அத்தியாயம் 9
அனுஸ்ரீ எழுதி வரும் கதையிலிருந்து:
"என்னாங்கடா இது? அநியாயமா இருக்கு! நாலு நாள் தானே ஊருக்குப் போனேன். அதுக்குள்ள என்ன கிணத்தைக் காணும்ங்கிற மாதிரி ஆபீஸைக் காணும்ங்கிறீங்க?" சொல்லிச் சொல்லித் தீரவில்லை அஜித்குமாருக்கு.
வினோத்தும் பவித்ராவும் தங்கள் துப்பறியும் பயணத்தைத் துவங்கிய அதே நூலகத்தை ஒட்டியுள்ள பூங்காவில் நால்வரும் மீண்டும் கூடியிருந்தனர். "இதுல என்னமோ உலகப் பிரச்சினையைத் தீர்க்கப் போற மாதிரி மீட்டிங் வேற.." என்று தரையை உதைத்தான் அஜித். அவனுடைய குரங்குச் சேட்டைகளை மற்ற மூவரும் அவ்வளவாக கவனத்தில் கொள்ளவில்லை.
சண்முகசுந்தரம் இவர்கள் மூவரும் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலேயே எட்டு வடிவில் நடந்து கொண்டே இருந்தான். அவன் முகத்திலும் சிந்தனை. "இதுக்கு மேலேயும் அந்த வேலையைப் பத்தி வருத்தப்படுறதுல அர்த்தமில்லன்னு நினைக்கிறேன். நானே எனக்குத் தெரிஞ்ச பத்திரிக்கை ஆபிஸ் எதுலயாவது உனக்கு டைப்பிங், ப்ரூஃப் ரீடிங் அந்த மாதிரி வேலை வாங்கி தரேன். நீ இன்னும் கொஞ்சம் புக்ஸ் படிச்சு இலக்கணம் அது இதுன்னு கத்துக்கிட்டு உன்னோட ப்ரூப் ரீடிங் ஸ்கில்ஸ் வளர்த்துக்கோ. சைட் பை சைட் வேற வேலையும் முயற்சி பண்ணலாம்" என்றாள் வினோதா பவித்ராவிடம்.
"அப்புறம் சார்.. உங்களுக்கு..?" என்று வினோதா ஆரம்பிக்க, தன் நடையை பாதியில் நிறுத்திவிட்டு அவர்களிடம் வந்த சண்முகசுந்தரம், "நான் முன்னாடி வேலை பார்த்த கம்பெனியில் இருந்து, உங்களோட ரிசிக்னேஷனை கன்சிடர் பண்றோம்னு தான் சொல்லியிருந்தோம். இப்பவும் உங்களுக்கான ஆஃபர் ஓபனா தான் இருக்கு. லாங் லீவ்னு தான் மார்க் பண்ணிருக்கோம். எப்ப வேணா வந்து ஜாயின் பண்ணிக்கலாம்னு மெசேஜ் போட்டிருக்காங்க. அதனால வேலை பத்தி பிரச்சனை இல்ல. இருந்தாலும் யோசனையாவே இருக்கு" என்றான்.
"அது எப்படி சட்டையை மாத்துற மாதிரி போய்கிட்டே இருப்பீங்க? நான் ஒருத்தன் இங்கே கத்திகிட்டே இருக்கேன்.. யாருக்கும் புரியலையா?" என்று கோபம் காட்டினான் அஜித்குமார்.
வினோதா பவித்ராவிடம் தான் அந்த விபரங்களைத் தொகுத்து வைத்திருந்த மூன்று ஃபோல்டர்களைக் காட்டி மூன்றாவதிலிருந்த அதிர்ச்சிக்குரிய தகவலைச் சொன்ன பின் காட்சிகள் கடகடவென்று மாறியிருந்தன. அதைக் கண்டவுடனே பவித்ராவுக்கு ஆரம்பித்த கை கால் நடுக்கம் இன்னும் நிற்கவில்லை.
