அத்தியாயம் 18
"அண்ணா! உங்க கிளாஸ்ல அனுஸ்ரீன்னு ஒரு அக்கா இருக்காங்களே.. அவங்க மேல பொய்யா ராகிங் பண்ணினாங்கன்னு என்று கம்ப்ளைன்ட் கொடுக்க வச்சு அவங்களுக்கு எதிராக ஆக்ஷன் எடுக்குறதுக்கு யாரோ இங்கே ஒரு பொண்ணை ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவ கொஞ்சம் poor. அதனால பணம் கொடுத்து ரெடி பண்ணிருக்காங்க, கூடவே சாட்சி சொல்ல ரெண்டு கேர்ள்ஸ். காலையில பொய்யா ஒரு கம்பிளைன்ட்டை பிரின்ஸிபல் கிட்ட குடுப்பா போலத் தெரியுது" அவசரமாக குணாவை அழைத்துக் கூறினான், அவனுடைய மிகவும் வேண்டப்பட்ட ஜூனியர் மாணவன் ஒருவன்.
"எப்ப எங்கே வச்சுன்னு கம்ப்ளைன்ட்ல எழுதுறாங்கன்னு எதுவும் தெரியுமா?" மேலும் சில விவரங்கள் கேட்டவன், முந்தைய நாள் அனு அந்தப் பெண்ணை ராகிங் செய்து சித்திரவதை செய்ததாக எழுதியிருப்பது தெரிந்தவுடன் தனக்குத் தெரிந்த வகையில் குணா மாற்று நடவடிக்கையை எடுத்தான். ஏற்கனவே அனுவிற்கு ஏதாவது ஒரு நிறுவனத்தின் கீழ் மூன்று மாதங்கள் ட்ரைனிங் செல்ல வேண்டிய தேதி வந்திருந்தது.
மைசூருவில் பிரகல்யா இன் ப்ளான்ட் ட்ரைனிங் சென்ற அதே இடத்திற்கு முந்தாநாள் முதலே அனுவும் சென்று விட்டதாக ஆவணங்களைத் தயார் செய்து, தங்கள் துறைத் தலைவரிடம் விஷயத்தை விளக்கி, அவருடைய முன் தேதியிட்டு கையொப்பமிட்ட ஒரு கடிதத்தையும் பெற்றா. அனு நன்றாகப் படிப்பவள் என்பதால் அவர் ஒத்துக் கொண்டார். எல்லாவற்றையும் வாங்கிவிட்டு பிரகல்யாவையும் அனுஸ்ரீயையும் அவன் தொடர்பு கொள்ள, அனுஸ்ரீ ஜனார்த்தனனிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். இவ்வளவு நாள் குடும்பத்தினருக்காக நிறைய நேரம் செலவழிக்க முடியாமல் கடமை, மீட்டிங் என்று ஓடிக்கொண்டே இருந்தவர் இப்போது மகளிடம் தினமும் ஃபோனில் பேசினார்.
"அப்பா அப்பா! நேத்து அறிவரசன் சாரைப் பார்த்தோம் பா. போன ஆட்சியில சீஃப் மினிஸ்டருக்குக் கீழே ஆல் இன் ஆலா இருந்தாரே, அவரு" என்க,
"வாட்!" ஒரு நொடி அதிர்ந்த ஜனார்த்தனன், "ஓ! ஏதோ காலேஜ் மீட்டிங்ன்னு அன்னைக்குப் பேசிக்கிட்டாங்களே.. அதுக்குப் போனியா?" என்றார்.
"ஆமாப்பா! அவரு யங்ஸ்டர்ஸ் பாலிடிக்ஸ்க்கு போகணும்னு சொன்னாரா? அதைக் கேட்டுட்டு வந்ததுல நேத்து எனக்கு என்ன கனவு தெரியுமா வந்துச்சு?" என்று அவள் கனவை விவரிக்க, 'அப்ப குணா சொல்றது ஒர்க் அவுட் ஆகுதோ' என்று ஜனார்த்தனன் மனதில் ஓடியது.
அப்போது விடாமல் இரண்டு பேரின் அலைபேசிகளிலும் 'கால் வெயிட்டிங்' என்று வரவும், "அப்பாவுக்கு முக்கியமா ஒரு போன் கால் வருதும்மா! அப்புறம் பேசுறேன்" என்ற ஜனார்த்தனன் அந்த அழைப்பை ஏற்றார். அது அவருக்கு மிகவும் வேண்டிய ஒரு காவல்துறை அலுவலரின் அழைப்பு. தற்சமயம் மது போதை ஒழிப்புப் பிரிவில் இருந்தார் அவர்.
