அத்தியாயம் 17
"உங்கள்ல எத்தனை பேர் வாழ்க்கையில சக்சஸ்ஃபுல் ஆகணும்னு நினைக்கிறீங்க?" அரங்கத்தில் அத்தனை பேரும் கை தூக்கினார்கள். "எத்தனை பேர் நிறைய சம்பாதிக்கணும்னு நினைக்கிறீங்க?" முக்கால்வாசி பேரின் கைகள் உயர்ந்தன.
"எத்தனை பேர் ரொம்ப ஃபேமஸ் ஆகணும், உங்க பேர் சொன்னவுடனே எல்லாருக்கும் தெரியணும்னு ஆசைப்படுறீங்க?" என்றதற்கு பாதிக்கும் மேல் கைகள் மேலெழும்பின.
"எத்தனை பேர் ரொம்ப நிம்மதியா லைஃப்ல எந்தப் பிரச்சனையும் இல்லாம வாழனும்னு நினைக்கிறீங்க?" என்பதற்கு உடனடியாக ஒரு கால்வாசிப் பேர் கைகளை உயர்த்த, கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கைகளும் உயர்ந்தன.
"இந்த எல்லாத்தையும் மொத்தமா அச்சீவ் பண்ணனும்னு நினைக்கிறது எத்தனை பேர்?" மொத்தமாக ஒரு பத்து பேர் தான் கையைத் தூக்கி இருப்பார்கள்.
"அப்ப, நீங்க தேர்ந்தெடுக்க வேண்டியது அரசியல்! அரசியல்ல வெற்றியடைஞ்சா பேர், புகழ், நான் சொல்லாமலே தெரியும்- நல்ல சம்பாத்தியம், அது மட்டும் இல்லாம ஒரு நாட்டோட சட்டதிட்டங்களை மாற்றி அமைக்கிற வாய்ப்பு கூட உங்களுக்குக் கிடைக்கும். அது மூலமா உங்களுக்கு மட்டுமில்ல இந்த மொத்த சமூகத்துக்கும் நீங்க நிம்மதியையும் அமைதியையும் தரலாம். ஏன் உலகத்துலேயே கூட ஒரு மாற்றம் கொண்டு வர முடியும்"
அறிவரசன் பேசி முடித்த போது கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது. அனுஸ்ரீயும் படபடவென்று கைதட்டினாள். அவளுக்கு அருகில் உட்கார்ந்து இருந்த பிரகல்யாவும், அதற்கடுத்து உக்காந்திருந்த குணாவும் தேமே என்று சின்னத்தம்பி படத்தில் வரும் கண் தெரியாத கவுண்டமணி போல் தாமதமாகக் கைதட்டினார்கள். "பண்றது எல்லாம் பண்ணிட்டு பேச்சைப் பாரேன்.. இதுல இப்ப தமிழ்நாட்டு ஸ்டூடண்ட்ஸ் எத்தனை பேர் இருக்காங்களோ, நிச்சயம் எல்லாரும் இவனுக்குத் தான் ஓட்டு போடுவாங்க பாரு" என்றாள் பிரகல்யா.
குணா, "ஆமா! யங்ஸ்டர்ஸ், ஃபர்ஸ்ட் டைமா ஓட்டுரிமை வாங்கினவங்க ஓட்டுக்களை டார்கெட் பண்ணி காலேஜ் காலேஜா போய் லெக்சர் கொடுத்துக்கிட்டு இருக்கான். இவனுக்கு ஸ்பீச் ப்ரிபேர் பண்ண பெரிய டீமே இயங்குது. ஏத்த இறக்கத்தோட பேச்சு சொல்லிக் கொடுக்கிறதுக்கு ஒரு ஆள். இவன் வெளித்தோற்றத்தை க்ரூம் (groom) பண்ண ஒரு டீம். காலேஜ்ல இருந்து அவனை வேண்டி விரும்பி கூப்பிட்டு சீஃப் கெஸ்ட்டா வச்சிருக்கிற மாதிரி தோணும். ஆனா உண்மையில அவனோட மார்க்கெட்டிங் டீம் கொடுக்கிற ஐடியா இதெல்லாம். இதுல இளம் தலைவர், திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்கு சேவை செய்பவர், படித்தவர், பண்பாளர், பேச்சாளர்ன்னு இவன் பெருமையைப் பரப்புறதுக்கு ஒரு ஐ.டி டீம். போதாக்குறைக்கு, எதிர்க்கட்சிக் காரங்க கூடவும் தொடர்பு வச்சிருக்கான். நிறைய அரசு அதிகாரிகளை கைக்குள்ளே போட்டிருக்கான். இவனே ஒரு ஃபிராடுன்னா, இவனால நல்லா இருந்தவர்களும் பல பேரு உலக மகா ஃபிராடு ஆயிட்டாங்க.. விளங்கவே மாட்டான்.. வருது நல்லா வாயில.. தூ!" என்று துப்பினான் குணா. அருகில் ஓரிருவர் திரும்பிப் பார்க்கவும்,
"ஷ் சும்மா இரு!" என்று அவன் கையைப் பிடித்து அழுத்தினாள் பிரகல்யா.
இருவரும் அனுவை பக்கத்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தனர். ஜனார்த்தனனும் காசிராஜனும் அந்தப் புகழ்பெற்ற வழக்கறிஞரை சந்தித்து விட்டு ஊர் திரும்பியிருந்தனர். அவர் கொடுத்த ஆலோசனையின் படி தன்னை சந்திக்க வந்த பல்வேறு கட்சியினரை மரியாதை நிமித்தம் மறுபடியும் சந்தித்தார் ஜனார்த்தனன். அனைவரிடமும் உங்கள் ஆதரவு எனக்குத் தேவை, நான் உங்கள் பக்கம் தான் என்று அவர்கள் நம்பும்படியாக சொல்லி வைத்தார்.
அவர் சொன்னதன் படியே அனுவின் அம்மா பூரணி வியாழக்கிழமையன்று சாய்பாபா கோவிலுக்குப் போனார். ஏன் எதற்கு என்று காரணம் கேட்காமல் அபிராமியிடம் அறிமுகம் செய்து கொண்டார். இருவரும் 'எங்கள் வீட்டில் அடுத்த வாரம் ஒரு ஸ்பெஷல் பூஜை இருக்கு. வாங்க', 'நவராத்திரிக்கு நான் கொலு வைப்பேன். நீங்க கட்டாயம் வரணும்' என்று பேசிக்கொள்ளும் அளவிற்கு அந்த ஒரு நாளிலேயே வெற்றிகரமாக நெருங்கி விட்டார்கள்.
இந்த நிலையில் தான் அறிவரசனின் பேச்சைக் கேட்பதற்காக பிரகல்யா, குணா, அனு மூன்று பேரும் போயிருந்தார்கள். இவர்கள் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் பொழுது அவன் தயார் செய்து வைத்திருந்த செய்தி ஃபேக் ஐடிக்கள் மூலமாக வெளியே போகுமாறு பார்த்துக் கொண்டான் குணா.
நிகழ்ச்சி முடிந்ததும், 'இவர் பேசினது மாதிரி அரசியல்ல சேர்ந்து ஷைன் பண்றது அவ்வளவு ஈஸியா? இப்ப இவர் பேச்சை கேட்டதுல எத்தனை பேர் அரசியல்வாதியாக டிரை பண்ணுவாங்க? எத்தனை பேர் கைதட்டினதோட மறந்து போயிடுவாங்க?' என்று எண்ணமிட்டபடியே அனுஸ்ரீ நடக்க,
குணா நண்பர்களிடம் தான் கொடுத்திருந்த வேலை எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்று அலைபேசியைத் திறந்து பார்த்தான். பிரகல்யா உருவாக்கிய ஃபேக் ஐடிக்களை வைத்து அவனின் நண்பர்கள் சிறு ஊர்களில் இருக்கும் பிரவுசிங் சென்டர்கள் மூலமாக நிறைய சமூக வலைதளக் குழுக்களில் பகிர்ந்தனர். சிசிடிவி இல்லாத பிரவுசிங் சென்டர்களையே தேர்ந்தெடுத்தனர். அவனது மார்க்கெட்டிங் நண்பன் உபயத்தால் அந்த செய்தி எதிர்பார்த்ததை விட வேகமாகப் பரவியிருந்தது. இவனது நட்பு பட்டியலில் இருந்தவர்களிலேயே மூன்று பேர் அந்த போஸ்ட்டை ஷேர் செய்திருந்தனர். பலரின் கமெண்ட்டும் இருந்தது. 'தன்னலமற்ற, திருமணம் செய்து கொள்ளாத, இளம் தலைவரா இதற்குப் பின்னால் இருப்பது?' என்று கூட ஒரு கமெண்ட்டைப் பார்க்க முடிந்தது. அனுஸ்ரீ தன் சிந்தனையில் மூழ்கியவாறு முன்னால் நடக்க, பிரகல்யாவைக் கூப்பிட்டு அந்த செய்தியைக் காட்டினான் குணா.
"நம்முடைய மனங்களில் என்றும் உயர்ந்த இடத்தில் இருக்கும் முதல்வர் வெங்கடாஜலபதியார் இறந்து ஓராண்டாகி விட்டாலும் அவருடைய இடம் இன்னும் நிரப்பப்படவில்லை. உலக அரசியல் வரலாற்றில் பார்க்கும் எத்தனையோ தலைவர்களைப் போல அவர் செய்த நல்ல செயல்களே அவருக்கு எமனாகிவிட்டது.
தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தைப் பெருமளவு தடுத்தார். அரசுப் பள்ளிகள் வாயிலாக பலரின் வாழ்வில் வெளிச்சம் கொடுத்தார். களவு போன பாரம்பரிய சின்னங்களை மீட்டு அவற்றின் உரிய இடங்களில் சேர்ப்பித்தார். களவுக்குக் காரணமானவர்கள் சிலரை தண்டித்தார். பலரைக் கண்டித்தார்.
அந்தக் கண்டிப்பு தான் அவருக்குக் காலனாய் அமைந்துவிட்டதோ? உடல்நலக் குறைவால் அவர் இறந்து விட்டார் என்று சொல்லப்பட்டாலும் வேண்டாதவர்கள் சிலர் செய்து வைத்த வினை தான் அது என்பது உண்மைதானா?
எல்லாம் தெரிந்தும் இன்றைய ஆட்சியாளர்கள் மௌனம் சாதிக்கிறார்களா?"
என்றிருந்தது அந்த போஸ்ட்.
"இவ்வளவு தமிழ் புலமை இருக்கா உனக்கு? பின்னிட்டடா! ஆனால் டைரக்டா புது பூதத்தைக் கிளப்பிட்டியே.. சந்தோஷமா ஸ்பீச் முடிச்சுட்டுக் கிளம்புவாரு அறிவரசன். இப்படி ஒரு நியூஸ் சுத்துதுன்னு அவரோட அல்லக்கைங்க சொன்னா அவருடைய ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்க்கணுமே! நாளைக்குக் காலைல அவர் எங்க போறாருன்னு பாத்துட்டு போய் ஒரு ஆட்டோகிராஃப் கேட்கற மாதிரி பல்ஸ் பாக்கலாமா?" என்றாள் பிரகல்யா.
"சும்மா இரு! நான் யாருன்னு உனக்குத் தெரியாது. நீ யாருன்னு எனக்குத் தெரியாது. நம்ம ரெண்டு பேரும் யாருன்னு யாருக்குமே தெரியாது. யாரும் இந்த போஸ்டை பாக்கல. சரியா? அப்படியே மெயின்டைன் பண்ணு"
நடையில் இவர்கள் பின்தங்கியதைப் பார்த்துவிட்டு, அனுஸ்ரீ திரும்பி, "என்ன? என்னாச்சு?" என்று கேட்க, அனுவிடம் இந்த போஸ்ட்டை காட்டலாமா வேண்டாமா என்று ஒரு கணம் தயங்கினாள் பிரகல்யா.
"ஒன்னுமில்ல.. அறிவரசன் சார் பத்தி விக்கிபீடியாவில் பார்த்துவிட்டு இருக்கோம். பொலிடிகல் சயின்ஸ் படிச்சிருக்காரு, அரசியல்வாதியாகறது தான் தன்னுடைய லட்சியம்னு ஸ்கூல் டேஸ்லயே ஸ்ட்ராங்கா இருந்திருக்காரு. பாலிடிக்ஸ் சம்பந்தமா ஃபாரின்ல போய் கூட படிச்சிருக்காரு" என்றான் குணா.
"அப்படியா?" என்ற அனுஸ்ரீக்கு அன்று விரிவாக ஒரு கனவு வந்தது.
ஐநா சபையில் ஊழலை ஒழிப்பதைப் பற்றி அவள் பேசுகிறாள். பக்கத்திலேயே பிரகல்யா இருக்கிறாள். ஊழலுக்கு எதிராக இயங்கும் இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிறாள். நேர்மையான அதிகாரிகளை, அரசியல்வாதிகளையும் உலக அளவில் இனம் கண்டு ஒரு பெரிய கூட்டமைப்பு ஏற்படுத்தி ஓட்டு மொத்தமாக உலகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கென ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அவள் பேசுகிறாள்.
பாகிஸ்தானில், இலங்கையில், இன்னும் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி போல் இனி வேறு எந்த நாட்டிலும் நடக்கக்கூடாது, அந்த நாடுகளில் இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரின் சொத்தையும் நாட்டுடைமையாக்க வேண்டும் என்று பக்கம் பக்கமாகப் பேசுகிறாள்.
பல நாட்டவர்கள் இருக்கிறார்கள். பாராட்டாக அனைவரும் மேஜைகளைத் தட்டுகிறார்கள். பேசிவிட்டு வெளியே வரும் அனுவை நோக்கி நிறைய மைக்குகள் நீட்டப்படுகின்றன. சிலர் பூச்செண்டு கொடுக்கிறார்கள், சிலர் மாலை போட முட்டி மோதுகிறார்கள், அவர்களுக்கு நடுவில் அறிவரசன் வந்து,
"என்னை விட ஃபேமஸ் ஆகப் பாக்குறியா நீ?" என்று கேட்கிறான். திரும்பிப் பார்த்தால் பிரகல்யாவும் குணாவும் குசுகுசுவென்று ஏதோ பேசுகின்றனர்.
அனுஸ்ரீயின் கூகிள் டிரைவில் இருந்து:
"இப்ப என்னதான் சொல்ல வரீங்க?" நொந்து போனவனாக அஜித்குமார் கேட்க, தன் அருமை பெருமைகளை எடுத்து விட்டுக் கொண்டிருந்தார் திரவியம் பெரியப்பா.
"அதாவது சுமார் 40 பேருக்கு நான் வேலை வாங்கி கொடுத்திருக்கேன்.. காசு வாங்கிட்டுத் தான் உதவி பண்ணினேன்.. இருந்தாலும் அவங்க ஆயுசுக்கும் கவர்மெண்ட் வேலை சாப்பாடு போடும்ல? ஒரு பத்து பன்னென்டு பேருக்கு வாங்கிக் கொடுக்க முடியாமல் போயிருக்கலாம்.. எத்தனை தடவை விதை போடுறோம், எல்லாமா முளைக்குது? அந்த 40 பேருக்கும் நான் நல்லவன், இந்த பத்து பேருக்கு என்னால நல்லது செய்ய முடியலை. அதுக்கென்ன பண்றது?" என்று அவர் சொல்ல,
எதற்கும் வாய் திறக்காத சண்முகசுந்தரம், "ஐயா நீங்க நல்லவரா கெட்டவரா?" என்றான் நாயகன் ஸ்டைலில்.
அவனை அப்படி பேசவும் கொல்லென்று சிரித்தனர் பவித்ராவும், அஜித்குமாரும். "சரி சரி இப்ப ஆக வேண்டியதைப் பாருங்க. என்னால என்ன காரியம் ஆகணும், எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க?" என்று திரவியம் கேட்க
"அதாவது.. நாங்க ஒரு ஆபீஸ்ல உள்ள வேலை பார்த்தோம், அதை இப்ப காணோம், இது என்ன விவரம், எங்களை எதுக்கு வேலைக்கு வச்சாங்க, இப்ப ஏன் எடுத்தாங்க, எதுவுமே புரியல. உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா?" என்று கேட்டாள் பவித்ரா.
"அட! இது என்ன பிரமாதம், அங்க கட்டிடம் கட்டிக்கிட்டு இருப்பாங்கல்ல, அதுல உள்ள இன்ஜினியர் காண்ட்ராக்டர் யார்கிட்டயாவது பேச்சு கொடுக்கணும். எப்படியும் கவர்மெண்ட்ல ஒரு கட்டடத்தை இடிக்கிறது சாமானியம் கிடையாது. ஏற்கனவே இருந்த பில்டிங்கை காலி பண்றதுல இருந்து, இடிக்கிறதுக்கு பர்மிஷன், வண்டியை உள்ளே விட பெர்மிஷன்னு அவன் பல பேரை பாத்திருப்பான். அந்த காண்ட்ராக்ட்காரனைப் பிடிச்சா பாதி கிணறு தாண்டின மாதிரி" என்றார் திரவியம்.
"அட இது எங்களுக்கு தோணாம போச்சே சரி அவன் கிட்ட போய் எப்படி பேச்சுக் கொடுப்பீங்க"
"வேற எப்படி? தம்பி! இப்படி கவர்மெண்டுக்காக இவ்வளவு வேலை செய்றியே.. உனக்கு பெர்மனண்டா ஒரு கவர்மெண்ட் வேலை வாங்கித் தரேன்" அப்படின்னு வழக்கம் போல ஆரம்பிச்சுட வேண்டியதுதான்" என்றார் திரவியம். மீண்டும் அங்கே ஒரு சிரிப்பொலி. அதை அஜித்குமார் ஒரு செல்ஃபி எடுத்து இவர்களது புதிய வாட்ஸ் அப் குழுவில் போட, வினோதா, "டேய் என்னை விட்டுட்டு என்னடா டிஸ்கஷன்?" என்றாள் உடனடியாக அவனை அலைபேசியில் அழைத்து.
"இல்லக்கா.. எங்க பெரியப்பா ஒருத்தரு" என்று அவன் கதை சொல்ல ஆரம்பிக்க, "புதுசு புதுசா ஆளுங்களை இன்வால்வ் பண்ணாதீங்கன்னு சொன்னேன் இல்ல? ஏற்கனவே விஷயம் பெருசா இருக்கு. நிறைய பேரை உள்ள கொண்டுவர கொண்டுவர்றது ரொம்ப ரொம்ப ரிஸ்க்" என்று கடிந்து கொண்டாள் வினோதா.
"அதில்லக்கா.. பவித்ராக்கா தான்.."
"அவளுக்கு என்ன தெரியும்? கூண்டோடு கைலாசம் போகப் போறோம். நமக்கு தான் எத்தனையோ வேலை இருக்கே.. இப்ப நான் எங்க இருக்கேன் தெரியுமா? நீ போய் பென் டிரைவ் குடுப்பியே அந்த அட்ரஸ்ல இருக்கேன். அங்க இருக்கிறவர் ஒரு ரிட்டயர்ட் ஐபிஎஸ் ஆபீஸர். பழைய போலீஸ் ஆபீஸர்ஸோட அனுபவங்களைத் தொகுத்து ஒரு தொடர் எழுத போறேன் அப்படின்னு சொல்லிட்டு அவர்கிட்ட பேட்டிக்காக உட்கார்ந்திருக்கேன். நான் பேட்டி எடுக்க வரலை இந்த சீக்ரெட் பைல்ஸ் விவகாரமா தான் வந்து இருக்கேன்னு அவர் கெஸ் பண்ணிட்டார் போல. இந்த செல்லப்பா காரணமா தான் இவர்கிட்ட நம்மளை, ஐ மீன் உங்களைக் கோர்த்து விட்டிருக்கார். இவர் பேசுறதைப் பார்த்தா உங்களை நான் எப்பவோ எதிர்பார்த்தேனே அப்படிங்கற மாதிரி இருக்கு. இவரும் அந்த நியூஸை லீக் பண்ற டீம்ல உண்டு போல.. நான் ஸ்டெடியா ஒரு டைரக்ஷன்ல போய்கிட்டு இருக்குறப்ப ஏன் இந்த பவித்ரா தேவையில்லாமல் குழப்புறா?" என்றாள் வினோதா.
"இது என்னக்கா ரெண்டு பேரும் சின்னப் புள்ள மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க?" என்றான் அஜித்குமார் காலையில் பவித்ரா பேசியதை நினைவில் வைத்து.
அதைப் பற்றித் தெரியாத வினோதா "என்ன சண்டை போட்டோம். புரியல சொல்லு?" என்க,
"அப்படி இல்லக்கா நீங்க இப்ப பேசினதைத் தான் சொன்னேன்" என்று சமாளித்தான் அஜித்குமார்.
"என்னவோ பண்ணுங்க. சார் வந்துட்டார். நான் அப்புறம் பேசுறேன்" என்றாள் வினோதா. திரவியம் இப்போதே தலைமைச் செயலகம் செல்வதாகக் கிளம்ப, வினோதா சொன்ன விஷயத்தை மற்ற அஜித் குமார் சொன்னான். வினோதா, திரவியம் இருவரும் கொண்டு வரப் போகும் தகவலுக்காகக் காத்திருந்தனர்.
திரவியம் விசாரணையை முடித்து விட்டு, "இந்தக் கட்டிடத்தை இடிச்சுக் கட்டணும்னு அவங்களுக்கு முன்னாடியே கான்ட்ராக்ட் கிடைச்சுதாம். அம்பத்தஞ்சு அறுபது வயசுக்கார ஆளு ஒருத்தர் கொஞ்சம் லேட்டா வேலையா ஆரம்பிங்க அப்படின்னு சொல்லிட்டு கொஞ்சம் பணம் குடுத்தாராம். கான்ட்ராக்டருக்கு வழக்கமா வேலை பாக்குற லேபர்ஸும் அந்த நேரத்துல வேற இடத்துல வேலை பார்த்ததால, சரி சும்மா இருக்குறதுக்கு இந்தப் பணம் லாபம்ன்னு இவர் கொஞ்சம் லேட்டா வேலையை ஆரம்பிச்சாராம், ஆனாலும் நீங்க சொல்றீங்களே அந்த செல்லப்பா திறமைசாலி தான். இவ்வளவு செக்யூரிட்டி இருக்கிற இடத்தில உங்களையும் உள்ளே அனுப்பி, வேலை பார்க்கிறோம்னு நம்ப வச்சு ஏதோ சாதிச்சுக்கிட்டு இப்ப எஸ்கேப் ஆயிட்டாரு. அவர் வேலை பார்க்கிறது வேற பிரிவு. நீங்க ஃபோட்டோ குடுத்தீங்களே.. அதை வச்சு அங்கே விசாரிச்சேன். லீவுல இருக்காரு, வர்றதுக்கு ஒரு மாசம் ஆகும்னு சொல்றாங்க" என்றார் திரவியம்.
இவர்கள் சொல்லி திரவியம் செய்த விசாரணை அது. ஆனால் சொல்லாமலேயே சில வேலைகள் செய்தார். எது நடந்தாலும் தனக்கு லாபம் இருக்கிறதா என்று பார்ப்பவர் தானே, எதுவும் பெரிய தில்லாலங்கடி மேட்டரா இருந்தா தெரிஞ்சு வச்சுப்போம். சம்பந்தப்பட்ட ஆட்கள் கிட்ட ஒரு மிரட்டு மிரட்டி ஏதாவது காசு கிடைக்கலாம் என்று திட்டமிட்டு செல்லப்பாவின் நடவடிக்கைகள் அது இது என்று மேலும் சிலரிடம் விசாரித்தார், வரப் போகும் வம்பு தெரியாமலேயே.
கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் மறைந்து கிடக்கும் அந்த எழுபது அடி பற்றி திரவியத்திடம் சொல்லலாமா என்று சண்முகசுந்தரம் கேட்க, "வேண்டாம்! வினோதாக்கா நிறைய விஷயம் வெளியே சொல்ல வேண்டாம், ரொம்ப ரிஸ்க்னு சொன்னாங்க" என்று அஜித் குமார் முடிவாகச் சொன்னான்.
***
மேற்கண்ட பகுதியை எழுதி முடித்த அனுஸ்ரீ, 'போன அத்தியாயத்தில் ட்ரெயின்ல வந்தவங்களை அரெஸ்ட் பண்றதுக்கு ஒரு டீம் ரெடியா இருந்த மாதிரி எழுதி இருந்தோமே? அது சம்பந்தமா எதுவும் ஃபாலோ கொடுக்க வேண்டாமா?' என்று யோசித்தாள். பின் தளத்தில் பதிவான கதைத் திரிகளை ஒருமுறை திருப்பிப் பார்த்துவிட்டு, 'அதைத்தான் பிரகல்யா கட் பண்ணி வச்சுட்டாளே. இன்னைக்கு இவ்வளவு போதும்' என்று முடிவு செய்தவள்,
"குட்டி அத்தியாயம் தான்! அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மக்களே! சீக்கிரம் அடுத்த அத்தியாயத்தோட வரேன்" என்று ஒரு அறிவிப்பை அடைப்புக் குறிக்குள் பதிவிட்டு விட்டு இந்த அத்தியாயத்தையும் பிரகல்யாவிற்கு அனுப்பினாள்.
அதைப் படித்துப் பார்த்த பிரகல்யா, எதற்கும் இருக்கட்டும் தேவைப்பட்டால் அந்த ரயில் பகுதியை அடுத்ததாக சேர்த்து விடலாம். கன்டினியூட்டிக்குத் தேவைப்படும் என்று,
வினோதா, "இன்டர்வியூ எடுத்துட்டேன். நம்ம கண்டுபிடிச்ச விஷயங்கள்லயே அவருக்கும் இன்ட்ரஸ்ட் இருக்கிறது தெரியுது எப்படியாவது உண்மைகள் வெளியே வரும், அதுக்கு உங்களைப் போல, என்னைப் போல சில கருவிகள் வேணும் அப்படின்னு பூடகமா சொல்றாரு. சென்ட்ரல் கவர்மென்ட் போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறை அப்படி யாருக்கும் இந்த ஊழல்கள் சம்பந்தமா இவர் ஷேர் பண்ணியிருப்பார்ன்னு தோணுது. எனக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு வெளியூர் போக வேண்டிய வேலை இருக்கு. வந்து உங்களைப் பார்க்கிறேன்" என்று நண்பர்கள் நான்கு பேரும் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் குறுந்தகவல் அனுப்பினாள்
என்ற வரிகளையும் கதையில் சேர்த்துத் தளத்தில் பதிவு செய்தாள். 'நிஜத்துல அனு அப்பா ஒரு ஐஏஎஸ், பிளஸ் காசிராஜன் அங்கிள். கதையில ஒரு ஐபிஎஸ் பிளஸ் செல்லப்பா. கணக்கு கரெக்ட்டா தான் போகுது. உண்மையில் இருந்து ரொம்ப டிவியேட் ஆகல" என்று பிரகல்யா நினைத்தாள்.
கனவுகள் பூக்கும்

Last edited: