஆச்சர்ய பட வேண்டும்.. பிடித்து போனதில் என்ன விந்தை.


அஞ்சலி கூற வருவதையும் கேட்காமல் தொடர்ந்தாள் ஜின்சி "இன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு வந்துடுடி.. ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்கோம்... சரியா ஆறு மணிக்கு வந்துடு" என்றவள் சந்தோச மிகுதில் இருக்க.. அதை கெடுக்க விரும்பாத அஞ்சலி சரி என்ற படி வைத்தும் விட்டாள்.


மாலை ஆறு மணிக்கு செல்ல தயாரானவள்... தன்னையே கண்ணாடியில் கிட்ட தட்ட முதல் முறை அந்த காயத்தை தாண்டி மின்னும் அவளின் அழகை ரசிக்க தான் செய்தாள்..


இதுவும் கூட சித் அவளுள் ஏற்படுத்திய மாற்றம் தான் என்பதயும் அறிவாள் அவள்... இருந்தும் அவன் தன் தோழிக்கு கணவனாக போகிறவன்... அவனை தவறாக நினைக்க கூடாது என்றும் பல முறை மனதிற்கு அறிவுரை செய்தவள்... ஜின்சி வீட்டிற்கும் சென்றாள்.


வீடு மொத்தம் அலங்கரிக்க பட்டு...பலூன்களும், வண்ண காகித அலங்காரங்களும், அதிக வெளிச்சம் இல்லாமல், அந்த மாலை நேரத்தை மேலும் ராம்மியமாக்கும் விதமாக மெல்லிய ஒளி விளக்கும்... வந்தவரை கரைய வைக்கும் ரஹ்மானின் இசை, கேட்டும் கேக்காமலும் பின்னனியில் ஒளித்து கொண்டு இருந்தது.


அனைவரின் கவனத்திற்கு ஈர்த்த படி இறங்கி வந்தாள், ஜின்சி.. சாதாரண பட்டு புடவை ஒன்றில்... எப்போதும் ஒப்பனையுடன் இருக்கும் முகத்தில் மேலும் கவனம் கொடுத்து அழகூட்ட பட்ட முகமும்...அவளின் செம்மண் நிறத்தில் கலர் செய்ய பட்ட முடியில் பாதி தோல் மேல் வந்து ஆட..அழகிய சிலையாய் வந்து இறங்கினாள் ஜின்சி.


வந்தவள் நேரே அங்கு நிற்கும் ஆண் ஒருவரை கட்டி பிடித்து.. இருவரும் ஒருவருக்கு ஒருவர் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு வந்த விருந்தினர்களுக்கு வணக்கம் தெரிவித்து... அங்கு இருக்கும் சோபாவில் அமர்ந்தும் கொண்டனர்.


அந்த ஆணை பார்க்க... அது நிச்சயம் சித் இல்லை என்றும் மட்டும் தெரிந்தது அஞ்சலிக்கு ...


"யார் இவன்... இவனுடன் எதற்கு ஜின்சி அமர்ந்து இருக்கிறாள்....அப்போ சித் எங்கே.. அவன் மாப்பிளை இல்லையா? " என்ற பல கேள்விகள் அவளுள் தோன்றி கொண்டு இருக்கும் நேரத்தில் ஒலித்தது அந்த மனதை உருக்கி,தன்னிலை மறக்க வைத்தது அந்த குரல்.


"காதல் வந்து தீண்டும் வரை, இருவரும் தனித் தனி..
காதலின் பொன் சங்கிலி, இணைத்தது கண்மணி..!


கடலிலே மழை வீழ்ந்த பின், எந்தத் துளி மழைத் துளி?
காதலில் அது போல நான், கலந்திட்டேன் காதலி..!


திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்..
தினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன்..
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி...!"


உருகி கொண்டு இருந்தான் அவன்.. அங்கு இருந்த அந்த சிறு மேடையில் மைக்கில் பாடிய படி... அவன் சித் என்பதற்கு மூளை எப்போதோ உணர்ந்து இருக்க..அவன் குரல் செய்த மாயத்தில் மயங்கி நின்று இருந்தாள் அஞ்சலி.


அவன் பாடி முடிக்க.. கூடி இருந்த கூட்டம் கரகோசத்துடன் அவனை பாராட்ட.. அவனோ மேடையை விட்டு இறங்கியவன், பார்வை மொத்தம் அஞ்சலி மேல இருக்க.. அவளை மொத்தம் ஆராய்ந்த படியே வந்தான் சித்.


பொன்னிற லெஹன்கா உடையில்...இடை வரை மின்னும் அவளின் கருங்குந்தலை அள்ளி முடியாமல் காற்றோடு கதை பேச விட்ட படி...காற்றின் தளத்திற்கு ஏற்ப காதின் தோடு ஜதி அமைக்க.. பொன் சிலை என நின்ற அவளை பார்த்தும் பாடல் வராமல் போனால்... ஆண் அவனின் ஆண்மைக்கு இது ஒரு இழுக்காகி விடாதா... அவளையே நினைத்து, மனதில் நிறைத்து, பாடலை பாடினான் சித்.


அவளை நெருங்கியவன் ஏதும் பேசாமல் அவளின் கண்ணோடு கண் பார்த்து நின்று இருக்க, முதலில் துவங்கியாது அஞ்சலி தான்.


"நீங்க தானே அன்னைக்கு காபி ஷாப் வந்து பேசுனீங்க.. நான் கூட ஜின்சி கிட்ட பேச முயற்சி பண்ணுறீங்கன்னு தானே அங்க இருந்து போனேன்.. இப்போ பாருங்க யாரோ ஒருத்தன் அவளுக்கு முத்தம் குடுக்கிறான்.. வாங்க போய் கேப்போம்" என்றாள் சிறு குழந்தை போல் மை தீட்டிய கண்களை உருட்டி, முகத்தில் அப்பாவி தனம் குடி கொண்டவளாய்.


அதில் அவளை அப்போதே அணைக்க தூண்டிய மனதை கட்டு படுத்தியவன்...


"நான் அன்னைக்கு வந்தது எனக்காக இல்லை.. என்னோட நண்பனுக்காக. அவன் உன் தோழியை விரும்பினான்.. அதற்கு தான் அன்று வந்தேன்.. நீ எதுக்கும் வழி குடுக்காம எழுந்து போய்ட்ட...அப்றம் உன் தோழிகிட்ட பேசினேன்... அவளுக்கும் விருப்பம் இருந்து இருக்கு.. அவளும் சம்மதிச்சிட்டா,


ஏதோ அவன் தான் என்னோட நண்பன் முகுந்தன்...உன் தோழியோட வருங்கால கணவன்" என்றான் அழுத்தம் திருத்தமாக.


'ஓஒ' என்று நின்று கொண்டு இருந்தவள்...


"அப்போ நீங்க யாரு?" என்றாள் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டவளாய்.


"அப்பாடா... இப்போவாச்சும் என்ன பத்தி கேட்டியே" என்றவன்.


"என்னோட பேர் சித்தார்த்... சொந்த ஊர் தூத்துக்குடி, தமிழ்நாடு... அப்பா அம்மான்னு சொந்தம் மொத்தமும் அங்க தான்... அப்பா உப்பளம் வெச்சி பார்த்துக்குறாரு.


