கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஜீவன்💙-2

Mounii

Member
என் ஜீவனே உன் காதல் தானே💙-அத்தியாயம் 2

"அடியேய்ய்ய்ய்ய் !!!இராட்சசி ஏன் டி மூஞ்சில தண்ணி ஊத்தின..."

"ஹ்ம்ம்...உன்னை குளிக்க வைக்க தான்...நீ குளிச்சே ரொம்ப நாள் ஆச்சோன்னு இங்க அப்பார்ட்மெண்ட்ல உள்ளவங்கலாம் நேத்து பேசிக்கிட்டாங்க...அதான்" கேலி சிரிப்புடன் கூறி முடிக்கும் முன்பே அவளை நோக்கி வந்த தலையணையை கேட்ச் பிடிச்சிட்டு

"ஹேய்ய் ...பிடுச்சிட்டேன் பிடுச்சிட்டேன்..நீ அவுட்,,,நீ அவுட்" என்று கத்தியவளை கொலை வெறியுடன் நோக்கினாள் கயழ்விழி

" அடியேய்..இந்த மொக்கையை போடா தான் என்ன தண்ணி ஊத்தி எழுப்பினியா டி..கொல்ல போறேன் உன்ன...என்ன விசயம்னு சீக்கிரம் சொல்லு நா தூங்கணும் ."அரைதூக்கத்தில் கதறினாள் கயல்.

"என்னது தூங்குறியா..மணி இப்போ என்னனு தெரியுமா..மணி அஞ்சுசுசு ஆகுது...சீக்கிரம் எழுந்து குளிச்சு ரெடி ஆகிட்டு வா...கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்க..போ போ.சீக்கிரம் எழுந்திடு "

"ஏய்ய்..மனசாட்சியே இல்லாம பேசாத டி.மார்கழி மாச குளிர்ல நான்லாம் 8 மணிக்கு எழுறதே பெருசு..இதுல மிட்நைட்ல வந்து ஏன்டி என்ன டார்சர் பண்ணற.."

"அதே தான் டி ..நானும் சொல்றேன் ..இது மார்கழி மாசம்...தெரியும்ல நான் மார்கழி மாசம் நாள் தவறாம தினமும் கோவிலுக்கு போவேன்னு.அதும் இன்னிக்கு மார்கழி ஒண்ணு கோவில்ல ரொம்ப விசேஷமா இருக்கும்டி..சீக்கிரம் வா.."என அரைதூக்கத்தில் இருந்தவளை அப்டியே பாத்ரூமினுள் தள்ளி விட்டு தான் குளித்து முடித்து தலையில் கட்டிய ஈர துண்டினை அவிழ்த்து தன் கரிய கூந்தலை காய வைக்க சென்றாள் விதுசந்திரிணி ..


தான் பிறப்பெடுத்ததே இந்த புளியோதரையும் ,சுண்டலும் சாப்பிட்டுவதற்கு என்பது போல சாப்பிட்டு கொண்டு இருந்தவளை கொலை வெறியுடன் நோக்கினாள் கயல்விழி.
"ஹா...இந்த குளிருக்கு இதமா இருக்கு டி "சந்திரா (விதுசந்திரிணி வீட்டினில் சந்திரா ,நண்பர்களுக்கு சந்து..நமக்கு இனி சந்திரா )

"எது இந்த சுண்டலும் ,புளியோதரையுமா"என கடுப்புடன் வினவியளை, கேலி புன்னைகையுடன் பார்த்து "இல்ல ...நீ இப்டி என்ன அனல் தெறிக்க முறைக்கறது தான் " என கூறியவளை என்ன செய்தால் தகும் என்பது போல் பார்த்தாள்.

பின்னே இருக்காத ,காலையில் உடலை உருக்கும் குளிரில் எழுப்பி ,அவசரம் அவசரமாக தயாராகி கோவிலுக்கு செல்லலாம் என கூட்டிட்டு வந்தவள் கோவிலினுள் ஒரு அடி கூட வைக்காமல் ,நேராக பிரசாதம் தரும் இடத்திற்கு சென்றவள் வெறும் பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு கொண்டு இருந்தால் அவளும் தான் என்ன செய்வாள்.

வந்தததிற்கு கோவிலுனுள் சென்றால் கூட பரவாயில்லை அவளும் செல்லாமல் தன்னையும் உள்ளே செல்ல விடாமல் ,இதில் அடுத்த கோவிலுக்கு போக வேண்டும் வேறு அவசரபடுத்தினால்!!!பாவம் பிள்ளை காண்டாகாம என்ன பண்ணும்..

இதை விட அதற்கு அவள் ஒன்று சொல்வாலே பார்க்கலாம். " என்ன தான் நம்ப பீட்ஷா, பர்கர்னு சாப்பிட்டாலும் நம்ப ஊர் கோவில்ல குடுக்கிற பிரசாதத்துக்கு ஈக்வல் எதும் வராதுடி" என கூறும் அவளை கொல்லும் அளவிற்கு ஆத்திரம் வரும்.. ஏனென்றால் இப்டி சொல்லுபவள் இன்னும் கொஞ்ச நேரத்தில் காலை உணவிற்கு போய் பீட்ஷா தான் ஆர்டர் பண்ணுவாள்..

சரி அவங்க சாப்பிட்டு அடுத்த கோவிலுக்கு போகட்டும் அதுக்குள்ள அவங்க யாருனு நாம்ப பாத்திடலாம்...

விதுசந்திரிணி..கோவை மாவட்டத்தினில் பிறந்த பைங்கிளி. நீங்க கிளினு சொன்ன உடனே தப்பு தப்பா கற்பனை பண்ண கூடாது. எப்போ பாரு கீச் கீச்னு கத்திட்டே இருப்பா..அதை தான் கொஞ்சம் டீசண்ட்டா பைங்கிளினு சொன்னேன்....இதுல மேடம்க்கு பி.சுசிலா அப்டினு நினைப்பு.பாடாமா இவங்க நாள் போகாது.அத கேக்கற நாம தான் வாழைமரத்துல தூக்கு போட்டுக்கலாம்னு தோணும்.அப்டி ஒரு குரல்வளம் நம்ப நாயகிக்கு.அட சொல்ல மறந்துட்டேன் இவ தான் நம்ப நாயகி.

ஆளை கட்டி இழுக்கும் கண்கள்,கோவை பழ இதழ்,ஆப்பிள் போன்ற கன்னங்கள்,இடை வரை நீண்ட கூந்தல் உடையவள் ,சுண்டினால் ரத்தம் வரும் நிறம் உடையவள்.மொத்தத்தில் அழகிய சிற்பம் அவள்.வானில் இறங்கி வந்த தேவதை அவள் அப்டினு சொல்லதான் ஆசை ஆனா ௭ன்ன பண்ண அவள் அப்படி இல்லையே..இருந்தா சொல்ல மாட்டேனா...இவள் அழகு தான்!

ஆனால் மேல் சொன்னது போல் முக அழகு அல்ல.அக அழகு அவள்.வாடாத புன்னகையினை உடையவள்.. தன்னால் யாரும் கஷ்டபட கூடாதுனு நினைப்பவள்.தன் உடன் இருப்பவரை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பவள்.அப்றம் கொஞ்சம் கலாட்டா ரொம்ப குறும்புத்தனம் ..இது தான் அவள் ..இது போதாத இவள் அழகு என்று சொல்ல..மத்தபடி மாநிறம் தான்.அடர்த்தியான கரிய நிற கூந்தல்..எல்லாம் அவங்க அம்மா பராமரிப்பு தான்.இல்ல தலைல ஒண்ணோ , ரெண்டோ தான் மிஞ்சி இருக்கும்.குண்டுனும் இல்லாம ஒல்லினும் இல்லாம அளவான உடல்வாகு..மீதி போக போக தெரிஞ்சுக்கலாம்.
கயல்விழி.

நம்ப சந்திராக்கு நேர் எதிர் இவ தான்.அவ அதிகம் இல்ல இல்ல பேசிட்டே மட்டும் இருப்பவ..இவ தேவைக்கு மட்டும் பேசுறவ.இது மட்டும் இல்ல எல்லா விசியத்திலும் அப்டித்தான்.சண்டைகோழிங்க மாதிரி எப்போபாரு சிலுத்துடுதான் இருப்பாங்க.ஆனா நம்ப நடுவுல போன அன்னிக்கு சிக்கன் நம்ப தான்.என்னதான் எதிர்எதிர் கருத்து இருக்கறவங்களா இருந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்தது இல்லை.

வேற ௭ன்ன ௭திரெதிர் துருவங்கள் ஈர்க்கும்னு ௭ல்லாரும் சொல்றபோல தான்...இவளும் கோவை தான்.ஆனா வேற வேற ஊர்,வேற வேற பள்ளி ,வேற வேற கல்லூரி.அப்றம் எப்படி பிரண்ட்ஸ் ஆனாங்கனு பாக்குறீங்களா...அத அத .....அப்றம் சொல்றேன்...

ரெண்டு பேரும் பெங்களூருல வேலை காரணமாக அங்கவே ரூம் எடுத்து தங்கி இருக்காங்க.கயல்விழி அங்க இருக்க விவசாய கல்லூரில பேராசிரியரா இருக்கா. சந்திரா ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறாள்.
******************
தன் மேல் ஒரு கை விழுந்ததில் அதிர்ச்சியாகி திரும்பி பார்த்த ஆதவன் ,அங்கு தன் நண்பன் கதிரவன் இருப்பதினை கண்டு ஆசுவாசம் அடைந்தான்.

"நீ இங்கன என்ன பண்ணற கதிர்" என ரகசிய குரலில் தன் நண்பனிடம் கேட்க அவனும் அதே ரகசிய குரலினுள் "நீ எல்லாரையும் போக சொல்லிட்டு இந்த பக்கமா வந்தியா...அதான் நானும் வந்தேன்.ஆமா இங்கன என்ன நடக்குது ..யாரு இவங்க எல்லாரும்.பகல் பொழுதிலே இங்கன யாரும் அவ்ளோவா வர மாட்டாங்க. கருக்கற நேரத்துல இங்கன என்னத்த பண்ணுறானுங்க"

"௭னக்கும் தெரியல..அங்க பேசுறத கவனி..மத்தெல்லாம் நான் உனக்கு அப்புறம் சொல்லுறேன்"ஆதவன்

அங்கு நடப்பதை கேட்டதும் இருவருக்கும் சொல்லில்லடங்கா கோபங்கள்.அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்தவன் .
"கதிர்,வாம்ல நாம போவோம்." ௭ன இருவரும் அங்கிருந்து அவர்களின் வீட்டினை நோக்கி நடையை கட்டினர். பின் கதிரிடம் ஏதோ சொன்னான்.

"டேய்...ஆதவா நீ சொல்றதுக்கு ௭ல்லாரும் ஒத்துப்பாங்களா..நீ ௭ன்னனெம்மோ சொல்ற" கதிர்

"௭னக்கும் தெரியலடே..இப்டி தோணுச்சு..பாப்போம்..நீ வா" ஆதவன்

வீட்டினிள் நுழைந்ததும் தன் அப்பா, அப்பாறு(தந்தையின் அப்பா),அப்புச்சி(தாயின் அப்பா) மூவரையும் கூப்பிட்டு விசயத்தை சொன்னான்.அவன் சொன்னதை கேட்டதும் மூவரும் வீச்சருவாளுடன் கிளம்பினர்.அவர்களை தடுத்து நிறுத்திய ஆதவன்"தாத்தா ,இப்போ நீங்க ௭ன்னங்க பண்ணப்போறிங்க..இந்த ஐஞ்சு பேத்தையும் கொன்னுட்டா..,எல்லா முடிஞ்சுதுங்களா"

"ஏங்கண்ணு,அதுக்குன்னு அவிகள சும்மா வுட சொல்றியா..இது வெறும் நிலம் இல்லையா, நம்ப சாமி..அத ஒருத்தன் சீரழிக்க வந்தா பாத்துபோட்டு சும்மா இருக்கனும்னு சொல்றிங்களா..ஏற்கனவே ஒரு சந்தேகம் இருந்தது என்ன சொல்லி வச்சாப்ல எல்லாம் தொடர்ச்சியா நிலத்த விக்குறாகனு..
ஆனா இப்போ தான தெரியுது..எல்லாம் வெளியூர்காரக வேலனு..இனியும் அவிகள வுட்டா ஊர அழிச்சுப்புடுவாக..நீங்க சின்னைபையன் கண்ணு ,உங்களுக்கு ஒன்னும் தெரியாது, பெரியவங்க நாங்க பேசிக்கிறோம்ங்க..நீங்க உள்ளாற போக்கண்ணு" (அட ஆமால, டேய் உனக்கு ஒனபதுவயசு தான்டா ஆகுது,அதுக்கு தகுந்த மாதிரி நட..கொஞ்ச நேரத்துல நானே கன்பூயுஸுஸு ஆயிட்டனே)

"நாங்க அங்க கேட்டது வரைக்கும்..இது ஏதோ வெளியூர்கார ஆளு வேலை தான்..ஆனா அவிக யாருனு தெரியாம வேலையை இங்க முடிக்க சொல்லிருக்காங்க..அய்யா இன்னைக்கு நீங்க இவனுகள வெட்டிட்டா,நாளைக்கு இன்னொருத்தன அந்த பேக்டரி ஆளு அனுப்பாமயா போய்டுவான்..
நான் ஒரு யோசன சொல்றேனுங்.அது சரி வரும்னா அதுபடி நாம பண்ணலாம்ங்க"

ஆதவனின் அப்பா அவன் முகத்தில் ௭ன்ன கண்டாரோ"சரிக்கண்ணு நீ சொல்லு, அது சரியா வருமானு பாக்கலாம்"அவன் அப்பாவின் வார்த்தைகளை கேட்டு முகம் மலர்ந்து தன் யோசனையை விவரிக்கலானான்

அய்யா, அவங்க சொல்றது படி பாத்தா கஷ்டத்துல நிலத்தை விக்கணும்னு நினைக்கிறவிங்ககிட்டலாம் அவங்க ஆளுங்க அதாவது நம்ப ஊர்காரனானுங்க வாங்கி அதுக்கு பொறவு மொத்தமா அந்த தொழிற்சாலை கற்றவங்ககிட்ட விக்க போறாங்க.அது பத்தி சந்தேகம் வராம இருக்க வேற வேற ஆளுங்கள வச்சு நிலத்த வாங்குறாங்க..

நம்ப இப்போ இருக்க நிலைமைல நம்ப ஊர்காரனுங்ககிட்ட இதுலாம் சொன்ன நம்ப மாட்டாங்க.அப்டியே நம்பினாலும் சரி நம்ப அந்த தொழிற்சாலைல ஏதாவது வேலை பாத்து குடும்பத்தை காப்பாத்தலாம்னு தான் நினைப்பாங்க.ஏன்னா இப்போ நம்ப ஊர் இருக்க நிலைமை அப்டி."ஆதவன்

"ஆமாங்க அய்யா,நம்மளுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல.தினமும் எவ்ளோ கேள்வி படுறோம்.அங்க விவாசயி கடனால் தற்கொலை இங்க தற்கொலை அப்டினுட்டு .அந்த மாதிரி நிலைமை நம்ப ஊர்லையும் நடக்குது.ஆனா பெருசா தெரியல.ஒன்னு ரெண்டுனு எப்போவாவது தான் இருக்கு.அது மாறி போயி அடிக்கடி நடக்க கூடாது.நம்மல்ல பாதி பேர் நிலத்தை விக்கணும்,இனி அங்க விவசாயம் இல்லனு சொன்னாலே உயிரை விட்டுவாங்க. நமக்கு பாதி கஷ்டம் இயற்கைனால வந்ததுனா மீதி இந்த மனுஷங்கனாள வந்ததுதானுங்க..இதுக்குலாம் என்ன தான் வழியோ..ஆதவன் அப்பா

"ஆமாங்கண்ணு..நீ சொல்றதுலாம் செரி தான்..இப்போ அதுக்கு என்ன பண்ணறது அத சொல்லுங்க"ஆதவனின் அப்புச்சி ராமலிங்கம்

"அப்புச்சி ,அதுக்கு நிலம் அவிங்க கைக்கு போக கூடாதுங்.அவிங்க சொல்ற படி பாத்தா ஊருக்கு மேற்கால இருந்து கிழக்கால மாரியப்பன் கிணறு இருக்குங்ல அது தான் அவனுங்க தேவை .இப்போவரைக்கும் 4 பேர் அவிங்க கிட்ட வித்து இருக்காங்க.மீதி பேர்நிலத்தையும் நம்ப, விலைக்கோ இல்ல குத்தகைக்கோ வாங்கணும். அப்றம் இப்போ விக்க நினைக்காதவங்க கிட்ட கூட நம்ப நிலத்த வாங்கிடோணும்ங்க. ஏன்னா இப்போ அவங்க தேவை இல்லனு விக்கமா விட்டுபுட்டு கொஞ்ச நாள் கழிச்சு விப்பானுங்க.அப்போ அந்த நிலம் அவிங்க கைக்கு போக கூடாதுங்க.."

அவன் சொல்வதை கேட்டவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இது சாத்தியமா என்று தான் தோன்றியது.
"அத செரி கண்ணு, நம்ப எப்படி அவளோ நிலத்தியும் வாங்க முடியும், அப்டி வாங்கினா கூட நம்ப அதை வைச்சு என்ன செய்ய" சண்முகம்

"அப்பா ஆதவன் சொல்றது கூட பண்ணி பாக்கலாம்..ஏன்னா அங்க அவிக தொழிற்சாலை கட்டிப்புட்டாங்கனா அப்றம் அதுல நம்ப போராடுறதுல அர்த்தம் இல்ல..அதுனால நம்ப முடிஞ்ச அளவு இப்போ தடுக்க பாப்போம்..
கட்ட இடம் இருந்தா தான அவிகளால கட்ட முடியும்..இடமே இல்லனா.."

"௭ல்லாம் சரிதான்..நீங்க சொல்றதுலாம் புரியுது..ஆனா இது சாத்தியமா..அவ்ளோ இடமும் வாங்க நமக்கு வசதிப்படாதுல்ல" ௭ன இன்னும் அவர் யோசனையாக இருக்க

"நம்ப மொத்தமா வாங்காமா, அவிங்க ௭ப்டியோ கொஞ்ச ஆள வச்சு பிரிச்சு பிரிச்சு வாங்குறாங்களோ நம்மலும் அப்டியே வாங்குவோம்ய்யா" ௭ன ஆதவன் கூற

"ஆமா அப்பா..நம்ப கொஞ்சம் வாங்கலாம்..நம்ப மாமா தனியா கொஞ்சம் வாங்கட்டும், அதே மாதிரி நம்ப ஊருல நம்ப ஆளுங்க நேர்மையா பணத்துக்கு விலை போகாதவங்க இருப்பாங்களா அவிங்க பேர்ல வாங்கி போடா சொல்லுங்க. நம்ப ஊர் தலைவர் கிட்ட பேசுங்க.ஏற்கனவே நமக்கு அங்க கொஞ்சம் நிலம் இருக்கு அதுக்கு பக்கத்திலியே நம்ப வாங்கிடலாம் .அதே மாதிரி மத்தவங்க வாங்கட்டும் ..

நம்ப அங்க இருக்கிற எல்லா இடத்தையும் வாங்கணும்னு அவசியம் இல்லல..அங்கங்க முடிஞ்ச அளவு வாங்குவோம்..அங்கங்க இருக்க இடத்தை வச்சு அவங்க எண்ண பண்ண முடியும்.

இப்போ இத முயற்சி பண்ணி பார்ப்போம்.. அப்றம் வர பிரச்சினேயை அப்போ பாக்கலாம் " ஆதவனின் அப்பா

"ஆமாங்ப்பா..அதே மாதிரி வாங்குற ஆளுங்க எது வந்தாலும் பயப்படாம எதிர்த்து நிக்கறவங்களா பெரியஆளுங்களா இருக்கணும்ங்க.ஏன்னா அவிங்க இந்த அளவு யோசிச்சு திட்டம் போடுறாங்க அப்டினா அவிங்க கொஞ்சம் வில்லங்கமானுங்க போல தெரியுதுங்க. ஏன்னா இதுக்கு முன்னாடி எங்கியும் தொழிற்சாலை கட்டணும்னு நினைக்கிறவங்க நம்ப கிட்ட நேரிடியா வந்து தான் நிலத்தை கேப்பானுங்க ஏன் மிரட்ட கூட செஞ்சு இருக்காங்க. ஆனா இது அப்டி இல்லாம எதோ பெரிய விசியம் போல தோணுதுங்க ."

"ஏங்கண்ணு அப்டி சொல்ற. நீ சொல்றத பாத்த வேற எதோ இருக்கும் போல...அதையும் என்னன்னு சொல்லு..அப்போ தான நாங்களும் யோசிக்க முடியும். "ஆதவனின் அப்பாரு கந்தசாமி

"அதுங்ய்யா, அவிங்க பேசிகிட்டத பாத்த நம்ப ஊரு இப்போ இருக்க நிலைமைக்கு அவிங்க தான் முக்கிய காரணம் போல..அவிங்க தான் தண்னி கிடைக்க செய்யாம, விதை ,உரம்லாம் கிடைக்க விடாம ,அறுவடை பண்ண முடியாம பண்ணி இருப்பாங்க போல தெரியுதுங்க.அதுமட்டுமில்லாம ஒரு சில இடத்தல பயிரலாம் அறுவடை பண்ண முன்னாடியே எதோ பண்ணி நாசம் பண்ணி இருக்காக போல"கதிர்

"அட நாசமா போறவனகளா..சோறு போடுற பூமிய கெடுக்க நினைக்கிறானே அவன்லாம் உருப்படுவான..
ஏனுங்க நீங்க வெரசா நம்ப வேலன்கிட்ட (ஊர்தலைவர்)பேசி முடிக்க பாருங்க" ௭ன ஆதவனின் பாட்டி ஆற்றாமையுடன் புலம்ப ஆரம்பித்தார்..

"ஏங்கண்ணு.. ராசா.. என் பேரன் எம்புட்டு புத்திசாலியா இருக்கான்... என் கண்ணே பட்டுடும் போல.. எப்டியா இப்டிலாம் உனக்கு யோசிக்க தோணுச்சு" பாட்டி

"அது ஒண்ணும் இல்ல பாட்டி.. நீங்கலாம் இப்போலாம் அடிக்கடி நிலத்த நம்பூரு ஆளுக விக்கிறாகனு பேசிட்டே இருப்பிகள.. அது எனக்கும் கஷ்டமா இருந்தது.. .

ஏன்னா தா இந்த கதிரு இருக்கான்ல..அவன் அப்டி தான் அவன் காசோ இல்ல முக்கியமானதோ அவன் தொலைஞ்சுடுவான்னு எங்கிட்ட குடுத்து வைப்பான்..அப்றம் அவனுக்கு தேவைங்கறப்ப வாங்கிப்பான்..இத வச்சு தான் அவங்க பேசினத கேட்டுட்டு இருக்கும் போது இப்டி தோணுச்சு" என கூறியவனை கண்டு அனைவருக்கும் ஆச்சரியம் தான்.. ஏனென்றால் இந்தளவு புரிந்து அதை யோசித்து செய்யும் வயதல்லவே அவனுக்கு..

அதன்பின் இவர்களின் திட்டத்தின் பேரில் ஊர் தலைவரிடம் பேசி இன்னும் சில ஊரில் செல்வாக்காக இருப்பவர்களிடம் கூறி ஓரளவு நிலத்தினை அவர்கள் வசபடுத்தி நிலத்தினை அந்த துரோகிகளின் கைகளில் கிடைக்காமல் பார்த்து கொண்டனர்.

மேலும் தன் ஊரில் இருந்த துரோகிகளை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அடக்கி வைத்தனர்.அந்த தொழிற்சாலை நிறுவனர் எவ்வளவோ முயன்றும் இவர்களிடம் இருந்து அந்த நிலத்தினை பெற இயலவில்லை ..இவர்களிடம் இவர்களுக்கு தேவையான நிலத்தில் பாதியளவு நிலம் இருந்தது..ஆனால் மீதமுள்ள நிலம்..ம்ஹும்ம்..எத்தனை மிரட்டல்கள்,எத்தனை தாக்குதல்கள் ,அரசாங்கம் மூலம் கூட எத்தனை எத்தனையோ வழிகளில் முயன்று பார்த்தனர்.அனைத்தினையையும் இவர்கள் முறியடித்து நிலத்தை பாதுகாத்து விவாசாயத்தினை தொடர்கின்றனர் . ஆனால் இது ஒன்றும் அவ்வளவு சுலபமாக நடக்கவில்லை.. அதற்காக இவர்கள் சந்தித்த பிரச்சினைகள் பல...

ஒரு ஐந்து, ஆறு வருடங்கள் கழித்து தான் அந்த விவசாயிகளின் நிலமை கொஞ்சம் சரியானவுடன் நிலத்தின் உரிமையாளரிடம் நிலத்தினை குடுத்தனர். அதுவரை அவர்களிடம் நிலத்தை வாங்கியிருந்தாலும் அவர்களே அந்த நிலத்தில் வழக்கம் போல் விவசாயம் பார்க்க சொல்லியிருந்தனர்..

இந்த விடயம் ஊர் மக்களுக்கு தெரிந்ததில் இருந்து அன்று முதல் அவன் தான் அவர்களின் கடவுள் ஆகி போனான்.ஏனென்றால் தங்களது உயிரானா விவசாயத்தினை காத்து கொடுத்தவன் அல்லவா.ஊரில் அனைவருக்கம் ஆச்சர்யம் ஏனென்றால் விவாசயம் என்றால் என்னவென்று முழுமையாக அறியும் வயசு அல்லவே அது..இந்த வயதினிலே விவசாயத்தின் மீது ௭ன்ன ஒரு பற்று,அதனையும் மீறி ௭ன்ன ஒரு புத்திகூர்மை ௭ன்று வியக்காத ஆளில்லை. அவன் பெரிதாய் ௭தும் செய்துவிட இல்லை ௭னினும் தக்க நேரத்தில் அவன் கண்டதினை கூறியதால் தான் பிரச்சனையை கண்டறிந்து அதற்கான அவன் கூறிய யோசனையினாலே அவர்களால் தப்பிக்க முடிந்தது..காத்தவன்பாளையத்தையே காத்தவன் நம் ஆதவன்..

இச்சிறு வயதினிலே ஊரே வாழ்த்தும்படி வாழ்ந்தவன் ,இப்போது துன்ப பட காரணம் யாதோ !!!காதல் ...


உங்கள் கருத்தினை எதிர்நோக்கி
உங்கள் தோழி!
 
Top