கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமை -பத்மாசினி மாதவன்

siteadmin

Administrator
Staff member
தனிமை


"அம்மா ஸ்கூலுக்கு லேட்டாகுது சீக்கிரம் என் ஹோம் ஒர்க் நோட்ட எடுத்துகுடு" என்று பரபரத்து கொண்டு இருந்தாள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் லயா


" ம்மா என் வாட்டர் பாட்டில்ல தண்ணி இல்ல பாரு புடிச்சு குடுமா" இது ஆறாம் வகுப்பு படிக்கும் தயா


ரமா என் ஷுக்கு பாலிஷ் போடலயா பாரு அப்டியே இருக்கு, இன்னும் கிட்சன்ல என்ன பண்ணிட்டு இருக்க என்று சப்தமிட்டவாறே சேரில் அமர்ந்து ஷூவிற்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தார் மதன்.


ஏன் இப்டி ஆளாளுக்கு காலையிலேயே சத்தம் போட்டுட்டு இருக்கீங்க. லயா உன் புக்ஸ் எல்லாமே ரேக்ல தான் அடுக்கி வச்சிருக்கேன் சரியா பாரு, இந்தாடா உன் பாட்டில் ஃபுல்லா காலி பண்ணு மிச்ச இல்லாம சாப்டனும்.


உங்களுக்கு எத்தனை தடவ சொல்றது ஷூக்கு பாலீஷ் நீங்களே செய்யுங்க எனக்கு டைம் இல்லனு அப்றம் என்ன, லன்ச் இந்தாங்க. என அனைவரையும் தயார் செய்து வழியனுப்பி வைத்து விட்டு வீட்டிற்குள் வருவதற்கு மனமின்றி வெளியே இருந்த திண்ணையில் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.



" என்ன ரமா வேலைலாம் ஆச்சா என கேட்டுக் கொண்டே வந்து அமர்ந்தார் பக்கத்துவீட்டு பொன்னம்மா பாட்டி.


" ஆச்சு பாட்டி, காபி சாப்டறீங்களா? இருங்க கொண்டு வரேன் என கூறி எழுந்தவளை " அதெல்லாம் ஒன்னும் வேணாம் மா, நீ தனியா இருக்க ஒருமாதிரியா இருக்குனு சொன்னீல அதான் கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம்னு வந்தேன்.


" ஆமா பாட்டி, இத்தன நாளா தெரியல இந்த ஒருமாசமா வீடு மாறி வந்ததுலேர்ந்து ரொம்ப இறுக்கமா தோனுது".



" ஏன் அந்த வீட்ட மாத்துனீங்க? அவளின் முகமாற்றத்தை கண்டவர் " சரி உனக்கு சொல்ல கஷ்டமா இருந்தா விடு. சரிமா என் மருமக கடைக்கு போகனும்னு சொன்னா நான் போய் பசங்கள பாத்துக்கிட்டாதான் அவளாள போயிட்டு வரமுடியும். நான் வரேன் மா.


" சரி வாங்க பாட்டி, என அவரை அனுப்பி வைத்த ரமாவின் மனதில் பல எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருந்தது.


ஒரு மாதத்திற்கு முன் ஒருநாள்


ரமா எவ்ளோ நேரமா கூப்டறேன் , காதுல விழாத மாதிரியே இருக்க . இல்ல கேட்டும் கேட்காத மாதிரி நடிக்கிறியா.



" அத்த நடிக்கிறேன்லா சொல்லாதீங்க, இத்தன வருஷத்துல நீங்க கூப்டதுக்கு நான் பதில் சொல்லாம இருந்திருக்கனா ? ஏதோ யோசனையில இருந்தேன் அதுக்கு ஏன் இப்படி சொல்றீங்க.


அம்மாடி இப்ப என்ன சொல்லிட்டனு இப்படி முணுக்குனு கோபம் வருது. எல்லாம் என் பையன் காசுல சாப்டற திமிரு.


உங்களுக்கு பையன்னா எனக்கு அவரு யாரு? வார்த்தை விவாதம் பெரிதாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த மதன் ரெண்டு பேரும் இப்போ அமைதியா இருக்க போறீங்களா இல்லையா?


இப்போ என்ன ஆச்சுன்னு நீங்க இப்படி சண்ட போடுறீங்க , அம்மா அவ நமக்காக தான வேலைய விட்டா , அதுமட்டுமில்லாம அவ எனக்கு மனைவி அவளுக்கு வேணுங்கறத செய்ய வேண்டியது என்னோட கடமையும் கூட அத ஏன் இப்படி அசிங்கப்படுத்தற மாதிரி சொல்றீங்க"


உன் பொண்டாட்டிய நான் ஒன்னும் சொல்லலபா,, ஊர்ல

இல்லாத பொண்டாட்டிய கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான் ஒன்னும் சொல்ல கூடாது உடனே வந்துரும்


அம்மா கொஞ்சம் பார்த்து பேசுங்க, உங்க பொண்ணா இருந்தா இப்படி பேசுவீங்களா.


என் பொண்ணு ஏண்டா அப்படி எல்லாம் நடந்துக்க போறா. என்ன எதுத்து பேசுற அளவுக்கு ஆயிட்டு இல்ல எல்லாம் அவ சொல்லி கொடுத்து தான பேசுற.


நான் அப்படிலாம் இல்ல மாமா உங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது.


என்னதான் இருந்தாலும் நீ எடுத்து வளர்த்த பையன் தான, என் சொந்த பையன் இல்ல இல்ல அப்படிதான் பேசுவ.


மா என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு பெரிய வார்த்தை சொல்றீங்க நான் எப்பவும் உங்க பையன் தானே உங்க மனசுல ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது.


எல்லாத்துக்கும் நீதான்ட காரணம், உனக்கு உன் குடும்பம்னு ஆனதும் நான் தேவையில்லாம ஆயிட்டேன்‌. என்னோட தேவை உங்களுக்கு இல்லாம போயிட்டு.


அத்த அப்டிலாம் இல்ல. நான் என்ன பண்ணனும் சொல்லுங்க. இதுமாதிரி பேசாதீங்க.


ஓஓ நான் என்ன பேசனும்னு நீதான் முடிவு பண்ணுவியா. நீ இருக்கற வரையிலும் நான் இனிமே இங்க வரமாட்டேன்.


ம்மா , நீங்க எப்ப இப்டி நெனச்சுட்டீங்களோ, இனிமே நாங்க இங்க இருக்கறதுல நியாயம் இல்ல.. நான் நாளைக்கே வீட காலி பண்றேன்.


அவரும் அதற்கு மறுப்பு சொல்லாமல் அமைதியாக இருக்க ரமாவின் நிலை தான் இருதலை கொல்லி எறும்பென ஆனது.


மறுநாளே வீட்டை காலி செய்து கொண்டு இரண்டு தெரு தள்ளி வந்துவிட்டார் மதன்.


யாருக்கும் காத்திராமல் நாட்கள் ஓடிய நிலையில். ரமாவிற்கு தான் அவரை பற்றிய நினைவு அதிகமாக இருந்தது.


ஒருதடவை பார்த்து விட்டு வரலாம் என்ன பேசினாலும் யரவாயில்லை என்னும் மனநிலையில் அவரை காண சென்றவர்களுக்கு அவரின் நிலை வருத்தத்தை தந்தது. தனியாக அனைத்தையும் செய்து கொண்டு இருந்தார். மனம் தாளாமல் அனைத்தையும் சரிசெய்து விட்டு வ்ந்தார். ரமா செய்வதை அமைதியாக அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தார். மனம் குறுகுறுக்கவே செய்தது.


அன்றைய நினைவில் இருந்தவளை ஏதோ ஃபைல் எடுக்க வந்த மதன், அழைப்பிலேயே நிகழ்விற்கு வந்தவள். அவனிடம் தயக்கமாக

" ஏங்க நான் சொல்றதை கேளுங்க, அந்த தனியா கஷ்ட படுறாங்க, வயசானவங்க வேற நாம்ப இப்படி தனியா வந்து அவங்களுக்கு கஷ்டம் தர கூடாது. கொஞ்சம் யோசிச்சு பாருங்க. பசங்களும் அத்த இல்லாம வருத்த படுறாங்க.


சிறிது நேரம் யோசித்தேன், சரி நான் ஈவ்னிங் சொல்றேன் , என கூறி சென்றவன். வரும் பொழுது அந்த வீட்டை காலி செய்து தன் தாயுடனே வந்தான்.



"அத்த என்ன மன்னிச்சுடுங்க"


இல்லமா நீயும் என்ன மன்னிச்சுடு, இந்த ஒரு மாச தனிமை என்ன ரொம்ப பாதிச்சுட்டு. நீங்க இல்லாம நான் இல்லனு புரிஞ்சுக்கிட்டேன்.


அப்பாடா இனிமே ஒன்றாகவே இருப்போம் என ஐயாவும் தயாவும் இருவரையும் அனைத்து கொண்டனர்.



சுபம்










 
Top