"ஆத்தி! ஏதோ சில்லறைக் குற்றமா இருக்கும்னு பார்த்தா மிகப்பெரிய வலைக்குள்ள சிக்கப் பார்த்தோமே.. இல்லை ஏற்கனவே சிக்கிட்டோமா? அதுவும் தெரியல!" என்று அநியாயத்துக்கும் பதறினாள்.
"நீ அனுப்பின மெயில்ஸை ஒவ்வொன்னா படிக்கும்போதே என்னோட ரிப்போர்ட்டர் புத்தி முழிச்சுகிச்சு. நாளைக்கு நீ ஆபீஸ் போறப்ப நானும் வரேன். என்னோட ரிப்போர்ட்டர் கார்டை காட்டிட்டு அங்க ஏதாவது தெரிஞ்சவங்க பேரை சொன்னாலே உள்ள விட்டுடுவாங்க" என்று கூறிய வினோதா அன்று பவித்ராவுடனே தங்கினாள். அவளுக்கும் தற்போது சென்னையில் தங்குவதற்கு நிரந்தர இடமில்லை. முன்பு பவித்ராவின் ஹாஸ்டலில் கூட இருந்தவள் தற்போது ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக கேரளா பக்கம் போய்விட்டு வந்திருந்தாள். அந்தப் பயணத்தில் அவள் சேகரித்த விஷயங்களைத் தொகுத்து நான்கு ஐந்து தொடர்கட்டுரைகளாக எழுத வேண்டும். அத்துடன் தற்போதைக்கு ஒத்துக் கொண்ட பணி எதுவும் இல்லை.
மறுநாள் காலையில் இருவருமாகத் தலைமைச் செயலகத்திற்குச் செல்ல, அங்கு அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இவர்களது கட்டடம் இருந்த இடத்திற்குச் செல்லும் பாதையில் பெரிய ஜேசிபி எந்திரங்கள் குழிகளைத் தோண்டிப் போட்டிருந்தன. நடுவே செல்வதற்கு பாதை இருக்கிறதா என்று அடிமேல் அடி எடுத்து வைத்த பவித்ரா மற்றும் வினோதாவிடம், "மேடம்! இங்கே எந்த பில்டிங்கும் இல்ல. அவுட் ஆப் பவுண்ட்ஸ்.. அந்தப் பக்கமாப் போங்க" என்றார் கயிறு கட்டிக் கொண்டிருந்த ஊழியர்.
"இல்ல சார்.. எங்க ஆபீஸ் இந்தப் பக்கமா தான் இருக்கு" என்று தூரத்தில் தெரிந்த அவர்கள் அலுவலகக் கட்டடத்தை பவித்ரா காட்ட, "அதை நாங்க முழுசா இடிக்கப் போறோம். அங்கிருந்து இதோ இங்கே குழி தோண்டியிருக்கே.. இங்கே வரைக்கும் பெரிய பில்டிங் வரப்போகுது. 10 கோடி ரூபாய் பட்ஜெட். அதோ பாருங்க அந்தக் கட்டடத்தை இடிக்கிறதுக்கு புல்டோசர் ரெடியா இருக்கு" என்றார்.
"முந்தாநாள் வரை அங்க தான்ங்க வேலை பார்த்தேன்.. அங்கே ஏகப்பட்ட கம்ப்யூட்டர்ஸ் பர்னிச்சர் அதெல்லாம் இருக்குமே? எங்க மேனேஜர் செல்லப்பா சார் கிட்ட கேட்டீங்களா?"
"அதெல்லாம் தெரியாதுங்க. இடிக்கிறதும் குழி தோண்டுதும் தான் எங்க கம்பெனி காண்ட்ராக்ட். நீங்க எதுவும் வேணும்னா நாலாவது ஃப்ளோர்ல இருக்குற இன்ஜினியர் ஆபீஸ்ல போய் பேசுங்க" என்றான் அவன்.