நான் இங்க ஒரு சின்ன கம்பெனி ஒன்னு வெச்சி இருக்கேன்... அதோட ஒரு மியூசிக் ட்ரூப் ஒன்னுலயும் பாடுறேன்.. அவ்ளோதான்.. வேற ஒன்னும் இல்லை சொல்ல" என்றான் மிக சாதாரணமாக.


அதில் விழி பிதுங்கி அமர்ந்து இருந்தவள், தன்னை அறிமுகம் செய்யும் விதமாக "நான் அஞ்சலி.. என்னோட....


ஊர் ஸ்ரீலங்கா.. 2009ல அகதியா இங்க வந்த... சர்ச் தான் உன்னை பார்த்துக்குறாங்க...பாட்டு பட பிடிக்கும்.ரெண்டு வருஷம் பயிற்சியும் எடுத்து கிட்டு இருக்க... பரதநாட்டியம் ஆட தெரியும்... பிடிச்ச உணவு தமிழ் ஸ்டைல்ல எதுவா இருந்தாலும் பிடிக்கும்... பிடிச்ச நிறம் பச்சை...மனுஷங்கள விட பூ, செடி கொடி கூட ரொம்ப பேசுவ...


மத நம்பிக்கை இல்லை.. தெய்வ நம்பிக்கை உண்டு" சொல்லி முடித்தான் சித்.


அனைத்தயும் சரியாக கூறும் அவனையே விழி விரித்து வியந்து போய் பார்த்து கொண்டு இருந்தாள் அஞ்சலி..


எதர்ச்சையா பார்வை ஜின்சி மேல் பட.. கண் சிமிட்டி சிரித்தாள் அவள்.


"உங்களுக்கு எப்படி இதெல்லாம்..." வார்த்தையை தேடி பேசினாள் அஞ்சலி.


"அது இப்போ வேணாம்.. அப்புறம் சொல்லுறேன்" என்ற படி முடித்து கொண்டான் சித்.


"எதுக்கு இப்டி... " மறு முறையும் மனதின் கேள்விகள் வார்த்தையாக தயங்கிய போது.


அதை புரிந்து கொண்டவன்...


"அதுவும் இப்போ வேணாம்.. நாம முதல்ல பழகுவோம்...நம்மளை பத்தி நல்லா தெரிஞ்சிப்போம்... அதுக்கு அப்றம் சொல்லுறேன் நான் ஏன் இதை எல்லாம் செய்தேன் என்று" என்றான் பொன் சிரிப்போடு.


அதற்கு அவள் சரி என்றும் தலை அசைக்கவும்... அடுத்த பாடல், ஜதி எடுக்கவும்,


"பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்


பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்


எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை "


அதில் மூழ்கி போயின நெஞ்சம் இரண்டும்..


💖💖💖முற்றும் 💖💖💖


-அர்பிதா💖


 

அர்பிதா

Moderator
Staff member
உயிர்த்தேனே உன்னில்❤️❤️❤️உறவே 💖💖💖

-
அர்பிதா💖


காலை தென்றலின் வாசமும், சூரியனின் இளங்கதிரும் ஒன்று சேர்ந்து பூமியில் பட, அதன் மலர்ச்சியை மலர்கள் சிரித்த படி வரவேற்க... இவை எதையுமே ரசிக்காமல், கவனிக்கவும் இல்லாமல் இயங்கி கொண்டு இருந்தது நகரின் அரசு மருத்துவமனை.


மக்களுக்கு பஞ்சம் இல்லை என்றாலும், அங்கு அவர்களை கவனிக்க டாக்டர்தான் குறைவாக இருந்தனர்.


காலில் சக்கரம் கட்டி கொண்டு, நான்கு மாடி நோயாளிகளையயும் இரண்டு மணி நேரத்தில் பார்த்து விட வேண்டும் என்று சுழன்று கொண்டு இருந்தாள் வெண்பா.


ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தின் பெண் அவள்... பன்னிரெண்டாம் தேர்வில் சில மதிப்பெண்கள் குறைத்து போய், இலவச மருத்துவ சீட் கிடைக்காமல் போக,


தந்தை எதையோ உருட்டி பிரட்டி தனியார் கல்லூரியில் அவளை சேர்த்து விட.. இதோ நின்று வெள்ளை கோட் அணிந்து கொண்டு, மருத்துவராய் நிற்கிறாள் அவள்.


ஆனாலும், தன் முயற்சியில், தான் எதையும் சாதிக்க வில்லையே என்ற எண்ணமே அவளை ஒரு புறம் அழுத்த தான் செய்தது.


பணத்தில் மருத்துவம் படித்தவள் தானே என்ற மறைமுக பேச்சுகளும் அவள் காதில் விழாமல் இல்லை... அரசு கல்லூரியில் படித்தவர்களின் ஏளன பார்வையும் அவள் மேல் படாமல் இல்லை.


இங்கு இருந்து மேலே எழ அவளால் முடிந்த வரை அவள் போராடி கொண்டு இருக்க, காலமோ விதியோ அவளை எழ விடாமல் செய்ய... அதே இடத்தில் தவழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு நிர்கதி பேதை அவள்.


"இதை பற்றி யாரிடமும் பேசினாலும்.. நீ ஆசை படுறத விட நல்லதா எதோ நடக்க போகுது.. அதனால தான் இப்டி... காலம் வரும் போது எல்லாம் நடக்கும்" என்ற வார்த்தைகளே கூற பட, காலத்தை எதிர் நோக்கியவளின் காத்திருப்பு இன்றும் முடிந்த பாடில்லை.


இந்த எண்ணங்கள் எல்லாம் அவளுள் தினமும் எழுந்தாலும், ஒரு பெருமூச்சுடன் "நடப்பது நடக்கட்டும்" என்று தனக்கு தானே போய் நம்பிக்கையை கொடுத்து கொண்டு, பிடிப்பற்ற வாழ்வில், பிழையாய் வாழ்ந்து வருகிறாள், அழகின் உருவமாக வெண்பா.


இத்தனை எண்ணங்களையும் ஒரு புறம் வைத்து விட்டு இன்று புயல் காற்றாய் சுழன்று கொண்டு இருந்தாள் அவள்.


காரணம் இன்று அந்த நான்கு மாடியை சேர்த்து பார்க்க வேண்டிய மொத்த பொறுப்பும் இவள் கணக்கில்... உடன் வேலை செய்யும் மருத்துவரும் இன்று விடுப்பு எடுத்துவிட... "நான் பார்த்து கொள்கிறேன்" என்று வீர வசனம் பேசியவலுக்கு, மூச்சு விடவும் நேரம் இல்லாமல் போகும், என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை அவள்.


மணி ஒன்பதை கடக்க சுடசுட, காலையில் கட்டி கொடுத்த இட்லியும், கார சட்டினியின் நினைவும் அவ்வப்போது கண் முன் வந்து சென்றாலும், நோயாளிகள் அவர்களின் உணவை உண்ணும் போதும் மனம் வயிற்றை தட்டி எழுப்பி, அது ஒரு புறம் கத்தி கொண்டு இருந்தாலும், செய்யும் வேளையில் கவனமே இல்லாமல் வயிற்றுக்கும், மூளைக்கும் யுத்தம் நடக்க... அனைத்தையும் விடுத்து நோயாளிகளின் தினசரி குறிப்பில் தான் மருத்துவ குறிப்புகளை எழுதிய படி இருந்தாள் வெண்பா.


சுற்றி சுற்றி இவள் சுழன்று முடிக்க காலை பதினொன்றை தாண்ட,


"இப்போவாவது என்னை கவனி" என்று வயிறு கூச்சலிட,


"சரி சாப்பிடலாம்"என்ற போது சரியாக வந்து சேர்ந்தார் செவிலியர் ஒருத்தி.


"மேடம், op ஆரம்பிச்சுடுச்சு, ஏற்கனவே இருபது பேர் வைட்டிங்...வாரீங்களா?" என்றாள் பவ்யமாக.


"போச்சுடா.. இனி இவ நம்மள கண்டுக்க மாட்டா... நேத்து இவ வீட்ல சண்டை போட்டதுக்கு, நம்மள பட்டினி போட்டா... இப்போ காலைலயும் நம்மள கவனிக்கல... இந்த விரதம் எப்போ முடியுமோ" என்ற படி அவளின் வயிறு ஒரு புறம் தன் புலம்பல்களை பிதற்ற...


அவை அவளின் காதில் விழுந்தால் தானே... செவிலியர் சொன்ன அடுத்த நிமிடம் இருக்கையை விட்டு எழுந்தவள், லிப்ட்டில் ஏறி கொள்ள,


"ஆள் இல்லாத இந்த நேரத்துல, நோயாளிகள் தங்களுக்குள் சண்டை போடாமல் இருந்தால் போதும்" என்ற எண்ணமே அவளின் மனதில் ஓட... நேரே தன் அறைக்குள் சென்றவள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.


நல்ல சவுகரியமான பெரிய இருக்கை தான்.. அவளின் மேஜை மேல DR.வெண்பா என்ற பெயர் பலகை பல்லை காட்டி கொண்டு இளித்து நிற்க.. அதை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்...


"இந்த பெயருக்கு தான் தகுதியானவள் தானா?" என்றே அவளின் மன கண் கேள்வி கேட்க.. எதோ மனதை குடைய... அடுத்த வேலையில் கவனத்தை செலுத்துவாள் அவள்.


எழுத பேனா, ஸ்டெதாஸ்கோப், தன் பெயர் பொறித்த சீல் என்று அனைத்தயும் மேஜை மேல் வைத்தவள்...அன்றைய முதல் நோயாளியையும் பார்க்க துவங்கினாள்.


இடையில் வயிறும் பல முறை அவளை அழைத்து, அழைத்து ஓய்ந்து போக, கைபேசியும் கூட அளவுக்கு அதிகமாகவே இன்று சிணுங்கி கொண்டு இருந்தது... குறுஞ்செய்திகள் சிலதும், அழைப்புகள் பலவும்.


அதை எதையும் கவனிக்காமல் அவள் ஓப்பியை முடிக்கவே மணி இரண்டை தொட்டது...


'அப்பாடா' என்று பேனாவை கீழே வைத்து நாற்காலியில் சாயும் நேரம்,


"மேடம் அந்த நாலாவது மடியில இருக்க பத்தாவது பெட் பெஷன்ட்க்கு இதய துடிப்பும், பிபியும் கொறஞ்சிகிட்டே வருது மேடம் "என்றாள் செவிலியர் பெண் ஒருத்தி.


அவ்வளவு தான், அடுத்து அங்கு ஓட்டத்தை எடுத்தாள் வெண்பா... லிப்டும் அந்த நேரம் பார்த்து வராமல் போக... அவசரம் புரிந்தவள் எதையும் யோசிக்காமல் படியில் நான்கு மாடிகள் ஏறி சென்றாள்.


அங்கு அனைத்தையும் பார்த்து முடிக்கவே மணி நான்கை காட்ட...


"ஹப்பாடா... இனி வீட்டுக்கு போய்டுவா... இனியாச்சும் நம்மளை கவனிப்பா" என்று வயிறு குதூகலித்த நேரம்,


அடுத்த ஷிபிட் மருத்துவரின் கார் பழுதாகி விட... அவர் வரும் வரை பார்த்து கொள்ளும் படி கூறி விட... மறுக்கவா முடியும்... 'சரி' என்ற படி அடுத்த வேளையில் கவனம் செலுத்தினாள் அவள்.


காற்றில் ஆடும் கேசத்தையும், இதோ இப்போதே விழுந்து விடுகிறேன் பார் என்ற படி மேஜையில் இருந்த டார்ச் ஒன்றும் ஆடி கொண்டு இருக்க... அதை எதையும் கவனிக்காமல் தன் ஏடுகளில் மொத்த கவனத்தையும் செலுத்திய படி எதையோ மும்முரமாக எழுதி கொண்டு இருந்தாள் வெண்பா.


கிட்டதட்ட அந்த டார்ச் விழ போகும் போது அதை கவனித்தவள், அதை பதறி போய் பிடிக்க போகும் தருணத்தில்,


அவளின் கையை வலிய கரம் ஒன்று பற்றி கொண்டு, "இனி உன்னை தாங்க நான் இருக்கிறேன்" என்ற படி அவளையும், டார்ச்சையும் ஒரு சேர தாங்கியது.


அந்த டார்ச்சின் ஒளி இருவருக்குள்ளும் பரவ... இரண்டு நொடி ஒருவர் விழியில் இருவர் மூழ்கி தொலைந்த நேரம்,


"என்னடா ஆச்சு" என்ற கேள்வியில் இருவருக்கும் சுற்றம் புரிய.


மண்டியிட்ட படி அவள் முன் அமர்ந்து கொண்டு, கையில் டார்ச்சை பற்றி கொண்டு இருந்தான் அவன்.


இருக்கையில், ஒரு கையை ஏடுகளிலும், மறு கையை தனக்குள் அடக்கி டார்ச்சை பிடித்து கொண்டு,


'காற்றில் கதை பேசலாம் வா' என்று அழைக்கும் கூந்தலும்,


'என்னோடு வந்து காற்றின் கானத்தை ரசி' என்று அழைக்கும் தோடுகளும்,


'என்னை பார்த்தாயா... அவளின் சங்கு கழுத்தை மொத்தமாக தழுவி கீழிறங்கி உல்லாசமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் பார்'என்று கர்வம் கொள்ளும் அவளின் தங்க சங்கிலியும்,


'அவள் கரங்களை தினமும் தொட்டு தழுவி, அவள் விரல்கள் என்னை தினமும் தீண்டும் பாக்கியம் பெற்ற என்னை பார்' என்று அவளின் கை கடுகரம் மெச்சி கொள்ள,


'போதும் நிறுத்துங்கடா... இஷ்ட பட்ட படி அவள் தீண்டலில் ஸ்பரிசத்திற்கேற்ப சிணுங்கும் என்னை போல் வாழ்வு எவனுக்கு உண்டு' என்று மார் தட்டி கொள்ளும் அவளின் கொலுசுக்கிடையில்,


பாவம் வாலிபன் அவன் மனது தான் 'என்னையும் எடுத்து கொள்... நானும் உன் மடியில் இருந்தே காலத்தை கடத்தி விடுவேன்' என்று மத்தளம் கொட்ட,


விழி கூட, 'இத்தனை நாள் இவளை எனக்கு காட்டாமல் போய் விட்டாயே சண்டாளா' என்று அவனை கரித்து கொள்ள,


'இந்த ஜீவன் பிறந்து உனக்காக தானோ சகியே'என்று தன்னை மொத்தமும் அவளின் பாதத்தில் வைத்தான் அந்த ஆண் மகன்.


அந்த மாயையில் இருந்து மீண்டு வரவே பல நிமிடங்கள் அவன் எடுத்து கொள்ள,


அவனுடன் இருந்த அவன் நண்பன் தான் அவனின் கவனத்தை திசை திருப்பி,


வெண்பாவிடம் கேள்விகள் சில கேட்க,


அதற்கும் முகம் சுழிக்காமல், சிரிக்க வளைந்த அவளின் இதழ்களில், அரைகுறையாக ஒட்டி இருந்த ஜீவனும் கூட அவளின் புறம் தாவி விட...


'மொத்தமும் இனி உனதே' என்று உரக்க கத்தியது அவனின் மனதும், மூளையும்.


அடுத்து அவளின் கவனத்தை ஈர்க்க கைபேசி அலற, அதை எடுத்தவள், முகம் மறுபுறம் சொன்ன செய்தியில் முற்றிலும் சுருங்கியே போனது.


சரிமா..


.....


வந்துடுவேன்.


.....


நியாபகம் இருக்கு.


என்றவளின் பேச்சும் முகமும் உள்வாங்க.. அதை பார்த்து தாளாதவன் நெஞ்சம்.. அவ்விடம் சிலையாக,


'ஏன்?' என்ற கேள்வி மட்டுமே தோன்றியது அவனுள்.


அவனின் கேள்விக்கு பதிலாய், செவிலியர் ஒருத்தியும்,


"என்ன ஆச்சு மேடம்...திடீர்னு முகம் வாடிடுச்சி" என்றாள். அவனின் மனதின் கேள்வியையும் கேட்ட படியாய்,


"நாளைக்கு தேதி 29..."என்றாள் சோர்ந்த குரலில்.


"அதுக்கு என்ன மேடம்" என்றாள் செவிலிய பெண் புரியாமல்.


நாளைக்கு என்ன பொண்ணு பாக்க வராங்க" என்றாள் இம்முறையில் சோர்வும், வலியும், பயமும் ஒரு சேர தெரிந்த படி.


அவளின் மன போக்கு புரிந்தவள் "ஓஹோ" என்ற ஒற்றை வார்த்தை மட்டும் உதிர்த்து, அடுத்து என்ன பேசுவது என்பது புரியாமல் இருக்க.


"அப்பா அம்மா வயசும், கல்யாண வயசை எட்டிய தங்கச்சியும் இல்லாமல் இருந்து இருந்தா...திருமணம் என்ற வார்த்தையை கூட என்னோட வாழ்க்கைல வர விட்டு இருக்க மாட்டேன்" என்றவளின் குரலில் ஆற்றாமையே அதிகம் தெரிந்தது.


"எத்தனை நாளைக்கு இப்டி இருக்க முடியும்ன்னு நெனைக்குறீங்க.... என்னக்கு இருந்தாலும் ஒரு துணை தேவை தானே" என்றாள் அந்த செவிலிய பெண்.


"துணை தேவை சரி தான்... அதோடு வர போகும் பிரெச்சனைகளை யார் எதிர் கொள்வது... ஒரு வேலை வருபவன் குணத்தில் நல்லவனாக இல்லாமல் போய் விட்டால்....!!" என்பதே அவளின் அடுத்த வாதம்.


"உங்க நல்ல மனசுக்கு நல்லதாவே நடக்கும்... நல்லதே நினைங்க" என்றாள் அந்த பெண்.


அதை அனைத்தையும் கேட்டு கொண்டு நின்றவனின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும்... இவளின் முக வட்டத்திற்கு தான், தான் காரணமா என்ற எண்ணம் தான் அவனையும் வாட்டவே செய்தது.


"என்ன ஆனாலும் சரி.. அவளை வருந்தும் எதையும் தான் செய்ய கூடாது.. தன்னால் அவள் முகத்தில் ஒரு சிறு கலக்கம் தோன்றினாலும் அக்கணமே அவளை விட்டு சென்று விட வேண்டும்" என்று முடிவெடுத்தான் அவன்...


இதுவரை தன் வாழ்வில் பாதை கரடு முரடாகவே இருந்து இருக்க... இன்று திடீரென எங்கு இருந்தோ வரும் ஒருவனால் வாழ்க்கை பொன் சோலையாய் மாறி விடும் என்று கூறுவது கேட்கவே வேடிக்கையாய் தான் இருக்கும் அவளுக்கு.


கடந்த ஒரு வருடமாக இதை சொல்லி தான் திருமணத்தை தள்ளி போட்டாள் வெண்பா... தன் வாதத்தை கூறாத ஆளே இல்லை என்றும் கூட கூறலாம்.


பேசிய அனைவரிடமும் இருந்து வரும் ஒரே பதில்,


"எதோ உலகத்திலேயே நீ மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற மாதிரி பேசுற... கல்யாணம் பண்ணிகிட்டவங்க எல்லாரும் சந்தோசமா இல்லையா... நீ அதிகமா எதிர் பார்த்தா அது வாழ்க்கைக்கு ஒத்து வருமா" என்ற பேச்சுக்கள் மட்டுமே.


அதனாலேயே இதை பற்றி அவள் பேசுவதையே விட்டு விட்டு... "விதி விட்ட வழி" என்று விட்டு விட்டாள்.


ஆனால், நாளை எவனோ ஒருவனை தன்னுடைய சர்வமுமாக ஏற்று கொள்ள வேண்டும் நினைக்கும் போது தான்... உடலின் அத்துணை நரம்புகளும் புடைத்து கொண்டு அவளுக்கு எதிராக போர் புரிய துவங்கியது.


"விதி வலியது தானே... யாரை விட்டது" அடுத்த நாள் காலையில் கடமைக்கே என்று தயாரான அவளை, கொலுவில் நிற்க வைக்க போகும் பொம்மை போல்,


நாலு கோட் முகத்தில் தடவி... இல்லாத ஒப்புனை எல்லாம் செய்து வைக்க... தன்னை கண்ணாடியில் பார்த்தவளுக்கு.


"திருமணத்தின் முதல் படியிலேயே தன்னை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றி விட்டதே... இன்னும் எத்துணை விஷயங்களை மாற்றி கொள்ள போகிறநோ" என்று மனது புலம்பவே செய்தது.


முதலில் மாப்பிளை வீட்டார் வீட்டிற்கு வருவதாக தான் பேச்சு.. பின் பையனே அழைத்து... கொஞ்சம் வேலை உள்ளது.. அதனால் பெண்ணை வெளியில் வைத்து சந்திக்க விரும்புகிறேன்... முடியுமா" என்று கேட்டு விட,


சரி பரவா இல்லை... இருவரும் சந்தித்து மனம் விட்டு பேச வசதியாக இருக்கும்" என்று தாராளமாக ஒப்பு கொள்ள... அந்த அதிசய மாப்பிளையை காண தான் இந்த ஒப்புனை அத்தனையும்.


உடன் பயிலும் ஆண்களுடன் வெளியே செல்ல அனுமதி கேட்டாள் கூட,


"ஹையோ.. அங்க யாராவது பார்த்துட்டு தப்பா நெனச்சிடா என்ன பண்ணுறது... அதெல்லாம் வேணாம்... ஊரு நாலு விதமா பேசும்டி" என்று கண்டிக்கும் குடும்பம் தான்.