"என்ன கிருஷ்ணபிரசாத்? என்ன விஷயம்?" என்று ஜனார்த்தனன் கேட்க,
"சார் இப்போ கரெக்டா டைம் காலையில் 8:00 மணி. 11 மணிக்கு உங்க வீட்டுக்கு எங்க டிபார்ட்மெண்ட்ல இருந்து ரைடு வராங்க. வர்றவங்க கையில ஒரு இரண்டு கிலோ கோகேன் கொண்டு வரப் போறாங்க. அதை உங்க வீட்டில எங்கேயாவது வச்சிட்டு அங்கேயிருந்து சீஸ் பண்ற மாதிரி பாவ்லா காட்டி உங்களை நான் பெயிலபிள் அஃபென்ஸ்ல (non bailable offence) அரெஸ்ட் பண்ண பிளான் நடந்திருக்கு. எப்படியாவது சீக்கிரம் ரியாக்ட் பண்ணுங்க" என்றார்.
"என்ன கிருஷ்ணபிரசாத்? என்ன சொல்றீங்க திடீர்னு?" என்று ஜனார்த்தனன் கேட்க,
"அதான் சார்! எனக்கும் டவுட். அப்படி யார் சார் உங்களுக்கு எதிரிகள்? பொலிட்டிக்கல் சைட்ல யாரையும் டிஸ்டர்ப் பண்ணிட்டீங்களா?"
அடுத்து என்ன செய்வது என்று தவித்தார் ஜனார்த்தனன். "நீங்களே ஒரு சஜஷன் சொல்லுங்களேன். எனக்கு ஒண்ணும் தோணலை"
"சார்! சீஃப் மினிஸ்டரை நேராப் போய் பாத்துருங்க. என்ன எதிர்பார்க்கிறாரோ செஞ்சிடுங்க. அரெஸ்ட் பண்ணி நியூஸ் வெளியே வந்துட்டா அதுக்கப்புறம் என்ன சொன்னாலும் மக்களும் நம்ப மாட்டாங்க, வெளியே வர்றதுக்கு இன்னும் பல மாதங்கள் ஆகும். இப்பதான் உங்க சஸ்பென்ஷன் பத்தின நியூஸ் பரபரப்பாகி அடங்கியிருக்கு. வேற பழைய பிரச்சினைகள்ல உங்களை மாட்டிவிடப் பார்ப்பாங்க. வெளியே இருந்தா தான் ஏதாவது மூவ் பண்ண முடியும்" என்றார். தற்சமயம் ஜனார்த்தனனைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் பற்றி அறிந்தவர் தான் கிருஷ்ணபிரசாத்.
துரிதமாக யோசித்துத் திட்டமிட்ட ஜனார்த்தனன், காசிராஜனை அழைத்து "சீக்கிரமா ஒரு பிரைவேட் செக்யூரிட்டி ஏஜென்சியை கான்டாக்ட் பண்ணி பத்து பதினஞ்சு செக்யூரிட்டி வரச் சொல்லுங்க. அப்படியே நமக்கு வேண்டிய பிரஸ் ரிப்போர்ட்டர்ஸும் எங்க வீட்டுக்கு வரச் சொல்லுங்க. நான் வீட்டை லாக் பண்ணிட்டு சிஎம் மீட் பண்ணப் போறேன். ரெயிட் நடக்காமப் பாத்துக்கிறேன். மீறி நடந்தா மீடியா அட்டென்ஷன் இருந்தா ஓரளவு யூஸ்ஃபுல்லா இருக்கும்" என்றவர், முதல்வரின் தனிச் செயலராக இருக்கும் நண்பர் மூலமாக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டார்.
இவரது பெயரைச் சொன்னவுடன் அதிர்ஷ்டவசமாக முதல்வர் உடனடியாகத் தன் இல்லத்திற்கு வருமாறு சொல்லிவிட, தன் மனைவியை அழைத்தார் ஜனார்த்தனன். "பூரணி எங்கே இருக்க?"
"சொன்னேன்லங்க.. அபிராமி மேடம் வீட்டில் பூஜை நடக்குன்னு..?"
"முடிஞ்சுதா"
"ம்.. இப்ப தான்"
"சொல்றதைக் கேளு! விஷயம் அர்ஜென்ட். அப்படியே ஃபோனை அபிராமி மேடம் கையில கொடு" என்றவர், அபிராமி இணைப்பில் வந்தவுடன், "மேடம்! இப்ப எனக்கு உங்களோட ஹெல்ப்பும், உங்களுக்கு என்னோட ஹெல்ப்பும் அவசியத் தேவை. விஷயம் ரொம்ப சென்சிடிவ். இப்ப நான் சீஃப் மினிஸ்டரைப் பார்க்கப் போறேன், நீ என் கூட வரணும். ப்ளீஸ்!" என்க, ஏற்கனவே ஜனார்த்தனனை அறிந்திருந்த அபிராமி அவர் பேசுவதில் இருக்கும் தீவிரம் புரிந்து "ஓகே" என்று ஒத்துக் கொண்டார்.
அவரது இல்லத்திற்கு விரைந்த ஜனார்த்தனன் அவரை அழைத்துக் கொண்டு முதல்வர் வீட்டிற்கு செல்லும் வழியில் அறிவரசனைப் பற்றி எல்லாம் கூறினார்.
கேட்கக் கேட்க அபிராமியின் முகம் வாடியது. "நம்ம தலைவருக்குக் கடைசிக் காலத்தில் பெரிய மனக் கஷ்டம்னு தெரியும். 'இந்த உலகம் மோசமானதும்மா! நாம நினைச்ச மாதிரி யாருமே இங்கே இல்லை. ஜாக்கிரதையா இருந்துக்கோ! என்னைச் சுத்தி எனக்குத் தெரியாமலே யாரும் நுழைய முடியாம ஒரு வட்டம் இருந்திருக்கு' அப்படின்னு சொன்னார். யாரைச் சொல்றார்னு நானும் ரொம்ப யோசிச்சு பார்த்தேன். ஆனா அறிவரசனா இருக்கும்னு நினைக்கவே இல்லை. மகன் மாதிரி தலைவர் பாசமா வச்சிருந்தார் அவரை" என்றார்.
அதற்குள் குணா சமூக ஊடகங்களில் பரப்பி விட்ட செய்தியையும் ஜனார்த்தனன் பார்த்திருந்தார். அவர்களுக்குள் விவாதிக்க நேரம் குறைவாகவே இருந்தது. முதல்வர் இல்லம் சென்றவுடனேயே உடனடியாக முத்லவர் அறைகக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அபிராமியைப் பார்த்தவுடன், "அண்ணி வாங்க! நீங்க வர்றதா சொல்லலையே" என்று அவரது காலில் தொட்டு வணங்கினார் முதல்வர். முந்தைய ஆட்சியின் முதல்வரும் அபிராமியின் கணவருமான வெங்கடாஜலபதியும் இவரும் ஒரே தாய்க் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். சமீப காலமாக முட்டல் மோதலில் அவர்களது உறவு இருந்தாலும் ஆதி காலத்தில் நண்பர்கள். அண்ணன் தம்பி உறவு முறையில் பழகியவர்கள்.
"என்னய்யா ஜனார்த்தனன்! சஸ்பெண்ட் அது இதுன்னும் பேச்சு அடிபடுதே! என்கிட்ட கேட்டுட்டுத் தான் ஆர்டர் இஷ்யூ பண்ணினாங்க. ஆனா தவிர்க்க முடியாத அளவுக்கு கம்ப்ளைன்ட் இருந்துச்சே உங்க மேல? உங்களைத் தான் அடுத்த சீஃப் செக்ரட்டரியா போடலாம்னு இருந்தேன். அதுக்குள்ள என்ன இப்படி? வழக்கமா கேர்ஃபுல்லா இருப்பீங்களே?" என்று இயல்பாக உரையாடலைத் துவங்கினார் முதல்வர். பல விஷயங்கள் அவருக்கே தெரிந்திருந்தாலும் எதிராளியைப் பேச விட்டு வார்த்தைகள் வாங்கும் தேர்ந்த அரசியல்வாதி அவர்.
"ஐயா! எல்லாம் அரசியல் விளையாட்டு தான் ஐயா! உங்களுக்குத் தெரியாதது இல்லை" என்றவர், அறிவரசனின் கருப்புப் பக்கங்கள், அது தனக்குத் தெரிய வந்தது, அதில் சிலவற்றைத் தான் வெளியில் கசிய விட்டது, விடை கிடைக்காத வேறு சில கேள்விகள் அத்தனையும் முதல்வரிடம் பகிர்ந்து கொண்டு கடைசியாக இப்பொழுது தன் வீட்டிற்கு ரெய்டு வரப் போகும் தகவலையும் சொன்னார்.
"அட! அவன் ஜகஜ்ஜால கில்லாடின்னு தெரியும். நாலஞ்சு ஊழல்கள்ல அவன் பேரு அடிபட்டுச்சு. இவ்வளவு பண்ணிருக்கானா? அப்புறம் என்ன டேஷுக்கு நல்லவன் வேஷம்? என்னய்யா இழவு இது? நம்ம காதுக்கு ஏன் ஒன்னுமே வரல? லட்டு மாதிரி இவ்வளவு விஷயத்தை வச்சுக்கிட்டு வேறு ஏதேதோ சொல்லி பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்கோமே, உளவுத்துறை கிளவுத்துறைக்கு எல்லாம் இந்த விஷயம் எதுவும் தெரியாதா?" என்று அருகில் பவ்யமாக நின்றிருந்த தன் பிஏவிடம் கேட்டார் முதல்வர்.
"ஐயா! நாள் முன்னாடி சொன்னேன்ல ஐயா.. ஏதோ நெட்ல ஒரு கதை வருதாம். அதைப் படிச்சிட்டு மக்கள்லாம் பரபரப்பா பேசிக்கிறாங்க, டிவில கூட விவாதம் வருதுன்னு.. அது சம்பந்தமா ரெண்டு மூணு பேப்பர் கட்டிங் கூட எடுத்து வச்சிருந்தேனே.. அந்தக் கதையும் இதோ ஜனார்த்தனன் சார் சொல்றதும் ஒன்னுன்னு கூட பேசிக்கிறாங்க ஐயா" என்றார் பி.ஏ.
"அட ஆமா! நாலு நாள் கழிச்சு பார்ப்போம்னு சொன்னேனே.. அந்தக் கருமமா இது. நடுவுல இந்த ஜப்பான் பிரதமர் வந்தாலும் வந்தாரு, நம்ம வேலைகளைக் கவனிக்க முடியலை" என்று அவர் கூற,
நடுவில் இடையிட்ட ஜனார்த்தனன், "அது விஷயமாவும் ஐயா கிட்ட சொல்ல வேண்டியது இருக்குதுங்கய்யா" என்றவர், தன் மகள் அனு தான் இந்தக் கதையை எழுதுவது. தாங்கள் பேசியது அவள் மயக்கத்தில் இருக்கையில் அரைகுறையாய்க் காதில் விழுந்து கனவில் ஒரு காட்சியாக விரிய, அதை ஏதோ விளையாட்டாய் கதையாய் எழுதி இருக்கிறாள். அது எதிர்பாராமல் பெரிய விவாதத்தைக் கிளப்பி விட்டுவிட்டது என்பதையும் விளக்கினார். "அப்படி ஆன்லைன்ல கதை படிக்கிற குரூப் ரொம்ப சின்னதுங்க ஐயா. இவ்வளவு ஃபேமஸ் ஆகும்னு நினைக்கல. சின்னப் பொண்ணு தெரியாம பண்ணிடிச்சு. அவளுக்கும் பிரச்சனை வராம பார்த்துக்கணும் ஐயா" என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.
"கதைக்குள்ள கிளைக் கதையா சொல்லிக்கிட்டே போறீங்க? எத்தனை விவகாரம் தான் குடும்பத்தோட இழுத்து வச்சுத் தொலைச்சிருக்கீங்க?" என்று கடிந்தவர், "என்னென்ன விஷயத்தை கதைல பேசுறீங்க? நம்ம ஆட்சிக்குக் களங்கம் விளைவிக்கிற மாதிரி எதுவும் இருக்கா?" என்று கேட்டு எதுவும் இல்லை என்று தெரிந்தவுடன், "அறிவரசன் மேல எதுவும் பெரிய கேஸ் இருக்காய்யா?" என்றார் பிஏவிடம்.
"அது இருக்குங்க ஐயா நிறைய. அரசியலில் இதெல்லாம் சாதாரணம் தானுங்களே!" என்று அவர் சொல்ல,
மேலும் சில தகவல்களை கேட்டுவிட்டு காவல் துறை ஐ.ஜி.யை உடனடியாக அழைப்பு விடுத்தார். "கோக்கைன், கஞ்சா எல்லாம் கைவசம் ஸ்டாக் நிறைய வச்சிருக்கீங்களோ? காவல்துறை என் பொறுப்பில் இருக்குன்னு நினைச்சேன். எதிர்க்கட்சிக்காரன் சொல்றது உடனை நிறைவேறுற அளவுக்கா ஆட்சி நடத்துறேன்?" என்று கேட்டு பல அர்ச்சனைகளை அவருக்குப் பரிசாய்த் தந்தவர்,
"பதினொரு மணிக்கு கையில் இருக்கிற கொக்கேயினைக் கொண்டுக்கிட்டு போய் எங்கேயோ ரெய்டு போகப் போகுதாம் உங்க டீம். அதை அப்படியே இங்கே கொண்டு வரணும். நான் சொல்றதை செய்ங்க. வேற மூணு நாலு டீம் போட்டு இந்த அறிவரசன் வீட்டுக்குப் போய் அவனை அரெஸ்ட் பண்ணுங்க. தேவைப்பட்டா கொக்கையினை கூட அவன் வீட்ல வச்சு எடுங்கய்யா. அப்படியே ஒரே சமயத்துல வேற வேற ஸ்டேஷன்ல அறிவரசன் மேல புதுசு புதுசா நிறைய கேஸ் பதிவாகணும். அவனோட பழைய கேஸ் டீடெயில்ஸ் அவ்வளவும் என் மேஜைக்கு வரணும்" என்று ஐஜியிடம் சொன்னவர், "நம்ம கட்சிகாரங்களை விட்டு அங்கங்கே ஏதாவது அவதூறு வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்குன்னு அறிவரசன் மேல் போடச் சொல்லு. தாய்க்குலங்களை அவமதிச்சான் ஏதாவது கடவுளைத் தப்பாப் பேசிட்டான்னு விஷயங்களா இல்ல.. இன்னிக்கு சாயங்காலம் அவனைத் தவிர வேற எதைப் பத்தியும் எந்த மீடியாவும் பேசக்கூடாது" என்று தன் பிஏவிடம் கட்டளையிட்டார்.
பி. ஏ. இன்னும் ஓரிருவரை அழைத்து சில வேலைகள் கொடுக்க, நிமிடங்களுக்குள் எப்படி எல்லாம் காட்சிகள் மாறுகின்றன என்பதைப் பார்த்தார் ஜனார்த்தனன்.
"அப்புறம் இவ்வளவு டீடெயில வச்சுட்டு கடந்த ரெண்டு வருஷமா நம்ம ஆட்சி நடக்குது, சும்மாவே இருந்திருக்கிறீரோ. உங்களுக்கு ஒரு ஆபத்துன்ன உடனே இப்போ வரிஞ்சு கட்டிக்கிட்டு வரிங்களா? என்னய்யா இதெல்லாம்?" என்று ஜனார்த்தனைக் கேட்டார் முதல்வர்.
"அதுக்குத்தான்யா அம்மா வந்திருக்காங்க" என்று அபிராமியைக் காட்ட கேள்வியாய்ப் பார்த்தார் முதல்வர். சிலை விஷயம், அபிராமியின் தொடர்புள்ள புகைப்படங்கள் எல்லாம் கூறிய ஜனார்த்தனன், "ஐயா, அப்படியே நம்ம கட்சி பெரிய ஆளுங்களும் இரண்டு மூணு பேர் இதுல உண்டுங்க ஐயா" என்றார். அபிராமியும் தான் அறிவரசன் பேச்சைக் கேட்டு அப்படி ஒரு சிலையை வைத்து பூஜை செய்தது உண்மைதான் என்றார்.
"என் கட்சியிலயா? யாரு? அந்த வின்சென்ட்டும் ராமநாதனுமா?" என்க, ஆம் என்று தலையாட்டினார் ஜனார்த்தனன்.
"அவனுக தானே அறிவரசன் கூட ஒட்டி உரசிக்கிட்டு கிடந்தானுக. ரெண்டு தடவை கட்சி ஆபீஸ்ல வச்சு மாற்றுக் கட்சியினரோட தொடர்பு வைக்காதீங்கன்னு கூப்பிட்டு கண்டிச்சிருக்கோமே.. இவ்வளவு டீப்பா போறானுகளா? சாமி சிலையை கடத்தினோம்னு தெரிஞ்சா மக்கள் மனசுல ரொம்ப கீழே இறங்கிப் போயிருவோமேய்யா. சம்பாதிக்கிறதுக்கு வேற வழியா இல்ல"
"அதனால் தான் ஐயா உங்க கிட்டயும் நேரடியா சொல்ல முடியல. என்னைக்கா இருந்தாலும் விஷயம் வெளியே வந்து தானே ஆகணும் அப்படின்னு ஒரு எண்ணம்" என்று ஜனார்த்தனன் கூற, அன்றைய தினம் வைரலாக சுற்ற ஆரம்பித்திருந்த குணாவின் போஸ்ட் முதல்வரின் இல்லம் வரை வந்திருந்தது.
"ஐயா இதைப் பாருங்க" என்று முதல்வரின் பிஏ அவரிடம் காட்ட,
'முன்னாள் முதல்வர் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார் என்று சொல்லப்பட்டாலும் வேண்டாதவர்கள் சிலர் செய்து வைத்த வினை தான் அது என்பது உண்மைதானா?' என்ற வாசகத்தைப் படித்துவிட்டு,
"இன்னொரு இழவா? என்ன இது, வெங்கடாஜலபதி அண்ணன் மரணத்தை வச்சு இன்னும் அரசியல் பண்றாங்க.. இதுல எதுவும் உண்மை இருக்கா? இந்தப் பேச்சு பரவுச்சுன்னா என்னையும் சேர்த்துல்லடா பழி சொல்லுவாங்க? அவர் சாவுல பலனடைஞ்சு அடுத்த தேர்தல்ல ஆட்சியைப் பிடிச்சவன் நான் தானேன்னு ஆரம்பிப்பாங்களே.. எதுவும் விசாரணை கமிஷன் கிமிஷன் போடணுமா" என்று முதல்வர் எரிச்சலடைய,
ஜனார்த்தன், "எனக்கும் இந்த நியூஸ் புதுசு தான் ஐயா! வரும் போது தான் பாத்தேன். அம்மா தான் இந்த விஷயத்தில் கருத்து சொல்லணும். வெங்கடாஜலபதி ஐயா இறந்தப்ப அம்மா முழுக்க முழுக்கக் கூடவே தான் இருந்தாங்க" என்று அபிராமியைக் காட்டினார்.
அபிராமி, "தலைவர் இறந்து போனது முழுக்க முழுக்க உடம்பு சரியில்லாமல் தான். அது தீவிரமான நோய்னு ஒரு வருஷம் முன்னாடியே டாக்டர்கள் சொல்லியிருந்தாங்க. நான் மனசு கேட்காமப் போய் பூஜை புனஸ்காரம்னு என்னென்னவோ செஞ்சுட்டேன். தலைவர் மரணம் சதி வேலை இல்லைன்னு என்னால உறுதியா சொல்ல முடியும். இப்ப தலைவரோட நினைவு நாள் வருது. மறுபடியும் அது தொடர்பா ஏதாவது பூதம் கிளம்பி, அவரோட மரணத்து மேல சந்தேகம் எழுப்பாம இருந்தாலே போதும். நான் நிம்மதியா இருப்பேன். வெளிநாட்டில் இருக்கிற என் பசங்களும் அதைத்தான் விரும்புறாங்க" என்றார் அபிராமி.
"ஐயா! யாராவது சென்சேஷனுக்காக இந்த விஷயத்தை சேர்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்று சரியாகக் கணித்தார் ஜனார்த்தனன். ஆனால் இது குணாவாக இருக்கும் என்று சற்றும் யூகிக்கவில்லை.
"அண்ணி! நீங்க கவலைப்படாதீங்க. அண்ணன் நினைவு நாளை அரசு விழாவா ஜமாய்ச்சுருவோம். கழுதை.. அம்பது வருஷமா ரெண்டு கட்சியும் முறைச்சுக்கிட்டே தானே இருக்கோம். இனிமே அரசியல் நாகரிகத்தோட செயல்படுவோம். என்ன நான் சொல்லுறது?" என்று மீசையை நீவினார் முதல்வர். வெங்கடாஜலபதியின் மனைவி தன்னிடம் உதவிக்காக வந்ததும், எதிர்க்கட்சியின் முக்கியப் புள்ளியான அறிவரசன் மீள முடியாத அளவுக்கு வழக்குகளில் சிக்கப் போவதும் அவருக்குப் பெருமகிழ்ச்சி.
"ரொம்ப நன்றி ஐயா! கிளம்பறேன். வேற தகவல்கள் வேணும்னா சொல்லுங்க ஐயா.. எப்ப வேணா உங்ககிட்ட பேசுறேன்" ஜனார்த்தனன் விடைபெற்றார். நினைக்காத வகையில் வெற்றிகரமாக வந்த வேலை முடிந்தது.
அப்படியே, "இவ்வளவு நெருங்கிட்டோம் சஸ்பென்ஷன் கிளியர் பண்ணச் சொல்லிடுறேன். சீக்கிரமா வாலண்டரி ரிட்டயர்மென்ட் குடுத்துட்டு நம்ம கட்சியில் சேர்ந்திருங்க ஜனார்த்தனன்! அப்புறம் உங்க பாப்பா கதை எழுதுறதா சொன்னீங்க.. நம்ம இலக்கிய அணி செயலாளரா போட்டுரலாம்"
என்று முதல்வர் கூற,
"ஆமாங்கய்யா! வி ஆர் எஸ் கொடுத்துற வேண்டியதுதான். ஆனால் அதுக்கப்புறம்.." என்று ஜனார்த்தனன் ஒரு கணம் நிறுத்தி விட்டு,
"அப்புறம் தனிக் கட்சி ஆரம்பிக்கலாம்னு இருக்கிறேன் ஐயா! உங்க ஆசீர்வாதத்தோட!" என்றார் ஜனார்த்தனன்.
ஒரு நொடி மௌனமானார் முதல்வர். "ஹா ஹா!" ஜனார்த்தனன் தோளில் இரண்டு தட்டு தட்டியவர், "உங்களையும் அரசியல்வாதியாக்கிட்டோம்னு சொல்லுங்க!" என்று வெடிச்சிரிப்பு சிரித்து மீண்டும் அபிராமியின் பாதம் தொட்டு விடை கொடுத்தார் முதல்வர்.
முதல்வரை ஜனார்த்தனன் சந்தித்த விஷயம் எதுவும் தெரியாமல் முந்தைய தேதியிட்ட ஆர்டரை வாங்கி அனுஸ்ரீயும், பிரகல்யாவும் மைசூருவில் இருக்கும் நிறுவனத்திற்குச் செல்வதற்காக ஒரு டாக்ஸியை பிடித்து அதில் ஏறி அமர்ந்திருந்தனர். இனி யார் வந்து விசாரித்தாலும் அவள் மைசூர் போய் இரண்டு நாள் ஆகிவிட்டது என்று தான் சொல்வார்கள். தன் குற்றங்களை கதையாக எழுதுவது தெரிந்து, தங்கள் கல்லூரி வரை அறிவரசனின் கரங்கள் நீண்டு விட்டது, இனிமேல் தங்களை நெருங்குவதற்கு வெகு நாட்கள் ஆகாது, தங்கள் கையில் இருக்கும் விபரங்களைப் பொதுவெளியில் வைத்து விட வேண்டியது தான் என்று பிரகல்யாவுக்குத் தோன்ற, இளங்காலை தளத்தில் அடுத்து ஒரு அத்தியாயத்திற்காகத் திரியைத் துவக்கி, வெட்டி வைத்திருந்த'வினோதா ரயிலில் பயணித்த பகுதி'யைப் பதிவேற்றம் செய்தாள்.
தமிழகத்தில் அறிவரசன் கைதுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்க, அதிகத் தகவல்கள் இல்லாமல் அனுஸ்ரீ மேலோட்டமாக எழுதியிருந்த அத்தியாயத்தைப் பற்றிய விவாதம் இரண்டு தொலைக்காட்சி சேனல்களில் நடந்து கொண்டிருந்தது. 'இளங்காலை' தளத்தின் உரிமையாளர் தெரிந்தவர்கள் யாரிடமோ கதையை நிறுத்தி விடுமாறு தனக்கு மிரட்டல் வந்ததைப் பற்றிப் புலம்பியிருப்பார் போல, அந்த செய்தியும் வெளியே வந்துவிட்டது.
"இது கருத்து சுதந்திரத்திற்கு ரொம்ப எதிரானது. ஒரு புனைவுக் கதை. அது என்னங்க பண்ணப் போகுது இவங்கள? அப்ப அதுல உண்மை இருக்கிறதுனால தான் அதை நிறுத்தச் சொல்லி மிரட்டி இருக்காங்க? அப்ப என்ன ஆட்சி நடக்குது? இது என்ன ஜனநாயக நாடாக?" என்று ஒருவர் காரசாரமாக தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தார்.
"இவங்க சொல்ல வர்றதை என்ன செஞ்சிருக்கணும்.. ஒரு புக்கா எழுதி மொத்தமா பப்ளிஷ் பண்ணியிருக்கணும். ஆன்லைன்ல எழுதுறதால தானே ஒவ்வொரு அத்தியாயமா போடுறாங்க? அதனால தானே கதையை மாத்த சொல்றாங்க? இதனால்தான் ஆன்லைன் இலக்கியமே வேண்டாம்னு சொல்றோம்" என்று ஒரு பழம்பெறும் இலக்கியவாதி பேச, அதுவும் சர்ச்சையானது.
"அது எப்படிங்க? புத்தகமாப் போட எவ்வளவு நாள் ஆகும்? வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு பதிப்பகங்கள் உடனே வாய்ப்பு கொடுத்துருதா என்ன? அப்ப மட்டும் எழுதினவங்களுக்கு ஆபத்து வராதா?" என்று ஆன்லைன் எழுத்தாளர்கள் பொங்கிக் கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி லைவில் ஓடிக்கொண்டிருந்த அதே நேரம் தான் பிரகல்யா வினோதாவின் ரயில் பயணம், அதில் தெரிந்து கொண்ட சிலைக் கடத்தல் விவகாரம், கைது எல்லாவற்றையும் பதிவேற்றியிருக்க,
"இப்போது வந்த உடனடித் தகவல்.. தலைமைச் செயலகம் கதையின் அடுத்த அத்தியாயம் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது! அடுத்த அத்தியாயம் வந்துவிட்டது! அது என்ன சொல்கிறது என்று பார்ப்போம்!" என்று ஏகப்பட்ட அதிரடி இசைக்கருவிகள் முழங்க, அனுஸ்ரீயின் அடுத்த அத்தியாயம் தொலைக்காட்சி நேரலையில் வாசிக்கப்பட்டது.
"கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு பண்ணை வீட்டில் சில சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டதா செய்தி வந்துச்சு. அதை ஒரு சின்ன செய்தியா நாம கடந்து போயிட்டோம். அதுக்குப் பின்னாடி இத்தனை விஷயங்கள் இருக்கா அப்படிங்கிறது ஆச்சரியமா இருக்கு. இதுல.. இந்த அத்தியாயத்தில், முன்னாள் முதல்வரோட மரணம், ஐஏஎஸ் அதிகாரியை அப்புறப்படுத்தினது பற்றி எல்லாம் பேசி இருக்காங்க, அப்புறம் இன்னைக்கு காலையிலிருந்து வைரலா ஒரு போஸ்ட் சுத்திக்கிட்டு இருக்கு. அதுலேயும் சிலைக் கடத்தல், தனியார் பள்ளிகள் இரண்டையும் குறிப்பிட்டு கூடவே முன்னாள் முதல்வரோட மரணத்தையும் பற்றி சொல்லி இருக்காங்க. இது எல்லாத்துக்கும் தொடர்பு இருக்கா? இந்த அத்தியாயம் வெளியே வரக்கூடாதுன்னு தான் இளங்காலை தளத்தோட அதிபர் மிரட்டப்பட்டாரா?" என்று விவாதமும் செய்தியும் திசை திரும்பி இருந்தது.
அந்த நேரத்தில் முதல்வர் இல்லத்தில் இருந்து வெளிவந்த அபிராமியையும் ஜனார்த்தனனையும் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். "நீங்க எதுக்காக இப்ப முதல்வரை சந்திச்சிருக்கீங்க? ஹாட் நியூஸா வந்துகிட்டு இருக்குற செய்திகள் தெரியுமா?" என்று பத்திரிகையாளர்கள் கேள்விக்கணைகளை எழுப்ப,
"இது மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்று ஜனார்த்தனன் கூறினார்.
அபிராமி, "என்னுடைய கணவர் தலைவர் வெங்கடாஜலபதி அவர்களோட முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறதைப் பற்றிப் பேச வந்தேன்" என்று சொல்லிவிட்டு காரில் ஏறி புறப்பட்டார்.
கதையின் அடுத்த அத்தியாயம், தளத்தின் உரிமையாளர் மிரட்டப்பட்டது, இன்னும் நிறைய சாமி சிலைகள் மீட்கப்படாமல் இருக்கின்றனவா, சிலைக் கடத்தல் தொடர்பாக மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று இணையமும் தொலைக்காட்சிகளும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பரபரப்பாக இருக்க, அந்த ஒரு மணி நேரத்தின் முடிவில் முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் சிலைக் கடத்தல் மற்றும் தனியார் பள்ளி அனுமதி கொடுத்த ஊழல் தொடர்பாக அறிவரசன் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் முன்னாள் முதல்வர் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்றும் முதல் கட்டமாக முதல்வர் அறிவித்திருந்தார். கூடவே கூடுதல் தகவல்களுடன் மறுநாள் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாகவும் கூறியிருந்தார்.
கனவுகள் பூக்கும்

Last edited: