கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமைக்கு என் தலைவணக்கங்கள் - சல்மா சசிகுமார்.

siteadmin

Administrator
Staff member

தனிமைக்கு என் தலைவணக்கங்கள்

நான் இம்மானுட உலகில் கால் பதித்த அந்த நொடிதனில் என்னை படைதவள் அவளை படைத்தவனிடம் சென்றுவிட்டாள் ...

சிறிதும் இரக்கம் காட்டாமல் வாழ்க்கை சிறையில் பிரிவின் கையில் கைதியாக சிக்கி தனிமை தண்டனையை பரிசாக அளித்து வரவேற்றது இந்த உலகம் .....


என் பிறப்பில் பங்கேற்ற என் தாய் உயிருடன் இல்லை தந்தை என்னும் மந்திர சொல் மிக்கவன் மாயாஜாலமாய் மறைந்து போனான் நான் உதித்த அதே நாளில் ..

ஆண்டொன்றில் இனிமையான பிறந்த நாள் எனக்கு மட்டும் தனிமையான வெறுமை நாள் ...


நேரத்திற்கு சோறுாட்டி மென்மையாய் தாலாட்டி மகிழ்வுடன் சீறாட்டி வளர்க்கப்பட வேண்டிய ஒவ்வொரு குழந்தையும் தனிமையாவனாய் வளர்க்கப்படிகிறது அனாதை இல்லங்களில் ...


என்ன அதிசயமோ நொடி நேரம் கூட ஓயாமல் உழைக்கும் கடிகாரம் , என் தனிமை காலத்தை மட்டும் நீண்ட காலமாக நிறுத்து வைத்துவிட்டான் ....


பிறப்பில் துவங்கிய என் தனிமை பள்ளி கல்லூரிகளில் ஆணி வேறாக மனதில் பதிகிறது ..

வீட்டுபாடம் கற்கும் நேரமதில் பிழைகள் திருத்தப்படாமல் தவறாகவே பதிகிறது என் பொன் மனதில் ...

நாட்டு பாடம் கற்கும் பொழுதுகளில் திருத்தப்படாத பிழை செய்முறையாய் செயலில் பிரதிபலிக்கிறது ...


ஒரு தனிமையான இருட்டு அறையில் கண்களையும் கைகளையும் கட்டிவிட்டு உதவிக்காக கம்பையும் கைவிளக்கையும் கொடுத்ததாய் அமைந்தது என் கல்லூரி வாழ்க்கை ...


நாட்கள் காற்றாய் நகர காற்றில் கலந்த தூரலாய் மாறி போனது என் தனிமை ..

இல்லாதவர்களை இல்லை இல்லை என்பதில் அர்த்தமும் இல்லை ..

மாற்றமில்லாமல் நிலைக்கும் என் தனிமையை மாற்றிக்காட்டுவதே சவாலாக மாறி போகிறது ...


என்றுமே தனிமை வெறும் வேப்பமரத்தின் கசப்பாக இருப்பதில்லை ஒரு நாள் வேப்பமரத்தின் நிலழாக கூட மாறும் ..


கல்லூரி முடித்து வாழ்க்கையின் அடுத்த கட்டம் பெரும் சவாலாகவே அமைந்தது ...

மணற்பாலைவனத்தில் குன்றுகளாகவே இருந்தது என் ஒவ்வொரு முயற்சிகளும் ...


புதிதாக ஒரு நாளை சந்திக்க திராணி இல்லாமல் ஓட்டினுள் அடங்கிபோகும் ஆமையாகவே ஒடுங்கி போனது என் பட்டதாரி வாழ்க்கை ...


அடைமழையில் உருவான பெரும் வெள்ளத்தில் கிடைந்த சிறு மூங்கில் மரம் போல் கிடைத்தது அந்த வேலை ...


உடல் விட்டு உயிர் மட்டும் பிரியாமல் காத்தது அந்த எச்சில் தட்டு கழுவும் வேலை ...


இருக்க வீடே இல்லை என்ற நிலையில் இந்த பாரதமே என் வீடாகி போனது ..

ஆம் என்னை நானே பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் நம் நாட்டையே பார்த்துக்கொள்ள கிடைத்தது அந்த பொண்ணான வாய்ப்பு ...


எனக்கென்று யாரும் இல்லாமல் தனிமையில் வாடிய என் வாழ்க்கையில் பல உறவுகளையும் புது அர்தத்தையும் கொடுத்தது இந்த இராணுவ வேலை ...


பத்து ஆண்டுகளுக்கு பிறகு ...


இந்த உலகிலே மிக ஆனந்தமான ஒருவன் நான் மட்டுமே ...

என் நாட்டிற்காக என் இன்னுயிர் இந்த பாரத மண்ணில் வீழ்ந்தததில் கர்வம் கொள்கிறேன் ..

எந்த ஒரு எதிர்பார்ப்பும் எதிர்பும் இல்லாமல் விடை கொடுத்த என் தனிமைக்கு என் தலை வணக்கங்கள் .....

நன்றி

சல்மாசசிகுமார்.

 
Top