மாப்பிளை என்ற ஒற்றை வார்த்தையில் தன் கட்டுப்பாடுகளை எல்லாம் தளர்ந்து, உடைத்து எரிந்து விட்டு,


"நான் வேணும்னா கொண்டு போய் விட்டுட்டு வரவாமா" என்று வெட்கமே இல்லாமல் கேட்க வைத்தது.


சரி இதுவும் சமுதாயத்தின் நீதி தானே... விட்டு விடுவோம்.. நமக்கு எதுக்கு வம்பு.


இறுதியில் அத்துணை சுழ்நிலையிலும் சிக்கி கொண்டவள், யாரோ பெயர் கூட தெரியாத, முகம் பார்க்காத ஒருவனுக்காக கிட்டத்தட்ட அரைமணி நேரமாக காத்து இருக்கிறாள்.


மாப்பிள்ளையின் புகைப்படத்தையும் அவளுக்கு அனுப்பி பார்க்க சொன்னார்கள் தான்...


ஆனால் நம் அதிசய பிறவி வெண்பாவோ...


"முகத்தை வெச்சி என்ன முடிவு பண்ண முடியும்... அகத்தின் அழகு முகத்துல தெரியுறது எல்லாம் ஆதாம் ஏவாள் காலத்து பேச்சு... இப்போ எல்லாம் கூட இருந்து பழகுறவனே, என்னைக்கு விட்டுட்டு போவான்னு தெரியாம இருக்கு... இதுல முகத்தை மட்டும் வெச்சி என்ன முடிவு பண்ண" என்பாள்.


"திமிரை பாரு" என்றே மாற்றவர்களுக்கு தோன்ற...


அவள் கூற வரும் கருத்தை ஒரு ஜீவனும் புரிந்த்து கொண்டதே இல்லை.. இதில் "யாரோ ஒருவனா தன்னை புரிந்து கொள்ள போகிறான்
"என்ற சலிப்பே அவளுக்கு அதிகம் உண்டு.


முக்கால் மணி நேரம் காத்திருப்பிற்கு பின், இறுதியாய் அவள் முன் காட்சி அழைத்தான், அவள் மனதின் சாபத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து கொண்ட நல்லவன்.


வந்தவனை கண்ட மாத்திரத்திலேயே அவனை அடையாளம் கண்டு கொண்டாள் வெண்பா.


"நீங்க... நேத்து... ஹாஸ்பிடல்ல... " என்று அவள் தடுமாறும் போதே,


"நான் தான்.. நான் தான்... மொதல்ல உக்காருங்க... பொறுமையா பேசலாம் " என்றான் படு கூலாக.


"என்னை பத்தி கடுகு அளவு கூட தெரியாம தான் என்னை சந்திக்க வந்து இருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்... அதனால தான் வீட்டுல சந்திக்க வேணாம்னு இங்க வர சொன்னேன்" என்றான் தன் திட்டத்தை விளக்கிய படி.


"என்ன பேசுவது" என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தவளை பார்த்தவன்... மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்து...


"இப்போவாச்சு நான் யார்னு தெரிஞ்சிக்க ஆசை இல்லையா?" என்றான் சகஜமாக.


அவனின் சிரிப்பும் பேச்சுமே, அவளுள் இருந்த இறுக்கத்தை கொஞ்சம் தளர்க்க...


'சொல்லுங்க' என்றாள்.


அதிகம் பேசுவாள் என்று அவன் எதிர் பார்த்து அவன் பேச்சை துவக்க.. சப்பென்று ஒரே வார்த்தையில் பதில் வர... பக்கென்று இருந்தது அவனுக்கு.


"நான் அஸ்வின்... ஐடி கம்பெனில அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்கேன்... இப்போ தான் மூணு மாசத்துக்கு முன்னாடி ப்ரோமோஷன் ஆச்சு.. சொந்த ஊர் வேலூர்... அம்மா அப்பா குடும்பம்ன்னு எல்லாரும் அங்கதா இருகாங்க.. வேலைக்காக நான் மட்டும் சென்னைல எழும்பூர்ல இருக்கேன்" என்றான் மூச்சு விடாமல்.


அதற்கும் அவள் 'ஓஹோ' என்றே பதில் கொடுக்க.


சப்பென்று போனாலும்... இவள் இப்டி தான் நடந்து கொள்வாள் என்று யூகித்தே இருந்தான் அஸ்வின்..


கால் மணி நேரமாக அவளுக்கு காத்திருந்து, அவள் வந்த பின்னும் முக்கால் மணி நேரம் அவளை நெருங்கவும் முடியாமல், சென்றாள் நிராகரித்து விடுவாளோ என்ற பயந்த மனதையும் சமாளிக்க முடியாமல்,


இந்த சூழலிலும் அவளின் அழகை ரசிக்க தவறாத தன்னுடைய கண்களை திட்டவும் முடியாமல்... அவளுக்கு தூரமாய் அமர்ந்து தவித்து கொண்டு தானே இருந்தான்.


அதனால் அவள் பேச மாட்டாள் என்பது நான்கு புரிந்து விட,


"நான் உங்களை ஒன்னு கேக்கவா?" என்றான் புதிராய்.


அவனின் இந்த ஒரு கேள்வியே.. அவன் என்ன கேட்டு விடுவானோ... என்ன கூறி விடுவானோ என்ற பல பயங்களை அவளுள் ஏற்படுத்த, அவனுக்கு சரி என்றும் கூறும் வகையில் தலையை மட்டும் அசைத்தாள் வெண்பா.


வீட்டில் இருந்து அவள் கிளம்பும் போதே... மாப்பிளை கிட்ட இப்டி பேசு... அப்டி பேசு.... இத கேளு... இத கேக்காத என்று பல அறிவுரைகள் வழங்க பட,


நீயாக இரு என்று மட்டும் ஒரு வாயும் கூற வில்லை..இருக்கட்டும் இதுவும் இந்த சமூகத்தின் நியதி தான் போல... நமக்கு எதுக்கு வன்பு.


அவளின் மிரட்சியிலேயே, வீட்டினரின் உந்துதல் வெளிப்படையாக தெரிந்தது அவனுக்கு....


இரண்டு வருடங்கள் முன்பு தன் அக்காவை பெண் பார்க்க வந்த போதும் கூட, மரியாதைக்கு வரும் படி சில உறவினர்களை அழைக்க, வந்த அனைவரும் இப்டி பேசு, அப்டி பேசு என்று மட்டுமே கூற,


அதுவே அவனுக்கு பிடிக்காமல் தான் இருந்தது... அவை அனைத்தையும் கண்ணால் கண்ட அவனுக்கு, வெண்பா நிலை புரியாமலா போகும்.


முகத்தில் சிறு புன்னகையுடன், "உங்க வீட்ல சொல்லி குடுத்த எல்லாத்தையும் மறந்துட்டு, நேத்து ஹாஸ்பிட்டல்ல இருந்த வெண்பா வெளிய வந்தா நல்லா இருக்கும்" என்றான் குறும்பு மின்ன.


இதிலேயே "நீ நீயாக இரு" என்பதை அவன் கூறாமல் கூற... அதுவே பெண்ணவளுக்கு அவனை கவனிக்க தூண்டிய முதல் அடியாக போனது.


சரி என்றவர்களின் பேச்சு.. எங்கிருந்தோ எங்கோ பயணித்து கொண்டு இருந்தது.


உன்னை பற்றி, என்னை பற்றி என்று ஆரம்பித்த பேச்சு... மஹாபாரதம் ராமாயணம் சென்று... இந்திய சீனா பிரச்சினைக்கு போய்... இப்போது நிலவில் முதலில் கால் வைத்தது ஆம்ஸ்ட்ரோங் தானா இல்லையா என்று பயணித்து கொண்டு இருக்கிறது.


இடையில் போதிதர்மரையும், ஏழாம் அறிவு படத்தையும் வம்பிழுக்கவும் தவற வில்லை இருவரும்.


விவரம் தெரியாதா மூன்றாம் நபர் இவர்கள் பேச்சை கேட்டால்... எதோ ஐநா சபையில் பேசும் பேச்சாளர்கள் என்று நினைப்பார்களே தவிர,


திருமணம் செய்ய விரும்பும் இதயங்கள் என்று துளி கூட நம்ப மாட்டார்கள்...


பேசி பேசி கலைத்த இருவரும் இடையில் எதையாவது ஆர்டர் செய்து கொரிக்கவும் மறக்க வில்லை.


சுமார் அறை மணி நேரம் நீடித்த அவர்களின் நாட்டு பிரச்சனை விவாதத்தில், வெண்பாவிற்கு சாக்லேட் பிடிக்காது, ஸ்ட்ரெபெரி தான் பிடிக்கும் என்றும்,


அஸ்வினுக்கு, இனிப்பில் பிடித்தது பால் கோவாவும், மைசூர் பாக்கும் என்பதே இருவரும் இருவரை பற்றி தெரிந்து கொண்ட அதிக பட்ச தகவல்கள்.


பேசி கலைத்து போய்... உணவு உண்ணலாம் என்று இருவரும் முடிவெடுக்க,


அப்போது பார்த்து வெண்பாவிற்கு சரியாக அழைப்பு வர... பேச வேண்டி வெளியே சென்றாள் அவள்.


அவள் வரும் வரை உணவை ஆர்டர் செய்து விடலாம் என்று எண்ணியவன், ஆர்டர் செய்து.. தன் கைபேசியில் மூழ்கி விட,


"ஹை அஸ்வின்... எப்படிடா இருக்க?" அவனின் அருகில் பெண் ஒருத்தியின் குரல் கேட்க... தலை உயர்த்தி பார்த்தவன் மும்,

நிறை மாத கர்ப்பிணியாக நின்று கொண்டு இருந்தாள் திவ்யா, அவனின் பள்ளி தோழி.

"திவ்வு... எப்படிடி இருக்க... எத்தனை மாசம்டி... ஸ்கூல் போல இந்த விஷயத்துலயும் படு பாஸ்ட் தான் போ" என்றான் அவளின் நிறைமாத வயிற்றை பார்த்து, எதையும் யோசிக்காமல்.

அதில் கொஞ்சம் திடுக்கிட்டவள், "இவர் என்னோட கணவர்... முகுந்தன்" என்றாள் திவ்யா.

அப்போது தான் சுற்றம் அறியாமல் தான் பேசியதை உணர்ந்தவன்... "சாரி முகுந்தன்... எப்பயும் பேசுறது போல பேசிட்டேன்... மன்னிச்சிடுங்க" என்றான் அஸ்வின்.

திருமணம் ஆகி விட்டாள் அப்பா அம்மாவே அதிகம் தலையிட முடியாத பெண்ணவள் வாழ்வில், நண்பன் இவன் மட்டும் எம்மாத்திரம்... இவனும் கில்லு கீரை தானே..

திருமணம் என்ற வார்த்தையே பல கோட்பாடுகளும், நெறிகளும், பல கட்டுப்பாடுகளையும் கொண்டது தானே.

அதிலும் முக்கியமாக, திருமணத்திற்கு முன் நண்பர்கள் இருந்தாலும், அது தொடர கூடாது என்பது எழுத படாத விதியாகி போக,

அதிலும் ஆண் நண்பன், என்றாள் இரண்டடி தள்ளி தாமே நிற்க வேண்டும்... இதுவும் கூட அதிகம் வெளி வராத திருமணத்தின் கருப்பு பக்கம் தான்.

தன் மனைவியை கணவன் அவன் நம்பவில்லையா என்ற கேள்வியே இதில் அதிகம் மறைந்து இருக்க.....

நியாமான கேள்வி தான் ஆனால் கேட்க முடியாதே.

கோட்பாடுகளை வகுத்த ஆணை கேள்வி கேட்பதா... அடடே... இருபத்தி ஓராம் நூற்றாண்டில் கூட இது நடக்காத விஷயம் தான்.

நிலவிற்கு கூட பெண்கள் போயிடலாம்... ஆனால் ஆண்களையும், அவர் விதித்த கோட்பாடுகளையும் கேள்வி கேட்கும் உரிமை என்றும் பெண்ணவளுக்கு கிடையாது.

சரி அது இருக்கட்டும்... பேசினால் மட்டும் மாறவா போகிறது... கதைக்கு போகலாம்.

எங்க விட்டேன்....ஹாங்...

முகுந்தன் முகத்தில் மட்டும்,

"நீ பேசியது தவறு" என்ற எந்த ஒரு குற்ற ரேகையும் ஓடவில்லை.

"அதில என்ன இருக்கு... உங்க பிரன்ட் கிட்ட நீங்க பேசுறத நான் தடை பண்ண மாட்டேன்" என்றான், இந்த யுகத்தில் இப்டி இரு ஆணா என்று வியக்கும் வண்ணம்.

அதோடு நிறுத்தாமல், ஐந்து கணவனை கொண்ட திரௌபதி, கண்ணனை நண்பனா மட்டும் பார்க்கறது எப்படி நியாயமோ, தப்பில்லையோ, அதே மாதிரி தானே மத்தவங்களையும் ஏத்துக்கணும்... கடவுளுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம் இருக்க கூடாது இல்லையா". என்றான் கேட்பவர்கள் அந்த இடத்திலேயே மயங்கி விழும் வண்ணம்.

(இவன் பேசுறது வெளிய தெரியாம பார்த்துக்கணும்... அந்த கடவுள் தண்டிக்காரரோ இல்லையோ...கடவுள் பேரை சொல்லி காசு பாக்குற குரூப் காதுல விழுந்தா என்ன ஆகும்... ஆன்டி இந்தியன்ன்னு சொல்லிட மாட்டாங்களா).

இவர்களின் பேச்சு வளர்ந்த நேரத்தின்... தன் அழைப்பை முடித்து விட்டு வந்தாள் வெண்பா.

வந்தவள் அஸ்வின் அருகில் வர... அவளை அறிமுகம் செய்யும் வண்ணம்,

"இவங்க வெண்பா.. என்னோட....."என்றான் அடுத்து என்ன கூறுவது என்பது புரியாமல்.

"என்ன கூற முடியும்... தன்னுடைய அனைத்தும் என்று கூற அவனுக்கும் ஆசை தான்..."

'போனால் போகிறது என்று பேச்சில் நிலவு வரை வந்தவளை, எதாவது பேசி வருத்தி விட்டாள் என்ன செய்வது' என்று அமைதியாகி விட்டான் அஸ்வின்.

(அவனுக்கும் பயமா இருக்குமா இல்லையா)

"என்னோட பிரன்ட்..."என்றான்... கஷ்ட பட்டு அந்த வார்த்தையை மனதில் பல முறை கரித்து கொட்டிய படி.

'பிரன்ட்' என்பதை அவன் அழுத்தி கூறியதை வெண்பாவும் கவனிக்க தவறவில்லை... மனதில் ரசித்தாலும்... வெளியே காட்டி கொள்ளாமல் அவனை மேலும் வாட்ட முடிவெடுத்தால் பெண் அவள்.

"இவங்க திவ்யா... என்னோட ஸ்கூல் பிரன்ட்.. இவரு முகுந்தன்.. இவளோட ஹஸ்பண்ட்" என்றான் அஸ்வின்.

முகுந்தன் என்ற பெயரிலேயே... சர்வமும் ஒடுங்கி, மறைக்க நினைத்த வலி ஒன்று மனதில் பாய... புதைத்த நீ நினைவுகள் ஓங்கி ஒலித்து ஓலம் இட...

"இன்றா உன்னை காண வேண்டும்" என்றும் தன்னுடைய நேற்றைக்கு, நாளைக்கும் நடுவில் கூனி குறுகிய நின்றாள் வெண்பா.

முகுந்தன் நிலைமை கூட கிட்டத்தட்ட அப்டி தான்... வருத்தமும், வாட்டமும் ஒரு சேர முகத்தில் தோன்றி, அவன் நிற்க... கணவன் முகத்தின் மாற்றத்தை கண்டு கொள்ளாமலா போவாள் மனைவி அவள்.

நாகரீகம் கருதி ஒரு சில வார்த்தைகள் இருவரும் பேச.. அது அப்டியே தொழில் பேச்சுகளாக மாறிவிட...

பெண்கள் இருவரும் எதையோ பேசி கொண்டு இருந்தனர்.

"நீங்க முகுந்தன் கூட படிச்சவங்க தானே" என்றாள் திவ்யா, வெண்பா வியக்கும் வண்ணம்.

"உங்களுக்கு எப்படி.. " என்பதோடு வார்த்தை தொண்டையில் சிக்கி கொள்ள,

"காலேஜ் போட்டோல பார்த்த நியாபகம்" என்றாள் பொய்யை, உண்மை போல.

மேலும் தொடர்ந்தவள், "உங்களுக்கு முகுந்தன் காலேஜ்ல காதலிச்ச பொண்ணை தெரியுமா?" என்றாள் எடுத்த எடுப்பில்.

பதில் கூற முடியாமல் திக்கி திணறினாள் வெண்பா.. " நான் தான்" அது என்று கூறவா முடியும்...

"இ...இல்லை" என்றாள் வார்த்தையை தேடி கோர்த்த படி,

"ஓ..." என்று முடித்து கொண்டாள் திவ்யா.

"எதுக்கு கேக்குறீங்க?" என்றாள் வெண்பா.

"இல்லை அவுங்களை வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் சந்திக்கணும்னு எனக்கு ஆசை... சந்திச்சா கட்டி பிடிச்சி முத்தம் குடுத்து, ஒரு சாரியும் சொல்லணும்" என்றாள் சாதாரணமாக.

"எதுக்கு... சாரி... எதுக்கு முத்தம்?" என்றாள் வெண்பா.

லேசாக சிரித்தவள், "எவ்வளவு நல்ல பொண்ணா இருந்து இருந்தா, என் பாப்பா அவளை வேணாம்ன்னு சொன்ன அடுத்த நிமிஷம் அவனை அறையாம, ஏன்ன்னு கேள்வியும் கேக்காம... உனக்கு இது தான் வேணும்னா இதையும் செஞ்சிக்கோன்னு விட்டு இருப்பா... அந்த மனசுக்கு சாரி "

"அவ மட்டும் காரணம் கேட்டு இருந்தாலோ, போகாதனு சண்டை போட்டு இருந்தாலோ, எனக்கு என்னோட பாப்பா கிடைச்சி இருக்க மாட்டான்... அதுக்காக முத்தமும் தரணும்" என்றாள் திவ்யா.

அதில் கிட்ட தட்ட கண்ணில் நீர் கோர்த்து கொண்டு... வரவா வேண்டாமா என்று காத்திருக்க... அவளுக்கு அதிகம் இன்னல் தராமல் கிளம்பினர் முகுந்தன் தம்பதியினர்.

எதோ அங்கும் இங்கும் அலை பாயும் மனதை கட்டுப்படுத்த தெரியாமல்... முகத்தில் மாற்றத்தையும் காட்ட முடியாமல்...

"ஒரு நிமிஷம்" என்றவள் கடையின் பின் புறம் இருக்கும் தோட்டத்திற்கு சென்று விட்டாள்.

கார் பார்க்கிங் வரை நடந்து சென்று கொண்டு இருந்த முகுந்தன் முகத்தின் மாற்றத்தை காணாமல் இல்லை திவ்யா.

"வெண்பா தானே உன் மனதை கலைத்த முதல் காதலி" என்றாள் எடுத்த எடுப்பில்.

அதில் திடுக்கிட்டு அவளை பார்த்தவனை, அருகில் சென்று மார்போடு தலை சாய்த்தவள்,

"எனக்கு தெரியும் பாப்பா.. உன் லைப்ல ஏற்கனவே ஒரு பொண்ணு இருந்தான்னு... ஆனா வெண்பாவை நீ ஒரு பார்வை பார்த்த தெரியுமா.. அதுல காமம் இல்லை, காதல் கூட இல்லை.. அதை தாண்டி ஒரு புனிதம் இருந்துது, நீ நல்லா இருக்கனும்ன்ற அன்பு இருந்தது, உன்னை இழந்தது தப்பு தான்ற வருத்தம் இருந்தது" என்றாள் அவன் தோள் சாய்ந்த படி.

"அப்டி இல்ல திவ்வி.. அது வந்து... " என்று அவன் எதோ கூற வர,

"அதையும் தாண்டி வர அப்போ அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்த தெரியுமா.. அப்போதான் நான் உறுதி படுத்தினேன்" என்றாள் திவ்யா.

அவள் கூறுவது அனைத்தும் சரியாக இருக்க... அவளுக்கு என்ன பதில் அளிக்க முடியும்... வேண்டாம் என்று விட்டு வந்தவன் இவன் தானே... இப்போது இவளுக்கு என்ன பதில் கொடுக்க முடியும்.

திணறியவனின் மன போக்கை புரிந்தவள், "நீ எதுவும் சொல்ல வேண்டாம் பாப்பா... இன்னைக்கும் உன்ன உருக வெக்குறானா அவளோட காதல் எனக்கு புரியுது... ஆனா அவளை தான் காதலிச்சன்னு என் கிட்ட சொன்னா, உனக்காக எல்லாத்தையும் மதிச்சு, மாத்திகிட்டு, ஏத்துக்க தயாரா இருக்க நான், அவளையும் எடுப்பேன்ற என்னோட காதல் புரியலையா" என்றாள் வருத்தம் தேய்ந்த குரலில்.

திருமணம் ஆனா இத்துணை நாளில் இன்று தான் இருவரும் காதலை பற்றியே பேசுகிறார்கள்... அதுவும் இழந்ததை விட அதிகம் தர துணியும் இவளின் காதல் அவனை உருகுலைக்கவே செய்தது.

கண்ணில் நீர் உற்றெடுக்க... அவளின் பாதத்தில் அழுத படி விழுந்தவனை கண்டவளுக்கு தான் மனம் பத பதைக்க, "தவறாக பேசி விட்டோமோ" என்று குற்ற உணர்வும் தோன்ற,

"பாப்பா.. என்னால குனிய முடியல... அழுகாத... எழுந்திரு" என்றாள் ஆற்றாமையோடு.

அப்போது தான் நிதர்சனம் புரிந்தவன், நிறைமாதமாக இருப்பவளை உணர்ந்தவன், அவளை ஆர தழுவி நெஞ்சோடு அணைத்து கொள்ள... இனி பிரிவுண்டோ இரு மனதிற்கும்.

வெண்பா பக்கம் போகலாம் வாங்க...

"ஒரு நிமிடம்" என்று சென்றவள் பதினைந்து நிமிடம் ஆகியும் வராமல் போக... " என்னவோ..எதோ" என்று தோன்றி அஸ்வின் அங்கு சென்று பார்க்க,

ரோஜா செடிகள் சூழ அதன் அருகில் அமர்ந்து இருந்த அவனின் பன்னீர் மலரோ, கண்ணில் பனி துளி போல் கண்ணீரை சிந்தி கொண்டு இருக்க,

பாழாய் போன அவனின் மனது அதையும் இரண்டு நிமிடம் ரசிக்கவே செய்தது...

அவனே அவனை திட்டி கொண்டு... அழும் அவளை தேற்ற அவளின் அருகில் சென்று.. அவளின் முன் மண்டியிட்டு அவள் உயரத்திற்கு இறங்கி அமர்ந்தவன்.

"வெண்பா... என்னடி ஆச்சு?" என்றான்.

"அவ்வளவு தான்... மழை சாரலாய் இருந்த அழுகை, புயலாய் உருமாற" இவனே அதில் பயந்து தான் விட்டான்.

"என்ன ஆச்சுடி... திடீர்னு இப்டி அழுதா என்னனு நெனைக்குறது... வயிறு எதுவும் வலிக்குதா?" என்றான் அப்பாவி ஆண் மகனாய்.

வலி மனதில் மிகுதியாய் நிறைந்து இருக்க... அதன் காரணத்தை என்ன வென்று கூறுவாள் அவள்.

"இல்லை" என்று மட்டும் தலை ஆட்டி, தலை குனிந்து சிறு விசும்பலுடன் அவள் இருக்க,

அவளின் அருகில் அமர்ந்தவன், அவளை ஆதரவாய் தன்னோடு அணைத்தவன்...

நேரத்தை கணக்கில் கொள்ளாமல்... இருவருமே தொலைந்து உருகி கிடக்க,

வெண்பாவே சுற்றம் உணர்ந்து, அவனை விட்டு விலகி அமர்ந்து, கண்களை துடைத்து கொண்டு...

"ஒன்னும் இல்லை" என்றாள் முடிந்தும் முடியாமலும் அவளின் வலியை மறைத்த படி,

அப்போதும் அவன் நம்பாத பார்வை பார்க்க..,

"நானும் முகுந்தனும் காதலிச்சோம்... நாளு வருஷத்துக்கு முன்னாடி" என்றாள், கண்ணீரை துடைத்த படி.

இது பெரிதாக அஸ்வினை பாதிக்க வில்லை... அவன் அதிர்ச்சி அடையவும் இல்லை..

"எப்படி பிரிஞ்சீங்க?" என்றான் நிதானமாக.

அழுது ஓய்ந்து, கண்ணை துடைத்து தெளிவானவள்,

"தெரியல... அன்னைக்கு காலைல இருந்து படத்துக்கு போய்ட்டு, வெளிய சாப்பிட்டுட்டு, பீச் எல்லாம் போய் சுத்திட்டு சாயங்காலம் வரும் போது, நாம பிரிஞ்சிடலாமான்னு கேட்டான்."

என்றாள் குரலில் வலி மிகுதியாகவே.

"எதுக்கு?" என்றான் அஸ்வின் அப்போதும் பொறுமையாய்.

"தெரியல" என்றாள் வெண்பா, அவனை நேரே பார்த்து.

"நீ கேக்கலையா?" என்றான், இம்முறை பார்வை சற்று கூறாகவே.

"கேக்கல.. அவனுக்கு அதான் சந்தோசம்னா அப்பிடியே நடக்கட்டும்னு விட்டுட்டேன்... சண்டை போட தோணல... அப்டி சண்டை போட்டு தக்க வெச்சிக்க அவன் பரிசு பொருள் இல்லையே.

மனசு வெறுத்துட்ட அப்பறம் கூட இருக்கறது கூட சாபம் தானே... காரணங்கள் கேட்டு மட்டும் ஓட்ட வைக்கவா முடியும்" என்றாள் விரக்தி புன்னகையுடன்.

"இருக்கி பிடிச்சா, இறந்து போயிட போறான்னு நான் தான் விட்டுட்டேன்... அவன் கேட்ட உடனே காதலை குடுத்த எனக்கு, அவன் கேட்ட பிரிவை தரமா மறுக்க முடியல... அதான்" என்றாள் எதோ ஒரு தெளிவு முகத்தில் படர விட்ட படி,

"சரி வாங்க... ஆர்டர் பண்ண சாப்பாடு வந்து இருக்கும்... சாப்பிடலாம்" என்றவள் எழுந்து நடக்க.

பின்னால் இருந்து அவளின் கையை பிடித்தவன், அவளை நிற்க வைத்து, அவள் முன் மண்டியிட்டவன்.

"எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு... இதுவரைக்கும் உன் மனசு பட்ட காயத்துக்கு எல்லாம் மருந்தாகணும்ன்னு ஆசை படுறேன்... உன்னை காதல் கடல்ல மூழ்கடிக்கணும்னு ஆசை படுறேன்... உன் கால் கொலுசா நாள் முழுதும் சிணுங்கிகிட்டே, உன் கழுத்து சங்கிலியாய் உன் மேல படர்ந்த படி, உன் மடியில படுத்து என் ஜென்மம் தொலைச்சி, மறு ஜென்மமும் உனக்காக பிறந்து உனக்காக வாழனும் போல இருக்கு... ஜென்ம ஜென்மத்துக்கும் என்னோட வருவியாடி பொண்டாட்டி".

காதலாய் ஆரம்பித்தவன், கெஞ்சலாய்(கொஞ்சலாய்) முடிக்க...

இவனை தனக்காக உருக கண்ட பெண்ணவள், மறுக்கவா செய்வாள்... ஜென்மங்கள் பல தாண்டி, யூகங்கள் பல கடந்து காதல் கடலில் இனி அவனுடன் சேர்ந்தே வாழ முடிவும் எடுத்து விட்டாள் பெண்ணவள்.

மனதில் சுத்தமும், பார்வையில் கண்ணியமும், பேச்சில் தெளிவும் இருந்தாலே போதும், இவ்வுலகில் மனிதனாய் நீ வாழ தகுதி வந்து விடும்.

பிறகெதற்கு, கடவுளாய் வாழ்வதும், கடவுளுக்கு பயந்து வாழ்வதும்... நமக்காய் வாழ்வோமே... மானுடத்துடன்...



💖💖💖சுபம் 💖💖💖


 
Top