நான்காவது ஃப்ளோரைத் தேடி, அங்கு பொறியாளர் அலுவலகத்தைத் தேடிப் போனார்கள் இருவரும். அங்கு சென்றால் என்ன கேட்க வேண்டும் என்பதும் தெரியவில்லை. "எப்படியும் கோக்குமாக்கா தான் ஏதாவது பதில் வரும். எதுக்கு நாலு மாடி வரை அலைஞ்சுகிட்டு.. லிஃப்ட்டும் கிடையாது" என்று பவித்ரா சொல்ல,
"வா சும்மாப் பேசிப் பார்ப்போம்.. அங்கேயிருந்து கிடைக்கிற ஒன்னு ரெண்டு வார்த்தைகள் நம்மளுக்கு எப்படியாவது யூஸ் ஆகும்" என்றாள் வினோதா.
அந்த அலுவலகமும் காத்தாடத் தான் செய்தது. வினோதா நினைத்ததை போலவே, அங்கிருந்த ஒரு அலுவலக உதவியாளர் பவித்ராவை வெகுசாதாரணமாகப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார். அதே சமயம் வினோதாவை பார்த்தவுடனே அவளுடைய பத்திரிக்கையாளர் லட்சணம் தென்பட்டதா என்று தெரியவில்லை குறுகுறுவென்று சந்தேகக் கண்ணோடு பார்த்தபடி "இங்கே எல்லாம் ஸ்டாப்ஸ் வரக்கூடாது" என்றார்.
"இல்லைங்க இப்ப ரெண்டு வாரமா இவங்க ஒரு ஆபீஸ்ல டெம்பரரியா வேலை பாத்துட்டு இருந்தாங்க. இதோ பாருங்க ஐடென்டி கார்ட். இந்த பில்டிங் தான். கேட்ல நுழைஞ்சு லெப்ட்ல ஒரு நானூறு மீட்டர் போய் அப்புறம் திரும்பியும் லெப்ட் திரும்ப வேண்டி இருக்கும். இன்னைக்குப் போனா அங்க கட்டட வேலை நடந்துட்டு இருக்கு அப்படின்னு சொல்றாங்க" என்றாள் வினோதா.
"என்னம்மா காலங்காத்தால கலாய்க்க வந்துருக்கீங்களா? இந்த கார்ட்ல டிபார்ட்மெண்ட் பேரு எதுவும் போடல. எப்படி உள்ள வந்தீங்க நீங்க?" என்று அவர் எகிறத் துவங்க, "இல்ல சார்.. செல்லப்பா சார் தெரியுமா?" என்று பவித்ரா ஆரம்பிக்க,
"அப்படி எல்லாம் யாரையும் தெரியாதுமா" என்றார் அந்த அலுவலக உதவியாளர். "இதோ இவர் தான்" என்று செல்லப்பாவின் புகைப்படத்தை அவரிடம் காட்ட,
"எங்கேயோ பார்த்த முகமா தான் இருக்கு. இங்க ஆயிரக்கணக்கான பேர் வேலை பார்க்கிறாங்க. குறிப்பிட்ட யாருன்னு தெரியலையே? வேணும்னா முன்னாடி செக்யூரிட்டி ஆபீஸ்ல கேளுங்க" என்றார் அந்த உதவியாளர். எதிர்பார்த்ததுதானே என்றெண்ணியபடி வினோதாவும், நிறைய ஏமாற்றங்களுடன் பவித்ராவும் திரும்பி நடக்க,
சண்முகசுந்தரம் பவித்ராவை அழைத்து, "மேடம்! கொஞ்சம் லேட்டா வருவேன்.. நம்ம ஜர் கிட்ட சொல்லிருங்க" என்றான்.
"அடப் போங்கங்க! இங்கே ஆபீஸே இல்லை. உங்க அட்ரஸ் லொகேஷன் whatsappல அனுப்புங்க நானும் என் ஃப்ரெண்ட் வினோதாவும் உங்க வீட்டுக்கே வர்றோம்" சண்முகசுந்தரத்தின் வீட்டிற்குச் சென்று நடந்தது அனைத்தையும் கூறினார்கள். வினோதா ஃபோல்டர் குறித்தும் சண்முசுந்தரத்திடம் சொல்ல வேண்டாம் என்க, பவித்ரா, "சொல்லிடலாம் அப்பதான் அவனும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பான்" என்றாள்.
சண்முகசுந்தரம் தனக்கு வந்த மெயிலுக்குத் தொடர்பு கொண்டு சில வார்த்தைகளை தட்டச்சு செய்து அனுப்பினான். மெயில் சென்று விட்டது ஆனால் யாரும் படித்தார்களா என்று தெரியவில்லை. செல்லப்பாவின் அலைபேசி அணைத்து வைக்கப் பட்டிருந்தது.
மூவரும் சிறிது நேரம் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். எதேச்சையாக பேசுவது போல் சரோஜாவுக்குப் பேசினால் எதுவும் தகவல் பெயர்கிறதா என்று பார்க்கலாம் என்று அவருக்கு அழைத்தாள் பவித்ரா.
"நூறு ஆயுசு கண்ணு! உனக்கு நானே ஃபோன் போடலாம்னு இருந்தேன்" என்க,
"என்னக்கா? சொல்லுங்க!" என்றாள் பவித்ரா.
"நல்ல கண்ணுல்ல.. என் செல்லக் கண்ணுல்ல.. எனக்குக் கொஞ்சம் உதவி பண்றியா?"
"என்னக்கா? பில்ட் அப் ஓவரா இருக்கு?"
"எங்க வீட்டுக்காரருக்கு சொந்த ஊரு அரக்கோணம் பக்கமா இருக்கு.. அங்க கோயில் திருவிழாவாம். இன்னைக்கு நைட் ஆட்டம் பாட்டம் எல்லாம் நடக்கும். எங்க ஏரியாவுல எல்லாரும் வேன் வச்சு போறாங்க. என்னையும் கூப்பிடுறாங்க. ஆசையா இருக்கு கண்ணு! ஹாஸ்டல்ல வேலை பார்த்தப்பதான் எங்கேயும் போனதில்ல.. இப்ப இந்தப் பாட்டி வீடு மட்டும் தானே? பாட்டிக்குத் துணைக்கு ஆள் வேணும். எனக்கு பதில் நீ வந்து இன்னைக்கு ஒரு ராத்திரி படுத்துக்கிறியா?" என்றார் சரோஜா.
'அட பல்லிக்கு வலை விரித்தால் புலியே வந்து சிக்குகிறதே' என்று யோசித்த பவித்ரா, "இன்னைக்கு ராத்திரியா.. எனக்கு வேலை முடியவே எட்டு மணி ஆயிடும். சரிக்கா.. உங்களுக்காக வந்து பார்க்கிறேன். ஒரு ஒன்பது மணிக்கு பாட்டி வீட்டுக்குப் போனாப் போதுமா?"
"போதும் போதும். ஏழு மணி வரைக்கும் காலைல வேலை பார்க்கிற பிள்ளை இருக்கும்.. ரெண்டு மணி நேரம் தானே.. பாட்டி கிட்ட நான் சொல்லிடுறேன். ஆனா ஒன்னு.. சில சமயம் பாட்டிக்கு ஞாபக சக்தி நல்லா இருக்கும், சில சமயம் எல்லாம் மறந்த மாதிரி பேசுவாங்க. சரியா? நீ ஒன்னும் கண்டுக்காம போயிரு" என்றாள் சரோஜா.
"சரி.. அந்தப் பாட்டியோட மகன் நம்பர் கொஞ்சம் அனுப்புங்க.. எதுவும் அவசரம்னா அட்ரஸ் தெரியலன்னா கேட்டுக்குறேன்" என்று பவித்ரா அடுத்ததாக நூல் விட,
"மறந்துட்டியா கண்ணு? அவர்தான் உங்க ஆபீஸ்ல மேலதிகாரி.. ஆபீஸ்ல வச்சு கேட்டுக்கோ. சரியாடா?" என்று அந்த நூலைக் கத்தரித்து அழைப்பையும் துண்டித்தார்.
செல்லப்பாவின் வேறு எண் கிடைக்காவிட்டாலும் ஐஸ்கிரீம் தின்ன சாக்லேட் கூலியாகக் கிடைத்தது போன்ற மகிழ்வுடன் துள்ளிக் குதித்துக் கொண்டு சரோஜாக்கா கூறிய முகவரிக்கு பவித்ரா செல்ல, "நீ சரோஜா மகளா?* என்று கேட்டு வாயடைக்க வைத்தார் செல்லப்பாவின் அம்மா பத்மாவதி.
"இல்ல பாட்டி! அவங்களுக்கு எனக்கு ரொம்பப் பழக்கம். எங்க அக்கா மாதிரி. அவங்க இன்னிக்கி கோயில் திருவிழாவுக்குப் போயிருக்காங்க"
"அப்படியா? அவ சர்ச்சுக்கு தானே போவா?" என்றார் பாட்டி. "அதாவது பாட்டி.. அவங்க கிரிஸ்டியன். அவங்க வீட்டுக்காரர் ஹிந்து. அதனால ரெண்டு பண்டிகைக்கும் போவாங்க" என்க,
அந்த விஷயம் சரியாகப் புரிந்தது போலில்லை பாட்டிக்கு. அதன் பின் அவர் அமைதியாகிவிடவும் பாட்டிக்கு உணவு கொடுத்த பவித்ரா, "பாட்டி என் பேரு பவித்ரா. இதோ பக்கத்துல தான் படுத்திருக்கேன். எதுவும் வேணும்னா கூப்பிடுங்க" என்றவாறு சரோஜா பயன்படுத்தும் பாயையும் தலையணையையும் பாட்டிக்கருகிலேயே விரித்துவிட்டுப் படுத்துக்கொண்டாள் பவித்ரா.
"பவித்ராவா?" என்று சிறிது நேரம் யோசித்த பத்மாவதி பாட்டி, "உன்னைப் பத்தி சரோஜா நிறைய சொல்லி இருக்கா" என்றார்.
"என்னைப் பத்தியா? என்ன சொல்லி இருக்காங்க?" என்று எழுந்து அமர,
"நீதான் நிறைய துப்பறிகிற கதை எல்லாம் படிப்பியாமே.. அப்புறம் டிவிலயும் போலீஸ் கண்டுபிடிக்கிறது மாதிரி படமா பாத்து அவளுக்கு கதை சொல்லுவியாமே" என்றார் பாட்டி.
"ஆமா பாட்டி! அப்படி மூக்கு நீளமா இருக்கப் போய்த் தானே இப்ப சிக்கல்ல மாட்டியிருக்கேன்" என்று வாய்க்குள் முணுமுணுத்த பவித்ரா,
"பேசுறதுல பாதி நேரம் உன் பெருமையைத்தான் பாடும் நம்ம சரோஜா.. என் மகன் கூட எப்பவும் என்ன அனாவசியப் பேச்சு அப்படிங்கிறவன் உன்னைப் பத்தி இவ சொல்றத ரெண்டு தடவை நல்லா காது குடுத்துக் கேட்டான்னா பார்த்துக்கோயேன்" என்றார் பாட்டி.
"சரோஜாக்கா பேசினா ஏரியாவே வாய் பாக்கும்.. கொஞ்சம் படிக்க வச்சிருந்தா பேச்சாளராகி இருக்க வேண்டியவங்க" என்று பதில் சொன்ன பவித்ரா உட்காந்த நிலையிலிருந்து மீண்டும் படுத்துக்கொண்டு போர்வையை தலைக்கு மேலாக மூடினாள். 'என்ன நமது ஜர்ரு அக்கா என்னைப் பத்திப் பேசுறதை ஆர்வமா கேட்டாரா? அப்படின்னா எனக்கு துப்பறியுறதுல இன்ட்ரஸ்ட் அது இதுன்னு தெரிஞ்சிருக்குமோ?' அப்பொழுதுதான் சடார் என்று ஒன்று தோன்றியது பவித்ராவுக்கு. 'அட! இது நமக்கு தோணவே இல்லையே! ஒரு வேளை இந்த விஷயங்கள் எல்லாம் யார் மூலமாவது வெளியே போகணும்னு ஜர் சம்பந்தப்பட்ட டீம் நினைச்சிருக்குமோ? அவங்களே அதை வெளியே விட்டா நல்லா இருக்காதுன்னு இப்படி ஒரு செட்டப் கிரியேட் பண்ணிட்டாங்களோ?" என்று யோசித்தாள் பவித்ரா. இது தொடர்பாக காலை வினோதாவிடம் பேச வேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக் கொண்டாள்.
அதற்கடுத்த நாள் தான் அஜித்குமாரும் அலுவலகத்தை காணவில்லை என்ற செய்தி அறிந்து வந்ததும், நான்கு பேரும் சேர்ந்து பூங்காவில் பேசியதும் நடந்தது. 'டேய் ரொம்பத் துள்ளாதடா! விஷயம் எதைப் பத்தினதுன்னு தெரிஞ்சா ஊரை விட்டு என்ன, நாட்டை விட்டே ஓடிப் போயிடுவ நீ! விஷயம் அவ்வளவு பெருசு' என்று மனதுக்குள் கூறிக் கொண்டே அஜித் குமாரை முறைப்பாகப் பார்த்திருந்தாள் பவித்ரா.
***
படிக்க எதுவும் வேலை இல்லாததால் அனுஸ்ரீ அந்தக் களேபரத்திலும் கதையைக் கொஞ்சமாக முன்னேற்றி இருந்தாள். பிரகல்யா இதுவரை அனுஸ்ரீ எழுதியிருந்ததைப் போட்டி நடக்கும் தளத்தில் பதிவு செய்து விட்டு, கதையின் இணைப்பை பிரபலமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டாள். "அதுக்கு தானே ஃபேக் ஐடி வச்சிருக்கோம்!" என்றாள்.
"பெயர் சொல்லாத போட்டில்ல இது.. நாமதான் இதை பண்றோம்னு தெரிஞ்சா போட்டியிலிருந்து டிஸ்குவாலிஃபை பண்ணிடுவாங்க. அது கூட பெருசில்ல.. இது எனக்கு ரொம்ப கெட்ட பெயரைக் கொடுக்கும். இந்த மாதிரி பண்ணி நிறைய பேர் மாட்டி இருக்காங்க தெரியுமா? ஒன்னு ரெண்டு பேர் அதோட எழுதுறதையே நிறுத்திட்டாங்க.. என்னோட ஸாடிஸ்ஃபாக்ஷனுக்காக எழுதுறேன்.. இதெல்லாம் வேண்டாமே ப்ளீஸ்.. கதை நல்லா இருந்தா ஒருத்தரு இன்னொருத்தருக்கு சொல்லி அப்படியே நிறைய பேர் படிக்கப் போறாங்க. அவ்வளவுதானே" என்றாள் அனுஸ்ரீ மீண்டும் மீண்டும்.
"போடி! நீ கதையை எழுதி எனக்கு எப்ப குடுத்தியோ அப்பவே கதை என்னோடது ஆயிடுச்சு. என் கதை, நான் என்னமும் பண்ணுவேன். பிரச்சனை வந்துச்சுன்னா கதையை எழுதினது நான் தான் அப்படின்னு சொல்லி, 'பிரகல்யா' பேர் போட்டுக்குறேன்.. பரிசு கிடைச்சாலும் நானே வச்சுக்கறேன். ஓகேவா? நீ மன திருப்திக்காக எழுதுவியாம், எழுதி எனக்குக் கொடுப்பியாம்.. அந்த வேலையை மட்டும் பாரு" என்றாள்.
இரண்டு ஃபேக் ஐடிக்களை வைத்துக்கொண்டு தளத்தில் சூப்பர் வெயிட்டிங் இன்ட்ரஸ்டிங்க் என்றெல்லாம் ஒவ்வொரு அத்தியாயத்தின் கீழும் பிரகல்யா பதிவு செய்தாள். சில தீவிர வாசகர்கள் கதை அவர்களாகவே படித்து கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
தளத்திலிருந்து, எழுத்தாளரைக் கண்டுபிடித்தால் பரிசு கொடுப்போம் என்று அறிவித்திருந்தார்கள். அதில் கோமதி என்று ஒருவர், "இந்த ஆசிரியரின் எழுத்து நடையை வச்சுப் பார்த்தா எனக்கு அனுஸ்ரீ ஜனார்த்தனன் ஞாபகம் வருது. கதை வானம் ஆப்பில் அவர்கள் தொடர்ந்து எழுதுகிறார்கள்" என்று பதிவு செய்ய, அவரைப் பின்தொடர்பவர்கள் ஏராளம் என்பதால்,
"அட ஆமா! எங்கேயோ படிச்ச எழுத்து நடையா இருக்கேன்னு தோணுச்சு.." "ஒருவேளை அவங்களா இருக்கும்னு நானும் நினைச்சேன்" என்ற கருத்துக்கள் பதிவாகின.
"பாருடி! நான் உன்னை ப்ரொமோட் பண்ணத் தேவையே இல்லாம அங்க நீயே ஆட்டோ ப்ரோமோஷன் ஆகிட்டு இருக்க.. உனக்குன்னு ஒரு தனி எழுத்து நடை உருவாகி இருக்கு, நிறைய பேர் உன் பேரை கெஸ் பண்ணி இருக்காங்க பாரு" என்றாள் பிரகல்யா. அதன்பின் தான் அனுஸ்ரீயின் முகம் தெளிவாகியது.
அன்று இன்னொரு நல்ல விஷயமாக எப்பொழுதும் போல் காலையில் அருகில் இருந்த கோவிலுக்கு சென்று விட்டு வந்த அனுஸ்ரீயின் அம்மா பூரணி உற்சாகத்துடன் வீட்டினுள் வந்தார். டைனிங் டேபிளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பிரகல்யா மற்றும் அனுஸ்ரீயின் நெற்றியில் திருநீறு வைத்து விட்டவர், "அனு! உன் கதையெல்லாம் நான் முன்னாடி என்னோட பிரண்ட்ஸ்க்கு அனுப்பி இருக்கேன். இப்ப இருக்கிற கவலையில நானே அதெல்லாம் பார்க்கிறது இல்லை. இப்ப ஏதோ நீ ஒரு துப்பறிய கதை எழுதுறியாமே.. அது பயங்கர இன்ட்ரஸ்டிங்கா போகுதாம். என்னோட பிரண்ட் கார்த்திகா ஆன்ட்டி தெரியும்ல.. அவங்க சொன்னாங்க"
"பேர் சொல்லாம எழுதுற போட்டியாச்சே? அவங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று பிரகல்யா கேட்க, இவர்கள் சற்று முன் வாதி வாசித்து முடித்த பதிவையே பூரணியும் குறிப்பிட்டார். "ஒரு பேமஸ் ரீடர் இருக்காங்களாமே? கோமதின்னு.. அவங்க இது அனுஸ்ரீ கதையா இருக்கலாம்னு சொல்லி இருக்காங்களாம். அவங்க சொன்ன அப்புறம் கார்த்திகாவுக்கும் அதுதான் சரின்னு தோணுச்சாம். இந்த தடவை வந்திருக்கிற கதைகளிலேயே உன்னோட கதை தான் இன்ட்ரஸ்டிங்கா போகுதாம். உனக்கு தான் முதல் பரிசு கிடைக்கும்னு எதிர்பாக்குறாங்களாம்.. அவங்க சொல்லச் சொல்ல எனக்கு ஒரே பெருமை" பூரணி மகளின் முகத்தில் திருஷ்டி கழித்தார்.
காலை உணவுக்காக டைனிங் டேபிளுக்கு வந்திருந்த அனுவின் அப்பா ஜனார்த்தனனுக்கு அன்று முகம் சற்றே தெளிந்தாற் போல இருந்தது. அதிர்ச்சிகரமான செய்திக்குக் குடும்பம் கொஞ்சம் பழகி இருந்தது. அதைத் தவிர வேறெதுவும் முன்னேற்றம் இல்லை. கடந்த இரு நாட்களாக ஜனார்த்தனன் சுதா சர்வ காலமும் ஃபோனில் யாருடனாவது பேசியபடியே இருந்தார்.
"அங்கிள் அங்கிள்! ஒரு குட் நியூஸ்! இப்ப அனுஸ்ரீ ஒரு சூப்பர் கதை எழுதிட்டு வர்றா.. அதை பேர் சொல்லாம நான் சைட்ல போட்டேனா.. இவ தான் அதோட ஆதர்னு கெஸ் பண்ணி நிறைய பேர் போஸ்ட் போட்டிருக்காங்க. அனுஸ்ரீ ஃபேமஸ் ரைட்டர் ஆயிட்டா!" என்றாள் பிரகல்யா.
"வெரி குட் அனு!* என்று கை குலுக்கினார் ஜனார்த்தனன். அனைவருக்கும் உணவைப் பரிமாறிய பூரணி, "அந்தக் கதையைக் கொஞ்சம் ஷார்ட்டா சொல்லேன்.." என்று கேட்க,
"எங்கம்மா ஏதோ கனவில் வந்ததைக் கதையா எழுதுறேன்.. அடுத்து எப்படிப் போகும்னு சொல்லத் தெரியல" என்றாள் அனு சாப்பாட்டில் கவனமாக.
போட்டு வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்று பிரகல்யாவுக்கு தோன்ற, "நான் சொல்றேன் ஆன்ட்டி! நான் தான் இந்த கதையுடன் முதல் வாசகி. அவளை விட எனக்கு நல்ல ஞாபகம் இருக்கும்" என்றவள்,
அந்தக் கதையை மேலோட்டமாகச் சொல்லத் தொடங்கினாள். "மூணு பேர் ஆன்ட்டி.. அவங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு போன் கால், ஈமெயில், லெட்டர் அந்த மாதிரி வருது.. மூணு பேரும் ஒரு இடத்துல வேலைக்குப் போறாங்க. அங்கே ஏதோ சீக்ரெட் ஆப்ரேஷன் மாதிரி நடக்குது. எல்லாம் மர்மமாவே இருக்கு. அது என்ன மர்மம் அப்படின்னு அதுல ஒரு பொண்ணு கண்டுபிடிக்க முயற்சி பண்றா. இதுதான் ஒன்லைன்" என்று பிரகல்யா கூற, அதுவரை உரையாடலில் கவனமின்றி இருந்த ஜனார்த்தனன் சட்டென்று நிமிர்ந்து அனுஸ்ரீயின் முகத்தைப் பார்த்ததை பிரகல்யா மட்டுமே கவனித்தாள்.
அவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க பிரகல்யா தான் முயன்று பார்த்தாள். முடியவில்லை. அனுவிற்கு தாய் தந்தையரின் மன நிலை பற்றிய கவலைகளே அதிகமாக இருந்ததால். அவள் விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. கல்லூரிக்குக் கிளம்ப வேண்டியது தான், இனிமேல் இங்கு வேலை இல்லை என்ற நிலையில் இருவரும் இருக்க, பூரணி,
"அனு! இந்த காஃபியை கொண்டு போய் அப்பாகிட்ட கொடுத்துட்டு வாம்மா" என்றார். அப்போது அனுஸ்ரீ குளிக்கச் சென்றிருக்க, பிரகல்யா, "நான் குடுத்துட்டு வரேன் ஆன்ட்டி!" என்று காபி கப்பை வாங்கிக் கொண்டு ஜனார்த்தனனின் அலுவலக அறைக்குள் சென்றாள்.
அங்கு ஜனார்த்தனன் அறையை ஒட்டிய பால்கனியில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தார். அவள் உள்ளே சென்று காபி கப்பை மேஜையில் வைத்து விட்டு திரும்பிய அந்த சிறிது நேரத்தில், டாக்டர் "அனுஸ்ரீ தூங்குறான்னு நினைச்சு நாம அன்னிக்கு ஹாஸ்பிடல்ல பேசியிருக்கக் கூடாது காசிராஜன்!" என்ற ஒரு வாசகம் மட்டும் பிரகல்யாவின் காதில் கேட்டது.
கனவுகள் பூக்கும்

Last edited: