அன்பின் ஷிஜோ
New member
விடிந்தது முதல் ஒரு தாயின் வசவு,
இரண்டு இட்லி,
மங்கிப்போன வானம்,
பேருந்தின் இருக்கை,
ஓட்டுனருக்காக வலிய வந்தமர்ந்த சிரிப்பு,
கூடவே வரும் மேகம்,
ஏங்கிப்பார்த்த பூமியின்மீது விழும் முதல் துளி,
சாலையில் திரியும் நாய்க்குட்டிக்கான பதைப்பதைப்போடு கூடிய பிரார்த்தனை,
வழிநெடுக பயணித்த மனிதர்களின் வாசனை,
90களின் பாடல்கள்(நிச்சயம் இளையராஜவாகத்தான் இருக்கவேண்டும்),
வலசை போகும் பறவைகளென அனைத்துமனைத்தையும் ரசித்துக்கடப்பவளின் மனதிற்குள் காலத்திற்குமழியாத நினைவுகள்.
நாளும் ரசித்துக்கடப்பவளின் தனிமையை தூரம் தடுத்தாட்கொள்கிறது. தனிமை இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாமென வாசிப்பவரை யாசகம் கேட்கவைக்கிறது எழுத்து நடை.
ஆசிரியருக்கு அன்பு