அத்தியாயம் 19 1
"நல்லவேளை நான் கும்பிட்ட சாமிகள் எல்லாம் நம்மள கைவிடலை. என்னங்க?" என்று கணவனைக் கேட்டார் பூரணி.
'சாமியும் தான், இந்த குழந்தைகளோட புத்திசாலித்தனமும் தான்' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் ஜனார்த்தனன். மைசூருக்குச் சென்றிறங்கிய அந்த மதிய நேரத்தில் அனுஸ்ரீக்கு நிறைய விபரங்கள் புரியவில்லை.
"ஏன் அவசரமாகக் கிளம்பினேன்? ஏன் ராகிங் புகார்? மைசூருக்கு ட்ரைனிங் வருவதாகவை முடிவு செய்யவில்லையே, அப்பா எங்காவது சென்னையில் ஏற்பாடு செய்கிறேன் என்றாரே? வழிநெடுக என்னென்னவோ மொபைலில் பல செய்திகளைக் காட்டினாள் பிரகல்யா. சிலது புரிந்தாலும், பல கேள்விகள் இருந்தன அனுஸ்ரீக்கு.
"ஏண்டி! என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?" என்றாள்.
அவளை அமர வைத்த பிரகல்யா அத்தனையையும் சொன்னாள். "உன்கிட்ட நாங்க சில விஷயங்கள் சென்சார் பண்ணிட்டோம்" என்று சொல்லி, அறிவரசன் அட்டகாசங்கள், கனவை வரவழைப்பதற்காக மலைக் கோயிலுக்குக் கூட்டிப் போனது, அதன் தொடர்ச்சியாக அவளுக்கு ரயில் கனவு வந்தது, கதையை மையமாக வைத்து தமிழ்நாட்டில் எழுந்த விவாதங்கள், அனு வீட்டில் திட்டமிடப்பட்ட ரெய்டு, இன்று காலை தான் அந்த அத்தியாயத்தைப் பதிவேற்றியது, அது தொடர்பாக நடந்த விவாதங்கள் அனைத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு ஒரு சில செய்திகளையும் போஸ்ட்களையும் காட்டினாள் பிரகல்யா.
தனக்கு தெரியாமல் இவ்வளவு நடந்திருப்பதைக் கேட்டு கொஞ்சம் வருத்தம் தான் அனுஸ்ரீக்கு. "இதுதான் என்னை விட்டுட்டு இரண்டு பேரும் அடிக்கடி ரகசியமாப் பேசினீங்களா?" என்று கோபித்தாள்.
"அனு ஆங்க்ரி!" என்று பிரகல்யா குணாவுக்குக் குறுந்தகவல் அனுப்ப, அவனும் விரிவாக விளக்கி சில பல 'சாரி'க்களையும் கேட்டு மெசேஜ் அனுப்பியிருந்தான். ஜனார்த்தனன் அழைத்து முதல்வரை சந்தித்துப் பேசியது, அதன் தொடர்பாக நடந்த விஷயங்களைச் சொல்லவும் அனுஸ்ரீக்கு மிகுந்த ஆசுவாசம்.
அவளிடம் இருந்து அலைபேசியை வாங்கிய பிரகல்யா, "அங்கிள்! இப்ப கதையை அடுத்து எப்படி அங்கிள் கொண்டு போறது? ஏனோதானோன்னு முடிச்சா வாசகர்கள் ஒத்துக்க மாட்டாங்க" என்க,
"இதுக்கு மேல யோசிக்க எனக்குத் தெம்பு இல்லம்மா.. நீங்களே யோசிங்க. என்ன எழுதப் போறீங்க என்பதை என்கிட்ட சொல்லிடுங்க" என்றார்.
இளங்காலை தளத்தின் அதிபர் பிரகல்யாவுக்கு அழைத்து, "ரைட்டர் மேடம் கதையை முடிச்சிடுவாங்களா? இல்ல, இன்னும் டேட் எக்ஸ்டென்ட் பண்ணனுமா? எப்படியாவது சீக்கிரம் போடச் சொல்லுங்க" என்றார்.
"ஏங்க? இந்த வாய் தானே ஒரு வாரம் முன்னாடி ஃபோன் பண்ணி கதையை நிறுத்துங்கன்னு சொன்னது?" என்று கேட்ட பிரகல்யா,
"அது போன வாரம்ங்க மேடம், இது இந்த வாரம்ங்க.." என்று ஏதோ சொல்ல வர
"சரிங்க! ரைட்டர் பேரை வெளியே சொல்ல வேண்டிய டைம் வந்துடுச்சு. எப்படியும் போட்டி முடிஞ்சு ரிசல்ட் அனௌன்ஸ் பண்ணும்போது சொல்லத்தானே செய்வீங்க? இப்ப நீங்க தெரிஞ்சுக்கோங்க? கதையை எழுதினது வாசகர்கள் கெஸ் பண்ணின மாதிரி அனுஸ்ரீ தான். எஸ் அனுஸ்ரீ ஜனார்த்தனன்" என்று கூறி அவருக்கும் லேசாகக் கதையின் கனவுப் பின்னணியைக் கூறினார்.
"இப்ப நாங்க ஸ்டோரியைப் பத்தி டிஸ்கஸ் பண்ணப் போறோம் பண்ணிட்டு உங்க கிட்ட அனுஸ்ரீ பேசுவாங்க" என்ற பிரகல்யா,
"அனு! ரொம்ப நாளா நான் இதை செய், அதைச் செய்னு கதையை இன்டரப்ட் பண்ணிட்டேன். இனிமே Ball is in your court. அடிச்சு விளையாடனும்னாலும் விளையாடு, டிஃபன்ஸிவா ஆடணும்னாலும் ஆடலாம். டிஸ்கஷனுக்கு நானும் குணாவும் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ்" என்றாள்.
"கொஞ்சம் தூங்கி எழுந்துக்கிறேன்" என்ற அனு சிறிய ஓய்வுக்கு பின் கதையை முதலிலிருந்து வாசித்துப் பார்த்தாள். அந்த மூன்றாவது ஊழலாக எதையாவது வைக்க வேண்டும், பவித்ரா டீமின் துப்பறியும் படலத்தில் ஏதாவது திருப்புமுனை, அவர்களுக்கு ஒரு ஆபத்து என்று எழுதலாம், யாராவது ஒரு கேரக்டரைப் போட்டுத் தள்ளினாலும் தவறில்லை இப்படி சில விஷயங்கள் தோன்ற அவற்றையெல்லாம் குறித்து வைத்தாள்.
இந்த அரசியல், குடும்ப விஷயங்கள் எதுவும் தெரியாத விதுஷாவை அழைத்துப் பேசினாள். "விது! நீ இந்தக் கதையைத் தொடர்ந்து படிச்சிட்டு தானே இருக்கே? உன்னோட இன்ஸ்பிரேஷன்ல தான் வினோதா கேரக்டர் உருவாக்கி இருக்கேன். நீ இன்னொரு தடவை கதையை வாசிச்சுச் சொல்லு. நீயா இருந்தா அடுத்து என்ன பண்ணுவ? அந்த மூன்றாவது விஷயமா என்ன இருக்கும்? நானுமே முன்னாள் முதல்வருடைய மரணத்தைத் தான் அடுத்த சர்ச்சைக்குரிய விஷயமா யோசிச்சு வச்சிருந்தேன். நிஜத்துல அது இப்ப இல்லன்னு ஆயிடுச்சு. சி எம்மே பேட்டி கொடுத்துட்டாரு. வெங்கடாஜலபதி சார் வைஃபும் சொல்லிட்டாங்க. இப்ப நாம இன்னொரு விஷயத்தைப் பேசணும் அது என்னன்னு யோசி" என்றாள்.
விதுஷா, "அப்படியா என்னை வச்சு ஒரு கேரக்டர் உருவாக்கி இருக்கியா? புல்லரிக்குது!" என்றவள் தன் பங்கிற்கு கதையை ஒரு முறை படித்துப் பார்த்து சில கருத்துக்களைச் சொன்னாள். அதிலிருந்தும் தன்னுடைய யோசனைகள் எல்லாவற்றையும் முன்வைத்து அந்த மூன்றாவது விஷயமாக மருத்துவமனையில் நடந்த ஊழலைச் சொல்லலாம் என்று முடிவெடுத்தாள் அனுஸ்ரீ.
தந்தையை அலைபேசியில் அழைத்து, "அப்பா அந்த கிட்னி ட்ரான்ஸ்பிளான்டேஷன் பத்தி ஒன்னு சொல்லி இருக்கீங்க, அதைத் திரும்பச் சொல்லுங்க?" என்க,
"ஆமாம்மா! நிறைய விஐபி அந்த மாதிரி வெயிட்டிங் லிஸ்ட்டை மீறி ஆபரேட் பண்ணி இருக்காங்க" என்று அவர் அது தொடர்பான விஷயத்தைச் சொல்ல,
"இதைத்தான் நான் அந்த மூணாவது விஷயமா வைக்கப் போறேன்" என்றாள்.
"இரும்மா! இனிமே என்ன எழுதினாலும் முதல்வர் ஐயாவைக் கேட்காமல் எழுதுறது சரியில்லை. அவர்கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு சொல்றேன்" என்றார்.
முதல்வரின் பிஎ மூலமாக அவரிடம் பேச வேண்டும் என்று ஜனார்த்தனன் கோரிக்கை வைக்க லைனில் வந்தார் முதல்வர். "என்னய்யா ஜனார்த்தனன்! நல்ல விஷயமா, கெட்ட விஷயமா? என்ன சொல்லப் போறே?"
"ஐயா பாப்பா எழுதுற கதை.."
"அடப் போய்யா! நீ வேறே! கதை கவிதைன்னு"
"இல்லைங்க ஐயா! கருத்து சுதந்திரம் பத்தி தான் மக்கள் இப்ப தீவிரமா பேசிக்கிட்டு இருக்காங்க. அறிவுரசன் அட்டகாசங்கள் பத்தி ஒரு பக்கம் டிஸ்கஷன் தீயா பறக்குதுன்னா, இது ஒரு பக்கம் தீயா பறந்துகிட்டு இருக்கு. இப்ப நாம கதையை நேர்மையா முடிக்கலைன்னா அந்த மூன்றாவது விஷயம் நம்ம ஆட்சி சம்பந்தப்பட்டதாக இருக்குமோன்னு மக்கள் பேசவும் வாய்ப்பு இருக்குய்யா!" என்றார் ஜனார்த்தனன்.
"அதான் அரசியல்வாதி ஆயிட்டியே.. அதான் இப்படி தெளிவா பேசுற.. சரி எப்படின்னு ஒரு பிளான் வச்சிருப்பீங்களே.. வச்சுட்டுத் தானே என்னை கூப்பிட்டு இருப்ப.. அதைச் சொல்லு" என்று முதல்வர் சொல்ல, கிட்னி மாற்று சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை விஷயத்தைச் சொன்னார்.
"அட இது காலங்காலமாக நடக்கிறது தானே. இதுல என்ன இருக்கு? இதுவும் நம்ம கட்சிக்கார பயலுக யாராவது செஞ்சிருக்காங்களா?" என்று முதல்வர் கேட்க,
"இல்லீங்க ஐயா! உங்க அம்மாவுக்கே இப்படி ரூல்ஸ் மாத்தித் தான் கிட்னி மாத்தி வச்சீங்க" என்றார் ஜனார்த்தனன்.
"அட ஆமாய்யா! பழைய ஜனாதிபதிக்கே அப்படித்தான் பண்ணினாங்க ஒரு தடவை. தெரியும்ல? இது என்ன பெரிய குத்தமாய்யா? பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான். எங்க அம்மா சிவலோக பதவி அடைஞ்சு அஞ்சு ஆறு வருஷம் ஆச்சு, அதனால அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு" என்று அவர் சொல்ல,
"அப்ப அம்மாவோட பேரும் உங்க பேரும் வராத மாதிரி பாத்துக்கலாமா ஐயா? இந்த விஷயத்தைக் கதையில் எழுத சொல்லவா?" என்க,
தன்னிடம் கருத்து கேட்டு எழுதுவதே போதும், இதற்கு மேல் இவ்வளவு ஊடக வெளிச்சம் இருக்கும் விஷயத்தில் தான் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று நினைத்தவர், "மனசு போல செய்யுய்யா! அப்புறம் இன்னொரு என்குயரி வச்சு உன் சஸ்பென்ஷன் கிளியர் பண்ணி விடச் சொல்லியாச்சு. நீ என்ன பண்றே.. கட்சி ஆரம்பிச்சாலும் பார்லிமென்ட் எலக்ஷனுக்கு நம்ம கூடவே கூட்டணி வச்சுக்கோ. ஒரு எம்.பி. போஸ்ட் தரேன். பார்லிமெண்ட்ல தெளிவா பேச ஆளே இல்லைய்யா நம்ம கட்சியில" என்றார்.
"நல்லதுங்க ஐயா நீங்க சொன்னா சரிதான். அந்த நேரம் வரும் போது பார்ப்போமே!" என்றார் ஜனார்த்தனன். அவருடைய ஒப்புதல் கிடைத்தவுடன் கடகடவென்று அடுத்த அத்தியாயத்தை எழுதினாள் அனுஸ்ரீ.
அனு ஸ்ரீ எழுதிய இறுதி அத்தியாயம்
கடத்தல்காரர்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் கைது செய்யப்பட்டு விட, வேலை முடிந்தது என்றிருக்க முடியவில்லை வினோதாவால். சண்முகசுந்தரம் களவாடி அனுப்பியிருந்த தகவல்கள் அனைத்தையும் பார்த்தாள். அதில் வேறு ஏதாவது தனக்கு உபயோகமாக இருக்கிறதா என்று தேட, சிலைக் கடத்தல் தவிர வேறு எதுவும் அகப்படவில்லை.
தலைவர், தலைவர் என்று இந்த இரண்டு அப்ரசெண்டிகளும் யாரைச் சொல்கிறார்கள் என்று தேடிப் பார்த்தாள். பாஸ், அண்ணா, ஐயா என்ற அடைமொழிகளுடன் பெயர் உள்ளதா என்று காண்டாக்ட் லிஸ்ட்டை மேய்ந்து பார்த்தவள், கடைசியாக ஓனர் என்ற பெயரில் ஒரு எண்ணைக் கண்டுபிடித்தாள். முட்டாப் பசங்கன்னா சரியாத்தான் இருக்கு.. டீக் கடை ஓனர்னு சொல்ற மாதிரி சொல்லி இருக்குது என்று எண்ணியவள்,
அந்த எண்ணை ட்ரூ காலரில் போட்டுத் தேடிப் பார்க்க அது கர்ணப் பிரபு என்ற பெரிய கல்வித் தந்தையை அடையாளம் காட்டியது.
அவரைப் பற்றி வினோதாவுக்கு ஏற்கனவே நிறைய விஷயங்கள் தெரியும். மேலும் சில விஷயங்களை சேகரித்தாள். அவருக்குச் சொந்தமான கல்லூரிகள் கட்டிடங்கள் என்று தேட, இவள் கொரோனா நேரத்தில் வேலை பார்த்த மறைவான அந்த கட்டிடத்தை உடைய மருத்துவமனையில் அவரும் ஒரு முக்கிய ஷேர் ஹோல்டராக இருந்தார்.
***
"எழுதின வரைக்கும் பாரு பிரகல்! இது ஓகேவா?" என்று அனு கேட்க,
"அறிவரசன் முன்னாள் அமைச்சர். இப்ப நீ சொல்ற ஆளு கல்வித்தந்தை. அப்படித்தானே? அவருக்குப் பதிலா இவரு. மத்தபடி நிஜத்தில நடக்கிறதோட அப்பா சொன்ன விஷயங்கள் சிலது சேர்த்துக்கலாம். அப்புறம் மானே தேனே பொன்மானே போட்டு இவருக்கு ஒரு கதை வசனம் எழுதி முடிச்சிடு" என்றாள் பிரகல்யா.
"பாருடி! கதைல முதல்ல பவித்ரா தான் நிறைய கண்டுபிடிக்க ஆரம்பிச்சா. இப்ப போகப் போக வினோதா காரெக்டர் நிறைய கண்டுபிடிக்குது" என்று அனுஸ்ரீ கூற,
"அதுக்கு என்னடி? இப்பப் பாரு.. முதல்ல நீ தான் வெற்றிகரமாக கதை எழுதிட்டு இருந்தே.. அதை நானும் குணாவும் எங்க வசதிக்கு வளைக்கலையா? இப்ப மறுபடியும் நீ டேக் ஓவர் பண்ணியிருக்க.. அதனால என்னடி. நல்லது சொல்றதுக்கு ஏதாவது ஒரு கேரக்டர் வேணும். அதோட வாய்ஸ் வேணும்" என்ற பிரகல்யாவின் விளக்கம் போதுமானதாக இருந்தது அனுஸ்ரீக்கு. தொடர்ந்து எழுதினாள்.
***
நண்பர்களை சந்தித்து சில தகவல்கள் சொல்ல வேண்டிய அவசியத்தை வினோதா உணர்ந்தாள். சண்முகசுந்தரத்தின் வீட்டில் ஒரு கூடுகையை ஏற்பாடு செய்து ரயிலில் நடந்த விஷயங்களை முழுவதுமாக விளக்கி, பின் நம்முடைய மெயின் வில்லன் இவனாகத் தான் இருக்கும் என்று கல்வித் தந்தை கர்ணபிரபுவைப் பற்றிக் கூறினாள். அவர் அந்த நாட்களில் ஒரு பெரிய ரவுடி என்று சென்னைக்கே தெரியும். தன் விவகாரங்களில் நான்கு பேர் மூக்கை நுழைக்கின்றனர் என்று தெரிந்தால் என்ன செய்வார் என்றே சொல்ல முடியாது. அவருக்குச் சொந்தமான குவாரிகளில் ஒன்றில் இவர்கள் நான்கு பேரையும் புதைத்தாலும் யாரும் கேட்கப் போவதில்லை, ஏற்கனவே கேட்க ஆளில்லாதவர்கள் என்ற தகுதி தானே இந்தத் தலைமைச் செயலக அக்கப்போருக்கே காரணம்.
"இப்ப என்ன பண்ணலாம்?" என்று வினோதா பவித்ராவைப் பார்த்துக் கேட்க,
"வெயிட் பண்ணலாம். காலம் பதில் சொல்லும்" என்றாள் பவித்ரா. எப்பொழுதும் எதை உடனடியாக முடிக்க வேண்டும் என்பது அவளின் ஆதங்கம் அவளா இப்படி சொல்கிறாள் என்று அனைவரும் வியந்து பார்க்க,
"நிச்சயமா ஏதாவது ஒரு டர்னிங் பாயிண்ட் வரும்னு எனக்குத் தோணுது" என்றாள். நினைத்தது மாதிரியே அடுத்த இரண்டு நாட்களில் அந்தத் திருப்புமுனை வந்தது.
"கண்ணு! பத்மாவதி பாட்டி, அதான் நம்ம செல்லப்பா சாரோட அம்மா காலையில் தூக்கத்திலேயே பூட்டாங்க கண்ணு. சாமியாய்ட்டாங்க. மத்தியானம் மூணு மணிக்கு சுடுகாட்டுக்கு கொண்டு போறாங்க. உன்கிட்ட தகவல் சொன்னா நீ வந்துட்டு போவேன்னு சொன்னேன் கண்ணு" என்றார் பவித்ராவை அழைத்த சரோஜா.
மரணம் நிகழ்ந்த வீட்டில் இருந்திருப்பார் போலும், பின்னணியில் சத்தமாக இருந்தது. "ரொம்ப கூட்டமா அக்கா?" என்று பவித்ரா கேட்க,
"ஆமா கண்ணு! சொந்தக்காரங்க எல்லாரும் வந்துட்டாங்க. வேண்டிய அவங்க மகன்தான் வரல. எங்கேயோ வடக்கே போயிருந்தாங்கல்ல.. பிளேன் ஏறிட்டாகளாம். இப்ப வந்துருவாங்க" என்றார் சரோஜா.
துக்க வீட்டில் ஏதாவது குறிப்பு கிடைக்கலாம், பாசமாய் தன்னிடம் பழகிய பாட்டியின் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்று தோன்ற, அஜித்குமாரை மட்டும் துணைக்கு வரச் சொல்லி அங்கே சென்றாள் பவித்ரா. அவள் எதிர்பார்த்த மாதிரியே துப்புக் கிடைத்தது.
அந்தக் கல்வித் தந்தை கர்ணப்பிரபு ஆளுயர மாலையுடன் அஞ்சலி செலுத்த வந்தார். வந்தவர் அங்கேயே சட்டமாக ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார். வந்திருந்த உறவுக்காரர்கள் நண்பர்கள் அனைவரும் எவ்வளவு பெரிய ஆள் இங்கே வந்திருக்கிறாரே, இவர் நம் சொந்தமா என்று தங்களுக்குள் பேச, செல்லப்பாவை எதிர்பார்த்து அவர் காத்திருந்தது பவித்ராவுக்குப் புரிந்தது. அஜித்குமாருக்குக் கண்ணை காட்டிய பவித்ரா அப்படியே மெல்ல நடந்தாள். தெரு முனையில் இருந்த இளநீர் கடையில் இருவரும் நின்று கொண்டிருக்க, வாடகை கார் ஒன்று வருவது தெரிந்தது.
தெருமுக்கில் அது திரும்பிய நேரம் உள்ளிருந்த செல்லப்பாவைப் பார்த்து பவித்ரா வண்டியை நிறுத்தினாள். அவளை அந்த நேரத்தில் சத்தியமாக அவர் எதிர்பார்க்கவில்லை என்பது முகத்தில் தெரிந்தது. காருக்குள் ஏறி அமர்ந்தவள்,
"சார்! கல்வி தந்தை கர்ணன் உக்காந்திருக்கார். இப்ப நீங்க அவரைப் பாக்க பிரியப்படுவீங்களோ மாட்டிங்களோ.. அதை சொல்லத்தான் வெயிட் பண்றேன்" என்றார். அவருக்கு இரண்டு விதங்களில் ஆச்சரியம். "கர்ணன் எப்படி இங்கே? உங்களுக்கு அவர் தான் மெயின் வில்லன்னு தெரிஞ்சிருச்சா?" என்றார்.
என்ன செய்யலாம் என்று அவர் யோசிக்க, "சார் நீங்க யார் முகத்தையும் பார்க்காமல் நேரா பாட்டி கிட்ட போயிடுங்க. இந்த சடங்கு எல்லாம் பண்றதுக்கு வந்திருக்கிறவங்க கிட்ட நான் முதல்லயே சொல்லிட்டேன். வேற எந்த டிவியேஷனும் இல்லாமல் காரியத்தை ஆரம்பிச்சிட்டாங்கன்னா அவரு உங்க கிட்ட பேசுறதுக்கு டைம் இருக்காது" என்றவள் சொன்னபடியே செய்தாள்.
செல்லப்பா தனக்கு எல்லாமாய் இருந்த, தன் நற்செய்களில் துணையிருந்த தாயின் உடலைப் பார்த்து மனம் வருந்தி நின்றார். துக்கத்தைக் கூட முழுவதுமாய் அன்பு அனுபவிக்க முடியாமல் தன் எதிரி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது ஒரு எரிச்சலைத் தந்தது. அவர் சடங்குகளில் ஈடுபட்டிருந்த நேரம் உறவுக்காரர்களில் முன்னணியில் நின்று செயல்பட்டுக் கொண்டிருந்த பெரியவரிடம் ரகசியமாய் பவித்ரா ஏதோ செல்ல, புரிந்து கொண்டவராக அவர் தலையாட்டினார்.
பாட்டியின் உடல் மின்மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. எரியூட்டப் பட்டு அஸ்தியைக் கொடுக்கும் வரை அங்கேயும் செல்லப்பாவை பத்து பேர் சூழ இருந்து, பழக்கத்தில் இல்லாத வேறு சில சடங்குகளையும் செய்ய வைத்தார் அந்தப் பெரியவர். பின் சாம்பல் கையில் கிடைத்தவுடன் இன்றே அஸ்தியைக் கரைக்க வேண்டும் என்று இரண்டு மணி நேரப் பிரயாணத்தில் இருக்கும் ஒரு ஆற்றுக்கு அழைத்துச் சென்றார். இப்படியாக கல்வித்தந்தை கர்ணபிரபுவின் கண்கள் கைகளில் செல்லப்பாவை விட்டு விடாமல் பவித்ராவும் அந்த பெரியவரும் அடைகாத்தார்கள்.
கர்ணபிரபு அன்று இரவு ஒரு வேளையாக லண்டன் கிளம்ப போவதாக வினோதா சொல்லியிருந்தாள். குறைந்த பட்சம் அதுவரையிலாவது செல்லப்பாவை அவர் சந்திக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பவித்ரா முடிவு செய்து அதை நடத்தியும் காட்டி இருந்தாள். அவரைப் பற்றிய நிறைய தகவல்கள் செல்லப்பாவிடம் இருந்தன. தனக்கு ஏதேனும் நிகழும் பட்சத்தில் அந்தத் தகவல்களை வெளியே விடும் வகையில் ஏற்பாடுகள் செய்தும் வைத்திருந்தார். அதனால் செல்லப்பாவை கொன்று விட மாட்டார் என்று ஒரு உறுதி வினோதாவுக்கு.
கர்ணப்பிரபு கிளம்பி விட்டார் என்று தெரிந்தவுடன் மீண்டும் தங்கள் கூட்டணியைக் கூட்டினார்கள்
"ஸோ, நம்ம வில்லன் இப்போதைக்கு ஊர்ல இல்லை. ஆனா நாலைஞ்சு நாள்ல திரும்பிருவார். தன்னோட காலேஜுக்காக ஒரு லண்டன்ல யுனிவர்சிட்டி கூட ஏதோ ஒரு MOU அக்ரீமெண்ட்ல சைன் பண்ணப் போயிருக்கார். இந்த நாலு நாளைக்குள்ள நாம ரியாக்ட் பண்ணனும், நாமும் சேஃபா இருக்கணும். அதே சமயம் செல்லப்பாவுக்கும் எதுவும் ஆகாம இருக்கணும்" என்றாள் வினோதா.
"லண்டனா? எங்க அம்மா கிட்ட ஹெல்ப் கேட்கவா?" என்றான் சண்முகசுந்தரம்.
"உங்க அம்மா லண்டன்லயா இருக்காங்க? சொல்லவே இல்ல?" என்று அஜித்குமார் கேட்க,
கூகிளைத் திறந்து மிருதுளா குப்தா என்று டைப் செய்து அனைவரையும் நோக்கி நீட்டினான் சண்முகசுந்தரம்.
"இவங்க தான் என் அம்மா"
"அட போன வருஷம் இவங்கள பத்தி ஒரு ஹாட் நியூஸ் வந்துச்சே.. இந்தியா வம்சா வழியைச் சேர்ந்த அமித் குப்தா லண்டன்ல ஒரு எம்பியா செலக்ட் ஆயிருக்காரு. அவங்க மனைவி தமிழ்ப் பொண்ணு அப்படின்னு.. ரொம்ப பவர்ஃபுல் லேடி, ஹஸ்பென்டோட பிஸினஸ் பாத்துக்குறாங்கன்னு படிச்சேன்.. இவங்களா உங்க அம்மா?" என்று கேட்டாள் வினோதா. பவித்ராவிற்கு பேசுவதற்கு நா எழவில்லை.
"ஆமா இவங்க தான் என்னோட அம்மா. மிருதுளா சிவசங்கரனா இருந்தவங்க அப்பாவை டைவர்ஸ் பண்ணிட்டு அமித் குப்தாவை கல்யாணம் பண்ணிட்டு லண்டன்ல செட்டில் ஆயிட்டாங்க. அப்பாவுக்கு வேற ஃபேமிலி இருக்கு. ஆஸ்திரேலியால இருக்காரு. ரெண்டு பேரோடையும் ஹாய், ஹலோ, பர்த்டே விஷஸ் அப்படித்தான் இதுவரைக்கும் என்னோட ரிலேஷன்ஷிப் இருக்கு. கடந்த பத்து வருஷத்துல ஒரே ஒரு தடவை லண்டன் போய் அவங்களைப் பார்த்திருக்கேன். அம்மாகிட்ட நான் ஹெல்ப் கேட்டா அதுக்காகவே ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அவங்க கிட்ட பேசுறேன்"
இப்படிப் பின்புலம் உள்ளவன் என்னைப் போலவே தேவையற்ற விவகாரத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறான், நானாவது போக்கிடம் இல்லாமல் இந்த வேலைக்கு வந்தேன், இவனுக்கு என்ன அவசியம். பெரிய ஆளாக இருக்கிறான், நான் ஏதாவது சாதாரணமா வாயைக் கொடுத்து வம்பு பேசியிருக்கிறேனா, அவனைப் புண்படுத்தி இருக்கிறேனா என்று யோசித்துப் பார்த்தாள் பவித்ரா. அஜித்குமாருக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை. 'எங்க ஊருக்கு வடக்கே எதுனாலும் எங்களுக்கு மெட்ராஸ் தான்' என்பவனுக்கு மெட்ராஸும் ஒன்று தான் லண்டனும் ஒன்று தான். எம்.பி.யும் ஒன்றுதான் மாத சம்பளக்காரனும் ஒன்றுதான்.
"லண்டன்ல வச்சு அவரை ஏதாவது கஞ்சா கேஸ்ல மாட்டிவிட்டு உள்ள தள்ளச் சொல்லுங்கண்ணா" என்றான் அஜித் குமார்.
இதை அனு எழுதிக் கொண்டிருக்கும்போதே பிரகல்யா எட்டிப் பார்த்து, "என்னடி அங்கேயும் கஞ்சா தானா?" என்க, "போடி! இவ்வளவு நேரம் கனவுக் கதையிலிருந்து நிஜ கதைக்கு பாயிண்ட்ஸ் எடுத்தோம். இப்ப நிஜத்தில் இருந்து கற்பனைக்கு பாயிண்ட்ஸ் எடுப்போம்" என்றாள் அனுஸ்ரீ. "நல்ல ஐடியா தான்" என்று அவள் தலையைக் கலைத்து விட்டுச் சென்றாள் பிரகல்யா.
சண்முகசுந்தரம் அவன் அம்மாவிடம் நீண்ட நாட்கள் கழித்துப் பேசியது அவருக்கு மகிழ்ச்சி. "உனக்காக என்ன வேணா செய்றேன்பா" என்றார்.
"அந்த நாட்டுல உள்ள சட்டங்கள் ஸ்ட்ராங்காச்சே.. அதுல இதெல்லாம் முடியுமா?" என்று இவன் கேட்க,
"ஹா ஹா! இந்த நாட்டுச் சட்டத்தைப் பார்த்துத் தானே இந்தியச் சட்டமே எழுதினாங்க. எல்லாம் முடியும்பா" என்றவர் அதை நடத்தியும் காட்டினார்.
கர்ணபிரபு லண்டன் சென்று இறங்கிய அன்றே மாலை ஒரு பாருக்குச் செல்ல, அங்கு வந்து அவருடன் நெருங்கிப் பழகுவது போல் நடித்த ஒரு பெண் வேண்டும் என்று அவருடன் வம்புச் சண்டையில் ஈடுபட்டாள். அவரும் அந்தப் பெண்ணைக் கோபத்தில் அடிக்க, இதற்காகவே காத்திருந்த லண்டன் போலீஸ் அவரைக் கைது செய்தது.
லண்டன் மீடியா, இந்திய மீடியா இரண்டும் கர்ணபிரபுவின் கைதைப் பற்றி இடைவிடாமல் அலறின. மறுநாள் இவருடன் ஒப்பந்தம் கையெழுத்திடுவதாக இருந்த பல்கலைக்கழகம் அதை ரத்து செய்தது. இவரது இந்திய வழக்கறிஞர்களுக்கு லண்டன் சட்டங்களில் புலமை இல்லாமல் போக, அங்கு இவரது பணத்தால் உடனடியாக யாரையும் விலைக்கு வாங்க முடியவில்லை.
"அவர் அந்த கேஸ்ல கிளியர் ஆகி வர்றதுக்குள்ள நாம இங்கே வேலையை முடிக்கணும்" என்று பவித்ரா சொல்ல, இப்போது வினோதா அவர்கள் வசமிருந்த அத்தனை ஃபைல்களையும் மொத்தமாக எடுத்துக்கொண்டு தன் ரிப்போட்டர் நண்பன் ஜெயந்தை சந்திக்கச் சென்றாள். ரயிலில் வைத்துத் தகவல் சொல்லி சிலைக் கடத்தல் சம்பந்தமாக இருவரைக் கைது செய்ய காரணமாக இருந்த அதே ஆர்வக்கோளாறு நண்பன் தான்.
அவனுடைய செல்வாக்கு இந்த கடத்தல் மன்னர்கள் செய்தியால் கொஞ்சம் உயர்ந்திருக்க, அவனுக்கு ஒரு முக்கியப் புலனாய்வுப் பத்திரிக்கையில் நல்ல பதவி கிடைத்திருந்தது. அவனை நேரடியாக சென்று பார்த்தாள் வினோதா. பள்ளிக்கல்வி குறித்த விபரங்கள், சிலைக் கடத்தல் குறித்த இன்னும் வெளி உலகத்திற்கு தெரியாத தகவல்கள் எல்லாவற்றையும் வினோதா சொல்ல,
'இதெல்லாம் அப்பப்ப நடக்குற விஷயங்கள் தானே' என்பது போல் அசுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் ஜெயந்த். "கொரோனா டைம்ல இந்தியா முழுக்க இருக்குற விஐபி நிறைய பேர் சென்னை வந்து ஒரு ஹாஸ்பிடல்ல சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பண்ணிக்கிட்டாங்க. நியாயப்படி அவங்க எல்லாம் வெயிட்டிங் லிஸ்ட் படி தான் சர்ஜரி பண்ணிக்கணும். இல்லேன்னா ரிலேட்டிவ் டோனர்னு சொல்லக்கூடிய உறவினர்கள் கிட்னி கொடுக்கணும். ரெண்டும் இல்லாம, அந்த ஊரடங்கு நேரத்துல ஏழை மக்களோட வறுமையை பயன்படுத்திக்கிட்டு பணம் கொடுத்து நிறைய பேர் கிட்ட கிட்னி வாங்கி இருக்காங்க. இதுல மிக முக்கியப் புள்ளிகளும் உண்டு. இந்த முக்கியப் புள்ளிகள் கிட்ட இருந்து ஒரு குரூப் பணம் மிரட்டி பணம் பறிச்சதும் நடந்திருக்கு. மூணு விஷயங்களிலும் ஒரே சஸ்பெக்ட் வர்றார். எங்களுடைய முக்கியமான சஸ்பெக்ட் கர்ணப்பிரபு"
"அவர்தானே ஏதோ வெளிநாட்டில் பிரச்சனைல மாட்டிக்கிட்டாரு?"
"ஆமா! அவரே தான். ஆனால் அவர் மட்டுமே காரணம் இல்லை. இன்னும் சில பேரோட கையும் இதுல இருக்கு. இதோ இந்த ஃபைல்ஸ் பிரிண்ட் அவுட் எடுத்து வச்சிருக்கேன். கவர்மெண்ட்ல இருந்து ஒரு நல்ல மனசு உடைய பிரைவேட் பார்ட்டி திருடின பைல்ஸ் தான் இது. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லையே, என்கிட்ட எதேச்சையா வந்துச்சு. உனக்குக் கொடுத்துட்டேன். எந்த விதத்தில் இதை யூஸ் பண்ண முடியுமோ பண்ணிக்கோ" என்றாள் வினோதா.
கூடவே வேறு குற்றவாளிகள் யாராக இருக்கலாம் என்று அவளுக்கு இருக்கும் சந்தேகங்களையும் நண்பனிடம் கூறினாள். "அவங்களைப் பத்தி ஏதாவது எவிடன்ஸ் இருக்கா?" என்று அவன் கேட்க,
"எல்லாமே நான் சொல்லிட்டேன்னா அப்ப நீ எதுக்கு இருக்கே? இந்தப் புலனாய்வுப் பத்திரிக்கை எதுக்கு? கண்டுபிடி! தேவை இல்லாம நாங்க தனிப்பட்ட நபர்கள் சிலர் மூக்கை நுழைச்சிட்டோம். நீ பத்திரிகைங்கிற பேனர்ல இன்னும் கொஞ்சம் செயல்படலாம்" என்றவள், "எவ்வளவு ரிஸ்க் வந்தாலும் எடுக்குறதுக்கு ஒரு ஐபிஎஸ் ஆபீசர் தயாராக இருக்காரு. அவருக்கு மே பீ இன்னும் நிறைய டீடெயில்ஸ் தெரியலாம்" என்று அவள் பேட்டி எடுத்த ஐபிஎஸ் ஆபிஸர் தொடர்பு எண்ணையும் கொடுத்தாள்.
கேட்கக் கேட்க ஜெயந்த் இப்பொழுது நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்தே விட்டான். "மெடிக்கல் கிரைம்னா மக்களுக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இதை நாங்க சீரியல் ஸ்டோரியா எங்க பத்திரிகையில் ரன் பண்றோம். இப்ப எல்லாமே என்னோட டெசிஷன் தான். வேற யார்கிட்டயும் இந்த நியூஸ் ஷேர் பண்ணாத நீயும் எந்த பிளாட்பார்ம் நியூஸ் போட்டுடாதே. ஓனர் கிட்ட கேட்டு நல்ல ரேட் வாங்கித் தரேன் இவ்வளவு எதிர்பார்க்கிறே?" என்று அவன் கேட்க,
"ரேட்டா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே?" வினோதா யோசித்தாள். சரி பவித்ரா, அஜித் குமார் இவர்களுக்காவது உதவும் தனக்கு சம்பளம் போல் ஒரு குறைந்த தொகையை எடுத்துக் கொள்ளலாம், ஒரு லட்சம் கேட்போமா இல்லை ஐம்பதாயிரம் போதுமா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க,
"ரொம்ப யோசிக்காதே! டென் லாக்ஸ். ஒரே பேமெண்ட். ஓகேவா?" என்றான். "அட பத்து லட்சமா?" என்று அதிர்ந்து போய் யோசிக்க, "ஓகே உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், ட்வென்ட்டி லாக்ஸ் ஓகேவா?" என்று ஜெயந்த் கேட்க, "ம்.. ஓகே" என்று தலையாட்டினாள் வினோதா.
கையில் இருக்கும் மைல்கள் அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்தவள், "வேற ஏதாவது டீடைல் புதுசா கிடைச்சாலும் உனக்கு ஷேர் பண்றேன். எனக்கு ஒரே ஒரு ரெக்வெஸ்ட்.. நாளைக்கே நீங்க இதுல கொஞ்சமாவது பப்ளிஷ் பண்ணனும்" என்று அதில் உள்ள விபரங்கள் சிலவற்றை ஜெயந்திக்கு புரியுமாறு கூறினாள்.
"கண்டிப்பா! இப்போவே உட்கார்ந்து ஸ்டோரி எழுதிட மாட்டேன்.." என்றவன் அதிரடிக்குத் தயாரானான் ஜெயந்த்.
ஏற்கனவே லண்டனில் பெண் விஷயத்தில் மாட்டிக் கொண்டார் கல்வி தந்தை என்று பத்திரிகைகள் பத்திரிகைகள் கிழி கிழி என்று கிழித்திருக்க, கல்வித்தந்தையின் மற்ற லீலைகள் என்ற பெயரில் நண்பன் ஒட்டிய படம் பட்டி தொட்டி எல்லாம் பாய்ந்தது. செய்தி அறிந்த கல்வித்தந்தை "வாட் இஸ் த ப்ரொசிஜர் டு ஸ்டே இன் லண்டன் ஜெயில்" என்று அங்குள்ள போலீஸ்காரர்களை கேட்க ஆரம்பித்தாராம்.
"சும்மா சும்மா நாம கூடிப் பேசிக்கிறது இனிமே நல்லதில்லை. அவங்கவங்க வழியில பிரிஞ்சிடலாம், கர்ணப்பிரபு எப்ப வந்து பழி வாங்குவார்னு சொல்ல முடியாது. இப்படி ஒரு நாலு பேர் இதுல இருக்கோம்னே அவருக்கு என்னைக்குமே தெரிய வரக்கூடாது" என்றாள் வினோதா. நண்பர்கள் மறுக்க மறுக்க பணத்தைப் பங்கு வைத்துக் கொடுத்திருந்தாள். சண்முகசுந்தரம் ஒற்றைப் பைசா கூட தனக்கு வேண்டாம் ஏற்கனவே நிறைய பணம் இருக்கிறது என்று சொல்ல, பவித்ரா, அஜித்குமார் வினோதா ஆளுக்கு ஐந்து லட்சத்தை எடுத்துக் கொண்டு ஒருவேளை ஏதாவது வழக்குகள் அடிதடி என்று சிக்கினால் மீதம் ஐந்து லட்சம் இருக்கட்டும் என்று தனியாக வைக்க முடிவு செய்தனர்.
"ஒரே ஒரு தடவை மட்டும் மீட்டிங் போட்டுக்கலாம். நம்ம மீட்டிங்கிற்கு ஒரு சீஃப் கெஸ்ட் வராரு" என்றாள் பவித்ரா.
கனவுகள் பூக்கும்

Last edited: