வணக்கம் நட்புக்களே!!!
நான் இந்த தளத்திற்கும் சரி, எழுத்திற்கும் சரி புதிது.. இது எனது முதல் முயற்சி.. இது ஏற்கனவே போட்டி தொடருக்காக எழுதியது என்றாலும் தங்கள் அனைவரின் அன்பினையும், ஆதரவினையும் தேடி திரும்பவும் இங்கே பதிவிடுகிறேன்..
படித்து பார்த்து பின் தங்களின் கருத்தினை கூறவும் அது நிறை, குறை என எதுவாயினும் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகிறது
..
ஆதலால் உங்கள் கருத்தினை எதிர் நோக்கி, நான்!
ஜீவன்
-1
இன்றாவது நம் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா ௭ன ஏக்கம் நிறைந்த முகத்துடன் ஆங்காங்கே சில மக்களும், இன்று ௭ப்படியாவது தன் வழக்கினை வென்றுவிட வேண்டும் ௭ன்ற வழக்கறிஞர்களின் ௭திர்பார்ப்புகளுடனும் இன்னும் பல பல மக்களுடனும் பரபரப்பாக சுழன்றுகொண்டிருந்த அந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியில் வந்தான் அவன். அவனுக்காக காத்திருந்தோர்கள் கவலைதோய்ந்த முகத்துடன் அவனை பார்த்திருக்க ஆனால் அவனோ அவர்கள் யாரையும் ஏறெடுத்தும் பாராது தன் காரினை நோக்கி விறுவிறுவென்று சென்று அதில் ஏறி விரைந்துவிட்டான்.
அவன் சென்ற திசையினையே பார்த்து கொண்டு இருந்தவர்களை ,
"பாட்டி, தாத்தா போலாமா" என்ற குரலின் சப்தத்தில் தெளிந்து ,சப்தம் வந்த திசையினை பார்த்தனர். முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன்,௭திலிருந்தோ விடுபட்ட உணர்வுடன்,ஆடவன் ஒருவனுடன் கைக்கோர்த்து அங்கு இருந்தவர்களை நோக்கி புன்னைகைத்தாள் அவள்.இதற்கு முன் இத்தனை வருடங்களில் அவள் இவ்வாறு புன்னகைத்து அவர்கள் பார்த்ததில்லை. ஆனால் அவளின் இந்த மகிழ்ச்சியில், புன்னகையில் பங்கேற்கும் படி செயலினை இப்பொழுது அவள் செய்யவில்லையே. அவர்களோ, பதிலுக்கு அவளை நோக்கி புன்னைகைக்க முடியாமல் ,அவளுக்கு பதிலும் கூறாமல் காரினுள் ஏறினர். அவளோ அதனை சிறிதும் பொருட்படுத்தாது ஒரு தோள் குலுக்கலுடன் அவ்விடத்தினை விட்டு நகர்ந்தாள்.
இன்று நீதிமன்றத்தினுள் நடந்த நிகழ்வுகளினால் மனம் முழுவதும் ரணத்துடனும், வலியுடனும் ,விட்டால் வெடிச்சு சிதறும் அளவு கோபத்துடனும் இதனுடன் மனதின் ௭ங்கோ ஓர் ஓரத்தில் அவனிற்கே இன்னும் தெரியாத நிம்மதியுடனும் இன்னும் பல வகையான உணர்வுகளுடனும் அதை யாரிடமும் காண்பிக்க இயலாமல் தன் மனதில் புதியதாய் உருவான கழிவிரகத்துடன் ,ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் காரினுள் சென்று கொண்டு இருந்தான் ஆதவன்.
வானில் தோன்றும் ஆதவன் எவ்வாறு தன் கதிர்களை பாரபட்சமின்றி உலக மக்கள் அனைவருக்கும் அவர்கள் கொண்டாடும்படி வாரி வழங்கிடுவானோ ,அவ்வாறு ஒரு ஊரே தன்னை கொண்டாடும் படி ஊர் மெச்ச, உறவு பாராட்ட ,பல இளைஞர்களுக்கு, முன்னுதாரணமாக , எப்பொழுதும் உதட்டினில் புன்னைகை உடனும் ,கண்ணில் குறும்புடனும் வாழ்ந்து வருபவன் ,இன்று புன்னைகை என்று ஒன்றினை மறந்தவனாய் தன் ஊரான காத்தவன்பாளையத்தினை நோக்கி சென்று கொண்டு இருந்தான்.
காத்தவன்பாளையம் (கற்பனை ஊர்) கோயம்புத்தூர் மாவட்டத்தினுள் பொள்ளாச்சியை அடுத்து இருக்கும் ஒரு கிராமம். கோயம்புத்தூர் என்றாலே உடனே நம் நினைவிற்கு வருவது அவர்களின் ன்ங், ன்ங் என் முடியும் ஏனுங் ,என்னங் என்ற அழகு கொங்கு தமிழ் தான். அதற்கு அடுத்ததாக தேங்காய், சுவை மிகுந்த நீர் கொண்ட சிறுசேரி, மருதமலை முருகன், பட்டீஸ்வரர் கோவில், பொழுதுபோக்க அருகினிலே ஊட்டி, ஆனைகட்டி என இவை அனைத்துடன் பொள்ளாச்சியும் நம் நினைவடுக்கில் எட்டி பார்க்கும்.
அந்த பொள்ளாச்சியில் உள்ள வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆனைமலையினில் இருந்து உற்பத்தியாகின்ற பல நதிகளில் ஆழியாறு அணையும் ஒன்று. அவ்வணையின நீர்வரத்தினால் செழிப்பாக விவசாயம் செய்து வரும் ஊரானது காத்தவன்பாளையம் ஆகும். பல கிராமங்களில் தற்போது விவசாயம் அழிந்து வரும் நிலையில் இல்லை மனிதன் ௭ன்ற போர்வையில் இருக்கும் சில அர்த்தமற்ற உயிரினங்களால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் எவ்விடர்கள் வந்தாலும் அதனை கடினப்பட்டு கடந்து விவாசயத்தினை கைவிடாது செய்பவர் ஒரு சிலரே. அச்சிலரில் நம் காத்தவன்பாளையமும் அடங்கும்.
அதற்கு முக்கியகாரணகர்த்தாவாக விளங்கியது ஆதவன் என்றால் மிகையாகாது. காத்தவன்பாளையத்தின் முக்கிய குடும்பங்களில் ஒன்று ஆதவனின் குடும்பம்.
ஆதவன் சிறுவயதிலிருந்தே சற்று புத்திகூர்மையுடையவன். ௭தையும் நன்கு ஆராயும் குணமும், அதை ஆராய்ந்து விரைவாக முடிவெடுக்கும் திறனும் ஒருங்கேபெற்றவன். அப்போது ஆதவனிற்கு ஒன்பது வயது இருக்கும். ஏற்கனவே காத்தவன்பாளையத்தில் விவசாயம் செய்ய இயலாதவாறு இயற்கை அன்னை தன் கோரதாண்டவத்தினால் மக்களை வறுத்த,அது பத்தாதென்று மனிதர்களின் சதியால் வறுமை ௭னும் பிணி மேலும் அவ்வூரினை வாட்டி எடுத்தது. இன்றைய காலகட்டத்தில் பல கிராமங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை அவ்வூரின் ஒரு பகுதியில் தொழிற்சாலை ஆரம்பிக்க கிராமங்களில் நிலங்களை ஆக்கிரமித்தல் அல்லது நீர்வளங்களை உபயோகபடுத்துதல். ஆனால் இதனால் பல மக்கள் பாதிக்கப்படுவதும், நில மற்றும் நீர் வளங்கள் மாசடைவதும் தான் பரிதாபம்.
அதுபோன்று காத்தவன்பாளையத்தில் தொழிற்சாலை ஆரம்பிக்க திட்டமிட்ட சிலர் தேர்ந்தெடுத்த பகுதியில் பாதிக்கும்மேல் விவசாய நிலங்கள். இயற்கையினால் நேர்ந்த சூழ்நிலையினை தொழற்சாலையின் நிறுவனர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை மேலும் வறுமைக்கு தள்ளி அவர்களாக தங்கள் நிலத்தினை விற்கும்படி செய்தனர். இதற்கு காத்தவன்பாளையத்தில் உள்ள பணம் எனும் வெற்றுத்தாளின் மீது பேராசை கொண்ட சிலரும் உறுதுணையாக நின்றது தான் அவலம்.
இப்படியாக பலர் நிலங்களை விற்றது தெரியவந்து வீட்டினர் பேசிக்கொண்டிருப்பதை ஆதவனும் கவனித்திருந்தான். அன்று ஆதவன் ஒரு நாள் பள்ளி முடிந்து தன் நண்பர்களுடன் வீட்டினை நோக்கி சென்று கொண்டு இருக்கும் பொழுது ஒரு மாமரத்தினை பார்த்ததும் மாங்காய் சாப்பிட ஆசைபட்டு ஆதவனும், இன்னொருவனும் மட்டும் மரம் ஏறினர். ௭ன்னதான் சொந்தமாக ஒரு தோப்பே இருந்தாலும் திருட்டு மாங்காயின் ருசி தனிதான். அதை அனுபவித்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு இதுபோன்ற அனுபவம் குறைவுதான்.
அதுபோன்று தான் அவர்களும் ஆசைபட்டு மரத்தில் ஏறினர். அந்த இடத்தினுள் முட்புதர்கள் மிகுதியாக காணப்பட்டதினால் இவன் ஒரு மரத்தின் மீதும் மற்றுமொருவன் வேறு மரத்தின் மீதும் ஏறி பழம் பறித்து கொண்டிருந்தினர். மற்றவர்கள் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தனர் .ஆதவன் பழம் பறித்து விட்டு இறங்கும்போது மரம் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்ததினுள் மூவர் சிலர் பதுங்கி பதுங்கி செல்வதினை பார்த்தான். சிறுவயதினிலே இருந்து புத்திகூர்மை அதிகம் உள்ளவனாதலால் ஏதோ தவறாக இருப்பதாக தோன்ற மற்றவர்களை செல்லும்படி சொல்லிவிட்டு,இவன் அவர்களை பின் தொடர்ந்தான்.
அவர்களை தொடர்ந்து சென்று தான் அறிந்து கொண்டான் அவ்வூரிற்கும் ,அவ்வூர் மக்களுக்கும் நேர்ந்த துன்பத்திற்கு இயற்கை மட்டும் காரணமில்லை, மனித உருவில் இருக்கும் சில விஷகிருமிகளும் காரணமென்று.
அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்து கொண்டுருந்தவனின் தோளின் மேல் ஒரு கை வைக்கப்பட்டது!!!!!!
யாரந்த கை, ஆதவனிற்கு ஆபத்தோ, அவன் நீதிமன்றத்திற்கு ஏன் சென்றான்???இக்கேள்விகளின் வினாவிற்கு பதில் அடுத்த பதிவுகளில்!!!!!