என்றும் நியே அன்பே
-
அர்பிதா
சுட்டெறிக்கும் சூரியன், அந்தியில் மறையும் அந்த அழகிய மாலை நேரம் அது.. சற்று முன்பு வரை மேக கூட்டத்திற்குள் ஒளிந்து கொண்டு பூமிக்கு மழை துளிகளை பரிசளித்து விளையாடி கொண்டு இருந்த சூரியன்... கலைத்து போய் உறங்க செல்ல தயாரான அந்தி மாலை பொழுது அது.
மழையால் குதூகளித்த வானத்து வண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வனவில்லாய் வானில் வளைந்து தோன்றி சூரியனை வழி அனுப்பி கொண்டு இருக்க,
மறுபுறம் சூரியனை பிரிய மனம் இல்லாத மேக கூட்டங்கள் அனைத்தும், மஞ்சளும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் உருமாறி தன் கோவத்தை காட்டி கொண்டு இருந்த நேரம்.
இவைகளின் பாச போராட்டங்களை ரசித்த படி, கையில் ஒரு கப் காபியுடன் அமர்ந்து இருந்தாள் அஞ்சலி.
அவளுக்கு அருகில் முகத்தை கண்ணாடியில் பார்த்த படி, இதழுக்கு சாயம் பூசிய படி... சுற்றம் முற்றம் என எந்த ஒரு கவலையும் இல்லாமல் அமர்ந்து இருந்தாள், ஜின்சி.
அஞ்சலி, இலங்கையின் அடக்கு முறையில் புலம் பெயர்ந்த ஆயிரம் கணக்கான தமிழரில் அவளும் ஒருத்தி. அன்றைய நாளில் நடந்த ராணுவ அத்துமீறலில், கிடைத்த சிறு அவகாசத்தில் இவளை மட்டும் படகில் ஏற்றி அனுப்பி விட்டு... நாங்கள் அடுத்த படகில் வருகிறோம் என்று கூறிய பெற்றோரை எதிர் பார்த்து இன்றும் காத்திருக்கும் பேதை அவள்.
மலேஷியா வந்து இறங்கும் போது பத்து வயது அவளுக்கு. அனைத்தையும் உணரும் தெளிவும் இல்லை, எதையும் மறக்கும் தன்மையும் இல்லை..
நடுவில் தத்தளித்த அவளை தத்தெடுத்து பாதுகாப்பது அந்த தேவாலயத்தின் குழுமம் தான்.. அவளை மட்டும் இல்லை அவளுடன் வந்த சுமார் இருபது குழந்தைகள் இன்று தேவாலயத்தின் பொறுப்பு தான்.
பிறப்பில் ஹிந்துவாக இருந்து, இன்று வளர்ப்பில் கிறிஸ்துவனாக இருக்கும் அவளுக்கு மதம் வெறும் வார்த்தை தான்.. கடவுள் வெறும் கல் தான்.
ஜின்சிகோ, எல்லாமே ஏசு கிறிஸ்து தான்... இந்த உலகில் அவள் பயப்படும் ஒரே நபர் அவர் தான்.. கேரளத்தில் பிறந்து.. இன்று மலேஷியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருபவள் அவள்.
சிறு வயதில், யாரை பார்த்தாலும் பயம், எதை கேட்டாலும் பயம் என்றும் இருந்த அஞ்சலிக்கு கிடைத்த முதல் நம்பிக்கையான தோழி அவளே.. எது நடந்தாலும் தோள் கொடுத்து அவளை தேற்றுபவளின் நட்பினால், ஜின்சி குடும்பத்தினரும் கூட அஞ்சலியை அரவணைக்க... எதோ பெயர் சொல்லும் உறவு அஞ்சலிக்கு, ஜின்சி வடிவில்.
ஜின்சி, நிறத்தில் அதிகம் வெள்ளை இல்லை என்றாலும், கோதுமையை, பாலில் கலந்து குழைத்த ஒரு நிறத்தில்.... அழகிய மை தீட்ட பட்ட மான் விழிகளுடன், முகத்தில் கச்சிதமான ஒப்பனையோடு, எந்த உடை அணிந்தாலும், அவளை கடப்பவரின் கண்கள் அவளை ஒரு நொடி பார்த்து ரசித்து விட்டே செல்லும் அளவிற்கு ஒரு அழகு சிற்பம் அவள்.
அஞ்சலிக்கு அழகு ஒப்பனை இதில் எதிலும் விருப்பமும் இல்லை, ஈடுபாடும் இல்லை.. ராணுவ தாக்குதலின் போது, சிறு காயம் அவளின் புருவத்தின் மேல ஏற்பட்டு இருந்தது....
அதை ஒவ்வொரு முறை கண்ணாடியில் காணும் போதும், அந்த நாட்களின் நினைவு அவளை வாட்ட... காலம் செல்ல.. காயத்தை காண தவிர்க்க அவள் முயற்சிக்க.. அதுவே, அவளின் அழகை மெருகேற்ற அவள் அதிகம் முயற்சிக்காமல் போகவும் காரணமாகி போனது.
சிவப்பு சாயத்தை பூசிய மேகத்தையும், மனம் இல்லாமல் விடை பெரும் சூரியனையும், வரவா வேண்டாமா என்றும் தயங்கிய படி நின்ற நிலவையுமே ரசித்து கொண்டு இருந்தவள், இரண்டு நிமிடமாக அவள் முன் நிற்கும் அவனை கவனிக்கவே இல்லை.
அவள் இதற்கு மேலும் கவனிக்க மாட்டாள் என்பதை புரிந்து கொண்டவன்...
"இந்த காபி ஆறிடுச்சி...வேற ஒன்னு ஆர்டர் பண்ணவா? என்றான் சாதரணமாக.
அவனின் பேச்சில் இருவருமே அவனை பார்க்க....ஸதம்பித்து போகும் ஆண் அழகன் ஒருவன் நிற்பதை கண்டதும், பேசா மடந்தைகள் ஆகி போயினர் இருவருமே.
அவன் அங்கு வந்து பேசும் காரணத்தை நொடி பொழுதில் புரிந்து கொண்டாள் அஞ்சலி.. இது இன்றும் புதிது அல்ல... ஜின்சியிடன் பழக விரும்புபவர்கள், அஞ்சலியிடம் தான் முதலில் பழகி, ஜின்சியை பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டு.. பின் இவளை கண்டுகொள்ளவும் கூட மாட்டார்கள்.
அதில் அஞ்சலிக்கு கூட சிறு மன வருத்தம் தான்...ஜின்சியை நெருங்க பாலமாக மட்டுமே இருக்கிறோமோ என்று பல நாள் யோசித்து, வருந்தவும் செய்து இருக்கிறாள் அஞ்சலி... ஆனாலும் இதில் ஜின்சி மேல வைத்து இருக்கும் அன்பு மட்டும் என்றுமே குறைந்தது இல்லை.
இன்றும் அழகிய ஆண் ஒருவன் தானாகவே முன் வந்து அவர்களிடம் பேச. அவனின் நோக்கம் புரிந்தே இருந்தது அஞ்சலிக்கு... கடந்த இரண்டு மாதத்தில் குறைத்து பதினைந்து பேராவது அஞ்சலியுடன், ஜின்சியை பற்றி தெரிந்து கொண்டு, பின் இவளுக்கு சாக்லேட், பரிசு என்று வாங்கி கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.
இவனும் இப்டி தான் இருக்க போகிறார் என்றே தோன்றுவது அஞ்சலிக்கு... நல்ல உயரமும், சற்று கருத்த தேகம் தான், ஆனாலும் காண்போரை வசீகரிக்கும் கலையான முக அமைப்பு..இந்த காலத்து நாகரீகத்திற்கு ஏற்றார் போல், உடைகளும், அணுகுமுறையும் இருந்தாலும், முகத்தில் மட்டும் என்றும் தேயாத முழு நிலா , வளைந்து புன்னகைத்த படியே இருக்கும் செவ்விதழ்கள்.
ப்ரியமானவளே படத்தில் விஜய் கூறுவதை போல் " ஒரு சின்ன புன்னகை இவன் பூத்தால் போதும், அழகு மங்கைகள் வரிசையில் நின்று போட்டியிடும் வசீகர புன்னகை பெற்றவன் அவன்", சித்தார்த்.
அவனின் புன்னைகையில் தன்னை துளைத்து, முதல் முறை ஒரு ஆணை பார்த்து தடுமாறும் தனது மனதை புரிந்து கொள்ள முடியாமல் அவள் முழித்து கொண்டு இருக்க.
"உங்களை தான் கேக்குறேன்.. இன்னொரு காபி சொல்லவா?" என்ற படி அவர்களுக்கு எதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்தான் அவன்.
இதில் திடுக்கித்தாலும், இவனும் மற்ற ஆண்களை போல தான்.. ஜின்சிகாக தன்னிடம் பேச வந்துள்ளான்... நமக்காக இல்லை என்றும் உணரும் போதே மனதில் ஒரு படபடப்பும், அர்த்தம் புரியா வலியும் தோன்ற.. "இவன் நமக்காக வந்து இருக்க கூடாதா"என்றும் ஒரு புறம் தோன்றவே செய்தது அவளுக்கு.
தன் யோசனைகளை விடுத்து அவனை பார்த்தவள்,
"எனக்கு காபி குடுக்குற விருப்பம் போயிடுச்சி... இதோ இவளுக்கு வாங்கி குடுங்க" நேரடியாக ஜின்சியை கை காட்டியவள், சித்திற்கு எதோ தானே வழி செய்து விட்டதாக நினைத்து அவ்விடம் எழுந்தும் சென்று விட்டாள்.
சிறிது நேரம் கடற்கரையில் அமர்ந்து இருந்தவள்... பின் ஜின்சியை தேடி வர.. அவள் அங்கு இல்லாமல் போக...சித்துடன் சென்று இருப்பாள் என்றும் எண்ணியவன்... வீடு நோக்கி புறப்பட்டாள்... ஆனால் அவளுள் சித் ஏற்படுத்திய தாக்கம் தான், அவளை அடுத்த இரண்டு நாட்கள் போட்டு வாட்டி எடுத்து கொண்டு இருந்தது.
அந்த இரண்டு நாட்களுமே ஜின்சியை சந்திக்க அஞ்சலிக்கு மனமே இல்லை... ஜின்சியும் கூட இவளை அழைத்து பேசவும் இல்லை.
இரண்டு நாட்கள் கழித்து, மதிய உணவை முடித்தவன், சர்ச் அருகில் அமைக்க பட்டு இருக்கும் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டு, அவைகளுடன் பேசி கொண்டும் இருந்தாள் அஞ்சலி.
இலங்கையில் அவள் வீட்டிளும் இதே போல் தோட்டமும், அதை அவளும், அவளின் தாயும் பராமரித்து வந்தது அவளால் மறக்க முடியாத ஒன்று...
அதுவும், வளர்க்கும் ஒவ்வொரு செடியில் பூக்கும் முதல் பூ அனைத்துமே நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களோ, இறந்தவர்களோ நமக்கு அழைக்கும் பரிசு என்றும் பல முறை அவளின் தாய் கூறி கேட்ட வார்த்தைகள் கூட பசுமை மாற நினைவுகளாய் அவளின் மனதில் இன்றும் குடி கொண்டு இருக்கிறது
தாய் தந்தை இன்று இருக்கிறார்களா, இல்லை இறந்தார்களா என்றும் கூட தெரியாத அவளுக்கு... இந்த மலர்களும், தோட்டமும் தான் பெரிய ஆறுதலாகவே இருந்து வருகிறது
அவளின் இந்த இனிய நேரத்தில் குறுக்கிட்டது, ஜின்சியின் அலைபேசி மணி...மறுபுறம் படு உற்சாகமாய் ஒளித்து கொண்டு இருந்தது ஜின்சியின் குரல்.
"அஞ்சு...அம்மா அப்பா அந்த பையனுக்கு சம்மதம் சொல்லிட்டாங்கடி" என்றாள் எடுத்த எடுப்பில்,
"எந்த பையன்டி" என்றாள் அஞ்சலி புரியாமல்.
"அதான் அந்த காபி ஷாப்ல பார்த்தோம்ல..அவுங்க தான்" என்றான் வெட்கம் தேய்ந்த குரலில்.
சித்தை தான் கூறுகிறாள் என்பது புரிந்தே விட்டது அஞ்சலிக்கு... அவனை நிராகரித்து இருந்தால் தான் ஆச்சர்ய பட வேண்டும்.. பிடித்து போனதில் என்ன விந்தை.
அஞ்சலி கூற வருவதையும் கேட்காமல் தொடர்ந்தாள் ஜின்சி "இன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு வந்துடுடி.. ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்கோம்... சரியா ஆறு மணிக்கு வந்துடு" என்றவள் சந்தோச மிகுதில் இருக்க.. அதை கெடுக்க விரும்பாத அஞ்சலி சரி என்ற படி வைத்தும் விட்டாள்.
மாலை ஆறு மணிக்கு செல்ல தயாரானவள்... தன்னையே கண்ணாடியில் கிட்ட தட்ட முதல் முறை அந்த காயத்தை தாண்டி மின்னும் அவளின் அழகை ரசிக்க தான் செய்தாள்..
இதுவும் கூட சித் அவளுள் ஏற்படுத்திய மாற்றம் தான் என்பதயும் அறிவாள் அவள்... இருந்தும் அவன் தன் தோழிக்கு கணவனாக போகிறவன்... அவனை தவறாக நினைக்க கூடாது என்றும் பல முறை மனதிற்கு அறிவுரை செய்தவள்... ஜின்சி வீட்டிற்கும் சென்றாள்.
வீடு மொத்தம் அலங்கரிக்க பட்டு...பலூன்களும், வண்ண காகித அலங்காரங்களும், அதிக வெளிச்சம் இல்லாமல், அந்த மாலை நேரத்தை மேலும் ராம்மியமாக்கும் விதமாக மெல்லிய ஒளி விளக்கும்... வந்தவரை கரைய வைக்கும் ரஹ்மானின் இசை, கேட்டும் கேக்காமலும் பின்னனியில் ஒளித்து கொண்டு இருந்தது.
அனைவரின் கவனத்திற்கு ஈர்த்த படி இறங்கி வந்தாள், ஜின்சி.. சாதாரண பட்டு புடவை ஒன்றில்... எப்போதும் ஒப்பனையுடன் இருக்கும் முகத்தில் மேலும் கவனம் கொடுத்து அழகூட்ட பட்ட முகமும்...அவளின் செம்மண் நிறத்தில் கலர் செய்ய பட்ட முடியில் பாதி தோல் மேல் வந்து ஆட..அழகிய சிலையாய் வந்து இறங்கினாள் ஜின்சி.
வந்தவள் நேரே அங்கு நிற்கும் ஆண் ஒருவரை கட்டி பிடித்து.. இருவரும் ஒருவருக்கு ஒருவர் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு வந்த விருந்தினர்களுக்கு வணக்கம் தெரிவித்து... அங்கு இருக்கும் சோபாவில் அமர்ந்தும் கொண்டனர்.
அந்த ஆணை பார்க்க... அது நிச்சயம் சித் இல்லை என்றும் மட்டும் தெரிந்தது அஞ்சலிக்கு ...
"யார் இவன்... இவனுடன் எதற்கு ஜின்சி அமர்ந்து இருக்கிறாள்....அப்போ சித் எங்கே.. அவன் மாப்பிளை இல்லையா? " என்ற பல கேள்விகள் அவளுள் தோன்றி கொண்டு இருக்கும் நேரத்தில் ஒலித்தது அந்த மனதை உருக்கி,தன்னிலை மறக்க வைத்தது அந்த குரல்.
"காதல் வந்து தீண்டும் வரை, இருவரும் தனித் தனி..
காதலின் பொன் சங்கிலி, இணைத்தது கண்மணி..!
கடலிலே மழை வீழ்ந்த பின், எந்தத் துளி மழைத் துளி?
காதலில் அது போல நான், கலந்திட்டேன் காதலி..!
திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்..
தினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன்..
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி...!"
உருகி கொண்டு இருந்தான் அவன்.. அங்கு இருந்த அந்த சிறு மேடையில் மைக்கில் பாடிய படி... அவன் சித் என்பதற்கு மூளை எப்போதோ உணர்ந்து இருக்க..அவன் குரல் செய்த மாயத்தில் மயங்கி நின்று இருந்தாள் அஞ்சலி.
அவன் பாடி முடிக்க.. கூடி இருந்த கூட்டம் கரகோசத்துடன் அவனை பாராட்ட.. அவனோ மேடையை விட்டு இறங்கியவன், பார்வை மொத்தம் அஞ்சலி மேல இருக்க.. அவளை மொத்தம் ஆராய்ந்த படியே வந்தான் சித்.
பொன்னிற லெஹன்கா உடையில்...இடை வரை மின்னும் அவளின் கருங்குந்தலை அள்ளி முடியாமல் காற்றோடு கதை பேச விட்ட படி...காற்றின் தளத்திற்கு ஏற்ப காதின் தோடு ஜதி அமைக்க.. பொன் சிலை என நின்ற அவளை பார்த்தும் பாடல் வராமல் போனால்... ஆண் அவனின் ஆண்மைக்கு இது ஒரு இழுக்காகி விடாதா... அவளையே நினைத்து, மனதில் நிறைத்து, பாடலை பாடினான் சித்.
அவளை நெருங்கியவன் ஏதும் பேசாமல் அவளின் கண்ணோடு கண் பார்த்து நின்று இருக்க, முதலில் துவங்கியாது அஞ்சலி தான்.
"நீங்க தானே அன்னைக்கு காபி ஷாப் வந்து பேசுனீங்க.. நான் கூட ஜின்சி கிட்ட பேச முயற்சி பண்ணுறீங்கன்னு தானே அங்க இருந்து போனேன்.. இப்போ பாருங்க யாரோ ஒருத்தன் அவளுக்கு முத்தம் குடுக்கிறான்.. வாங்க போய் கேப்போம்" என்றாள் சிறு குழந்தை போல் மை தீட்டிய கண்களை உருட்டி, முகத்தில் அப்பாவி தனம் குடி கொண்டவளாய்.
அதில் அவளை அப்போதே அணைக்க தூண்டிய மனதை கட்டு படுத்தியவன்...
"நான் அன்னைக்கு வந்தது எனக்காக இல்லை.. என்னோட நண்பனுக்காக. அவன் உன் தோழியை விரும்பினான்.. அதற்கு தான் அன்று வந்தேன்.. நீ எதுக்கும் வழி குடுக்காம எழுந்து போய்ட்ட...அப்றம் உன் தோழிகிட்ட பேசினேன்... அவளுக்கும் விருப்பம் இருந்து இருக்கு.. அவளும் சம்மதிச்சிட்டா,
ஏதோ அவன் தான் என்னோட நண்பன் முகுந்தன்...உன் தோழியோட வருங்கால கணவன்" என்றான் அழுத்தம் திருத்தமாக.
'ஓஒ' என்று நின்று கொண்டு இருந்தவள்...
"அப்போ நீங்க யாரு?" என்றாள் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டவளாய்.
"அப்பாடா... இப்போவாச்சும் என்ன பத்தி கேட்டியே" என்றவன்.
"என்னோட பேர் சித்தார்த்... சொந்த ஊர் தூத்துக்குடி, தமிழ்நாடு... அப்பா அம்மான்னு சொந்தம் மொத்தமும் அங்க தான்... அப்பா உப்பளம் வெச்சி பார்த்துக்குறாரு.
நான் இங்க ஒரு சின்ன கம்பெனி ஒன்னு வெச்சி இருக்கேன்... அதோட ஒரு மியூசிக் ட்ரூப் ஒன்னுலயும் பாடுறேன்.. அவ்ளோதான்.. வேற ஒன்னும் இல்லை சொல்ல" என்றான் மிக சாதாரணமாக.
அதில் விழி பிதுங்கி அமர்ந்து இருந்தவள், தன்னை அறிமுகம் செய்யும் விதமாக "நான் அஞ்சலி.. என்னோட....
ஊர் ஸ்ரீலங்கா.. 2009ல அகதியா இங்க வந்த... சர்ச் தான் உன்னை பார்த்துக்குறாங்க...பாட்டு பட
பிடிக்கும்.ரெண்டு வருஷம் பயிற்சியும் எடுத்து கிட்டு இருக்க... பரதநாட்டியம் ஆட தெரியும்... பிடிச்ச உணவு தமிழ் ஸ்டைல்ல எதுவா இருந்தாலும் பிடிக்கும்... பிடிச்ச நிறம் பச்சை...மனுஷங்கள விட பூ, செடி கொடி கூட ரொம்ப பேசுவ...
மத நம்பிக்கை இல்லை.. தெய்வ நம்பிக்கை உண்டு" சொல்லி முடித்தான் சித்.
அனைத்தயும் சரியாக கூறும் அவனையே விழி விரித்து வியந்து போய் பார்த்து கொண்டு இருந்தாள் அஞ்சலி..
எதர்ச்சையா பார்வை ஜின்சி மேல் பட.. கண் சிமிட்டி சிரித்தாள் அவள்.
"உங்களுக்கு எப்படி இதெல்லாம்..." வார்த்தையை தேடி பேசினாள் அஞ்சலி.
"அது இப்போ வேணாம்.. அப்புறம் சொல்லுறேன்" என்ற படி முடித்து கொண்டான் சித்.
"எதுக்கு இப்டி... " மறு முறையும் மனதின் கேள்விகள் வார்த்தையாக தயங்கிய போது.
அதை புரிந்து கொண்டவன்...
"அதுவும் இப்போ வேணாம்.. நாம முதல்ல பழகுவோம்...நம்மளை பத்தி நல்லா தெரிஞ்சிப்போம்... அதுக்கு அப்றம் சொல்லுறேன் நான் ஏன் இதை எல்லாம் செய்தேன் என்று" என்றான் பொன் சிரிப்போடு.
அதற்கு அவள் சரி என்றும் தலை அசைக்கவும்... அடுத்த பாடல், ஜதி எடுக்கவும்,
"பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை "
அதில் மூழ்கி போயின நெஞ்சம் இரண்டும்..



முற்றும்


-அர்பிதா
கருத்துக்களை இங்கே பதிவிடவும்
sangamamnovels.com