*கணுப் பண்டிகை பாடல் :*
*( அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் )*
*கணுப் பிடி வெச்சேன் காக்காப் பிடி வெச்சேன்.*
*கணுப் பிடியும் காக்காப் பிடியும் கலந்து நானும் வெச்சேன்.*
*பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்*
*பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்*.
*மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்*
*மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்*.
*காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம்னு சொல்லி வெச்சேன்*.
*கலர் கலரா சாதம் வெச்சேன்*
*கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்.*
*வகை வகையா சாதம் வெச்சேன்*
*வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்*.
*அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்*
*அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன்.*
*இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்*
*இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன்.*
*எள் சாதம் எலுமிச்சை சாதம் ஏகாந்தமாய் நானும் வெச்சேன்*.
*கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்*
*கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன்.*
*தூப தீபம் காட்டி வெச்சேன்*
*தூய மனதோடு நானும் வெச்சேன்*.
*கற்பூரம் ஏத்தி வெச்சேன்*
*கடவுளை வணங்கி வெச்சேன்.*
*ஆரத்தி எடுத்து வெச்சேன்*
*ஆண்டவனை வேண்டி வெச்சேன்.*
*கணுப் பிடி வெச்சேன்*
*காக்காப் பிடி வெச்சேன்.*
*கணுப் பிடியும் காக்காப் பிடியும் கலந்து நானும் வெச்சேன்*.
*காக்கைக் கூட்டம் போல*
*எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க வெச்சேன்.*
